Custom Search

Wednesday, April 11, 2007

கானமும் கதையும் I

வணக்கம்!

இன்றொரு கானமும் கதையும்் கொண்டு வந்திருக்கிறேன் உங்களுக்காக.

இல்வாழ்வு தந்த இயலாமை என்ற இந்தக்கதையை நீங்கள் ஏற்கனவே தத்தக்க பித்தக்கவில, தமிழமுதத்தில,் அல்லது யாழ்களத்தில் வாசித்திருக்கக்கூடும்.

இது வெறும் முயற்சிதான்..நானும் என் தங்கையும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறோம்.

தங்கையின் குரல் தெளிவாகப் பதிந்துள்ளது நான் றக்கோட் பண்ணிக்கொண்டு கதைத்தாலயோ என்ன தெளிவாக இல்லை.

ஒலிக்கலவையகம் : சிஞ்சா மனுசி கலையகம்.







23 comments:

கொழுவி said...

//தங்கையின் குரல் தெளிவாகப் பதிந்துள்ளது நான் றக்கோட் பண்ணிக்கொண்டு கதைத்தாலயோ என்ன தெளிவாக இல்லை.//

நீங்கள் அந்த தொழில்நுட்பத்தை தங்கையிடம் கேளுங்கோ. அவ சொல்லித் தராட்டி உடனை அதை ஒரு பதிவாப் போட்டு விட்டு உங்கள் ஆங்கில நண்பிகளிடம் கேட்டு 108 மெயில் பண்ணுங்கோ. அதில 98 மெயிலுக்கு பதில் வரும். பிறகு அந்த சிதம்பர ரகசியத்தை எமக்கும் சொல்லுங்கோ.. உப்பிடித் தான் தங்கச்சி தடையளைப் போடுவா.. நீங்கள் தடையளை உடைச்செறிஞ்சு பாய்ஞ்சு வாங்கோ.. உடைச்செறியிற நேரம் கொம்பியுட்டர் கவனம்.

சின்னக்குட்டி said...

அந்த நேரம் இலங்கை வானொலியில் புகழ் பெற்ற இசையும் கதையும் மாதிரி முதல் முறையாக வலையுலகில் செய்திருக்கீறீர்கள் நினைக்கிறன் வாழ்த்துக்கள்.

சினேகிதி said...
This comment has been removed by the author.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சினேகிதி,

மிக அருமையான முயற்சி!

வாழ்த்துகள்! :)

உங்களுடைய தங்கைக்கும் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். இரண்டுபேரும் நல்லா ஏத்த இறக்கத்தோட குரல் கொடுத்திருக்கிறீங்க. நடுவில வந்து குரல் கொடுத்த வசந்தனுக்கும் நன்றி. ஆம்பிளைக்குரல்ல வந்திராட்டி அது நல்லாயிருந்திருக்காது.

சிஞ்சா மனுசி கலையகத்திற்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

இதேமாதிரி இன்னும் முயற்சியுங்கள் சினேகிதி.

கொஞ்ச நாட்களுக்கு முந்தித்தான், நீங்கள் அந்த 'கேக்காதீங்க கேக்காதீங்க' இடுகையைப்ப்போட்டபோது ஈழத்தவரின் நூல்களிலிருந்து கதைகளையும் கவிதைகளையும் வாசித்து நீங்கள் குரற்பதிவிடலாம் என்று - எழுத நினைச்சனான். என்னுடைய வழக்கமான சுறுசுறுப்புத்தனத்தால விட்டுப்போச்சு. ;)
ஏன் சொல்லுறன் எண்டா, அம்மாதிரியான விதயங்களையும் கேட்க வைக்கும் குரல்வளம் உங்களிடம் இருக்கு. (உண்மைதானப்பா!)

-மதி

(கொழுவி: என்னப்பா சொல்லுறீர்? ஒண்டுமே விளங்கேல்ல!)

சினேகிதி said...

சின்னக்குட்டி நன்றி நன்றி :-))) சந்தோசமாத்தானிருக்கு பாராட்டைக்கேக்க ஆனால் 2 வருசத்துக்கு முதலே யாழ் கவிதன் அண்ணா மற்றும் நம்ம கொழுவி போன்றோர் இசையும் கதையும் செய்து விட்டார்கள். தவிர 2 நாட்களுக்கு முதுல் தமிழ்பித்தன் கூட இங்கு ஒரு இசையும் கதையும் செய்து பதிவிட்டார்.

Anonymous said...

//x sinakutty:-))) santhosama iruku neenga paaradinathu :-))
but 2 yrsku muthale kolluvi isaum kathau seithidar //

koluvikku mun Kavithan eNdu orraaL seythavar , atha paththu koluvi seythavar. kavithan ippa blog ezuthureellai. athaalai ellaarum maRanthu iruppinam :)

சயந்தன் said...

//நடுவில வந்து குரல் கொடுத்த வசந்தனுக்கும் நன்றி.//

சரி.. இந்த பாட்டைக் கேட்டுக்கொண்டே படுத்துத் தூங்குகிறேன். பாடலைக் கேட்க

சின்னக்குட்டி said...

சயந்தனின் இந்த பாட்டை கேட்க யாரும் தவறாதையுங்க வசந்தனை நினைச்சு உருகிறார். சூப்பர் டைமிங்

சினேகிதி said...

அடடா இதென்ன வம்பா போச்சு :-)))))))))

வாசகர்களே அது வசந்தனண்னான்ர குரலில்லை.சயந்தனண்ணான்ர குரல் (உதாருங்க 2ம் ஒராள்தானே என்று முணுமுணுக்கிறது?)

sathiri said...

பாராட்டுக்கள் சினேகிதி நல்லதொரு முயற்சி நானும் இப்பபடியொரு முயற்சி செய்து பின்னர் நேரங்கள் பிரச்சனை காரணமாக அது அப்படியே கிடக்கு . இது ஆரம்பம் தானே பின்னர் உங்கள் அனுபவங்களால் இதனை மேலும் மெருகேற்றிகொள்ளலாம் உங்கள் தங்கைக்கும் பாராட்டுக்கள்

Bobby said...

Snehithy,

Good job.
Seems like somebody has got lots of free time :-D Just kidding.

I have this feeling that, I've heard/read this story somewhere..
Let me know.

சினேகிதி said...

பொபி என் ப்ளாக்ல இல்லாட்டி தமிழமுதத்தில இல்லாட்டி யாழ் களத்தில வாசிச்சிருப்பீங்கிள்....யா யா நிறையயயயயய ரைம் இருக்கு:-))

U.P.Tharsan said...

சினேகிதி,

மிக அருமையான முயற்சி!

வாழ்த்துகள்! :)

உங்களுடைய தங்கைக்கும் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். இரண்டுபேரும் நல்லா ஏத்த இறக்கத்தோட குரல் கொடுத்திருக்கிறீங்க. நடுவில வந்து குரல் கொடுத்த வசந்தனுக்கும் நன்றி. ஆம்பிளைக்குரல்ல வந்திராட்டி அது நல்லாயிருந்திருக்காது.

---------------------------------

நான் இதை ஆமோதிக்கிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

மதி கந்தசாமி (Mathy) said…

//நடுவில வந்து குரல் கொடுத்த வசந்தனுக்கும் நன்றி. //


மதி,
கடந்த ரெண்டுவருசமா என்ர குரற்பதிவுகளைக் கேக்கிறியள். சயந்தனும் எண்ணிக்கையடிப்படையில நிறைய குரற்பதிவுகள் போட்டிட்டார்.
இப்பவும் வந்துநிண்டுகொண்டு சயந்தனை வசந்தனெண்டு சொல்லிக்கொண்டிருக்கிறது சரியில்லை.
நானென்ன வேலவெட்டியில்லாமலோ திரியிறன்? ;-)

கொழுவி இட்ட பின்னூட்டம் விளங்கவேணுமெண்டால் தொடர்ந்தும் வலைப்பதிவுலகில் இணைந்திருக்க வேண்டும். இல்லாட்டி விளங்காது.
எதுக்கும் தமிழ்பித்தனின் பக்கம் போய்ப்பாருங்கோ.
________________________________
சினேகிதி சொன்னதுபோல இந்த இசையும்கதையும் ஒலிவடிவம் வலைப்பதிவில் நீண்டநாட்களுக்கு முன்பே வந்துவிட்டது.
கொழுவி ஒருபதிவு போட்டிருந்தார். (கலந்துரையாடல் பதிவுகளை வலைப்பதிவில் தொடக்கி வைத்தவர்கள் என்று வேறுசிலரின் பெயர்கள் அடிபட்டபோது, தான்தான் அதைத் தொடக்கிவைத்தவன், தன்னை மறந்துவிட்டார்கள் என்ற கவலையில் அவ்வொலிக்கோப்பை மீள்பதிவாக்கியிருந்தார் கொழுவி. சின்னக்குட்டியின்ர இந்தக்கருத்துக்கும் கோபம் கொண்டு கொழுவி ஏதாவது செய்யமுதல் உண்மை வரலாற்றைச் சொல்ல வேணும்.)
ஆனால் கொழுவி அந்த இசையும்கதையும் பதிவிட வேண்டிவந்தது இன்னொரு பதிவின் தொடர்ச்சியாக. கவிதனின் வலைப்பதிவில் வெளிவந்த ஓர் இசையும்கதையும் நிகழ்ச்சியை நக்கலடித்துத்தான் கொழுவியின் முதலாவது இசையும் கதையும் நிகழ்ச்சி இருந்தது.
ஆக இரண்டுவருடங்களின் முன்பே வலைப்பதிவுகளில் இசையும் கதையும் வடிவம் ஒலிவடிவாக வெளிவந்துவிட்டது. கவிதனுக்கு முன்பும் யாராவது செய்திருந்தார்களா தெரியாது.

செல்லி said...

சிநேகிதி
நல்ல முயற்சி. தொடர்ந்து இப்பிடி நிறையச் செய்யுங்கோ.

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி நல்லா இருக்கு. உங்க தங்கச்சிக்கு இது தானா முதல் பதிவு? நல்லா செய்திருக்கிறா. உங்கள விடுங்கோ நீங்க ஆர் ஒரு ரெடியோக்கே அப்பு வச்ச ஆள் எல்லே :))

தொடர்ந்து நல்ல கதைகளை தெரிவு செய்யுங்கள்.

சினேகிதி said...

நன்றி நன்றி எல்லாருக்கும் நன்றி... :-)))

மதி (அக்கா இல்லை :-) உங்களுக்கு ஸ்பெசல் நன்றி :-))

கானா பிரபா said...

வணக்கம் தங்கச்சி

வாழ்த்துச் சொல்லி உங்கட திறமையை முடக்க நான் விரும்பவில்லை. முழுதும் கேட்டதன் பின் என் அபிப்பிராயம்.

1. பொருத்தமான பின்னணி இசை
2. உங்கள் தங்கையின் குரல் மகள் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தம்
3. ஒரு கூற்றுக்கும், உரையாடலுக்கும் இடையில் சில கணம் இடைவெளி விட்டு, உரையாடலில் சம்பாஷிக்கும் தொனியில் நடிப்பை வெளிப்படுத்தியும், கூற்று வருமிடத்தில் வித்தியாசமான தொனியிலும் செய்யுங்கள்.

4. இப்போது இருக்கும் ஒலிப்பதிவு தொழிநுட்பத்தில் எவ்வளவோ சீரற்ற ஒலியையும் சீராக்கி ஒலியளவையும் அதிகப்படுத்தலாம். நான் பாவிப்பது Cool edit . இப்படியான மென்பொருட்களின் மூலம் சில குறைபாடுகளையும் சீர் செய்யலாம்.

பிரபா அண்ணை எப்பவும் நல்லதுக்கு தான் சொல்லுவார்.

Bobby said...

பிரபா அண்ணை ஒருக்காத்தான் சொல்லுவார்.
சொல்லீட்டாரெண்டால் அவற்ரை சொல்லை அவரே கேக்கமாட்டார்.
:-)

சினேகிதி said...

okay prabanna...adutha isaum kathaum blog la poda muthal ungaluku anpuran (ipotaiku nadakaathu athu).

prabanna bobby ai oruka ena endu kellungo:-))

கானா பிரபா said...

//Bobby said...
பிரபா அண்ணை ஒருக்காத்தான் சொல்லுவார்.
சொல்லீட்டாரெண்டால் அவற்ரை சொல்லை அவரே கேக்கமாட்டார்.//



என்னப்பா , வலைப்பதிவிலை ஆளை ஆள் விஜய் றேஞ்சுக்குக் கொண்டுபோட்டியள் ;-)

சரி சரி அன்பாக் கொடுத்த பட்டம் ,ஏற்றுக்கொள்ளுறன். தலைவாசல் விஜய் இல்லைத் தானே

சினேகிதி said...

\\சரி சரி அன்பாக் கொடுத்த பட்டம் ,ஏற்றுக்கொள்ளுறன். தலைவாசல் விஜய் இல்லைத் தானே\\

chee chee ungalai poi apidi soluviname aarum...aama thalaivaasal vijay endal ean ipidi payapadureengal :-))

Keddavan said...

வானொலி நிகழ்ச்சி ஒன்றைக் கோட்டது போன்ற உணர்வை அடைந்தேன்..வாழ்த்துக்கள்..