Custom Search

Friday, May 18, 2007

பூவை எடுத்து ஒரு..

இதற்கு முதல் பதிவில போட்ட அதே பூவை வைத்து இன்னும் சில effects குடுத்துப் பார்த்தன் அதோட சயந்தன் அண்ணா தந்த பூவையும் விளையாட்டில சேர்த்திருக்கிறன்.






















Thursday, May 17, 2007

பெயர் தெரியாத பூவெடுத்தேன்....

செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் என்று பாடுவம் என்று நினைச்சன் ஆனால் இது செவ்வந்திப்பூவில்லை எனக்கிந்த பூவின்ர பெயரும் தெரியாது.

ஒரிஜினல் படம் விஜேன்ர நான் அதை எடுத்துச் சும்மா போட்டோசொப்ல விளைாயாட்டுக் காட்டியிருக்கிறன் எப்பிடியிருக்கு??



விஜேட ஒரிஜினல் படம்




















Tuesday, May 08, 2007

கண்டுபிடி கண்டுபிடி VII

கண்டுபிடி கண்டுபிடி VI ல் இடம்பெற்ற பாடல்களைச் சரியாகச் சொன்ன பிரபு மைபிரண்ட் மாப்ஸ் சந்திரவதனா எல்லாருக்கும் பாராட்டுக்கள்.

தனிமடலில் ஒரே மாதிரியான பாடல்களைத் தந்த நண்பர்களுக்கு நன்றி.















Sunday, May 06, 2007

கண்டு பிடி கண்டு பிடி VI

கண்டுபிடி கண்டுபிடி V இல் இடம்பெற்ற பாடல்களைக் கண்டுபிடித்த விஜே மைபிரண்ட் அநாநி மற்றும் விஷ்ணு அண்ணா அனைவருக்கும் பாராட்டுக்கள்.

பாடல்கள் ஐந்துக்கும் ஏதோ ஒரு விதத்தி்ல் ஒற்றுமை இருக்கணும் என்று நினைத்துத்தான் தேடுகிறேன் ஆனால் அப்படி அமைவதரிது அதால உங்களுக்குத் தெரிந்த பிடித்த ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போகின்ற 5 பாடல்களைத் தேர்ந்தெடுத்து எனக்கனுப்புங்கள் ..அந்தப் பாடல்கைள இந்தப் போட்டியில் சேர்த்துக்கொள்வோம்.













Tuesday, May 01, 2007

கண்டு பிடி கண்டு பிடி V

போட்டி IV ல் நான்கு பாடல்களைச் சரியாகக் கண்டுபிடித்த மைபிரண்டுக்கு பாராட்டுக்கள்.வினையூக்கிக்கும் பாராட்டுக்கள்.











இந்தக்காதல் இருக்கே...

இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ?

சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோடு போட்டிக்கு படிச்சவன் ஒருத்தன் மேல ஒரு தனிக்கவனம் இருக்குமே.

என்னடா இவன் நாம எந்தப் போட்டிக்குப் போனாலும் வாறான்.ஒன்றில் அவன் முதலாவதா வருவான் இல்லாட்டி நாமதான் முதலாவது வருவம்.இருவரில் எவர் முதலாவதா வந்தாலும் வெளியில முறைச்சாலும் உள்ளுக்குள்ள சரி பறவாயில்லை அவன்தானே முதலாவதா வந்திருக்கிறான் என்று ஒரு சின்ன சந்தோசம் வந்து மனசின் மூலையில ஒட்டுமே ..அதான் காதலா?

இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு ரியூசனில் படிக்கிற பெடியங்களில ஒருத்தன் சரியா நாம எந்த மேசையில இருப்பம் என்று தெரிஞ்சு அதற்கு நேரா வந்திருந்துகொண்டு மாஸ்டர் கேள்வி கேக்கிற நேரமெல்லாம் நாம சரியாப் பதில் சொல்றமா இல்லாட்டா உதவி செய்யணுமா என்று ஒழுங்காப் பதில் சொல்லி முடிக்கும் வரைக்கும் ஒரு விதமான ரென்சன்ல இருப்பானே அந்த நேரம் பார்த்து நாம அவனைத் திரும்பிப் பார்த்தா ஒரு நிம்மதிப் புன்னகை ஒளிரும் அவன் முகத்தில..அதான் காதலா?

ரியூசன்ல நடக்கிற வினாடி வினா போன்ற போட்டிகளில் என்னதான் நம்மளோட மல்லுக்கு நின்று கஸ்டப்பட்டுப் போராடி கடைசில பெடியங்கள் தோத்துப் போனா இன்றைக்கு மாட்டினீங்கடா என்று மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டு அவங்களைத் திரும்பி ஒரு எகத்தாளப் பார்வை பார்க்கும்போது "சரிதான் போடி நீயும் உன்ர தெத்துப்பல்லும்..லுக்கு விட்டதும் காணும் போடி" என்று ஆற்றாமைல திட்டிட்டுப் போனாலும் போற வழியில நம்ம சைக்கிள் ரயர் பஞ்சராகி சைக்கிளை உருட்டிக்கொண்டு போறதைப் பார்த்திட்டு ரியூசன்ல நடந்த போர்மேகம் கலைந்து போனாலும் கொஞ்சம் முறைப்போடயே வந்து தன்ர சைக்கிளைத் தந்திட்டு நம்ம சைக்கிளை வாங்கிக் கொண்டுபோய் ஒட்டிக்கொண்டு வந்து தாறானே...அப்ப தாங்ஸ் என்றும் சொல்லாம ஒரு அசட்டுச் சிரிப்பு வருமே.. அதான் காதலா?

பெண்கள் பருவமடைந்ததும் ரியூசன்ல பெடியங்களோட சண்டை பிடிக்கிறது கொஞ்சம் குறைஞ்சிடும்.தெற்குப்பக்கமாக ரியூசன் முடிஞ்சு போற பெட்டையள் எல்லாம் ஒருநாள் வடக்குப்பக்கமாக போனால் பெடியங்கள் தங்களுக்குள் ரகசியம் பேசுவாங்கள் 'டேய் அந்தக் கொம்பறிமூக்கன் இன்றைக்கு வரேல்லடா அப்ப அதான் போல " என்றிட்டு ஒரு சிரிப்புச் சிரிப்பாங்கள் அப்ப பெட்டையளுக்கு விளங்கிடும் இவங்கள் கண்டுபிடிச்சிட்டாங்கள் போல என்று.பிறகு அந்தப்பொண்ணு ரியூசனுக்குத் திரும்ப வரத்தொடங்கினதும் பெடியங்கள் கொஞ்ச நாளைக்கு மரியாதை குடுப்பாங்கள் என்னத்துக்கெடுத்தாலும் வாய்காட்டாமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவாங்கள்.அப்ப நமக்கும் அவங்களில ஒரு மரியாதை வருமே அதான் காதலா?



(டிஸைன் தாயகப்பறவைகள்)

நாங்கள் படிக்கிறது பெண்கள் பாடசாலையில் அவங்கள் படிக்கிறது ஆண்கள் பாடசாலையில் ஆனாலும் ஆமிச் சென்ரியைக் கடக்கிற நேரம் பார்த்துக் கொஞ்சப் பெடியங்கள் பொடிகார்ட் போல வருவாங்களே பிறகு கடைக்குப்போறது போல வந்து நாங்கள் வீட்டுக்குக்கிட்ட போனதும் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போவாங்களே.
அப்ப மனசில ஒரு பாதுகாப்புணர்வு வருமே அதான் காதலா?

கூடப்படித்தவர்களுடைய வீட்டிலோ அல்லது ஏதாவது தெரிந்தவர்களின் மரண வீட்டில் எதிர்பாராதவிதமாக கூடப்படிக்கிற ஒரு பெடியன் கண்கலங்கி நிற்பதைப் பார்த்ததும் ஐயோ பெடியங்கள் அழமாட்டாங்கள் என்று நினைச்சமே இவன் என்ன இப்பிடி அழுறான் என்று மனசு அவனோடு போய் ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்லணும் என்று அங்கலாய்க்குமே அதான் காதலா?

மீண்டும் ரியூசனில் சந்திக்கும்போதும் இவன் அன்றைக்கு அழுதவன்டி நான் பார்த்தேன் என்று எங்க மற்றப் பெட்டையளுக்குச் சொல்லி நக்கலடிப்பாளோ என்ற எண்ணம் தனியா ஒருபக்கத்தில ஓடிக்கொண்டிருந்தாலும் "அன்றைக்கு அந்த விபத்தில செத்தவர் என்ர அண்ணான்ர பிரண்ட் அவரும் எனக்கு ஒரு அண்ணா மாதிரித்தான் அவர் எனக்கு ஒரு றோல்மோடல் அவருக்கு இப்பிடி ஆனதை என்னால தாங்கிக்கவே முடியல்ல" என்று தண்ணிகுடிக்கப் போன நேரத்திலயோ அல்லது சோக்(Chalk) எடுக்கப் போன இடத்திலயோ அவசரமா சொல்லிட்டு ஓடிப்போவானே அப்ப வாறதுதான் காதலா?

ஒரு வாணி விழாவுக்கோ அல்லது ஆண்டுவிழாவுக்கோ நடைபெறும் நாடகப் பயிற்சியில் தெரியாமல் முதன்முதலாக குடும்பத்தினர் தவிர்ந்த ஒரு ஆடவனின் கை பட்டுக்கொள்ளும்போது இயல்பாக வரும் ஒரு சிலிர்ப்பு."என்னைத் தீண்டி விட்டாய் திரி தூண்டி விட்டாய்" என்று சிம்பு மாதிரி கையைச் சுத்திக்கொண்டு திரியாவிட்டாலும் சித்தார்த் மாதிரி கையைப் போட்டோகொப்பி எடுத்து வைத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த சிலிர்பு ஒரு நாளாவதிருக்கும். அப்ப அதான் காதலா?

வெளிநாட்டுக்கோ அல்லது வேறு ஊருக்கோ பிரிந்து செல்ல நேரும்போது இதுவரை ரியூசனில் ஒருநாள் கூட வாய்திறந்து கதைக்காம இருந்த பெடியன் கூட ஆட்டோகிறாப்ல (Autograph) "நாங்கள் இதுவரை பேசிக்கொண்டதில்லை இருந்தாலும் பல தடவைகள் உன் நக்கல்களையும் திறமைகளையும் ரசித்திருக்கிறேன் எப்பவும் இப்படி கலகல என்றிருக்க வேண்டும்" என்று இவன் இப்பிடி எழுதுவானா என்று நம்மைக் கொஞ்சம் ஆச்சரியப்பட வைப்பானே அப்ப கடவுளே இவர்கள் எல்லாரையும் மிஸ் பண்ணப்போறமே பேசாம வாழ்நாள் முழக்க இவர்களில் ஒருவனோடயே இருக்க முடியாதா என்ற எண்ணம் வருமே அதான் காதலா?

பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடந்து வந்தாலும் எப்பவாவது கூடப்படிக்கிற ஒரு பெடியன் எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும்போது ரியூசனில் படித்த யாரோ ஒருவனின் முகம் நினைவில் வந்து எவ்வளவு காலம் கூடப்படித்தோம் என்னதான் அடிபட்டாலும் அவன் இவனைப்போல இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டதில்லையே என்று நினைப்பமே அதான் காதலா?

பதின்ம வயது நிறைவுபெறும் காலத்தில் ஏதோ உரிமையுள்ளவன் போல "அடியே" என்று கூப்பிட்டுக் கதைப்பவனிடமும் சரி வெளிப்பேச்சுக்காக அல்லாது உண்மையாகவே மனசார உரையாடல்களினிடையே "அம்மா" போட்டுக் கதைப்பவனிடமும் சரி தனிக்கவனம் வரும்.கதையிலயே மயங்கி ஐயோ இவன் கதைக்கிறத உயிருள்ளவரை கேட்டுக்கொண்டேயிருக்கணும் போலத் தோணுமே அதான் காதலா? அதேபோல அம்மவைப் பற்றி வெளிப்படையாகவும் அம்மா தனக்கு முக்கியம் என்பது போலப் பேசுபவர்களிடமும் மரியாதை அதிகரிக்கும். இப்படி அம்மாவை நேசிப்பவன் தன் மனைவியையும் நேசிப்பான் என்று எங்கயோ கேட்ட ஞாபகம் வரும் அதால இவனே நமக்குத் துணையா வந்தா நல்லா இருக்குமே என்று நினைக்கிறமே அதான் காதலா?

இப்படி நான் சொன்ன வற்றில் எதைக் காதல் என்றுறது? உங்களுக்கேதும் விளங்குதா? இதெல்லாம் ஆத்மார்தமான உணர்வுகள்.அப்பப்ப இதை நாங்கள் எல்லாரும் அனுபவிக்கிறோம்.சிலவற்றை பப்பி லவ் என்கிறோம் இன்னும் சிலதை வெறும் கவர்ச்சி என்கிறோம். சிலர் உண்மைக்காதல் என்கிறோம். இன்னும் சிலர் Matured love என்கிறோம். இதில எது சரி எது பிழை என்றது யாருக்குமே சரியாத் தெரியாதென்றுதான் நினைக்கிறன்.

காதல் என்றால் என்ன என்று முன்னோர்கள் யாரும் வரைவிலக்கணம் எழுதி வச்சிட்டுப் போயிருந்தால் வசதியாயிருந்திருக்கும். இது அப்பிடி யாரும் செய்யாததலா நாங்கள் என்ன நினைக்கிறமோ அதான் காதல் என்றாயிடுச்சு அதனாலதான் காதல் தோல்வி என்றால் என்ன என்றே தெரியாம இருக்கிறம்.காதல் என்றால் என்ன என்று முதல் தெரிந்துகொண்டு வாறன் நான் வந்து அடுத்த முறை காதல் தோல்வியென்றால் என்ன என்று சொல்றன்.

தொடரும் .......
தாயகப்பறவைகள் சமுதாயக் கண்ணோட்டத்துக்காக எழுதியது.