என்னை முதன் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்...
அண்ணைமார் எல்லாரும் பொம்பிளை பார்க்கிற முறை பற்றி எழுதிச்சினம் அதான் நானும் இன்டைக்கு எங்கட வீட்ட நடந்த மாப்பிளை பார்க்கிற நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்றன் கேளுங்கோ.
அன்ரியாக்கள் மற்றும் அத்தை மாமா எல்லாரும் வீட்ட வாறம் என்று போன் பண்ணிச்சினம்.அண்ணா நிப்பான்தானே என்று கேட்டா அன்ரி அப்ப எங்களுக்கு விளங்கிட்டுது இவை சும்மா வரேல்ல அண்ணாவைப் பார்க்கத்தான் வரினம் என்று.
அண்ணாவைக் கலாய்க்கணுமே...தங்கச்சி போய் அம்மாட்ட கேட்டா அம்மா படத்தில வாற மாதிரி நிறைய ஆக்கள் பூ பழம் எல்லாம் கொண்டு வருவினமோ என்று.அம்மாவும் சிரிச்சுக்கொண்டு
சீ அப்பிடியெல்லாம் இல்லை.அவை சும்மா வரினம் அண்ணாவைப் பார்க்க வரேல்ல.
பொய்தானே அ;ம்மா சும்மா வரினம் என்றா ஏன் நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இவ்வளவு நாளும் வராதாக்கள் இப்ப அன்ரின்ர தங்கச்சிக்கும் அண்ணாக்கும் திருமணம் செய்யுறதைப்பற்றிக் கதைச்ச பிறகு வரினம் ஸோ அண்ணாவைப்பார்க்கத்தான் வரினம்.
அண்ணா போய் வேட்டி கட்டிக்கொண்டு வந்து நில்லு போ என்று அவனை ஒரு பாடு படுத்திப்போட்டம்.
4 மணிக்கு வந்திச்சினம் எல்லாரும் சும்மா வரேல்ல மோதகம் கொழுக்கட்டை எல்லாம் கொண்டு வந்திச்சினம். நானும் தங்கச்சியும் சிரிக்கத்தொடங்கிட்டம்.
என்ன அன்ரி பழம் பூ எல்லாம் எங்க. அவாவும் நக்கலுக்குப் பின்னால வருதெண்டு சொன்னா.
பெரியாக்கள் எல்லாரும் ஹோல்ல இருந்து சமா வைக்கத் தொடங்கிட்டினம்.நாங்கள் கொஞ்ச நேரம் இருந்து பார்த்தம் சரி வரேல்ல மேல போய் அழகிய அசுரா படம்; பார்த்தம்.நல்ல படம்தான் எனக்குப் பிடிச்சுது.ஆனால் ஹரோவ விட பிரன்ட் ஒராள் நல்லா இருந்தது போல தோணிச்சு சொன்னா பக்கத்தில இருந்த பிசாசுகள் எனக்கு ரேஸ்ரே இல்லையாம் என்டுதுகள் சரி அத விடுவம். படம் பார்த்துக்கொண்டிருக்க ஹோல்ல இருந்து ஒரே சிரிப்புச்சத்தம்...என்னடா எங்களை விட்டிட்டு அப்பிடி ஜோக் என்டிட்டு கீழ போன அங்கிள் ஒராள் அவற்ற மனுசியைப் பார்த்துப் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்.
அதுவும் என்ன பாட்டு “என்னை முதன் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்..உன் கண்கள் முதன் முதலாகப் பட்ட போது என்ன உணர்ந்தாய் “ (அப்பிடித்தான் ஏதோ..வரி சரியாய் ஞாபகம் இல்லை.அவருக்கு 55 வயசாகுது ஆனால் ரொமான்ஸ்ப் பற்றி சொல்லி வேலையில்ல.அன்ரியும் லேசுப்பட்டவா இல்லை.அவா அவை இரண்டு பேரின்ரயும் லவ் ஸ்டோரி சொல்லத் தொடங்கினா.
அவா O/L படிக்கேக்க அங்கிள் A/L படிச்சவராம்.அங்கிள் கொஸ்டல்ல இருந்தவராம்.அன்ரின்ர அம்மா அப்பாவை கண்டில கடையாம் ஸோ அவா பெரியம்மா வீட்ட இருந்து படிச்சவவாம்.இரண்டு பேரும் வல்லிபுரக்கோயில்லதான் மீற் பண்ணினவையாம் முதல்ல பிறகு ஒரே லவ் தானாம்.ஸ்ருடியோல போய் தோள்ல கை போட்டு படம் எடுத்தவையாம்.அந்த ஸ்ருடியோக்காராள் எடுத்த படத்தில ஒன்டை அன்ரின்ர பெரியப்பாட்டயும் குடுத்திட்டாராம்.பிறகென் அன்ரின்ர அப்பா அம்மா ஊருக்கு வந்தாம் அங்கிளைப் பார்த்துக் கதைச்சு அவரைப்பிடிச்சுப்போய் 17 வயதிலேயே கட்டி வைச்சிட்டினமாம்.அங்கிள்ட வோலட்ல அன்ரியும் அவரும் எடுத்த படம் இன்னும் இருக்கு.அன்ரி கிப்பி வெட்டியிருக்கிறா படத்தில சூப்பரா இருக்கிறா.
இப்பிடியே கதைச்சு கதைச்சு சாப்பிட்டம்.யாருக்காவது என்ன சாப்பாடெண்டு தெரியணுமா?? புட்டு இறால் பொரியல் இறைச்சிக்கறி கத்தரிக்காய்ப்பிரட்டல்...வேற என்ன?அவ்வளவும் என்றுதான் நினைக்கிறன்.
சாப்பிட்டு முடிய shraides (spelling ??)விளையாடுவம் என்று ஒரு கஸின் தொடங்க சரியென்று இரண்டு குறூப் ஆ பிரிஞ்சு விளையாடினம்.தங்கச்சிக்கு வந்த படம் சமுத்திரம்.அவா அலை மாதிரி செய்து செய்து காட்டினா நாங்கள் எல்லாரும் கடல் மீன் என்று சொல்லிக்கொண்டிருந்தம்.ஒருதருக்கும் கடலைச் சமுத்திரம் என்றும் சொல்லாம் என்று ஞாபகம் வரேல்ல.எனக்கு வந்த படம் பூச்சூடவா.நானும் கையில அலபத்மம் முத்திரை பிடிச்சுக்காட்டிட்டு தலையில கொண்டே வைக்கிற மாதிரிக்காட்டினமன் .பூ என்று சொன்னவை ஆனால் பிறகு கொண்டை கொண்டை என்று அதிலயே நின்டிட்டினம் ஒருதரும் சொல்லேல கடைசியா நான் பூச்சூடவா என்று சொல்ல தலையில வைக்கிற மாதிரிக்காட்டிட்டு கையால வா வா என்று சைகை செய்திருக்கலாமெல்லோ என்று சொல்லிச்சினம்.
அடுத்ததா அத்தைன்ர முறை.அவாக்கு வந்தது பாலும் பழமும்.அவா என்ன செய்தா தெரியுமோ...மேசையில கிடந்த அப்பிளையும் தூக்கி அக்கான்ர மகன்ர கையில கிடந்த பால்போத்திலையும் பறிச்சு ஆட்டி ஆட்டிக் காட்டினா.சிரிப்போ சிரிப்பு.. எல்லாரும் உடன பாலும் பழமும் என்று சொல்லியாச்சு.அவாவும் சிரிச்சுக்கொண்டு உங்கட றூல்சின் படி வாயால கதைக்கக்கூடா ஆனால் பொருட்கள் எடுத்துக்காட்டக்கூடாதெண்டு சொல்லேலதானே என்றா..வேற வழி.அன்ரிக்கு வந்தது விசில் அவா ஈஸியா வந்து விசிலடிச்சுக்காட்டினா.அப்பாக்கு வந்தது ஒரு கைதியின் டைரி.அதுவும் கண்டுபிடிச்சிட்டம் ஈஸியா.அண்ணாக்கு வந்தது மனசெல்லாம்.அதுவும் சொல்லிட்டம்.அத்தான் செய்ததைப் பார்த்துத்தான் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.அவர் படத்தின்ர பெயரைப்பார்த்திட்டு ஒரு கஸினை இழுத்துக் கீழ விழுத்திட்டு காலாலயும் கையாலயும் அடிக்கிறமாதிரி செய்தார்.அக்காட மகன் அழத்தொடங்கிட்டான் மாமாக்கு உண்மையா அடி விழுதெண்டு நினைச்சு.நாங்களும் அடிதடி , போக்கிரி என்று சொன்னம் கடைசில அது பொல்லாதவன் படமாம்.
பிறகு கொஞ்ச நேரம் பாட்டுக்குப் பாட்டு விளையாடினம்.அங்கிளும் அன்ரியும்தான் ஒரே லவ்ஸ் பண்ணிக்கொண்டிருந்திச்சினம் பாட்டுக்கு எதிர் பாட்டுப் பாடிக்கொண்டு.கஸின் ஒராள் தான் ஏதோ செய்து காட்டப்போறன் என்று எழும்பினா.எழும்பி சும்மா பாட்டு படமென்டு ரைம் வேஸ்ற் பண்ணாம நல்லதா என்னவும் செய்யணும் என்று சொல்ல அங்கிள் உடன எழும்பி “பணத்தைத் திருடு பொருளைத்திருடு ஆனால் என் டயலொக் ஐ மட்டும் திருடாதா “ என்று சொல்ல பின்ன கஸினும் “நான் யாழி இல்லை காளி என்னட்ட வம்பு வேண்டாம் “ என்று சொல்ல அடுத்த அரை மணிநேரம் அப்பிடியே போச்சு.பிறகு கொஞ்ச நேரம் பாட்டுப் பார்த்தம்.அப்ப தனுஸ்pன்ர “விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாள் “ பாட்டுப் போக தனுஸ் உந்தப்பாட்டில கொஞ்சம் வடிவா இருக்கிறார் ஐஸ்வர்யாவின் தேர்வாக்கும் உடைகள் கெயர்ஸ்டைல் என்று அலட்டினம கொஞ்சநேரம்.இப்பிடியே நேரம் போச்சு.கடைசில இரவு 11.30 ஆச்சு.அன்ரியாக்களும் அத்தையவையும் வீட்ட போக என்று வெளிக்கிட ஊரில இருந்தொரு போன்..இறுதிப்போருக்காக குடும்பத்தில ஒருவரைப்போராட்டத்தில் இணையச்சொன்னதால அன்ரியொராள் தன்ர மகளைக்கொண்டு போய்ச் சேர்த்து விட்டிட்டு இப்பத்தான் வந்து நிக்கிறாவாம் என்று மற்ற அன்ரி போன் பண்ணினா.
8 comments:
எமது சிரிப்பும் கதைப்பும் அவர்கள் கைகளில் இருக்கும் ஆயுதங்களால்......
மாப்பிள்ளை பாக்கவா இல்லை விருந்து கொண்டாட்டமா?
உங்கட சொந்த கதையை சொல்போறியளாக்கும் எண்டு ஓடி வந்தா ;)
//இறுதிப்போருக்காக குடும்பத்தில ஒருவரைப்போராட்டத்தில் இணையச்சொன்னதால அன்ரியொராள் தன்ர மகளைக்கொண்டு போய்ச் சேர்த்து விட்டிட்டு இப்பத்தான் வந்து நிக்கிறாவாம் என்று மற்ற அன்ரி போன் பண்ணினா.//
idudahan kadasi suthappal line. tharperumai kudathu chellam
ஓ, நீங்களும் உங்கட பங்குக்கு ஒரு பதிவு போட்டாச்சோ?
A/L படிக்கிறவை O/L படிக்கிறவையைப் பார்த்துச் சம்பந்தம் பண்ணுவது காலா காலமாக நடக்கும் சம்பிரதாயம் போல ;-)
நல்லாத்தானிருக்கு, இந்தச் சிரிப்பு.
அப்பாடா. இவ்வளவு சிரித்து ரொம்ப நாளாச்சு.
கடைசிவரிகள் நெருடலாப் போச்சு.
இன்னும் உங்க பேச்சுவகை எனக்குப் பிடிபடணும் .நன்றி சினேகிதி.
நன்றி அனானி நண்பர்கள் பிரபாண்ணா விஜே மற்றும் வல்லிசிம்ஹன்.
பிரபாண்ணா நானும் அதைத்தான் கேட்டன்...அவை சொல்லிச்சனம் தங்கட காலத்தில அது ஒரு trend ம்..அதுக்கு முதல் குறைவாம் என்று.
வல்லிசிம்ஹன் வித்தியாசமான பெயரா இருக்கு.அவ்வளவு சிரிப்பு வந்ததா:-)
வல்லி என்கிறது எங்க ஊரு சாமி பொண்டாட்டி.
சிம்ஹன் என்கிறது எங்க வீட்டு சாமி.
ரெண்டையும் சேர்த்துப் போட்டு வந்தது இந்தப் பேரு.
\\வல்லி என்கிறது எங்க ஊரு சாமி பொண்டாட்டி.
சிம்ஹன் என்கிறது எங்க வீட்டு சாமி.
ரெண்டையும் சேர்த்துப் போட்டு வந்தது இந்தப் பேரு.\\
ஓ...திரும்ப வந்து பதில் சொன்னதுக்கு நன்றி வல்லி சிம்ஹன் :-)
Post a Comment