பூ ஜாதி
-சினேகிதி-
நேரம் சொல்லி பூக்கிற நாலுமணிப்பூ ஜாதியா?
வைகாசில பூத்து ஆடி வரை வாழும் வைகாசிப்பூ ஜாதியா?
மார்கழியில வாற மார்கழிச் செவ்வந்தி ஜாதியா?
இல்ல வாடாமல்லிகை ஜாதியா?
தங்கச்சியை குழிப்பாட்டின செம்பருத்திப்பூ ஜாதியா?
அம்மனுக்குப் பிடிச்ச பொன்னொச்சி ஜாதியா?
கண்வருத்தத்துக்கு அம்மா தாற நந்தியாவட்ட ஜாதியா?
எங்கட தேசியப்பூ காரத்திகை ஜாதியா?
அம்மம்மா வடகம் செய்யிற வேப்பம்பூ ஜாதியா?
கடவுளரிடையே சண்டை மூட்டிய தாழம்பூ ஜாதியா?
வல்லிபுரக்கோயில்ல ஐயர் தாற தாமரைப்பூ ஜாதியா?
ஓ நீ தேமா என்று இருக்கிற தேமாப்பூ-பெரியார் பேத்தி
8 comments:
சின்ன சின்ன தகவல்கள். பல ஞாபகங்களை றினைவுட்டியது. நன்றி!!!
நீங்க வேற தர்சன்... நான் தனிய படத்தைப் போட்டதால என் பதிவை தமிழ்மணத்திலிருந்து தூக்கிட்டாங்க அதான் சும்மா ஏதாவது எழுதோணும் என்டிட்டு அலட்டி வைச்சிருக்கிறன்.
நன்றி தர்சன்.
:-))
என்ன சக்திக்கு சரஸ்வதி பூசைக்குப் பூ கொண்டு போன ஞாபகமா? இல்லாட்டி ஆசிரியர் தினத்துக்குப் பூக்கொண்டு போய் முழங்கால் வலிக்க வலிக்க பிடிச்ச பிடிக்காத எல்லா ரீச்சரையும் விழுந்து கும்பிட்ட ஞாபகமா? :)
சினேகிதி இது பாதிரிப் பூவென்று உங்களுக்கு யார் சொன்னது இது தேமா.பாதிரி வேறு தேமா வேறு.
வேறயார் ஈழநாதன் டி.சே தான் சொன்னவர்.முதலடி அவருக்கு பிறகுதான் எனக்கு.கையை நீட்டிட்டன் மெல்லமா அடியுங்கோ.
ஈழநாதன் தயவுசெய்து பாதிரிப்பூ எப்பிடி இருக்கும் என்று சொல்லுங்கோ…முடிந்தால் படம் எடுத்துப் போடுங்க.
//--இல்லாட்டி ஆசிரியர் தினத்துக்குப் பூக்கொண்டு போய் முழங்கால் வலிக்க வலிக்க பிடிச்ச பிடிக்காத எல்லா ரீச்சரையும் விழுந்து கும்பிட்ட ஞாபகமா? :)--//
என்ன நாங்க பட்டதுகளை சொல்றியள்.
தேமாப்பூவை கனநாளைக்குப்பிறகு காணவைச்சிருக்கிறியள் நன்றி சினேகிதி. :)
ஜாதியா? சாதியா?
கயல்விழி சாதியா ஜாதியா எது சரியென்று நீங்களே சொல்லிடுங்க.கவனம் நாங்கள் சாதியைப் பற்றிக் கதைக்கிறம் எண்டு தெரிஞ்சா அ;மபுட்டுத்தான்.
Post a Comment