நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன்.
வைகாசி ,இருபத்தேழாம் திகதி ,2005 தொடங்கிய என் தொடர்வண்டிப் பயணம் 50 தரிப்புகள் கடந்தும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
நிலவு நண்பனின் உதவியோடு பிரயாணத்தை தொடங்கினேன்.டி.சேயின் உதவியோடு தமிழ்மண நட்சத்திரங்களையும் சூடிக்கொண்டேன்.பிறகென்ன கிடுகிடு வேகம்தான்.இடையிடையில பயணக்கழைப்பால் தூங்கியும் இருக்கிறேன்.நித்திரை முழிச்சு வர்ற நேரத்தில நீ யார் என்று கேக்காமல் இருந்த பக்கத்துச்சீட்டு பிரயாணிகள் எல்லாருக்கும் நன்றி.
பிரயாணத்தின் போது கொஞ்ச நேரம் அலட்டியிருக்கிறன்.கொஞ்ச நேரம் படம் காட்டியிருக்கிறன்.மிச்ச நேரம் என் சிற்றறிவுக்குத் தெரிந்த சில உருப்படியான கருத்துக்களைப் பரிமாறியிருக்கிறன்.
முதல் முதலா அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்? என்று ஒரு நகைச்சுவை சம்பவத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினன். பக்கத்தில இருந்த ஆக்களும் கதை கேக்கத் தொடங்கிட்டினம்.எனக்கு பயங்கர சந்தோசம்.அப்பிடி நான் சொன் முதல் கதையைக் கேட்ட பிரயாணிகள் நிலவு நண்பன் வீ.எம் மரவண்டு கணேஷ் துளசி பெரியம்மா தமிழ்விரகன் லதா கிஸோக்கண்ணடடன்.பிறகு பிறகு நான் கதைசொல்ற விதம் நிறைய பேருக்கு பிடிச்சுப் :-) போட்டுது என்று நினைக்கிறன் தொடர்ந்து நான் பிரயாணம் செய்த கம்பாட்மென்ற்றுக்கு நிறையப் பேர் வரத்தொடங்கிட்டினம்.அவையெல்லாருக்கும் மனசில இடமிருக்கு இங்க இடமில்லை:-)
ஆனந்தம் ஆனந்தம் பாடும் தளராத துணிவோடு களமாடினாய என்று இரண்டு பாட்டு பாடிக்காட்டினன் நல்லாயில்ல எண்டு சொல்லிப்போட்டினம் பின்ன நானும் பாட்டு பாடுறதை நிப்பாட்டிட்டன். கல்யாணம் என்பது நீ அங்கே நான் இங்கே என்றிரண்டு உண்மைக் கதைகளைச் சொன்னன். பசியின் ருசியென்ன? என்று என்ர சொந்தக்கதை சோகக்கதையைச் சொன்னன. முதல் முதலா நான் சொன்ன கதைகளில் நிறையப் பேர் ரசித்தது இந்தக்கதை தான்.அடுத்து நானும் என் நண்பர்களும என்று என்னைப் பற்றிய உண்மைகளைக் கொஞ்சம் எடுத்து விட்டன் இன்னும் சொல்லப்பட வேண்டிய நிஜங்கள் இன்னும் என்னோடு.தோழி ஒருவருக்கு ஏற்பட்ட நிலையால் ஆதங்கப்பட்டு சில ஆண்கள் ஏன் இப்படி? என்று ஒரு விடயத்தை சக பிரயாணிகள் காதுகளிலும் போட்டு வச்சன். வண்டில இருக்கிற அத்திம்பேர்கள் யாராவது நான் சொன்ன அத்திம்பேர் மாதிரி இருந்தா கொஞ்சம் நான் சொல்றதையும் கேட்பார்கள் என்ற நப்பாசைதான்.
தரிசனம் கிடைக்காதா? பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள என்று இன்னும் இரண்டு உண்மைக் கதைகள் சொன்னேன்.இவாக்கு வேற வேலையில்லை கதைகதையா அளந்து விடுறா என்று நினைக்காமல் பக்கத்தில இருந்த ஆக்கள் எல்லாரும் நல்லாக் கதை கேட்டினம்.எனக்கதானே முக்கியம்.பயணம் அலுப்படிக்காம இருக்க வேண்டுமே.இடையிடையே மற்றவர்கள் சொல்லும் கதைகள் கவிதைகள் என்று பயணம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
தண்ணியடிக்கிற ஆக்கள் உளறுவினமோ??யெவன்(ள்) சொன்னான்(ள்)? என்று மாமா உளறின கதையை நானும் உளறிவிட்டன்.
தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா? என்று கேக்கப் போய் ஒரு பேப்பர் சொல்ற கதைகளையும் கேட்கத் தொடங்கினேன்.எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் இருந்தாலும் அதையும் விடுவதில்லை என்று முயற்சி செய்து மாவீரர் நீங்களே என்று ஒரு கவிதையும் வாசிச்சன் இரண்டு பேர் தான் பறவாயில்லை என்று சொன்னார்கள்:-
"Mr.Temple come to me" என்று தமிழ் தேவையா என்று கருத்துச் சொல்லப்போய் தற்குறி என்றொரு வார்த்தையைப் பிரயோகித்து சகபிரயாணி ஒருவருக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தினேன்.மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன். "Mr.Temple come to me" தொடர்கதையாக தேடல் எங்களிடையே உண்டு என்று வாயடிச்சேன்.
எல்லாருக்கும் தூக்கம் வாற மாதிரி இருந்ததால கையோடு கொண்டுவந்திருந்த படங்களான மாயா மாயா மாயா எல்லாம் மாயா – I, மாயா மாயா மாயா எல்லாம் மாயா – பகுதி II ,கத்தரிக்காய் வாழைக்காய , சக்தியும் காவலனும் என்று காட்டினன்.நித்திராதேவி விடுறமாதிரி தெரியல பின்ன பெருக்கி கூட்டி பாருங்க கணக்குச் சரியா இருக்கும் என்று கணக்கு காட்டினன்.
திரும்பவும் கதை இருதய நரம்பினை அறுத்தவன் என்றொரு கதை சொன்னன்.நல்லா இருந்தது என்று சொல்லிச்சினம். நான் நினைத்தவை - உறுதிப்பூக்கள் 2005 பற்றியும் சொன்னன்.சில மாற்றுக் கருத்துகளையும் கேட்டறிந்தேன். தேமாப்பூ பற்றி ஒரு குட்டி கவிதை என்ற பெயரில் அலட்டி சில பேரின் சிறு வயது ஞாபகங்களை மீட்டு வந்தேன்.
ஐயோ கை நோகுது.தனித்தனியா சொல்லியிருக்கத் தேவையில்லையோ என்று இப்ப நினைக்கிறன்.
பிறகு சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு என்று என்னட்ட கொஞ்ச நாளா ரிய+சனுக்கு வந்த பிள்ளையைப் பற்றிச் சொன்னன்.முதல் முதலா சாலை விபத்தை சந்தித்த அனுபவத்தைப் பற்றி அப்படியே ஆகட்டும் என்ற அம்மா சொன்ன கதையோடு சொன்னன். மொன்றியல் அனுபவம் பற்றியும் சொல்லிட்டன்.என்னத்த விட்டு வச்சிருக்கிறன்.தெரிஞ்ச எல்லாத்தையும் எல்லாருக்கும் சொல்லிப் போட்டன்.நல்ல பழக்கம் என்ன?
இடையில ஒருக்கா எல்லாருக்கும் டாட்டா காட்டிப்போட்டு வண்டி மேல்தட்டில போய் நல்லா நித்திரை கொண்டு போட்டு திரும்ப வந்து நலம் விசாரிச்சன்.
மதுமிதா சின்னவயதுக் கதை சொன்னா அப்பா நான் எப்பிடி சும்மா இருப்பன் நானும் புத்தம் சரணம் ஹச்சாமி என்று தொடங்கிட்டன்.
Psychology வகுப்பில ஒரு வித்தியாசமான syndrome பறறிப் படிச்சம்.என்னெண்டால் இது ஒரு 60-65 வயசில வருமாம் இது இருக்கிற ஆக்களுக்கே தாங்கள் செய்யிற கோல்மாலெல்லாம் தெரியாது.உதாரணமா AHS இருக்கிற ஒராள் உங்களில ஒருவருடன் உரையாடும் போது தன்ர சட்டை button கழட்டுவார்.அல்லது safety pin ஐ கழட்டி எறிவார் ஆனால் நீங்க ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறீங்கள் என்றால் கேட்டால் தான் அப்பிடி ஒன்றுமே செய்யவிலை என்று வாதாடுவினம்.ஏனென்றால் அவைக்கு தங்கட கையைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.அவர்களுக்கும் தெரியாமலே இந்த கோல்மால் நடக்கும்.நான் இதைப் பற்றிச் சொன்ன உடனே எல்லாரும் பயந்து போய் கதை கேக்காமலே நித்திரை கொண்டிட்டினம்.
அடுத்த நாள் தோழியர் தினம் எல்லாருக்கும் வாழ்த்துச் சொன்னா நிறைய பேருக்கு அப்பிடியொரு தினம் இருப்பதே தெரியாது. எனக்கும் இந்த வருடம் தான் தெரியும்:-
ரீச்சர் சொன்ன கருத்து வித்தியாசமா இருந்ததால் உங்களுக்கும் நான் என்ன மெஸினா? என்று கேட்டன்.அதுக்கு எந்த மெஸினும் நான் சொன்னதப் பற்றி ஒண்டுமே சொல்லமாட்டன் என்று சொல்லிட்டினம்.
சிவகாசி வெடி கொழுத்திப் போட்டன்.உஷாவும் வெடி போட்டா.அப்புறமென்ன கொஞ்ச நாளா வெடி வெடிச்சு ஓய்ந்தது.சரி கொஞ்சம் சிரிக்க வைப்பம் என்று திரும்பப் படம் பார்த்துக் கதை சொன்னன்.அக்கா பையன் ரினிஷ் படம் காட்டி அவனுக்கு காய்ச்சல் வாங்கிக் குடுத்தன்:-)
அடுத்த நாள் நாங்க பயணம் செய்த வண்டி மக்கர் பண்ணி சில மணிநேரம் அசையாமல் நிண்டிட்டுது.என்னடா இது இப்படியாப் போச்சு என்று கவலைப் பட்டா வண்டி பழைய மாதிரி ஓடத் தொடங்கிட்டுது.
எத்தின நாளாச்சு இன்னும் போக வேண்டிய இடம் வந்து சேரவில்லை.பயணம் முடியும் வரை ஏதாவது உருப்படியா கேக்கவேணும் சொல்ல வேணும் இல்லையா.அதான் நான் கேள்விப்பட்டதெல்லாத்தையும் "I now pronounce you man and wife" என்று சொல்லத் தொடங்கினன்.
என்னதான் இருந்தாலும் இருக்கிற இடத்தை நேசிக்கப் பழகவேணும் என்று Hamilton நகர அழகை என் கையடக்கத் தொலைபேசியில் சிறைப்பிடித்து வைத்திருந்ததை உங்களுக்கும் காட்டி மகிழ்ந்தேன்.
அக்கா எழுதின ஒரு கவிதை கண்ணில மாட்டிச்சுதா அதையும் உங்களுக்குச் சொல்லிட்டன்.நான் ஆசையா வைச்சிருந்த யேசுவின் ஓவியங்களையும் உங்களுக்குக் காட்டினன்.வரைந்தவருக்கு நன்றி.கறுப்பி தெரியும்தானே எல்லாருக்கும்.அவா சாப்பாடு செய்து தருவா என்று சொல்லி உங்களுக்குக் கவிதைப் போட்டி வச்சன்.உங்களில் நிறைய பேர் ஆர்வத்துடன் எழுதினீர்கள்.ஆனா கறுப்பிதான் சமைச்சே தரல்ல உங்களுக்கு.
மதி அக்கா படம் காட்டுதலை சிலரிடம் செல்லமாக கண்டித்திருந்த போதிலும் நானும் படம் காட்றதை நிப்பாட்டவில்லை.பல்கழைக்கழக முதல் வாரத்தில் எடுத்த சில படங்களைக் காட்டினேன்.இனிமேலாவது படம் காட்றதை கொஞ்சம் குறைப்பம்.
வலைப்பதிய தொடங்கி ஆறு மாதத்தில ஐம்பத்தேழு பதிவ போட்டாச்சு மூன்று பதிவு தூக்கியாச்சு..693 பின்னோட்டம் வாங்கியாச்சு.8344 பேர் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கினம்.இப்பிடி ஒருக்கா திரும்ப போய் எல்லாத்தையும் பார்த்தாதானே என்ர நிலவரம் தெரியுது.
நான் ஒருநாளும் இவ்வளவு எழுதினது கிடையாது.கை வலிக்குது.நித்திரா தேவி அழைக்கிறா சென்று வருகிறேன்.
37 comments:
நீங்க சொன்ன முறை அழகா வந்திருக்கு சிநேகிதி. இப்படியே போன பதிவுகளை தவிர மற்றவைகளை படிக்கும் வழக்கமே மறந்துப் போய்விட போகிறது :-)
அன்பின் சினேகிதி,
தத்தக்க பித்தக்க நடையா இது? அழகான அன்னநடையல்லவா இது?
பயனுள்ள இன்னும் பல பதிய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...மேலும் வளர
ennda ayooo
rumpa kadeikerinkall muruga ennai kapathuuuu
just kidding
good job
keep it up
நன்றி ராஜ்இனியும் நல்ல பதிவுகள் தர முயற்சி செய்கிறேன்.
உஷா மேடம் வாங்க.யாருடைய பதிவை வாசிக்கவில்லை என்று சொல்றீங்கள்? விட்டா நான் போன வாரம் படித்த பதிவுகள் என்று தனிப் பதிவு போட்டிடுவன் சொல்லிப்போட்டன் ஆமா.
மூர்த்தி அன்ன நடை மாதிரி அழகிருக்கா அப்ப சந்தோசம் ஆனால் அன்னம் எவ்வளவு ஸ்லோ கோச்சி தெரியுமா?
தருமி ஐயா உங்கள் வாழத்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் நன்றி.
Anonymous காசு குடுக்காம பேர் பதிவு செய்யாம வண்டில ஏறினது மட்டுமில்லாம நான் சொன்ன கதைகளை வேற கேட்டிருக்கிறீங்கள் உங்களை பிடிச்சு குடுக்கிறன் பொறுங்கோ. நானும் just kidding:-)
//வாழ்த்துக்கள். இனியும் நல்ல பதிவுகள் உங்களிடமிருந்து வரட்டும்.//
ராஜ் தப்பாக சொல்லிட்டார்...
அவர் சொல்ல வந்தது:
"வாழ்த்துக்கள். இனியாவது நல்ல பதிவுகள் உங்களிடமிருந்து வரட்டும்."
அப்படித்தானே ராஜ்? :)
சரி சரி பகிடிக்குத்தான் சொன்னான் சிநேகிதி. கோவிக்காதேங்கோ. நல்லாவே எழுதுறீங்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கோ...
இன்னொரு சின்ன சந்தேகம். "நடந்து வந்த பாதை.." என்று தலைபு்புப் போட்டிட்டு "இரயில் பயணம்" பற்றி எழுதியிருக்கிறீங்கள்???
இளைஞன் நடந்து போய்த்தானே இரயிலில் ஏறினேன்:-) இப்பென்ன தலைப்பை மாத்தவேண்டுமா?
விசு படத்துல வந்தாமாதிரி ஒரு கால் ( ¡ ) விட்டு போச்சு :-) அதாவது இப்படியே போனா -போனால் என்று திருத்தி வாசிக்கவும்.
அவசரமா அடிச்சாதால்- அதாவது தட்டச்சினதால் வந்த வினை இது.
சினேகிதி, உங்களுக்கு பிறரை ஆர்வத்துடன் வாசிக்கத்தூண்டுகின்ற நடை வாய்த்திருக்கின்றது (ஆரம்பத்திலும் உங்களின் ஏதோ ஒரு பதிவொன்றில் இதைக் கூறியதாய் நினைவு). அதே போல, என்ன என்ன என்று மேலும் விடயங்களை அறியவும்/வாசிக்கவும் விரும்புகின்ற பரந்த மனதும் உஙகளுக்கு வாய்த்திருக்கின்றது :-). தொடர்ந்து எழுத வாழ்த்து.
அன்பு சிநேகிதி
மேலும் எழுத வாழ்த்துகிறேன்.
எனது பதிவில் நான் முதலிலேயே அறிந்த தோழிகள் தவிர முதல் பின்னூட்டமிட்டவர் நீங்கள்.
சரி எனக்கு சில விளக்கம் சொல்லுங்கள்.
1.இங்கே என்று கோடிட்டால்,
அல்லது பதிவின் பெயர் குறிப்பிட்டு கோடிட்டால் அந்த குறிப்பு உள்ள பதிவுக்கு எப்படி செல்ல இயலுகிறது தனியே உர்ல் இடாமல்?
2.பதிவுக்கு வந்து சென்றவர் எண்ணிக்கையை எப்படி கணக்கிடுவது?
ஆஹா உஷா புரிஞ்சு போச்சு எனக்கு
டி.சே நீங்க வேற வெளியில குளர் தாங்க முடியல
மதுமிதா வாழ்த்துக்கு நன்றி.
விளக்கம் தானே சொல்லுறுன் கவனமாக் கேளுங்கள்:-)
\\1.இங்கே என்று கோடிட்டால்,
அல்லது பதிவின் பெயர் குறிப்பிட்டு கோடிட்டால் அந்த குறிப்பு உள்ள பதிவுக்கு எப்படி செல்ல இயலுகிறது தனியே உர்ல் இடாமல்?\\
புதுப் பதிவு எழுதும் பெட்டிக்கு மேலே பச்சை நிறத்தில் ஒரு icon அதை click பண்ணி தனிச்சுட்டியை copy paste செய்தா சரி.
i'll email u the code 4 webcounter.
பதிவு ஆரம்பிச்சு ஆறு மாசமாச்சா?
இனிய 'அரைவருட 'வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து இதே இனிய சிநேகிதத்தோடு எழுதுங்கள்.
thanks periyamma n anbu
நன்றி சிநேகிதி
ஆனால் இன்னும் லிங்க் கொடுக்க தெரியல.
வெப் கவுண்ட்டர் எல்லோருக்கும் 1000 க்கு மேல் காட்டுது எனக்கு மட்டும் 32 காட்டுது
hmm,ungada webcounter mattumthan unmai mathavai ellatrium poi madhu :-)
webcounter neenga code paste panina naal la irunthuthan count pannum so 1000 konja naalila kaatum.
do u knw how to use google talk?? if yes then come to google talk i'll tell u how to give link to ur posts or if not i'll tell mathy akka to help u okay.
யம்மாடி எந்த ஊரு தமிழ் இது...சூப்பரா இருக்கு...
நான் கூட இந்த நடைக்கு மாறிடலாம் போல....
அசத்துற அசத்துற அசத்துற....
என்றும் அன்புடன்,
எதிரி
ஆகா தொடர்ந்து எழுதுங்கள்.
அரை பிறந்த நாள் காணும் சிநேகிதிக்கு வாழ்த்துக்கள்!
பதிந்த பாதம்
திரும்பி பார்க்கையில் அழகுதான்
தத்தக்கபித்தக்க
இப்போ ட்ரெயின் வண்டியாயிடிச்சு
பயங்கர ஸ்பீடா
பயங்காட்டுரீங்கோ
அம்புது பதிவு கவிதுவமா ஒரே பதிவுல அடக்கிண்டீகளே
எப்பிடீங்க இதெல்லாம்!
சந்தோஷம் உஙகள் பதிவு பார்க்கையில்!
தொடரட்டும் அழகான உங்கள் எழுத்துபணி!
எதிரியெல்லாம் சினேகிதி வீட்டுக்கு வந்திருக்காரு..ஆமா நீங்க உங்களுக்கே எதிரியா??
நமக்கு சொந்த ஊரு அல்வாய்.கடன் வாங்கின ஊரு நிறைய.நான் எழுதுவது யாழ் தமிழ் என்று சொல்லலாம் என் நினைக்கிறேன்.
நன்றி தர்சன்.
\\பயங்கர ஸ்பீடா
பயங்காட்டுரீங்கோ\\
\\சந்தோஷம் உஙகள் பதிவு பார்க்கையில்\\
சிங் நான் பயம் காட்டுறது இருக்கட்டும் உங்களை யாரு சும்மா ஐம்பது பதிவையும் பார்க்கச் சொன்னது.பொறுமையா வாசிச்சுட்டு சொல்லுங்க.
Hey theepan,
welcome to ma blog!!!
\\Koncham translate pannu pls?? \\
ya rite y don't u learn tamil frm ur bro n come back to ma blog n read ma posts.sounds good eh?
வாழ்த்துக்கள் சினேகிதி. 'தத்தக்க பித்தக்க'ன்னே இத்தனை வேகமா நடந்தால், இன்னும் 'தானே நடக்க'யில் எத்தனை வேகமாய் இருக்கும்! (ஒரு விடுகதையில் வரும் இந்த 'தத்தக்கா பித்தக்கா'வும் 'தானே நடக்கயில'யும், யாருக்காவது ஞாபகம் இருக்கா?)
அப்படியே நம்ம Hacking பதிவுக்கு ஆப்பு வைச்சதையும் சொல்லியிருக்கலாம்.
\\translate even koncham\\
theepan ask ur bro u translate koncham for u :-)
\\வாழ்த்துக்கள் சினேகிதி. \\
அடடா இங்க யார் வந்திருக்கினம் என்று பாருங்கோ.வாழத்துக்கும் வருகைக்கும் நன்றி .
\\'தத்தக்க பித்தக்க'ன்னே இத்தனை வேகமா நடந்தால், இன்னும் 'தானே நடக்க'யில் எத்தனை வேகமாய் இருக்கும்!\\
தத்தக்க பித்தக்க பருவத்தில கொஞ்சம் வேகமா நடந்நதாத்தானே கொஞ்சமாவது விழுந்தெழும்பலாம்.
\\(ஒரு விடுகதையில் வரும் இந்த 'தத்தக்கா பித்தக்கா'வும் 'தானே நடக்கயில'யும், யாருக்காவது ஞாபகம் இருக்கா?)\\
அந்த விடுகதை Nகுள்விப்பட்டிருக்கிறேன்.
\\அப்படியே நம்ம Hacking பதிவுக்கு ஆப்பு வைச்சதையும் சொல்லியிருக்கலாம்.\\
ஆப்பாவது சூப்பாவது :-)
கதைசொல்லி நான் எங்ங உங்கட பதிவுக்கு ஆப்பு வைச்சன்.நீங்கதான் hacking பற்றி எழுதாம எங்களுக்கு ஆப்பு வைக்கிறீங்கள்.
நம்ம சிநேகிதி ஏதோ பிளாஸ் பாக் சொல்றா என்று வந்தேன். அவங்க றயில் பயணங்கள் சொல்றாங்க. வாழ்த்துக்கள் சிநேகிதி தொடருங்கள்.
நான் பிளாஸ் பாக் சொன்னா அப்புறம் உங்கட கயல்விழி அழுமே அதான் சொல்லல:-)
(-._.-)
_( Y )_
(:_-*-:)
(_)-(_)
தத்தக்கப் பித்தக்க நாலு கால்
தானே நடக்க ரெண்டு கால்
முத்திப் பழுக்க மூண்டுகால்
முடிந்த பிறகு நாலுகால்.
இப்ப உங்களுக்கு எத்தின கால்?
வாங்க வன்னியன்.!!!
தத்தக்கப் பித்தக்கவுக்கு நாலு கால் எனக்கு இரண்டு கால்:-)
Good job keep it up snegithy
Shakthi
hey is tat u Shakthi?? where/how have u been gal?
tx 4 visiting ma blog
(-._.-)
_( Y )_
(:_-*-:)
(_)-(_)
Post a Comment