கடவுளே எனக்கு யாரப்பா எதிரி????
அன்புள்ள வலைப்பதிவுலக நண்பர்களுக்கு!!!!!!!!
என்னுடைய பெயரில் இருந்து கடந்த இரண்டு நாளாக அசிங்க அசிங்கமா யாரோ பின்னோட்டம் போடுகிறார்களாம். பாருங்க சினேகிதிக்கு வந்த சோதனையை.
அந்தப்பின்னோட்டம் வந்த பெயரைக் கிளிக் பண்ணினால் என்னுடைய profile க்கு லிங் போகுதாம். இது நண்பரொருவர் எனக்குத் தெரிவித்தது இது போல உங்களில் வேறு யாருக்கும் பின்னோட்டம் வந்ததா?? சினேகிதியைப் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே நான்பாட்டுக்கு நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கிறன் எனக்குப்போய் ஏனிப்பிடியெல்லாம் அன்பர்கள் வந்து வாய்த்திருக்கிறார்களோ தெரியேல்ல.
கடவுளே எனக்கு யாரப்பா எதிரி?? என்னவும் பிரச்சனையென்றால் பேசித் தீர்த்துக்குவம் உப்பிடி அசிங்கம் பிடிச்ச வேலை செய்யாதீங்க பிளீஸ்..
வேற என்னத்த சொல்ல வேற யாருக்கும் என் பெயரில் இருந்து தப்பான பின்னோட்டம் வந்திருந்தா அது நான் இல்லை என்று சொல்லவே இந்தப் பதிவு.
இனிம நான் நிம்மதியா யாற்ற பதிவுக்கும் பின்னோட்டம் போட ஏலாதோ என்று யோசிக்கிறன்.
16 comments:
take it easy
அடப்பாவிகளா... எந்த பிரச்சனைக்கும் போகாத பதிவர்களையும் இவிங்க விட்டு வைக்கலையா???
உங்கள் நிலைகண்டு வருந்துகிறேன்
:(((((
அடக் கடவுளே!!!!!!!!!!!!!
இப்ப சொல்லீட்டிங்க தானே,, இனி விட்டு தள்ளுங்க....
அப்ப நீங்களும் பெரிய ஆள் ஆகிட்டீங்க எண்டு அர்த்தம் ;)
சுஜித்தின் கதையல்ல நிஜத்தை நீங்கள் ஏற்கனவே பதிந்துவிட்டீர்கள் என்று சயந்தன் சொல்ல, எங்கேயெனப்பார்ப்பம் என்று வந்தால்.... இப்படியொரு பதிவு :-((((. நமது தமிழ்ச்சூழல் நன்றாகத்தான் இருக்கின்றது. வேறென்னத்தைச் சொல்ல?
உங்கள் ஒருதருக்கும் அப்பிடிப் பின்னோட்டம் வந்ததெண்டு ஒருதரும் சொல்லாததால எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.இன்னும் எத்தினை பேர் வந்து சொல்லப்போயினமோ என்று யோசிச்சுக்கொண்டிருந்தன்.
டிஜே "அவள் பெயர்அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு" என்ற பதிவுதான் அது போய்ப்பாரும்.
வாழ்க்கை சோதனைதான்.. சீக்கிரம் சரியாகிவிடும் சினேகிதி.. ;-)
உங்கள் பெயரில் பின்னூட்டங்கள் போடுவதற்குரிய புறச் சூழல் எதுவும் நியாயமாக இல்லையே.. ஒரு வேளை நியாயம் தவறி விட்டார்களோ..
இப்ப தான் நீங்க ஒரு தமிழ் வலைப்பதிவர் என்ற பெருமையைப் பெறுகிறீர்கள்.
கவலைப் படாதீங்க. சரியாகி விடும்.
சகோதரி, வருத்தங்கள்
தனது கருத்தை சொல்ல தயங்கி முகம் மறைக்கலாம். அடுத்தவரின் பெயரினால் தவறான பின்னூட்டமிடும் மிருகங்களை என்னவென்று சொல்லுவது.
( நீங்கள் யாழ்கள சினேகிதிதானே )
காய்க்கிற மரத்துக்குத்தானே கல்எறி விழும் என்பார்கள்
எனக்கு ஒருவரும் இப்படி எறியவில்லையே (நகைச்சுவையாக)
சிநேகிதி, உங்களுடைய 'பெண்கள் மட்டுமல்ல' பதிவு படித்து பின் இங்கு வந்தேன். பின்னூட்டம் அதிகம் நான் இடுவதில்லை என்றாலும் பலருடைய பதிவுகளை படித்து உலகம் அறியவும் வாழ்வை ரசிக்கவும் கற்று வருகிறேன்.
இங்கு இந்த பதிவில் பின்னூட்டம் இட வேண்டிய முக்கியத்துவம் தோன்றியது.
உங்கள் பெயரில் எனக்கு தவறான பின்னூட்டங்கள் வரவில்லை. ஆனால் மற்ற சில பெண் பதிவர்கள் பேரில் என் பதிவில் தவறான பின்னூட்டம் வந்துள்ளன முன்பு! நான் அந்த பெண்கள் பதிவினை தொடர்ந்து படிப்பதால், அவர்கள் எழுத்தின் தன்மை அறிவேன்! :) அதனால் தவறான பின்னூட்டங்களை வெளிவிடுவதில்லை. அந்த பெண் பதிவர்களிடம் இதனை சொல்லி பயப்பட வைத்து எந்த லாபமும் இல்லை என்று சொல்லாமல் விட்டுவிடுவேன். இதனால் என் பதிவிற்கு இப்போது அவை வருவதில்லை.
மற்றவர்கள் இங்கு சொன்னது போல், உங்கள் எழுத்தில் அழகும் வலிமையும் இருப்பதால் உங்களை புறந்தள்ளும் ஒரு அப்பாவியின் முயற்சிதான் அது. எதிரி அல்ல, அது மன நோயாளி. பிறர் வளர்வதை விரும்புவதில்லை அந்த உள்ளம். பிறர் அவதியில் மகிழும் துயர உள்ளம் அது. அன்பாய் இருப்பவரையும் அவமரியாதை செய்யும் கொடுமை உண்டு அதனிடம். கண்டு கொள்ளாமல் விடுவது ஒரு வழி.
இவ்வாறு உங்கள் பெயரில் தவறான பின்னூட்டம் வந்தால், நீங்கள் அழகும் வலிமையும் கொண்ட "நல்ல" எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
நல்ல உள்ளங்கள் புரிந்து கொள்ளும், கவலை வேண்டாம். பல பதிவர்களுக்கு பழகி விட்டது இந்த நிகழ்ச்சிகள். புரிந்து கொள்வார்கள்.
துவண்டு போகாமல் தொடர்ந்து எழுதுவது கண்டு பாராட்டி செல்கிறேன். :)
//சகோதரி, வருத்தங்கள்
தனது கருத்தை சொல்ல தயங்கி முகம் மறைக்கலாம். அடுத்தவரின் பெயரினால் தவறான பின்னூட்டமிடும் மிருகங்களை என்னவென்று சொல்லுவது//
வரவனையான் சொல்வதோடு நான் ஒத்து போகிறேன். கவலைப்பட தேவையில்லை.
கடவுளே எதிரியாக இருக்கும்போது அவரிட்டப் போய் முறையிடுறீர்?
//"கடவுளே எனக்கு யாரப்பா எதிரி????"//
அந்தாளுக்கே ஏகப்பட்ட பிரச்சனையும் எதிரிகளும், இது இருக்க உங்களிட்ட வந்து சொல்லுவாரே? ;-)
Post a Comment