Custom Search

Sunday, November 06, 2005

புத்தம் சரணம் ஹச்சாமி

தலைப்பை பாத்தவுடன நானும் பிக்குமார்களை பத்தி ஏதோ சொல்லப் போறன் எண்டு நினைக்க வேண்டாம்.

மதுமிதான்ர "சிறுவயதில் மனதில் பதியப்படுபவை" பதிவைப் பார்த்ததிலிருந்து எழுதணும் போல இருந்ததா ...

நான் நினைக்கிறன் முதன் முதலா ஆமிக்காறரை வெறுக்கத் தொடங்கினது இரண்டு வயசில என்று.அப்பா ஸ்பெயின்ல இருந்தவர் அப்ப இரண்டு வருசத்துக்கொருக்கா கொழும்புக்கு வாறவர் அப்பிடி முதல்முறை கொழும்புக்குப் போட்டு வரும்போது ஆமிக்காறர் நாங்க வந்த வானை நிப்பாட்டி கொண்டு வந்த சாமானை எல்லாம் கிண்டி எனக்கு அப்பா தந்த றோஸ் நிற பிளாங்கற்றயும் வடிவா இருக்கெண்டு எடுத்துப் போட்டாங்கள்.எனக்கு கோபத்தில ஆமிய என்ன செய்யிற எண்டும் தெரியாது செக் பொயின்ற்றுக் கிட்ட மழை பெய்து பள்ளத்தில தேங்கி இருந்த ஊத்தை தண்ணியக்காட்டி உதையே குடிச்சுக் கொண்டு இருங்கோ என்டு சொல்லிப்போட்டு நித்திரையாப்போனனாம் அம்மா சொன்னவா.

பிறகு எனக்கு இடையில ஆமிக்காரரோட சம்பந்தப்பட்ட நினைவுகள் என்று பார்த்தா நான் ஏழாம் வகுப்பு எண்டு நினைக்கிறன் ஈசாக்கா வீட்ட விடிய எழும்பி ஆறு மணி வகுப்புக்கு நாங்க ஆறு பேர் சேர்ந்து போறநாங்கள்.விடிய எழும்புறது என்றா கொஞ்சம் கள்ளம் அம்மா பேசி பேசி எழுப்பி விட்டா ரெடியாக முன்னம் வாசல்ல பெல்லடிக்கத் தொடங்கிடுங்கள் மிச்ச அஞ்சும் அந்தரப்பட்டுக் கொண்டு ஓடினா மாலுசந்தில வச்சு ஆமிக்காறர் செக் பண்ணித்தான் விடுவாங்கள்.ஆமி செக்கிங் இல்லாட்ட கொஞ்சம் கூட நேரம் நித்திரை கொள்ளலாமே.அப்பா மெதடிஸ்ல சேரத்து விட அங்க ஆமி எண்டு சாட்டெல்லாம் சொல்லி நண்பிகள் படிச்ச யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி (செல்லையா கம்பஸ் :)) க்கு மாறினன்.என் அதிஷ்டம் பள்ளிக்கூடம் போற வளியில மாலுசந்திலயும் ஆமி செக் பொயின்ற் வந்திட்டுது. பிறகென்ன போய் வரிசைல நிண்டு அவயள் வந்து ஸ்கூல் பாக் சாப்பாட்டுப் பெட்டியெல்லாம் செக் பண்ணி முடிய திட்டிக்கொண்டே கொஞ்ச நேரம் சைக்கிளை உருட்டிக்கொண்டே போய் அங்கால அவசரப் பட்டுக்கொண்டே ஓடிப் போனாலும் ஒரு நிமிசம் பிறேயருக்கு லேற் எண்டாலும் பிரின்ஸின்ர வாசல்ல கொஞ்ச நேரம் முட்டுக்கால்ல இருந்துட்டுத்தான் வகுப்புக்கு போறது.

பிறகு பின்னேரம் ரியூசனுக்குப் போறநேரம் காலம நிண்ட ஆமியே நிண்டா எங்கள் ஆறு பேரயும் பார்த்திட்டு விட்டிடுவான் நாங்களும் இ எண்டு 28 பல்லையும் காட்டிப்போட்டுப் போறது.

உப்பிடித்தான் ஒரு நாள் சதாப்பொன்ஸ் ரியூசனுக்குப் போட்டு நான் அம்மம்மா வீடு பக்கத்தில அப்ப நடந்து போய்க்கொண்டிருக்க கொஞ்ச ஆமிக்காரர் ஓடிப் போனாங்கள் அப்ப நாங்கள் ஏன் உவை உந்த ஓட்டம் ஓடினம் எண்டு பார்த்தா யாரோ வம்புக்கு விளாம்பளங்களை பேப்பரில சுத்திப்போட்டு அவன்ரே செக் பொயின்ற்றுக்கு கிட்ட வச்சிருக்கினம்.மொக்கு ஆமிக்காரர் அதை குண்டு எண்டு நினைச்சு பின்னங்கால் பிடரில அடிபட (???) ஓடிப்போனாங்கள்.

நான் 9ம் வகுப்பில ஊரை விட்டு வந்திட்டன்.பிறகு பிறகு ஆமியோட எல்லாம் எங்கட வகுப்பு பெடியங்கள் கிறிக்கற் சேர்ந்து விளையாடினவை எண்டெல்லாம் கேள்விப்பட்டன்.

பள்ளிக்கூடம் போற வளியில சின்னத்தம்பி வித்தியாலயம் இருக்கு அத அங்க ஆமி காம்ப் ஆக்கிப் போட்டாங்கள். இப்ப எப்பிடி இருக்கோ தெரியாது.அங்க விடிய வெள்ளன புத்தம் சரணம் ஹச்சாமி தான்.இப்பதான் யோசிக்கிறன் உந்த திருகோணமலை புத்தர் சிலை விசயம் வெளில வந்த மாதிரி ஏன் அப்ப ஆமிக்காரர் சின்னத்த்மி வித்தியாலய ஆலமரத்தடியில வச்ச புத்தர் சிலை விவகாரம் தெரிய வரல??

–சினேகிதி-

9 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சயந்தன் said...

ஏதோ awards,vote ,greate எண்டெல்லாம் முதலில வந்த 2 பின்னூட்டத்திலும் இருக்கு.. ஒருவேளை பரிசேதும் தரப்போயினமோ தெரியேல்ல..எதுக்கும் வாழ்த்துக்கள்..

மதுமிதா said...

சிநேகிதி
நான் வர்றதுக்குள்ளாற இன்னும் ரெண்டு பேர் வந்துட்டு போயாச்சு.

புத்தம் சரணம் கச்சாமி
கச்சாமி
(ga(3)ch(2)chaa(3)mi

ன்னு இருக்கணும்.
சொன்ன சொல் காப்பாற்றிய தோழிக்கு நன்றி

U.P.Tharsan said...

அது சரி இது எத்தனையாம் ஆண்டு நடந்த கதை? இந்தியன் ஆமி காலத்திலா?

சினேகிதி said...

lol sayanthan,
yarada pathivu poda udane enaku oodi vanthu comment potathu endu vanthu partha yaro awards,vote ,greate endellam sollitu poyrukinam.

சினேகிதி said...

ok Madhumitha kachamy endu mathuran.Neenga kudutha padathuku nanri ponady ethuvum pothuvingalo??

சினேகிதி said...

Tharshan 1997 la nadanthathu

சினேகிதி said...

yaroo enaku oru (-) kutu vidurukinam...enna pilai endu sona adutha pathivila thiruthuvan.