Custom Search

Friday, May 27, 2005

அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்?

இந்த வலைப்பதிவுக் குடும்பத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்ற
நம்பிக்கையுடன் முதன்முதலாக நண்பி வீட்டில் நடந்த ஒரு நகைச்சுவையான
சம்பவத்தை உங்களனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது நண்பியின் சகோதரி மகன் இளங்குமரனுக்கு மூன்று வயதாகவிருக்கும்
போது ஒரு நாள் ஒரு சத நாணயத்தை (Penny) விழுங்கி விட்டார்.ஏதோ ஒரு
வகையில் அந்த நாணயத்தை பேரனின் உடம்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்
என்று பழங்கள் எல்லாம் நறுக்கி கொடுத்தார் அம்மம்மா.
இளங்குமரன் ஒரு கவலையும் இல்லாமல் விளையாடினாலும் அம்மம்மாக்குப்
பயம் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.குமரன் washroom செல்லுவதைப்
பார்த்துவிட்டு தானும் கூடவே சென்று குமரனிடம் தான் flash பண்ணுவதாக
சொல்லி குமரனை அனுப்பிவிட்டு அம்மம்மா கழிவோடு penny வெளியேறி
விட்டதா என்று ஒரு சின்ன தடியால அலசிப்பார்க் கொண்டிருக்கும்போது
பின்னாலிருந்து ஒரு கேள்வி குமரினடமிருந்து… அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்?

இந்தச் சம்பவத்தைக் கேட்டுச் சிரிச்சதில Penny இருந்ததா இல்லையா என்று
கேட்க மறந்து விட்டேன்.

-சினேகிதி-