Custom Search

Tuesday, December 13, 2005

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்.




ஒரு நாள் ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

பக்தா ஏன் அழுகிறாய்?

கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன்.

சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை சுவாமி.

சரி கொஞ்சம் பொறு என்று போட்டு திரும்ப தண்ணிக்குள் போய் வெள்ளிக்கோhடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை கடவுளே.

இன்னுமொரு சான்ஸ் தா பக்தா

திரும்ப ஸ்விம்மிங்.இந்த தடைவ இரும்புக் கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இதான் இதான்!!!

பக்தனே உன் நாணயத்தைப் பார்த்து நான் மகிழ்சியடைந்தேன்.ஆதலால் இந்த மூன்று கோடரிகளையும் நீயே வைத்துக்கொள்.

கடவுளே உங்கள் கருணையே கருணையென்று அந்த விறகு வெட்டுறவரும் மூன்று கோடாரியோட சந்தோசமா வீட்ட போனாராம்.என்னதான் பொற்கோடாரி கிடைத்தாலும் அவர் விறகு வெட்டும் தொழிலைக் கைவிடவில்லையாம்.

ஒரு நாள் விறகு வெட்டியின் மனைவி ஆற்றுக்குள் விழுந்து விட்டாவாம் அப்ப உடனே விறகு வெட்டி கடவுளைக் கூப்பிட ஓடி வந்த கடவுள் என்ன பக்தா எப்பிடி இருக்கிறாய் என்று கேட்க அவர் சொன்னார் கடவுளே கடவுளே என்ர மனைவியைக் காப்பாத்துங்கோ.

கடவுள் தண்ணிக்குள் போய் நம்ம அஸினோட வந்தாராம்.

பக்தா இது உன் மனைவியா?

ஆமாம் கடவுளே இவளே தான். ரொம்ப நன்றி கடவுளே.

ஆ ஆ ஆ ஆ பக்தனே உனக்கு என்னாச்சு உன் நாணயம் எங்கே போய்விட்டது?

மன்னியுங்கோ கடவுளே! நான் இல்லை என்று சொன்னா நீங்கள் அடுத்து ஜோதிகாவோட தண்ணிக்குள்ளிருந்து வருவீங்கள் அப்ப நான் இது என் மனைவி இல்லை என்று சொல்லுவன்.உடனே நீங்கள் என் மனைவியோட வெளிய வருவீங்கள்.நான் இவள் தான் என் மனைவியென்;று சொன்னவுடனே நீங்களும் உங்கட வள்ளலதைனத்தைக் காட்ட மூன்றுபேரையும் வீட்டுக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுவீங்கள்.நடக்கிற காரியமா அது.அதான் நான் அஸினோடயே போயிடுறன்.

கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்….




(இந்தக் கதை நான் ஏற்கனவே கே.எஸ்.பாலச்சந்தர் சொல்லக் கேட்டிருக்கிறன்.நேற்று நண்பன் ஒருவன் ஆண்கள் ஏன் பொய் சொல்லுகிறார்கள் என்ற தலைப்பில அனுப்பிய fwd mail ல இருந்த இந்தக்கதை சில மாற்றங்களுடன் உங்களுக்காக :-)

7 comments:

சினேகிதி said...

Hello puddhuvai,
welcome to thathaka pithaka as well as to Thamizmanam!!!

oh it's good tat u don't have any pond in ur village b.coz Asin is already taken:-)

ramachandranusha(உஷா) said...

சிநேகிதி, வள்ளுவரே சிலசமயம் பொய் சொன்னா தப்பில்லை என்று சொல்லியிருக்கிறார். அசின், ஜோதிகா கூடவே தாலிகட்டியவளையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போனா அவன் கதி என்னவாகும் :-)
(பழைய கதைதான் ஆனாலும் இத்தகைய நீதி கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம், படிக்கலாம்)

சினேகிதி said...

Adade Ushava neethi kathai vasichaha parthu kavaname aatrangaraila nadanga :-)

சிங். செயகுமார். said...

சினேகிதி ,கடவுள் என்னை கேட்டு இருந்தால் நான் உண்மையைதான் சொல்லி இருப்பேன். எனக்கு பொய் சொல்ல தெரியாதுங்க!

சினேகிதி said...

aahaa inga parunga oral poi solla theriyathendu poi solraruuuuuuuuuu

சிங். செயகுமார். said...

ஐயோ ஐயோ தப்பு தப்பு தப்பா பேசரேளே !(மன்மதன் சிம்பு ஸ்டெயில்)

சினேகிதி said...

hmm enakenamo ithu AnNiyan Ambi style pola iruke.