மொன்றியலில் மூன்று நாட்கள்
ஒவ்வொரு வருசமும் மொன்றியல் வல் மொறின் தேர் திருவிழாக்கு நாங்கள் போறது வழக்கம்.இந்த முறை 2 கிழமைக்கு முன்னமே மொன்றியலுக்குப் போனாங்கள். வெள்ளிக்கிழமை இரவு போய்ச் சேர்ந்தம்.பெரியம்மா வீட்ட போட்டு மாமா வீட்ட இரவு தங்கிட்டு அடுத்த நாள் வல் மொறினுக்குப் போனம்.சாமி கும்பிட்டிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தம். ஒருத்தர் வந்து ஆக்களுக்குப் பிரசாதம் குடுக்க திருநீற்றை கொஞ்சம் கொஞ்சமா சின்ன சின்ன பொட்டலம் கட்டித் தாங்கோ எண்டு சொன்னார்.நாங்களும் சரியென்று போய் பாயில உக்கார்ந்தா ஒரு அம்மா வந்து சொன்னா எல்லாரும் தலைமயிரைப் பின்னிக் கொண்டு வாங்கோ என்று.அதையும் செய்திட்டு வந்திருந்து பொட்டலம் கட்டத் தொடங்கினா திரும்ப வந்து சொன்னா உப்பிடிக் கதைச்சு கதைச்சு வேலை செய்யக்கூடாது…நீங்க கதைக்க கதைக்க எச்சில் எல்லோ திருநீற்றில விழும்….பிறகு மௌன விரதம் தான்.வேலை செய்து முடிய எங்களுக்கு ஸ்பெசல் அன்னதானச் சாப்பாடு தந்தவை.மத்தியான நேரம் நல்ல பசி வேற கோயில் சாப்பாடு தேவாமிர்தம் மாதிரி இருந்தது( தேவாமிர்தம் எப்பிடி இருக்கும் என்று சத்தியமாத் தெரியாதுங்கோ) அதையும் ஒரு பிடி பிடிச்சிட்டு வெளியில பொங்கின ஆக்கள் தந்த பொங்கலையும் சாப்பிட்டிட்டு ஆச்சிரமத்துக்கும் போட்டு பிறகு Old Montreal Park க்குப் போனாங்கள்.அதை நாங்க வர்றம் என்று தெரிஞ்சு பூட்டிப்போட்டினம்.
பின்னேரம் கடைகளுக்குப் போனாங்கள்.அடுத்த நாள் Granby Zoo க்குப் போனம்.அங்க போய் எங்கட சொந்தக்காரர்களான புலி பூனை கரடி பாம்பு பல்லி ஓணான் ஒட்டகம் யானை நாய் நரி உடும்பு மயில் புறா கிளி எருமை மாடு இப்பிடி நிறையப்பேரைச் சந்திச்சம்.எருமை மாட்டைப் பார்த்திட்டு அம்மா சொன்னா எருமை மாட்டுக்கு உரோமம் எல்லாம் கழருது என்று உடனே என்ர கஸின் சொன்னா பெரியம்மா உதே எருமை மாடு….அம்மா பின்ன என்னை ஏன் எருமை மாடு என்று திட்டினீங்கள்?? என்னைப் பார்க்க அப்பிடியே இருக்கு?? அந்த நேரம் எல்லாரும் சிரிச்சாலும் இந்த அம்மாக்களின்ர அலும்பல் தாங்க முடியல…எப்பிடி அப்பிடித் திட்டலாம்??சொந்தக்காரருக்கு டாட்டா சேரியோ சொல்லிப்போட்டு குளிக்கப் போனம். வெக்கைக்கு அங்க செயற்கையா செய்து வைச்சிருக்கிற beach ல அலையடிக்க குளிக்கிறது சுகம் சுகமே.காலமை பத்து மணிக்கு வந்து இரவு ஏழு மணிக்கு Zoo பூட்டும் வரைக்கும் அங்கதான் தஞ்சம்.
அடுத்த நாள் Saint Joseph Church க்குப் போட்டு ரொரண்டோவுக்கு வர வெளிக்கிட சித்தப்பான் வான் கசால் பண்ணத் தொடங்கிட்டுது.சரி இதான் சாட்டெண்டு இன்னுமொரு நாள் நிக்கப்போறம் என்று சந்தோசப்பட்டா அது பிறகு பிரச்சனை குடுக்கேல்ல நாங்களும் வீட்ட வந்து சேர்ந்திட்டம்.
9 comments:
மொன்ரியலுக்கு வந்ததுதான் வந்தனியள் ஒரு குரல் குடுத்திருக்கலாமே?
சரிசரி, உங்கட சொந்தங்களை கிராம்பி'ல பாக்கவே நேரம் காணாமப்போயிருக்கும் உங்களுக்கு[உங்களுக்கு எண்டா ங்களுக்கு மட்டும். கூட வந்த மற்ற ஆக்களைச் சொல்லேல்ல. இப்பிடியெல்லாம் டிஸ்க்ளெய்மர் முதல்லயே குடுத்திரோணும் எண்டு படிச்சிட்டன். ;) ]
இன்னும் கொஞ்சம் போட்டோ போட்டிருக்கலாம். :) செயிண்ட் ஜோசப் சர்ச் போட்டோ?
-மதி
பி.கு.:
val morin உக்குள்ள திருவிழாவுக்குள்ள அம்பிடேல்ல. நல்ல புத்திசாலி!
மதி அக்கா உங்கட போன் நம்பர் குடுங்க அடுத்த முறை வரும்போது போன் பண்ணிட்டு வாறன் (*:*)
இப்ப இவ்வளவு போட்டோஸ் தான் இருக்கு மிச்சத்தை அங்க விட்டிட்டு வந்திட்டன்…கையில் கிடைத்ததும் பதிவில போடுறன்.
//எங்கட சொந்தக்காரர்களான புலி பூனை கரடி பாம்பு பல்லி ஓணான் ஒட்டகம் யானை நாய் நரி உடும்பு மயில் புறா கிளி எருமை மாடு இப்பிடி நிறையப்பேரைச் சந்திச்சம்.//
அவையை ஒரு படம் எடுக்கேல்ல
அது சரி இதில எது எங்கட சிநேகிதி என்டு தேடிப்பிடிக்க. மார்க் பண்ணிக்காட்டுங்கப்பா. பெரிய பாடாய் கிடக்கு தேடித்தேடிப்பாத்தன். தெரிஞ்ச முகமாய் ஒன்றையும் காணேல்ல.
கயல்விழி அவையை எடுக்காம விடுவேனா??புழு பூச்சியெல்லாத்தையும் தான் நான் படம் எடுத்தனான் அவையளை எடுத்ததை விரைவாக் போடுகிறேன்.
வல்மொறின் கோயில் மலையும் காடும் சூழ்ந்த அமைதியான சூழலில் அமைந்திருக்கின்றது.மூன்று முறை சென்றிருக்கின்றேன். திருவிழா இல்லாத சமயங்களில் போனால் அதன் அமைதியை ஆறுதலாக இரசிக்கலாம். அருகில்தான் ஆச்சிரமும் இருக்கிறது. யோகா, நடனம் எலலாம் சொல்லிக்கொடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
.....
கயல்விழி, சினேகிதி தனது சொந்தககாரர்கள் என்று சிலரைப் பட்டியலிட்டதைப் பார்த்தால், அவரது படம் முதலாவாய்த்தான் போட்டிருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.
......
மதி, ரொரண்ரோ வந்து என்னுடைய காசில், ஓசியாய் சாப்பிட்டு, ஊர் சுற்றியது காணாது என்டு, இப்ப அங்க வாற சினேகிதியின் செலவில் மாண்ட்ரியலைச் சுற்றிப்பார்க்கத் திட்டமா :-)?
டி.சே யாரைப்பத்தி என்ன வார்த்தை சொல்றீங்கள்?? மதி அக்கா என்னை தன்ர செலவில நான் மிஸ் பண்ணின இடமெல்லாம் கூட்டிட்டுப்போறன் என்று சொல்லியிருக்கிறா நீங்கள் அதுக்கு ஆப்பு வைச்சிடுவீங்க போலிருக்கு.
HEllo snegithy,
kalakkiddingal
Mathy akka Saint Joseph Church inta padam clear illa so inga podala.
இதென்னடா இது எல்லாரும் ஊர் சுத்திப் போட்டு வந்து படங்காட்டத் தொடங்கீட்டாங்கள்! :o(
ஏதோ புகைஞ்சு மணக்குது என்டு நீங்க மூக்கைப் பிடிக்க முன்னம்...bye bye
Post a Comment