அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்?
இந்த வலைப்பதிவுக் குடும்பத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்ற
நம்பிக்கையுடன் முதன்முதலாக நண்பி வீட்டில் நடந்த ஒரு நகைச்சுவையான
சம்பவத்தை உங்களனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது நண்பியின் சகோதரி மகன் இளங்குமரனுக்கு மூன்று வயதாகவிருக்கும்
போது ஒரு நாள் ஒரு சத நாணயத்தை (Penny) விழுங்கி விட்டார்.ஏதோ ஒரு
வகையில் அந்த நாணயத்தை பேரனின் உடம்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்
என்று பழங்கள் எல்லாம் நறுக்கி கொடுத்தார் அம்மம்மா.
இளங்குமரன் ஒரு கவலையும் இல்லாமல் விளையாடினாலும் அம்மம்மாக்குப்
பயம் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.குமரன் washroom செல்லுவதைப்
பயம் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.குமரன் washroom செல்லுவதைப்
பார்த்துவிட்டு தானும் கூடவே சென்று குமரனிடம் தான் flash பண்ணுவதாக
சொல்லி குமரனை அனுப்பிவிட்டு அம்மம்மா கழிவோடு penny வெளியேறி
விட்டதா என்று ஒரு சின்ன தடியால அலசிப்பார்க் கொண்டிருக்கும்போது
பின்னாலிருந்து ஒரு கேள்வி குமரினடமிருந்து… அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்?
இந்தச் சம்பவத்தைக் கேட்டுச் சிரிச்சதில Penny இருந்ததா இல்லையா என்று
கேட்க மறந்து விட்டேன்.
-சினேகிதி-
8 comments:
hi
your writting is superp. u can continue like this....ungalukku vera ethum doubt irunthaa sollunga...
ஹா ஹா ஹா !!
வாருங்கள் ... வரவேற்கிறோம் !!!
வீ .எம்
எதுக்கு பழம்லாம் சாப்பிடணும் , ஒரு பாட்டில் வெளகெண்ணை குடிச்சா தன்னால வந்துட்டுப் போவுது
//இந்த வலைப்பதிவுக் குடும்பத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்ற
நம்பிக்கையுடன் //
எதுக்கு இதெல்லாம்?
சேர்ந்தாச்சு!!!!!
வாழ்த்துக்கள்!!!!
மெம்பர்ஷிப் ஃபீஸ் என் அட்ரஸ்க்கு அனுப்பிருங்க:-)))
Tx NilavuNanban n V.M.
Maravandu i don't y ammamma didn't give villakenna to Kumaran :) i'll ask her when i see her next time.Thulashi give me ur address i'll send u a penny every month.
Snegethy
பழைய நகைச்சுவை ஒன்று (குழலி மன்னிக்கவும்)
நேற்று பையனை டாக்டரிடம் சென்று காண்பித்தீர்களாமே என்ன விஷயம் ?
பையன் ஒரு ரூபாய் நாணயத்தை முழுங்கிட்டான்.
சரி சரி டாக்டர் எவ்வளவு முழுங்கிட்டார் ? :-))
Latha,
Comments iku nanri..Kulali eluthinatha athu?
Ungada pathivugal evataiyum kanavillai?
Snegethy
ச்ச்ச்ச்சீ கக்கா பகிடி
Post a Comment