நான் நினைத்தவை - உறுதிப்பூக்கள் 2005
-சினேகிதி-
உறுதிப்பூக்கள் 2005 கரும்புலிகள் நினைவாக போனவாரம் ரொரண்டோவில் நடைபெற்றது. அதைப்பற்றிக் காவலன் இங்கு (http://kaavalan.blogspot.com/2005/07/2005.html) எழுதியுள்ளார் அதை படித்து விட்டு இதையும் படியுங்கள்.
காவலன் நீங்கள் நிறைகளைச் சொல்லிவிட்டீர்கள் நான் குறைகள் என்று நினைத்தவற்றைச் சொல்கிறேன்.
1.
அடுப்படி போர்க்களமாகிறது நாடகத்தில் தங்கை வீரமரணம் அடைந்தவுடன் அக்காவை போராட்டத்தில் இணைந்து கொள்ளும்படி அன்புக்கோரிக்கை விடுப்பது இதுவரை நானறிந்த எந்தப் போராட்டக் குடும்பத்திலும் நடக்காத ஒன்று.அக்காவுக்குத் திருமணம் செய்து வைக்கவேணும் என்று அம்மா சொல்லும்போது போராளியான தங்கை எப்படித் தடுக்கலாம்?? அக்காவுக்குப் போராட்டத்தில் இணைந்து செயற்படவேணும் என்ற எண்ணம் தானாக எழ வேண்டும். வீட்டுக்கு வந்த போராளிகள் நாங்கள் உங்களைவ வற்புறுத்தவில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்கோ என்று சொல்வது எந்தப் போராளியும் சொல்லாத ஒன்று.ஒரு குடும்பத்தில் ஒருவர் வீரமரணம் அடைந்தால் எஞ்சியுள்ள ஒரு பிள்ளையையும் நாட்டுக்காக போராட வரச்சொல்லி ஒரு போராளியும் கேட்பதில்லை.அந்த நாடகத்தில் அம்மா கூட மகள் போராட்டத்தில் இணைந்து செயற்படுவதுதான் தன் ஆசை என்று கூற மகளும் நான் விருப்பத்துடன் தான் போகிறேன் என்று சொல்லிச் செல்வதும் உண்மையான கருத்தாக எனக்குப் படவில்லை.
உறுதிப்பூக்கள் என்ற நிகழ்வு எமது கரும்புலி வீரர்களை நினைவு கூரும் முகமாக நடத்தப்படுவது எனவே அங்கு நாடகங்களினூடாகச் சொல்லப்படும் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட இயக்குனரின் கருத்தாக மக்களிடையே செல்வதில்லை மாறாக ஒருமித்த தாயக போராட்டத்தின் கருத்தாகவே சென்றடைகின்றது எனவே இப்படியான தவறான கருத்துக்களை மக்களிடை செல்ல விடலாமா??நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்தான் இப்படியான தவறுகள் அடுத்தமுறை நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2.மனதோடு நாடகத்தின் நேர அளவைக் குறைத்திருக்கலாம்.சொல்ல வந்த கருத்து நல்லது.புலம் பெயர்ந்து வாழும் ஒரு பெண்ணுக்குப் பக்கத்து வீட்டுப் பெண் சொல்லும் கதைகளால் தன் கணவன் மீது சந்தேகம் வருகிறது.சீப்பில் வெள்ளை மயிரை பார்த்தவுடன் பக்கத்து வீட்டு விமலா சொன்னமாதிரி வெள்ளைக்கார பெண்னை வீடுவரை கூட்டிக்கொண்டு வந்திருப்பாரோ என்று சந்தேகம் வருது பிறகு தன் மகள் Barbie பொம்மைக்கு தன்ர சீப்பால தலை இழுக்கிறதைப் பார்த்தவுடனே சந்தேகம் போய்விடுகிறது.மற்றவைன்ர கதையைக் கேட்டு கணவனைச் சந்தேகப் படக்கூடாது என்பது சரிதான். அதற்காக எவ்வளவு நாள் தான் பெண்கள் வெறும் தலைமுடியையும் ஒட்டுப்பொட்டையும் பார்த்துத்தான் சந்தேகப்படுறம் என்ற சொல்லப்போயினம்??
“காட்டுக்குள் நீ பட்ட பாடு” என்ற தலைவரைப் பற்றிய பாடலுக்கு நடனமாடும்போது வீரவேங்கை என்ற மாவீரர்களுக்கான நினைவுச்சின்னம் தேவையற்றது என்று தோன்றியது.தவறிருக்குமானால் சுட்டிக்காட்டவும்.
மற்ற நாடகங்களைப் பார்க்க முடியவில்லை அதனால் எனக்கு நிறை குறை தெரியவில்லை.
5 comments:
உண்மைதான், சிலது யதாததிற்க்கு ஏற்றது அல்ல, அதை நான் இயக்குனரின் சுதந்திரத்துக்கு விட்டுல்லேன்... கருத்துக்கள் தனிக்கை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை, கரும் புலிகளின் நினைவாக ஏதோ இவர்கள் இதையேனும் செய் கிறார்கலே என்டு எனக்கு சந்தோசம்.
மற்றும், ஆம், காட்டுக்குள் நீபட்ட பாடு தலைவருக்காக எழுதப்பட்டதாகவே நான் உனர்கிறேன்... பாவம் தெரியாமல் செய்துவிட்டார்கள் போதும்...
இளங்கோ நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் கரும்புலிகளை நினைவுகூர்ந்து ஒரு விழா எடுக்கும்போது போராளிகளைப் பற்றிய போதிய விளக்கம் அற்ற என் தங்கை போன்றவர்களுக்கு இப்படியான நாடகங்கள் ஓ போராளிகள் இப்படி ஒருவர் இறந்துவிட்டால் சகோதரர்களை தங்கள் பணியைத் தொடர்ந்து செய்யும்படி கேட்பார்காளோ என்று எண்ண வைக்கும் என்றுதான் சொல்கிறேன்.
நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்பது புரிகின்றது.நாடகம் நெறியாள்கை செய்த்வர் மணிமாறன்.
http://www.tamilnaatham.com/
articles/quintus/20050719.htm
Uruthipookal patiya oru vivarsanathai vasithen...itho ungalukaga.
Nanri Tamilnathm.
Post a Comment