Custom Search

Wednesday, November 09, 2005

நான் என்ன மெஸினா?


அம்மா :
யப்பா என்ன சனம் கோயில்ல….சூரன் போருக்கெண்டா மட்டும் இவ்வளவு சனம் எங்க இருந்துதான் வருதுகளோ.

அப்பா :
அம்மா ஒரு ரீ குடிச்சா நல்லாயிருக்கும்.அம்மா: நானும் உங்களோடதானே வந்தனான்.நானென்ன மெஸினே?? மது அப்பாக்கும் எனக்கும் ஒரு ரீ போட்டுத்தாவனம்மா.

மது :
அம்மா எங்கட மிஸ் சொன்னவா நாங்கள் எல்லாம் மெஸின் போலதானாம். வட அமெரிக்காவின் குழந்தை பிறப்பு இரண்டு முறைகளில் ஒன்றான Technocratic model

Woman => object
Male body => norm
Body => machine
Pregnancy and birth => pathological
Hospital => factory
Baby => productஎன்று இருக்குதாம்.அப்பிடியெண்டால் பெண்கள் ஒரு பொருள் அவேன்ர மேனி ஒரு மெஸின் போல. கர்ப்பமாதல் குழந்தை பெறுதல் ஒரு வருத்தம் மாதிரி.வைத்தியசாலை ஒரு தொழிற்சாலை அங்க அன்பு இரக்கம் எல்லாம் இருக்காது.பெண் மெஸின்களின்ர வேலை வைத்தியர் சொன்ன நேரத்துக்குள்ள அவர் வைச்ச குறிப்பிட்ட தொழிலாளர்களின் உதவியோட விளைபொருளை உருவாக்க வேண்டும்.அப்பிடி பெண் மெஸின்களால அது முடியாது போகும்போது வைத்தியர் உற்பத்தியை துரிதமாக்குவதற்கு epilit போன்ற தூண்டுதல் தருவார்.அதன்படி விளைபொருள் உற்பத்தி செய்யப்படும்.அடுத்த நொடியே உற்பத்திப் பொருள் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடும்.

அம்மா:
மகள் தேத்தண்ணி கேட்டு எவ்வளவு நேரம்?

மது :
நான் சொன்னது சரிதானே….நாங்கள் மெஸின்தானே??

அம்மா :
வியாக்கியானம் சொல்லாம ரீ போட்டுக் கொண்டு வாறிங்களே??

மது :
அம்மா நான் போடுற ரீயை விட நீங்க போடுற ரீ தான் நல்லா இருக்கும்.

அம்மா :
நினைச்சன் ..நீயாவது கேட்டவுடனே ரீ போட்டுத்தாறதாவது.

அப்பா :
வீட்டில இருக்கிற இரண்டு மெஸிலயும் ஒன்றாவது ஒழுங்கா வேலை செய்யுதா பாருங்க.

10 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

I enjoyed reading some of your posts. I have a
free music downloads site. In addition to free music downloads, you can get music of some of today's top artists' such as Green Day, Gwen Stefani, Simple Plan, Usher and many more. Come and check it out if you get time :-)
Rod

Anonymous said...

Nice blog!
good content, so I bookmarked you, and I'll be here again. (is that okay?)


~ keep up the great work...
my site's about romanticMaking Out and Kissing if you want to see.
I also have a fun blog if you want to check it out!
bye.

அன்பு said...

என்னங்க ஒரு முக்கியமான விஷயத்தை மிக ஜனரஞ்சகமா சொல்லியிருக்கீங்க... யாரோரோ ஏதேதோ சொல்லிட்டுப் போறாங்க!?

பகுத்தறிவாளன் said...

//வீட்டில இருக்கிற இரண்டு மெஸிலயும் ஒன்றாவது ஒழுங்கா வேலை செய்யுதா பாருங்க.//

இப்படி நொந்து என்ன பிரயோஜனம். மெஷினை சரியான முறையில் பயன்படுத்த தெரியாததினால் வந்த வினை தானே இது?

சினேகிதி said...

nanri anbu...entha yar yarai solringa?? ohh intha anamatheyangala??kudi irukira veedila pola athan netru oru iravu en thalathila vanthu thangittu poyurikinam :)

சினேகிதி said...

apdiya aaravathu arivu?? neenga nalla payan paduthuringala?

சிங். செயகுமார். said...

உங்க வீட்டு கதைங்களா இதெல்லாம்?

சினேகிதி said...

எங்க வீட்டு கதையில்ல இது.உங்க வீட்டில இந்தக்கதை நடந்ததே இல்லையா?

பதிவில ஆங்கிலத்தில இருப்பது health studies வகுப்பில வாசிச்ச ஒரு article ல் இருந்தது..அதை வாசிச்சப்ப இப்படி எழுதணும் போல இருந்ததா அதான் எழுதினேன்.

Anonymous said...

yeppadi !!! yemmadiyouv:-)
JALAJA REALLY GREAT!
nice commentents.Pennium patri pesuringale >? Neenga yen oru iyakkam aarambikka kudathaakum>

I cant understand u r slang?
What is ree in u r lanuage ?
Normal tamil mathri illye ?
Unga urill ippadithan pesuvaongalo?
NAllathan iruuku ammani?

Pithan