Custom Search

Sunday, June 19, 2005

பசியின் ருசியென்ன?

-சினேகிதி-

முதன்முதலா நான் பசியை ருசித்தேன்… அசந்து போனேனே முழுப்பானை சோறு பொங்கி நான் முழுங்கப் போறேனே.

நேற்று அம்மாவும் தங்கச்சியும் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்குப் போயிட்டனம் அதால நான் நேற்றிரவு சித்தப்பா வீட்டதான் வேலையால போகவேண்டியிருந்தது.பொதுவா நான் ஆற்றயும் வீட்ட போனால் கொஞசமாதான் சாப்பிடுறனான் அப்ப நேற்றும் அப்படித்தான் சித்தி சோறும் முருங்கைக்ககாய் கறியும் கொணர்ந்து தந்தா.கோப்பையில ஒரு சொட்டுச் சோறு எனக்கு நேற்றெண்டு பார்த்துப் பசியோ பசி.

நீ நிறைய சாப்பிடமாட்டாய்தானே அதான் அரிசி உனக்கெண்டு தனியாப் போடேல.நேற்றும் வீணா நிறைய சோறு கொட்டனது.இது காணும்தானே உனக்கு.

ஓமோம் காணும் சித்தி.

“இங்க பாத்திங்களே நான் சொன்னான் எல்லோ இவளவை உடம்பு வைச்சிடும் எண்டு சும்மா கொறிக்கிறது எண்டு நான் சொல்ல நீங்கள் உது என்னத்துக்குக் காணும் எண்டிங்கள்” …சித்தி சித்தப்பாக்குச் சொல்லிக் கேட்குது.அப்பதான் நினைச்சன் பந்தா எல்லாம் பசிக்குச் சரிப்பட்டு வராது.

26 comments:

Muthu said...

:-)

இளங்கோ-டிசே said...

//அப்பதான் நினைச்சன் பந்தா எல்லாம் பசிக்குச் சரிப்பட்டு வராது//
:-))))
அதுசரி, பிறகு வீட்டை போய் பொங்கிச் சாப்பிட்டனியளோ?

சினேகிதி said...

இல்லை னுது வீட்ட போகவே 11மணியாச்சு.அம்மா கொண்டுவந்த கேக் சாப்பிட்டு பால் குடிச்சிட்டு படுத்ததுதான்.

இளங்கோ-டிசே said...

இங்கேயும் அதே பிரச்சினைதான். அம்மா கத்த கத்தத் தான் போய்ச் சாப்பிடுவது. ஆனால் ஒரு நேரம் சோறு சாப்பிடாவிட்டால் எப்படி பசி இருக்குமென்று பலதடவை அனுபவித்துமிருக்கின்றேன்.
....
சரி இன்று ஞாயிற்றுக்கிழமைதானே ஆறுதலாக அறுசுவை உணவு சாப்பிடுங்கோ :-).

சினேகிதி said...

Bonappeti DJ:)

Anonymous said...

நமக்கு இதுல மட்டும் கூச்சமில்ல. பத்து பேரு சுத்தி நின்னு உத்துப் பார்த்திட்டு இருந்தாலும்., நாம் பாட்டுக்கு சாப்டிட்டு இருப்பேன். உடலைக் கட்டில் வைக்க கொறிப்பது வழியல்ல. சரியான நேரத்தில்., சரியான அளவு., சரியான உணவு மற்றும் உடற்பயிர்ச்சியே சரியான வழி.

சினேகிதி said...

நீங்க சொன்னா சரிதான். சித்தி தன்ர மகளைப் போல என்ன நினைச்சிட்டாங்க அப்படிப்போடு.கீரைப்புட்டும் முட்டைக்முழம்பும் நான் எப்பிடிப் போட்டுத் தாக்கிறனான் எண்டு எனக்கெல்லோ தெரியும்.:)

Anonymous said...

அப்பிடியே நீங்க சொன்னவைகளுடன் கொஞ்சம் மீன் சொதியும் போட்டு ஒரு 'பார்சல்' அனுப்புங்க இங்க.

சினேகிதி said...

DHL காசு தருவீர்களானால் நிச்சயமாய் அனுப்பி வைக்கிறேன் முகவரி குடுங்க.

இளங்கோ-டிசே said...

//கீரைப்புட்டும் முட்டைக்முழம்பும் நான் எப்பிடிப் போட்டுத் தாக்கிறனான் எண்டு எனக்கெல்லோ தெரியும்.:)//
அடடா, கன்டாவுக்கு வந்தாப்பிறகு நான் கீரைப்பிட்டு சாப்பிட்டதில்லை.
////DHள் காசு தருவீர்களானால் நிச்சயமாய் அனுப்பி வைக்கிறேன் முகவரி குடுங்க.//
அப்படிப்போடுதான் அமெரிக்காவில் இருக்கின்றார். நான் உங்கள் ஊரில்தான் இருக்கின்றேன். நீங்கள் இதையெல்லாம் செய்துவைத்தால், உங்கள் வீட்டை வந்து take outயே எடுத்துப்போகின்றேன் :-).
...
//Bonappeti DJ:) //
வரவர வலைப்பதிவு மக்கள் புதுப்பெயர் எல்லாம் எனது வலைப்பதிவுக்கு வைக்கின்றார்கள் :-).அது சரி இதுக்கு என்ன அர்த்தம் ?

சினேகிதி said...

வேணும்னா வீட்டுக்கு வந்து சாப்பிடலாம் ஆனால் வீட்டில இருக்கிறவைக்கும் சேர்த்து எடுத்திட்டு போக எல்லாம் தரமாட்டம்.

Bonappeti ...நல்லாச் சாப்பிடுங்க என்று அர்த்தம்.

இளைஞன் said...

நானும் உப்பிடித்தான் சிநேகிதி. வீட்டில அம்மா கத்திகத்தி 10 - 15 தடவை கூப்பிட்டாப் பிறகுதான் போய்ச் சாப்பிடறனான். என்னை "சாப்பிட வா" என்று கூப்பிட்டுக் கூப்பிட்டே சாப்பிட்ட அம்மாக்கும் திரும்ப பசி எடுத்திடும். :)

இப்ப தனிய இருந்து, நானே சமைச்சு, நானே சாப்பிட்டு - அதையேன் கேக்குறீங்கள் :(

சினேகிதி said...

ஆகா…அப்பிடி ஒரு பிரச்சனை இருக்குதோ..ம் ம் அதான் சொல்றது அம்மான்ர அருமை அம்மாவோட இருக்கும்போது தெரியாது எண்டு. Scarborough ல் ஒவ்வொரு சந்திக்கும் சாப்பாட்டுக் கடை இருக்கு தெரியுமோ..அம்மா வினுஸன் அபிராமி அஞ்சப்பர் இன்னும் நிறைய.

சினேகிதி said...

அடடா வாங்க சக்தி…. வேற யாரெல்லாம் எங்க வீட்டுக்கு வாறீங்க எண்டு முன் கூட்டியே சொல்லிடுங்க அப்பதான் நான் அம்மாட்ட எத்தினை பேர் வருவினம் எண்டு சொல்லலாம்.

டி.சே
அப்படிப்போடு
இளைஞன்
சக்தி
whoelse?pls sign up here

சினேகிதி said...

நான் அழுது புலம்பிறதுக்கு முதல்ல கை வலிக்க எழுதின என்ர கதையையும் போய் வாசிங்கப்பா… எல்லாரும் சாப்பாட்டு பூதங்களா இருக்கீங்களே.

இளங்கோ-டிசே said...

//அப்பதான் நான் அம்மாட்ட எத்தினை பேர் வருவினம் எண்டு சொல்லலாம்.//
அட நான் நினைத்தேன், ஏதோ நீங்கள்தான் சமைத்துப் பரிமாறப்போகின்றீர்கள் என்று. இவ்வளவு காலமும் நான் மட்டுந்தான் சமையலில் expert என்று நினைத்துக்கொண்டிருதேன். இப்ப எனக்குப் போட்டியாய் சிநேகிதி போன்றவர்கள் இருப்பதைப் பார்க்க எனக்கு சரியான 'பொறாமை'யாய்க் கிடக்கின்றது :-).

இளைஞன் said...

சிநேகிதியே,
யேர்மனியிலிருந்து கனடா வந்து சாப்பிடணுமா? - நீங்கள் சமைச்சு பழகிட்டு சொல்லுங்கோ, உங்கட சாப்பாடு சாப்பிடுறதுக்கு வாறன் :)

சே... நானே எவ்வளவு சிரமப்பட்டு சமைச்சு பழகிட்டன், நீங்கள் என்னும் பழகேலயா?

துளசி கோபால் said...

அதெல்லாம் இருக்கட்டும். இது என்ன
கீரைப் புட்டு?
அப்படியே கொஞ்சம் விளக்கம் சொல்லி ரெஸிபி எடுத்து விடுங்கோ!!!

சினேகிதி said...

துளசி அக்கா…எனக்கு ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் அம்மா மாவுக்குள்ள கீரை கொச்சிக்காய் வெங்காயம் எல்லாம் போடுவாங்க ரை பண்ணிப்பாருங்க.

கறுப்பி said...

சினேகிதி, கீரைப்புட்டு, முட்டைக் குழம்பு ஒருநாளும் நான் சாப்பிட்டதில்லை. வாசிக்க வாயில நீராச் சுரக்குது. உண்மையாயே ஒருநாளைக்கு என்னைக் கூப்பிட்டுச் சாப்பாடு தாங்கோ. கையோட நான் சமைக்கும் முறையையும் உங்கட அம்மாட்டக் கேட்டுக் கொண்டு வந்திடுவன்.
இதை வாசிக்க எனக்கு என் அனுபவம் ஒண்டு நினைவுக்கு வருகுது. எனக்கு றால் பொரியல் எண்டால் அந்தமாதிரிக் கெலி. ஒருநாள் எனது சொந்தக்காறர் வீட்டில சாப்பாடு (யாழ்ப்பாணத்தில) எண்ணி அஞ்சு றால் தந்தார்கள். நான் கடைசியாச் சாப்பிட எண்டு பிளேட்டில கரையில தூக்கி வைச்சிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருக்க என்ர மாமி உனக்கு றால் பொரியல் கொஞ்சம் காணாது உனக்குப் பிடிக்காது போல எண்டு எடுத்துக்கொண்டு போட்டா..

சினேகிதி said...

கறுப்பி CTR பக்கம் வரும்போது அப்பிடியே எங்கட வீட்ட வந்தால் கீரைப்புட்டோட றால் பொரியலும் சேர்த்தே சாப்பிடலாம்.இருந்தாலும் உங்கட மாமி செய்தது பெரியயயயயய தப்புத்தான்.எனக்கு றால் பிடிகாது ஏன் தெரியுமோ நான் கோபத்தில இருந்தா அப்பா சொல்றவர் றால் மூஞ்சை மாதிரி மூஞ்சையை தூக்கி வைச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டு.

ஜெயச்சந்திரன் said...
This comment has been removed by a blog administrator.
ஜெயச்சந்திரன் said...

என்ன சினேகிதி....எல்லாரையும் விருந்துக்கு கூப்பிடுறீங்க போல......அப்பிடியே என்னோட பெயரையும் சேத்திட்டு ஒரு விமான பயண சீட்டும் புக் பண்ணுங்க. ;-))

சினேகிதி said...

பயணச்சீட்டு தானே அனுப்பிட்டாப் போச்சு.நீங்க எங்க இருக்கிறீங்க குமிழி?

கிஸோக்கண்ணன் said...

பசி வர பந்தாவும் மறந்து போம்

சினேகிதி said...

அந்தப் பத்துக்குள்ளே பந்தாவும் அடங்குமோ?