Custom Search

Monday, May 26, 2014

திரும்ப வந்திட்டன்

கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடைய இரண்டு வயது மகளுடன் பிஸியாக இருந்து விட்டேன். இடையிடையே எழுதவேண்டும் என்ற ஆவல் தலைதூக்கிய போதெல்லாம் ஏதோவொரு தடை வந்துவிடும். ஒரு சில நண்பர்கள் தமிழ்க் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை பெண்கள் மீதான வன்முறைகள் எழுதும்படியும் இன்னொரு நண்பி குழந்தைகள் உளநலம் பற்றி எழுதுங்கள் என்றும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தவிர இன்று Facebook ல் சினேகிதிக்கு ஒரு surprise message வந்திருந்தது. ஒரு இலக்கிய சந்திப்பில் என்னைப் பற்றி பேசியதாகவும் என்னை மீண்டும் எழுதும்படியும் அன்பான அழைப்பு அது. நான் குடும்பத்தைப் பிரிந்து தனியே தங்கிப் படித்துக்கொண்டிருந்த நாட்களில் என்னுடைய தனிமையைப் போக்கிய முக்கியமான வலைப்பக்க நண்பர்கள் பலரோடு நான் தற்போது தொடர்பில் இல்லை. அந்தக் குற்றவுணர்வு நிறையவே உண்டு. 1000க்கும் மேற்பட்ட நண்பர்கள் FB ல் இருந்தாலும் ஒரு சிலருடன் மட்டுமே எப்பவாவது கதைப்பதுண்டு. வழமையா எல்லாப் பெண்களும் சொல்வதுதான் இருந்தாலும் சொல்கிறேன், திருமணமாகி இந்த 3 வருடங்களில் எனக்கென்று நான் நேரம் எடுத்துக்கொண்டது மிகவும் குறைவு. அதனால் நிஜத்தில் நான் எழுதவில்லை ஆனால் சிலநேரம் கனவில் பதிவெழுதி முடித்து அதற்கு வரும் பின்னோட்டங்களுக்கு கோபமாகப் பதில் போட்ட தருணங்களும் உண்டு. சரி எப்படியாவது இன்றைக்கு blog பக்கம் போயே தீருவன் என்று சபதத்தில் வந்திட்டன். அண்மையில் ஒரு குடும்ப வன்முறை பற்றிய கருத்தரங்குச் சென்றிருந்தேன். 2 நாட்கள் 60 முதியவர்களுடன் பயணம் செய்த போது அவர்களைப் பற்றி நான் அறிந்து கொண்ட விடயங்களை எழுதுவேன் விரைவில். அதுவரை என் மகளைப் பார்த்துக்கொண்டிருங்கள் :)