Custom Search

Wednesday, March 07, 2007

குறையொன்றுமில்லை....

குடுத்து வச்சனீங்கள் உங்களுக்கென்ன கவலை பிள்ளையா குட்டியா எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை சுதந்திரமாத் திரியுறீங்கள் இப்பிடித்தான் இளையோரைப் பார்த்து பெரியாக்கள் சொல்றவை.அதெல்லாம் சுத்தப்பொய்!!!!!எங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்குப்பாருங்கோ சும்மா எப்ப பார்த்தாலும் உங்களுக்குத்தான் பிரச்சினை இருக்கெண்டு புலம்பாதயுங்கோ.எங்கட கவலைகள் என்ன என்னெண்டு சொல்றன் கேளுங்கோ இல்லையெண்டால் இடையிலையே தலையைப் பிச்சுக்கொண்டு ஓடிப்போயிடுங்கோ.

படிப்பு படிப்பு படிப்பு அதான் எங்கட முதற் கவலை.பள்ளிக்கூடத்திலயும் அதத்தான் செய்யிறம் வீட்டயும் அதுதான். 70 வீதமானோருக்கு படிக்கிறதும் படிச்சு முடிய என்ன செய்யப்போறம் என்றதும்தான் தற்போதுள்ள பெரிய பிரச்சனை.எங்களுக்கே தெரியும் நாங்கள் ஒழுங்காப் படிக்காட்டி உருப்படமாட்டம் என்று பிறகேன் எப்ப பார்த்தாலும் படி படியென்று உயிரை வாங்குறீங்கள். படிக்கிறதெண்டாலும் சரி தேத்தண்ணி குடிச்ச கப் ஐக் கழுவி வைக்கிறதெண்டாலும் சரி நாங்களா நினச்சுத்தான் செய்வம் சும்மா நொய் நொய் என்றால் உங்க ஒரு அலுவலும் நடக்காது சொல்லிட்டன்.

அடுத்தது நேரம்.கிட்டத்தட்ட 10 மணித்தியாலம் போக்குவரத்திலயும் வகுப்பிலயும் செலவழியும்.வீட்ட வந்து ஒரு 4-5 மணித்தியாலம் ஹோம்வேர்க் பிறகு Facebook, MSN தமிழ்மணம் யாழ் அந்த வெப் இந்தப்பாட்டெண்டு ஒரு 3 மணித்தியாலம்.சாப்பாடு பிறகு Grey's Anatomy ,Desperate housewives, House என்று ஒரு 2 மணத்தியாலம் செலவழிக்கிறம்.பிறகு நித்திரை கொள்ள நேரம் காணாது .ஸோ ஒரு நாளில 24 மணித்தியாலம் நேரம் காணவே காணாது எங்களுக்கு.வார நாட்களிலாவது நண்பர்களோட சேர்ந்து உருப்படாம போகலாம் என்றா அதுக்கும் வழியில்லை.பகுதிநேர வேலையென்று ஒன்றைக் கண்டுபிடிச்சதால எங்களுக்கெண்டொரு ஸோசல் வாழ்க்கையே இல்லாமப் போச்சு.

இன்னும் வாசிச்சுக்கொண்டிருக்கிறீங்கிளா?? இல்லாட்டி ஓடிப்போயிற்றீங்கிளா? அட மறந்தே போனன் மகளிர் தினம் வருதென்ன...எல்லா மகளிருக்கும் வாழ்த்துக்கள் அதுசரி ஆடவர் தினம் எப்ப? சரி நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறன்.


முக்கியமான பிரச்சனை காசு.70 வீதமான விளம்பரங்கள் எங்களைக்கவரத்தான் பாடுபடுகின்றன ஆனால் OSAP, பகுதிநேர வேலை ,பெற்றோர் தரும் காசும் சேர்த்தாலும் காசு எப்பவுமே பற்றாக்குறையாவே இருக்கு.அதான் ஏனெண்டு விளங்கேல்ல.எங்களை நம்பியே உருவாக்கப்படுற பொருட்களையெல்லாம் வயசுபோன ஆக்கள் அனுபவிக்க விட்டிட்டு இருக்கவேண்டியிருக்கு சா.

இப்பிடி நாங்கள் ஏற்கனவே பிரச்சனையளோட இருக்கும்போது ஆதரவாக இருக்கவேண்டிய பெற்றோர்களுக்கு எங்கட பிரச்சனையள் விளங்குதில்லை.அப்பிடி அவைக்கு விளங்காததும் எங்களுக்குப் பெரிய பிரச்சனைதான்.யார்க்கெடுத்துரைப்போம்??? (வசந்தனண்ணாவைப்போல கதைப்பம் என்று வெளிக்கிட்டன் சரி வரேல்ல :-) :-))

நண்பர்களோட செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை அப்பிடியே எப்பவாவது பனிப்புயல் அடிச்சு வகுப்புகளில்லாமப் போனாலும் வேற வேற இடங்களில இருக்கிற நண்பர்களைப் பார்க்க முடிவதில்லை.அதால நண்பர்களிடம் இருந்து விலகி விலகிப் போறமாதிரியொரு உணர்வு.வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரியில்லையே மாறிக்கொண்டே போகுதே என்றொரு கவலை. சிலருக்கு நண்பர்கள் அம்மா அப்பா சகோதரர்களைத் தவிர்த்து அந்த ஒரு ஸ்பெஸல் சம்1 இல்லையென்ற பிரச்சனை.அப்பிடி இருந்தாலும் அந்த ஸ்பெஸல் சம்1 உடன் கூட இருப்பதற்கு நேரம் இல்லாத பிரச்சனை.எப்பவாவது தலைக்குள்ள நர்த்தனமாடும் ஏன் வாழுறம் யாருக்காக வாழ்கிறோம் என்ன சாதிக்கப்போறம் போன்ற பொன்னான கேள்விகள், சில நேரம் தனிமை ,மனவுளைச்சல் அம்மா அப்பாவோட சண்டை இப்பிடி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

உடலமைப்பும் எங்களுக்குப் பெரிய பிரச்சனைதான்.ஸெக்ஸியா இருக்கோணும் என்றுதான் எல்லாருக்கும் ஆசை.Dhoom 2 பிபாஸா பாபாஸ+ மாதிரி இருக்கோணும் என்று ஹா ஹா.என்ர நண்பியொராள் சொன்னா உலகத்தில எய்ட்ஸ் ஆல பாதிக்கப்பட்டிருக்கிற ஆக்களை விட டயற்றிங் என்று வெளிக்கிட்டு ஒழுங்கான சாப்பாடில்லாம வருந்தி Anorexia, Bulimia போன்ற நோயை வாங்கின பெண்கள்தான் அதிகமாக இருக்கினம் என்று.எதை எதையோட ஒப்பீடு செய்து பார்க்கினம் பாருங்கோ.ஏனென்றால் விளையாட்டு வீராங்கனைகளில் கூட திறமையுள்ளவர்களை விட கவர்ச்சியா இருக்கிறவைக்குத்தான் அதிக மதிப்பு மீடியாக்களின் செல்வாக்கு எல்லாமே.போன கிழமை உறவினர் ஒருவருடைய உணவுவிடுதி+பார் க்குச் சென்றபோது அங்கே ரெனிஸ் பிளேயர் Anna Kournikova ன் கவர்ச்சியான படம் ஒன்றைப்பார்த்திட்டு நான் கேட்டேன் அதிக போட்டிகளில் வெல்லாத Anna Kournikova ன் படத்துக்குப் பதிலா சிறந்த கோல்ப்பிளேயர் Karrie Webb ன்ர படத்தை வைக்கலாம் தானே என்று அதுக்கு அவர் சொன்னார் Anna Kournikova போன்றவர்களுடைய படத்தைப் பார்த்தாத்தான் இன்னுமொரு கப் வாங்கி அடிப்பினமாம் ஆக்கள்.நானும் பின்னச் சொல்லிட்டு வந்தன் றித்திக் றொசான்ட படமும் ஒன்றை வாங்கி வையுங்கோ நிறையப் பெட்டையள் வந்து நிறைய கப் வாங்கி அடிப்பினமென்று.

இந்த ஆராய்ச்சியாளர்களால கூட எங்களுக்குப் பிரச்சனைதான்.ஒரு ஆராய்ச்சில பெண்கள்தான் அதிகமாக மற்றவர்களிடம் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் தங்களைப்பற்றிய நல்லெண்ணங்கள் நிறைய இல்லை தாங்கள் வடிவோ என்று சந்தேகம் என்றெல்லாம் கண்டுபிடிச்சவையாம். ஆனால் உண்மையாவே இளையோர்களில் ஆண் பெண் என்று பாகுபாடில்லாம எல்லாருக்குமே இந்தப்பிரச்சனை இருக்கு ஆனால் என்ன ஆண்கள் மற்றவர்களிடம் உதவி எதிர்பார்க்கக்கூடாது தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒரு முகமூடியைப் போட்டு வச்சிருக்கிறதால உண்மையாவே பிரச்சினையிருக்கிற ஆண்கள் கூட அதை வெளியில காட்டிக்கொள்றேல்ல.

இன்னும் நிறைய இருக்குத்தான் ஆனால் நீங்களும் பாவம்தானே உங்கட பிச்சனைகளைப் பார்க்கப்போங்கோ பிறகு ஆறதலா மிச்சம் சொல்றன்.

7 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்லாருக்கு சினேகிதி. வாசிச்சுச் சிரிச்சன். உங்கட பிரச்சனைகளைப் பற்றி வாசிச்சுச் சிரிக்கிறன் என்டு சண்டைக்கு வராதிங்க.. :O))

எனக்கும் House விருப்பம். ரிமோட்டை கொண்ட்ரோல் பண்ணத் திட்டம் போடோணும் அந்த நேரத்துக்கு.. என்ட பிரச்சனைய ஆரிட்ட போய்ச் சொல்லிறது்? :OS

சினேகிதி said...

\\எனக்கும் House விருப்பம். ரிமோட்டை கொண்ட்ரோல் பண்ணத் திட்டம் போடோணும் அந்த நேரத்துக்கு.. என்ட பிரச்சனைய ஆரிட்ட போய்ச் சொல்லிறது்? :OS \\

லொள் ஷ்ரேயா ....றிமோட்டை எடுத்து சோபாக்குக் கீழ இல்லாட்ட வேற எங்கயும் ஒழிச்சு வச்சிட்டு நல்லபிள்ளை மாதிரி இருங்கோ..(எங்கட வீட்டுக்காரர் இதை வாசிக்க மாட்டினம் என்ற நம்பிக்கையில்)

கானா பிரபா said...

நகைச்சுவையா உண்மை பேசியிருக்கிறியள், நான் வாழும் நாட்டில் அதிகம் புற்றுநோய் (மார்பு) வருவது பெண்களுக்கே.

சினேகிதி said...

\\நகைச்சுவையா உண்மை பேசியிருக்கிறியள் நான் வாழும் நாட்டில் அதிகம் புற்றுநோய் (மார்பு) வருவது பெண்களுக்கே. \\

பிரபாண்ணா எல்லா நாட்டிலயும் பெண்களுக்குத்தான் அதிகமா மார்புப்புற்று நோய் வருதென்று நினைக்கிறன்.

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி உள்ளத்து உணர்வுகளை சொல்லி இருக்கிறீர்கள்.
சுயமாக சிந்தித்து எம்மளவிலோ/ பொது நிலையிலோ சரியாக நடக்கும் போது, அதில் குறை கண்டுபிடிப்பதோ/ அதை செய், அப்பிடி செய் என்பதோ மன வருத்ததை தரும் தான்.
ஆனால் ஒரு பகுதி இளையவர்கள் அவ்வாறு இல்லை என்பதும் உண்மை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடக் கடவுளே!
இவ்வளவு பிரச்சனையுடன் எப்படித்தான் காலம் தள்ளுறீங்களோ!!
நான் சாப்பாட்டுக்கெல்லாம் இல்லாமல்;நாளும் வாழ்வா? சாவா? எனப் போருக்குள்
வாழும் ஜீவன்களுக்குத் தான் பிரச்சனையோ என தவறாக இது வரை நினைத்துவிட்டேன்.
மனதைத் தேற்றுங்க!!

சினேகிதி said...

\\யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அடக் கடவுளே!
இவ்வளவு பிரச்சனையுடன் எப்படித்தான் காலம் தள்ளுறீங்களோ!!
நான் சாப்பாட்டுக்கெல்லாம் இல்லாமல்;நாளும் வாழ்வா? சாவா? எனப் போருக்குள்
வாழும் ஜீவன்களுக்குத் தான் பிரச்சனையோ என தவறாக இது வரை நினைத்துவிட்டேன்.
மனதைத் தேற்றுங்க!! \\

உங்கட சர்காசம் புரியுது!