Custom Search

Friday, November 11, 2005

உங்க லவ் எங்க லவ்வில்ல

உங்க லவ் எங்க லவ்வில்ல ங்கொக்காமக்க உலகமகா லவ்வுடியோவ்.

விஜய் :ஐ லவ்வுயாடா செல்லம்…எங்க மாமா பார்த்து ஐ லவ்யு சொல்லுடா செல்லம்.
அஸின் : same to u.

படம்னா சிவகாசிதான் படம்.எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.விஜய் பேசுற வசனங்களுக்காகவாவது எல்லாரும் பாருங்க (வசனகர்த்தா யாரோ எனக்குத் தெரியாது).
படத்தின்ர தொடக்கத்திலயே அஸின் சோட்ஸ்ம் சிலீவ்லெஸ்ம் போட்டுக்கொண்டு (விஜய்-வசனகர்த்தாவின் பார்வையில் அந்த உடுப்புக்கு வேற பெயர் என்றது வேற விசயம்) அட்டகாசமா கடைத்தெருவில பவனி வருவா அதுவும் அப்பாவோட.வெளிநாட்டில படிச்சிட்டு சொந்த ஊருக்குப்போற எல்லாரும் இந்தியாவில அப்பிடித்தான் உடுப்புப் போடிறவையோ?? தெரிஞ்சவங்க சொல்லுங்க.

உடுப்பு போடுறது ஒவ்வொருவருத்தருடைய விருப்பம் அதுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தமோ எனக்கு விளங்கலப்பா.அம்மா இல்லாத பொம்பிளைப்பிள்ளையளுக்கு கல்லுரிக்குப் போற வயசிலயும் சொந்த புத்தி கிடையாதா? அதே பெடியங்களுக்கு அம்மா இல்லையெண்டால் அம்மா இல்லாம வளர்ந்தவன் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பான்.எப்பிடியாவது இருக்கட்டுமன் எதுக்கு அம்மாவைச் சாட்டுவான்.அம்மா இருந்தா அறிவுரை சொல்லுவாதான் இல்லையெண்டு சொல்லலை அதுக்கா அம்மா இல்லாட்ட பிள்ளையளால சுயமா சிந்திக்கவே தெரியாதெண்டமாதிரியெல்லோ இருக்கு.

சிவகாசி அஸின்ர கையை அவவை வந்து மோதினவன்ர கையோட உரசு உரசு உரசிட்டு கசாப்பு கடையில தசை இருக்கு போடா எண்டு சொல்லிப்போட்டு அஸினுக்கு ஒரு லெக்ஸர் குடுப்பார்.எல்லாப் பெண்களுக்கும் ரொம்பத் தேவையானது.முன்னம் உப்பிடித்தான் யூத் படத்தில விஜய் கதாநாயகி என் கையைப் பிடிச்சா எனக்கு பிடிக்கிற எல்லாம் பிடிக்கும் என்று சொன்னா என்று லவ் பண்ணிப்போட்டு அவா தான் லவ் பண்ணவில்லை என்று சொன்னவுடனே பொம்பிளையளுக்கெல்லாம் அம்மா என்றொரு ஸ்தானம் இல்லையெண்டா வேஸ்ற் என்று சொல்லுவார்.எல்லாப் படத்திலயும் பொம்பிளையளுக்கு மரியாதையோ மரியாதை.

படத்தில ஒரு காட்சி:
அசின் நல்லா குண்டான கொஞ்ச அன்ரீஸ் ஆக்களை கூட்டிக்டிக்கொண்டு வந்து இதோ சேலை கட்டி வந்திருக்கினம் கையெடுத்து கும்பிடு சிவகாசி என்று சொன்னா விஜய் துவக்கெடுத்து கொண்டு வருவார்.அதுக்குள்ள அவை குண்டா வடிவில்லாத ஆக்கள் எல்லாம் லவ் பண்ணக்கூடாதெண்ட மாதிரியான நக்கல் வேற.

காதலியோட அப்பா அண்ணனை எல்லாம் எதுக்கு தேவையில்லாம சேட்டைப் பிடிக்கிறாரு அடிக்கிறாருன்னு தெரியலை சிவகாசி.அஸின் நல்லாயிருக்கிறாவா என்று பார்க்கணும்னா போன் பண்ணிப் பார்க்கிறரு இல்லை வீட்ட போய் பார்;க்கிறது படத்தில சும்மா விஜய் போன போக்கில அசின் அப்பான்ர சட்டையைத் தான் பிடிப்பார்.அப்பாக்கள் அண்ணன்கள் எல்லாம் லூசுகளா??வீட்டுப்பொண்ணு லவ் பண்ணுது என்றா வீட்டில இருக்கிற மற்ற எல்லாற்ற மானம் மரியாதையை லவ்வரிட்ட அடகு வைச்சிடுறதா?

எனக்கு இன்னுமொண்டு விளங்கல படத்தில:தமிழ் நாட்டில பெடியங்கள் கல்லூரிக்குப் பணம் கட்டக் காசில்ல எண்டா “உங்களைப் பார்த்தா எங்க அம்மா மாதிரி இருக்கு : என் அம்மா செத்துப் போட்டா என் படிப்புக்கு காசு தாங்கோ” என்று கூடப் படிக்கிற பணக்காரப் பிள்ளையளிட்ட கேக்கறவையோ??? விஜய் அறுத்துக் குடுத்த அசின்ர சங்கிலியை குடுக்கத் திரும்ப வந்த பெடியன் மற்ற நண்பர்கள் தந்த காசில மீட்டது என்று சொல்லித்தான் குடுப்பார்.அப்பவாவது நான் பகுதிநேர வேலை செய்யுறன் என்று சொல்ல வைச்சிருக்கலாம்.

அப்புறம் சொல்ல மறந்திட்டன் படத்தின்ர கதை சூப்பர்.பிரகாஸ்ராஜ் நடிப்பு அந்த மாதிரி.மூளி முங்காரி மாமி சூப்பரோ சூப்பர்.

31 comments:

சிங். செயகுமார். said...

ஆமாங்க சொதப்பல்கள் இருந்தாலும் படம் விருவிருப்பா இருந்திச்சிங்க!
வசன கர்த்தா நல்லா ஒழைச்சியிருக்கிறாருங்க
"பத்து மாசம் வயத்துல சுமக்கிறவ அம்மா
காலம் பூரா நெஞ்சிலேயும் தோலிலேயும் சுமக்கிறானே அவன் தான் பிள்ளை"
அசின் சுப்பரோ சூப்பருங்க!

U.P.Tharsan said...

//அப்புறம் சொல்ல மறந்திட்டன் படத்தின்ர கதை சூப்பர்.பிரகாஸ்ராஜ் நடிப்பு அந்த மாதிரி.மூளி முங்காரி மாமி சூப்பரோ சூப்பர்.//

இது யாருக்கு வைக்கிற ஜஸ். :-))

b said...

ஆமாம். படம் பரவாயில்லை. ஒருமுறை பார்க்கலாம்.

சினேகிதி said...

செயகுமார் உங்க பெயர் வித்தியாசம இருக்கே;முதல் தடவையா தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கிறீர்கள். வாங்க!

ஆமா அசின் மாமி சூப்பர்தானே.

சினேகிதி said...

ஓ அதுவா...தர்சன் அடுத்து பிரகாஷ்ராஜ் இயக்கும் படத்துக்கு என்னை கதாநாயகியாக நடிக்க கேட்டாங்களா அதான் ஐஸ் வைச்சேன்.

சினேகிதி said...

மூர்த்தி வாங்க !
சிவன் sun glass எல்லாம் போட்டு கலக்குறார்.

Anonymous said...

விஜய் எல்லாம் 'மாஸ்' ஹீரோ., (அது என்னா மாஸோ?., 'மாசு' இல்லை மாஸ்) அதுனால அவரு என்ன பண்ணுனாலும் சரிதான். சரியா?.... ங்கொக்கமக்க....சினிமாங்கோ..... சினிமா. ஆனாலும்... சிவகாசி நல்லாத்தான் இருந்தது, காட்சிக்கு காட்சி திருப்பம். அந்த தேர்தல்ல ஓட்டுக் கேட்கிற சீன் இருக்குது பாருங்க.... பேரரசு!.... தூள்! அப்படியே எடுத்து இருக்கிறார்..... அதுக்காக மட்டும் படத்த பார்க்கலாம், கடைசில சொதப்பிவிட்டாலும். "அட ஒரு வில்லங்கமும் இல்ல... நீ பணத்த எடுத்து வையப்பா...." என்ற வசனத்திலும்., தம்பி இறந்த மாதிரி 'செட்டப்' பண்ணுகிற காட்சியிலும் பிரகாஷ்ராஜ் நல்லாப் பண்ணியிருகாரு.

ம்... அப்புறம்... ஒரு அறிவுரைப் பாட்டு., நாலு 'பன்ஞ்' டயலாக் (வாய்ஸ்). ஒரு மாசம் பட்டினி கிடந்த மாதிரி உடம்ப வச்சிகிட்டு 'பல்லாக்கு' மாதிரி இருக்கிற ஆளுகள பந்தாடுறது. வெளிநாட்டுல நாலு டான்ஸ்., 'பன்ஞ்' போக, மீதியுள்ள வசனத்துல பொண்ணுக்கு அடக்கமா இருக்க அறிவுரை வழங்கிறது, அப்புறம் அம்மாவப் புகழ்றது இதத்தானே ஒரு மாஸ் செய்ய முடியும்?. இதுக்குமேல செஞ்சா... அதாவது வசனம் பேசிக்கிட்டே அழுதா அது ஆக்டிங் ஹீரோ...வசனம் பேசிக்கிட்டே அடிச்சா... அது ஆக்ஷன் ஹீரோ. .. இதெல்லாம் யாருக்குத் தெரியாதுன்னு கேட்கிறீங்களா? அதுதானே??!!!

சினேகிதி said...

vanga apadipodu...neenga vijay rasigara?? intha apadi podu entha apadi podu? i mean apadi podu asathi poduva??

சினேகிதி said...

yaravthy enta blog la comment eluthina enta mail ku varum..anal indaiku post panupatu irukira oru comment m enta mail ku varala.vera yarukum intha prob iruka?

தருமி said...

அட ங்கொக்காமக்கா, இங்கேயும் அதே ...தானா?
(சிங். செயகுமார்.ஆமாங்க சொதப்பல்கள் இருந்தாலும் படம் விருவிருப்பா இருந்திச்சிங்க!)
(மூர்த்தி ,ஆமாம். படம் பரவாயில்லை. ஒருமுறை பார்க்கலாம்.)

APDIPODU , ஆனாலும்... சிவகாசி நல்லாத்தான் இருந்தது, காட்சிக்கு காட்சி திருப்பம். அந்த தேர்தல்ல ஓட்டுக் கேட்கிற சீன் இருக்குது பாருங்க.... //ஏங்க, நம்மள நாற அடிக்கிற அந்த தேர்தல் காட்சிகள் நல்லா இருக்குங்குளா? எம்.ஜி,ஆர். ரஜினி டான்ஸ் போட்டா ஒரு திருப்பம்; நமீதா வந்தா அதைவிட இன்னொரு திருப்பம். இத விட நம்மள கேவலப்படுத்த முடியுங்களா?

தாங்கலீங்க....

இதன் முற்பகுதியை அங்கே காணவும்.

சினேகிதி said...

dharumi vanga,
ங்கொக்காமக்கா endal unmayale ena artham? arthahm theriyamale ippidi ethinai varthai prayogam engaladiye.

ramachandranusha(உஷா) said...

சிநேகிதி அவர்களே,
தமிழ் திரைப்பட உலகைப் பற்றி உங்கள் எண்ணங்கள் மிகவும் பிற்போக்கானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1) ஏழை காதலன், பணக்கார நாயகி- இது சோஷலிச சமுதாயம் உருவாக வேண்டும் என்பதை இயக்குனர் வலியுருத்துக்கிறார்.
2) நாயகியின் உடை- இது பெண்ணீய கொள்கையை முரசு அறிவித்து சொல்கிறது. இன்னும் எத்தனை நாளுக்கு பெண்கள்
எட்டு முழ புடைவையைக் கட்டிக் கொண்டு, அடுப்படியில் வீழ்ந்து கிடப்பார்கள்? பெண்கள் சுதந்திரமாய் இருப்பதில் உங்களுக்கு
ஏன் விருப்பமில்லை?
3) பாடல்கள், நடனம்- பாடல் ஆசிரியரும், இசை அமைப்பாளரும், நடன இயக்குனரும், நம் பாரம்பரிய, கிராமிய,வட்டார நடனங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள்.
4) தாயை பற்றி வசனங்கள், நம் கலாச்சாரத்தின், பண்பாட்டின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்க.
5) சண்டை காட்சிகள்- இன்னும் நம் மண்ணில் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது.
ஆகவே உயிர் கொடுத்து உழைத்து உருவாக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் இப்படி விமர்சிப்பதை நான் கண்டிக்கிறேன்.

சிநேகிதி, படம் பார்க்கவில்லை. ஆனால் இன்றுவரும் அத்தனைப்படங்களும் இப்படிதானே இருக்கின்றன :-)

Ganesh Gopalasubramanian said...

எனக்கு விஜய்_யை சுத்தமா பிடிக்காது. அதனால் கருத்து கூற விரும்பவில்லை

சினேகிதி said...

Vanga Ganesh,
minni mudinjutha LOL.

கொழுவி said...

ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாய் பின்னூட்டம்.. ம்.. பெரியம்மா பாதையில புறப்பட்டாச்சு. இனி என்ன.. விளாசித் தள்ளுங்க..

Anonymous said...

சத்தியமா சொல்றேங்க, விஜய் நடிச்சி சமீப காலத்துல வெளிவந்த குப்பை படங்கள்ல சிவகாசிதான் சூப்பர் குப்பை. இதுக்கு போய் ஒரு விமர்சனம் அதுக்கு இத்தனை பின்னூட்டங்கள்!

C & D சென்டர்களையும் முதல் பெஞ்ச் பாமரர்களையும் மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுகிற படங்கள் இவை. நீங்கல்லாம் படிச்ச பொறியாளர்கள். தயவு செய்து இந்த பாமர கலாச்சாரத்தை ஆதரிக்காதீர்கள்.

ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக ஓவர் ஆக்டிங் நடிகை அசின்.

குப்பையோ குப்பை.. உலக மகா குப்பை. அள்ளி குப்பைத் தொட்டியில போட்டுட்டுங்க..

சினேகிதி said...

hehe koluvi inima intha pakam varumpothu enathala vilasanum endu sona/kadina athaleye ungaluk vilasalam :) vai koodi pochu enna?

neenga Thulasi periyamavai thane soninga? ungada yaal maruthuvanai pathivellam enaku romba thoooram.

சினேகிதி said...

\\நீங்கல்லாம் படிச்ச பொறியாளர்கள்\\
yarellam Sampath??

கயல்விழி said...

//2) நாயகியின் உடை- இது பெண்ணீய கொள்கையை முரசு அறிவித்து சொல்கிறது. இன்னும் எத்தனை நாளுக்கு பெண்கள்
எட்டு முழ புடைவையைக் கட்டிக் கொண்டு, அடுப்படியில் வீழ்ந்து கிடப்பார்கள்? பெண்கள் சுதந்திரமாய் இருப்பதில் உங்களுக்கு
ஏன் விருப்பமில்லை?//

கைக்குட்டியில் ஆடை அணிவது தான் பெண்ணியமா?? இல்லை சுதந்திரமா??

Ganesh Gopalasubramanian said...

//Vanga Ganesh, minni mudinjutha LOL.//
எங்கங்க ரொம்ப கஷ்டமா இருக்கு. பார்ப்போம். இன்னைக்கு பதிவு இன்னும் பாக்கி இருக்கு. இப்பத்தான் எழுதிட்டு இருக்கேன்.

அது சரி நீங்க விஜய் விசிரியா???

சினேகிதி said...

Kayalvilli nan usavuku ellutina pinottam (athuvum oru pathivithan :)) poi vasichan ippidi keka maadinga.

http://snegethyj.blogspot.com/2005/11/blog-post_113177416439114350.html

சினேகிதி said...

ean Ganesh inoru pathivuku valli solli tharinga?? orutharuku visiri illa. enkau vijaynta dance pidikum.

Anonymous said...

தருமி ஐயா., படம் பொழுது போக்குக்கு., என்னைப் பொருத்தவரை., ஒரு நடிகன் அரசியல் ரீதியா "வாய்ஸ்" குடுக்காம., இந்தா அடுத்து நான் வரப் போறேன்னு (எங்க? அங்கதான்!) பயம் காட்டாம (நம்ம., இரத்த அழுத்தத்த சோதிக்காம...இது வெடி வெடிக்கிற இடம்- இதையெல்லாம் யாரு கணக்குல வச்சுக்கப் போறாங்க?) இருந்தா அந்தப் படத்த ஒரு தடவ பார்க்கலாம்!!. காட்சிக்கு காட்சி திருப்பம்... ஒரு கிரமத்தில இருந்து வந்த, கோடம்பாக்கம் இயக்குனர்கிட்ட இதைவிட என்னாத்த எதிர்பார்க்கச் சொல்றிங்க?., அறிவுஜீவி மாதிரி படம் எடுத்து "அப்பன் மருமகளை காதலி., அம்மா மருமகன காதலிக்கட்டும்னு" தத்துவம் சொல்லிக் குடுத்து., குட்டிச் சுவராக்காம இருக்காரே... அது பெருசுன்னு நான் நினைக்கிறேன்!!.

//ஏங்க, நம்மள நாற அடிக்கிற அந்த தேர்தல் காட்சிகள் நல்லா இருக்குங்குளா//
நம்மூருப் பக்கம் தேர்தல் ஓட்டுக்கேட்கிற விதத்த பார்க்காத மாதிரி கேட்குறிங்க?!., "எம்.ஜி.யார் ஆவது., ரஜினியாவதுன்னு" ஒரு பெரியவர் ஓடுவாரே.. இதுதான் உண்மை நிலைமை. ஆனால் இது புரியாம... "வாய்ஸ்" குடுக்குறாங்களே?., கட்சி ஆரம்பிச்சு... அவங்களுக்கு அவங்களே பள்ளம் தோண்டிக்கிறாங்களே?!., நான் இரசித்தேன் சாமி நல்லா.... இந்தக் காட்சியை!!!. அப்புறம் அந்தம்மா (வைரமோ., தங்கமோ) தலைய விரிச்சுப் போட்டு போஸ் குடுத்த போஸ்டர நான் தமிழ் நாட்டுல சில வருடங்களுக்கு முன்னால பார்த்தேன் (நீங்க பார்க்கலையா??!!!!!)., நம்மக்கிட்ட இப்பிடிக் கேவலமான குறை இருக்குது....நம்மளே அங்கதம் பண்ணி சிரிக்க வேண்டியதுதான்... சிரிக்கும்போது "உள் மனசு கொஞ்சமாவது சொரணை பெறும்".

சினேகிதி!., உங்க பதிவுக்கு பாதி வஞ்சப் புகழ்ச்சியாத்தான் பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன். விஜய் ரசிகையான்னெல்லாம் கேட்டுக் கேவலப் படுத்திட்டிங்களே?.... நான் யாருக்கும் இரசிகை இல்ல., எனக்குத்தான் ஏகப்பட்ட ...... ஹி..ஹி.. தற்பெருமை தப்பு!!!.

Anonymous said...

//குப்பையோ குப்பை.. உலக மகா குப்பை. அள்ளி குப்பைத் தொட்டியில போட்டுட்டுங்க.. //

ஐயய்யயோ...! சம்பத்!... பொறுமையா இருங்க....! இப்பிடித்தாங்க சில பேரோட படம் பார்த்தா.. எனக்கும் ஏகத்துக்கும் எகிறும்.

Anonymous said...

rompave kalakkurirkal JELAYA....when did u move to OAKVILLE....ur post are nice..

சினேகிதி said...

apadaipodu enna ippidi solipotinga?? ean enkau rasigargal iruka koodatha?? :-

சினேகிதி said...

vanga balgans,
inamum athu oru kanakaalam parkala.
parthutu solluran.

சினேகிதி said...

ithu yaru intha thamilachi?? enai theriuma ungaluku?
i moved to Oakville in agugust.

Anonymous said...

இதெல்லாம் ஒரு படம்... இதுக்கு இவ்வளவு சப்போட்டு...

ஒரு பின்னோக்கிய பரிணாமத்தையே ஏற்படுத்திக்கிட்டு இருக்கான் இந்த விசய்.. இவனுக்கெல்லாம் பேன் (fan) ஒரு கேடு

sorry for being rustic

சினேகிதி said...

ada ada Tamilcinema nala virumbya neenga?
neenga en blog ku vanthathila romba santhosam.Visay enganga parinamathai eatpaduthuraru?

வந்தியத்தேவன் said...

ஆஹா சினேகிதி அந்த நாளில் விமர்சனமும் எழுதியிருக்கின்றார். ஏன் நிறுத்திவிட்டீர்கள் மீண்டும் விமர்சனம் எழுதவும்.