Custom Search

Thursday, December 22, 2005

சொக்காக் கணக்கு

1. உங்களுக்கு ஒரு கிழமையில எத்தின சொக்கா (1 ல இருந்து பத்துக்குள்ள) வேணும் என்று எழுதுங்கோ ஒரு பேப்பரில(சத்தியமா நான் வாங்கித் தர மாட்டன் அத்தின சொக்கா)

2. அதை 2 ஆல் பெருக்குங்கோ

3. இப்ப அதோட 5 ஐ கூட்டுங்கோ

4. இப்ப இருக்கிற எண்ணை 50 ஆல் பெருக்குங்கோ (கல்குலேற்றர் தேடுறீங்களோ)

5. இந்த வருசம் உங்கட பிறந்தநாள் ஏற்கனவே முடிஞ்சிருந்தா 1755 ஐ கூட்டுங்கோ.இனிமதான் எண்டால் 1754 ஐ கூட்டுங்கோ.

6. இப்ப நீங்கள் பிறந்த நாலு இலக்க ஆண்டை கழியுங்கோ.

7. இப்ப ஒரு மூன்றிலக்க எண் வந்ததா? ஆதில முதலாவதுதான் நீங்கள் கேட்ட சொக்கா எண். கடைசி இரண்டிலக்க எண் உங்கட வயசு

சரியா??

Wednesday, December 21, 2005

மகிந்தவிற்கு கனடிய மாணவர் சம்மேளனம் கடிதம்

யாழ். பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவத்தை உடன் அகற்றுக - மகிந்தவிற்கு கனடிய மாணவர் சம்மேளனம் கடிதம்

சிறீலங்கா இராணுவத்தை யாழ். பல்கலைக்கழக சுழலில் இருந்து உடன் அகற்றுமாறு கோரி சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு, கனடிய மாணவர் சம்மேளனத்தின் சார்பில், அதன் ஒன்ராரியோ மாநில பிரதிநிதி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். ஒன்ராரியோ மாநிலத்தின் இரண்டு லட்சத்து ஜம்பது ஆயிரம் மாணவர்களை பிரிதித்துவப்படுத்தும் பிரதிநிதி, ஜெசி கிரேனார் என்பவரே இக்கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளாhர்.

கனேடிய தலைமை அமைச்சர் போல் மாட்டின், மற்றும் நோர்வே தலைமை அமைச்சர் ஜேன்ஸ் ஸ்ரொட்ல்ன்பேர்க் ஆகியோருக்கும் நகல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ.; பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், அதிகாரிகள் மீது ஒரு அமைதியான போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த எமது கரிசனையை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;. மேலும் யாழ் மாணவர் அலுவலகங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இராணுவக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.

கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவது அடிப்படை மனித உரிமை. மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்பதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில், யாழ். பல்கலைக்கழக சூழலை விட்டு இராணுவத்தை உடன் அகற்றுவது மட்டுமன்றி, கல்வி கற்றலுக்கான மாணவர்களின் அனைத்து தேவைகளையும் உடன் பூர்த்தி செய்யுமாறும் உங்களை வேண்டுகின்றோம். பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களைக் கொண்ட வவுனியா பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பல்வேறு தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வடபகுதி மாணவர்கள் மீது தொடரும் வன்முறைகள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானால், அதன்பால் அனைதுலக கவனம் திருப்பப்பட வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நான்கு ஆண்டுகளிற்கு முன்னரும் யாழ். பல்கலைக்கழக சமுகத்தின் மீது தொடுக்கப்பட்ட இராணுவ நெருக்குவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் 'நெருக்குவாரங்கள் தணிந்து புரிந்துணர்வு வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு தற்போது வரும் செய்திகள் ஏமாற்றம் அளிப்பதாகவும், இது குறித்து உங்கள் அரசின் கண்டனத்தையும், வன்முறைகளை நிறுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் வேண்டி நிற்கின்றோம்", எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய மாணவர் சம்மேளனம், கனடாவில் உள்ள மாணவர்கள் அனைவரையும் அதன் 10 மாநிலங்களிலும் பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு அமைப்பு என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

Written by Paandiyan
http://www.sankathi.com/

Friday, December 16, 2005

Muller Lyer


பெரியது கேட்கின்??

Wednesday, December 14, 2005

GeT tHe F**k OuT oF mY cAr

http://media.putfile.com/FromMetacafe-Grandma_1

என்னடா சினேகிதி ஒரே படம் காட்டிக்கொண்டிருக்கிறா என்று நினைக்காதயுங்கோ எல்லாம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கொள்கைதான் :-)

இந்தப் பாட்டின்ர லொள்ளைப் பாருங்க.

Tuesday, December 13, 2005

ஐ லவ்யூடாஐ லவ்யூடா செல்லம்…எங்க இந்த மாமா பார்த்து ஐ லவ்யூ சொல்லுடா செல்லம்!


இங்க போய்ப் பாருங்கககககககககககpic from :http://www.lalecheleague.org/03conf/pix/dog.jpg

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்.
ஒரு நாள் ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

பக்தா ஏன் அழுகிறாய்?

கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன்.

சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை சுவாமி.

சரி கொஞ்சம் பொறு என்று போட்டு திரும்ப தண்ணிக்குள் போய் வெள்ளிக்கோhடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை கடவுளே.

இன்னுமொரு சான்ஸ் தா பக்தா

திரும்ப ஸ்விம்மிங்.இந்த தடைவ இரும்புக் கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இதான் இதான்!!!

பக்தனே உன் நாணயத்தைப் பார்த்து நான் மகிழ்சியடைந்தேன்.ஆதலால் இந்த மூன்று கோடரிகளையும் நீயே வைத்துக்கொள்.

கடவுளே உங்கள் கருணையே கருணையென்று அந்த விறகு வெட்டுறவரும் மூன்று கோடாரியோட சந்தோசமா வீட்ட போனாராம்.என்னதான் பொற்கோடாரி கிடைத்தாலும் அவர் விறகு வெட்டும் தொழிலைக் கைவிடவில்லையாம்.

ஒரு நாள் விறகு வெட்டியின் மனைவி ஆற்றுக்குள் விழுந்து விட்டாவாம் அப்ப உடனே விறகு வெட்டி கடவுளைக் கூப்பிட ஓடி வந்த கடவுள் என்ன பக்தா எப்பிடி இருக்கிறாய் என்று கேட்க அவர் சொன்னார் கடவுளே கடவுளே என்ர மனைவியைக் காப்பாத்துங்கோ.

கடவுள் தண்ணிக்குள் போய் நம்ம அஸினோட வந்தாராம்.

பக்தா இது உன் மனைவியா?

ஆமாம் கடவுளே இவளே தான். ரொம்ப நன்றி கடவுளே.

ஆ ஆ ஆ ஆ பக்தனே உனக்கு என்னாச்சு உன் நாணயம் எங்கே போய்விட்டது?

மன்னியுங்கோ கடவுளே! நான் இல்லை என்று சொன்னா நீங்கள் அடுத்து ஜோதிகாவோட தண்ணிக்குள்ளிருந்து வருவீங்கள் அப்ப நான் இது என் மனைவி இல்லை என்று சொல்லுவன்.உடனே நீங்கள் என் மனைவியோட வெளிய வருவீங்கள்.நான் இவள் தான் என் மனைவியென்;று சொன்னவுடனே நீங்களும் உங்கட வள்ளலதைனத்தைக் காட்ட மூன்றுபேரையும் வீட்டுக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுவீங்கள்.நடக்கிற காரியமா அது.அதான் நான் அஸினோடயே போயிடுறன்.

கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்….
(இந்தக் கதை நான் ஏற்கனவே கே.எஸ்.பாலச்சந்தர் சொல்லக் கேட்டிருக்கிறன்.நேற்று நண்பன் ஒருவன் ஆண்கள் ஏன் பொய் சொல்லுகிறார்கள் என்ற தலைப்பில அனுப்பிய fwd mail ல இருந்த இந்தக்கதை சில மாற்றங்களுடன் உங்களுக்காக :-)

Saturday, December 10, 2005

ஒரு குட்டிப்பதிவு


எங்கட Apartment ல எல்லாரும் பழைய நிலமைக்கு திரும்பி வந்து 2 நிமிடமிருக்கும் .

11வது மாடியில ஒரு சின்ன fire accident.Jacket எடுத்துக்கொண்டு வந்திருந்தவை தவிர apartment ல இருக்கிற மற்றவை எல்லாரும் 20 நிமிடத்துக்கு குளிரில வெடவெடக்க நிக்கிறம்.ஆனால் பாருங்க எனக்குப் பக்கத்தில நிண்ட 1 குழந்தை கேட்டுதே 1 கேள்வி.
ஏனம்மா உந்த பெரிய போன் ring பண்ணிக்கொண்டேயிருக்கு ஒருதரும் answer பண்ணினம் இல்லை.

Monday, December 05, 2005

என்ர கடவுளே…ஹலோ…

ஹலோ லூசு என்ன நித்திரையா?

யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு.

பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா.

ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம.

ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார்.

ஆதை நான் டிசைட் பண்ணனும்.

உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது.

எ வட்?

காதென்ன றென்ருக்கு விட்டாச்சே?

காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்?

ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன்.

நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வராததுக்கு மற்றவையை நிம்மதியா படுக்க விடாதாம்.

அடியேய் நான் சீரியசாய் சொல்லுறன்.ஐ வோஸ் சொக்ட் இவளா இப்பிடியெல்லாம் (all ***) அனுப்பினவள் எண்டு.

ஐயோ கடவுளே இப்ப என்ன நான் செய்யிறது. ஓ ம காட்.சத்தியமா நான் அனுப்பேல்ல.

சரி பெட்டை ரென்ஸனாயிட்டுது.

ஏய் சொன்னதெல்லாம் அப்ப பொய்யா?

ஹி ஹி

சரியான வெருளியொண்டு.

பொய்யில்ல மெயில் வந்தது உண்மை ஆனா உன்னட்ட மட்டுமில்ல என்ர அட்றஸ் புக்ல இருக்கிற நிறையபேரின்ர ஈமெயில் ஐடில இருந்து வந்தது.பிரன்ட் சொன்னான் என்ர ஸ்பைவெயர் நாத்திப்போட்டுது எண்டு .கணனி வேலை செய்யல என்று சொன்னான் எல்ல. ஸ்பைவெயர் எல்லாத்தையும் trace பண்ணிப்போட்டுது.ஆனால் உன்ர மெயில்தான் முதல் வந்தது.

அட கடவுளே நான் பயந்திட்டன்.வேற யாருக்கும் உப்பிடி போயிருந்தா என்ர நிலமை.

ஹி ஹி

காணும் லூசு போய் முதல் computer ஐ திருத்துற வழியைப்பார்.

ஒ.கே குட்நைற்.

நல்ல நித்திரையைக் குழப்பிப்போட்டு குட் நைற்றாம்.காலம போன் பண்றன் bye.

bye g.night.