Custom Search

Tuesday, April 10, 2007

ஆணம் + சொதி + கரைவலை + மற்றும் பல.


ஒரு முயற்சியாக நானும் வசந்தனண்ணாவும் விஜேவும் இணைந்து ஒரு குரல்பதிவு போட நினைத்ததன் விளைவு இந்தப்பதிவு.

எனக்குத்தெரியாத கரைவவலை ஆணம் போன்ற பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது.

என்னையும் சோமியண்ணாவையும் விட மிகவும் அழகாக வசந்தனண்ணா அம்மாப்பாட்டு பாடியிருக்கிறார்...அது தவிர இருவரும் பல சுவையான தகவல்களைச் சொல்லியிருக்கினம் கேளுங்கோ.

பின்குறிப்பு:கண்டுபிடி கண்டுபிடி போட்டில வெற்றி பெற்ற தர்சனுக்குப் பரிசாக நான் வைக்காத சொதி வழங்கப்படும்.

18 comments:

சின்னக்குட்டி said...

//வசந்தனண்ணா அம்மாப்பாட்டு பாடியிருக்கிறார்//

என்ன சிநேகதி. என்ன புலூடா.. வசந்தனின் பாட்டை கேட்க ஆவலாய் வந்தேன். சூப்பர் கூட்டணி .நல்ல தொரு விசயம் காற்றுவாக்கில் கேள்விபட்ட விசயத்தை விளக்கமாக விளங்கி கொண்டன் வசந்தனுக்கு நன்றிகள்.

மலைநாடான் said...

வசந்தன், சிநேகிதி, சந்திரன்!

முதலில் கூட்டு முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

ஈழத்தில், கிழக்கில் சொதியை அல்லது அதைப்போன்ற திரவ உப உணவைத்தான் ஆணம் என்பதாக நான் அறிந்திருக்கின்றேன். சரியோ தெரியவில்லை.

அம்பா பாட்டுக் குறித்து நீங்கள் சொல்லுவது உண்மையே. அந்த தாளத்திற்கும், வலைஇழுக்கும் அசைவுக்கும் இருக்கும் ஒத்திசைவுதான் பிரதானமானது.

சயந்தன் said...

//அவர்கள் மிகவும் அத்தியாவசியமான கலந்துரையாடல் ஒன்றை.. //

உங்களுக்குத் தெரிகிறது.. மற்றவைக்கு புரியலையே.. ம்.. சரி.. நாங்கள் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் நெருங்கிட்டுது..ஒரு நிலைக்கு உங்களை எல்லாம் வளத்து விட்ட பெருமகிழ்வுடன்

வசந்தன் said...

ஐயோ!
அது அம்மா பாட்டில்லை அம்பாப் பாட்டு.
'சிஞ்சா மனுசி' ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அனுப்பியிருந்தா பின்னணி இசையெல்லாம் சேர்த்து நல்லதொரு ஒலித்தொகுப்பு செய்து தந்திருப்பார்.
எண்டாலும் என்ன, நாங்கள் சொந்தக்காலில நிக்கிறம் எண்டு பெருமைப்படலாம் இப்ப.

சினேகிதி said...

\\ஐயோ!
அது அம்மா பாட்டில்லை அம்பாப் பாட்டு\\

opps :-)))))))

வி. ஜெ. சந்திரன் said...

அட சொதி பதிவிலை ஒரு சொதியை மறந்து போனன்.
1. அல ஹொதி- கொழும்பிலை படிக்கிற போது படிக்க போற இடத்திலை தான் காலமை சாப்பாடு. பாணும், உருளை கிழங்கு சொதியும்.
மிளகு, உள்ளி எல்லாம் போட்டு செய்திருக்கும், எங்களுக்கு சொதி சிங்களத்திலை ஹொதி.

//என்ன சிநேகதி. என்ன புலூடா.. வசந்தனின் பாட்டை கேட்க ஆவலாய் வந்தேன்//

:)))

U.P.Tharsan said...

சொதி பதிவு சூப்பர். நிறைய விடயம் தெரிந்து கொண்டேன். கலந்து சிறப்பித்த வசந்தன்,சிநேகிதி,சந்திரன் எல்லோருக்கும் பாராட்டுக்கள்.ஒலிப்பதிவில் என்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். (MSN MESSANGER எல்லாம் OFF செய்திருக்கலாம்.:-)) )

//பின்குறிப்பு:கண்டுபிடி கண்டுபிடி போட்டில வெற்றி பெற்ற தர்சனுக்குப் பரிசாக நான் வைக்காத சொதி வழங்கப்படும்.//

ம்.. சரி நன்றி

மதி கந்தசாமி (Mathy) said...

சினேகிதி, வசந்தன் & வீஜே,

உங்கட கதையைக் கேட்டன். நல்லா இருந்தது. அம்பா பாடல் பற்றி மு.புஷ்பராஜன் எழுதிய சிறு நூலைப் பகுதிகளாக என்னுடைய வலைப்பதிவில் இட்டிருக்கிறேன். இப்போதைக்கு இரண்டு பாகங்கள்..

பாடுறவை பாடுங்கப்பா. ;)

http://mathy.kandasamy.net/musings/2007/04/10/668

http://mathy.kandasamy.net/musings/2007/04/10/669

-மதி

கானா பிரபா said...

வணக்கம் தங்கச்சி

வீட்டை போய் கேட்கிறேன், ஏதாவது செய்து உந்த டெம்ப்ளேட்டை மாற்றக்கூடாதா?

சினேகிதி said...

prabanna...nan chumma vilayadikondu irukiran template oda:-))

வசந்தன்(Vasanthan) said...

சினேகிதி said...
//prabanna...nan chumma vilayadikondu irukiran template oda:-)) //

பிரபாண்ணையின்ர வருத்தம் தொத்தீட்டுது போலகிடக்கு.

Anonymous said...

Naangal inga sothi endaal... Padikka thevaiyaana.. paadangalukkaana past papers ai solranaangal..
"SOURCE FOR COURSE IS SOTHI"

Rasikai said...

அடக் கடவுளே சொதியைப்பற்றி இவ்வளவு அலசலா?
எங்கட யூனில சொதி எண்டு சோர்ஸை சொல்லுறவை நான் அப்படி ஏதோ எண்டு வந்தால் இது சொதியைப்பற்றி அலசினம்

Anonymous said...

Nice conversation :)) One more thing,
யாழ்ப்பாணத்தில பெரும்பாலும் பிரதான functions (wedding, parties, 31st memorial day etc) எல்லாத்திலூம் சொதிக்கு ஒரு பிரதான இடம் இருக்கு. பந்தியில கடைசியா விடுவினம்.

செல்லி said...

மூன்று பேரினதும் கலந்துரையாடல் நல்லாயிருக்கு.
சொதியை ஆத்தி நல்லா அலசி இருக்கிறீங்கள்:-)
இடியப்பமும் சொதியும் இணை ப்ரியாச் சோடி.
தொடரட்டும் உங்க இந்த உரையாடல்!:-).

Anonymous said...

//எல்லாத்திலூம் சொதிக்கு ஒரு பிரதான இடம் இருக்கு. பந்தியில கடைசியா விடுவினம்.//

அனானி,
பாயாசத்தைச் சொல்லிறியளோ?

சினேகிதி said...

உண்மையா எல்லாரும் பாராட்டுறீங்கிளோ?? இல்லாட்டா...ஹி ஹி...நன்றி எல்லாருக்கும்.

ரசி அக்கா எப்பிடி இங்கால் பக்கம் வந்தனீங்கள்;?? யாரும் லிங் தந்தவையோ சினேகிதி அலட்டுறா என்று :-))

மதி அக்கா நான் அம்பா பாட்டுப் பக்கம் வந்தன் கனக்க இருந்திச்சு திரும்பி ஓடி வந்திட்டன. ஆறுதலா வாசிக்கிறன்.

Anonymous said...

noolaham.net/library/books/01/54/54.htm
"அம்பா" முழுமையான நூல்