Custom Search

Friday, March 23, 2007

சினேகிதியும் குரல்பதிவு போடுறாவாம்


வசந்தனணண்ணா சயந்தனண்ணா பிரபாண்ணா மலைநாடான் சோமியண்ணா வழியில் சினேகிதியின் குரல்பதிவு இதோ.ஹா ஹா இதுக்கு முதல் ஒன்டு றக்கோட் பண்ணினான் பட் எனக்கே சிரிப்பு வந்திட்டு ஸோ இத இப்ப கேளுங்கோ மிச்சம் நாளைக்குப் போடுறன்.

19 comments:

சோமி said...

வணக்கம் அக்கோவ்,

நல்லவேளை காமொடி எண்டு நீங்கள் அடிக்கடி சொல்லுறதால அதைக் கேட்டு சிரிக்க முடிந்தது.

நீங்கள் பதிவு போட்டதே மிகப் பெரிய நகைச்சுவை. தமிழ்மணத்தில பாத்ததுமே சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். இண்ணைக்கு இவ்வளவு கொமெடி போதும் எண்டு நீங்கள் சொல்லி முடிக்கும் வரை சிரியோ சிரியனெனச் சிரித்தன்(நான் தனியா சிரிக்கிறது பக்கத்து வீட்டுக்காரனுக்கு கேட்காமல் இருக்க
இந்திய -இலங்கை மட்ச் ஹைலைட்டை ரிவியில் சத்தமா வச்சிருந்தன்)

இத்தகைய ஆரோக்கியமான முயற்சிகளுக்கு சிநேகிதியை தூண்டிய அனைத்துக் காரணிகளுக்கும் சகல அண்ணைமாருக்கும் நன்றி.

அம்மா சிநேகிதி பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க.....

செல்லி said...

சிநேகிதி
குட்டிப் பயலின்ர ஜோக்ஸ் நல்லாயிருக்கு.
:-)))

சயந்தன் said...

//மலைநாடானும் பிரபாண்ணாவும் தான் பிரியோசனமா செய்யினம்.. //

தேவையில்லாமல் எங்களை அழ வைக்க வேண்டாம். விரைவில் பிரியோசனமா நாங்களும் செய்யிறம். பாருங்கோ.. நாங்களா கொக்கா கோழியா..

கானா பிரபா said...

தங்கச்சி

கலக்கீட்டியள், றினிஷன் வலு சுழியன் போல கிடக்கு ;-))
ஆளை ஒரு நாளைக்கு வளைச்சுப் போட்டு அவற்ற குரல்ல ஒரு பாட்டோ கதையோ போடுங்கோ. வலைப்பதிவில் முதல் முயற்சியாக இருக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

//தேவையில்லாமல் எங்களை அழ வைக்க வேண்டாம். //
எங்களையும் :-D :)))

உங்க குரல் நல்லா இருக்கு, ஜோக் எல்லாம் தான் எனக்குப் புரியலை :(

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி வணக்கம்...
அண்ணன் மாருக்கு போட்டியாவோ தொடங்கின்னியள்...
எப்பவோ நீங்கள் வந்தததாலை தங்களுக்கு போட்டி எண்டு ஆரோ சொன மாதிரி கிடந்திச்சு,

;)
இன்னும் நிறைய குரல் பதிவு போடுங்கோ

வசந்தன்(Vasanthan) said...

என்னடா இது எங்களுக்கு வந்த சோதனை?

நாங்கள் பிரியோசினமா ஒண்டும் கதைக்கிறேலயோ?
வெறும் அலட்டல் எண்டு வேற சொல்லிப் போட்டியள்.

சயந்தன்,
நீரும் சோமியும் சேந்து அலட்ட, அந்தப்பட்டியலில என்ரை பேரையும் இழுத்துவிட்டிட்டா இவ.
இனியாவது ஒழுங்கா ஒரு கதையக் கதையுங்கோ பாப்பம். என்ர மானமுமெல்லோ கப்பலேறுது.

______________________________
சினேகிதி,
கானா பிரபா சொன்ன மாதிரி சின்னவரின்ர குரற்பதிவைப் போடுங்கோ.
______________________________
பெண்கள் தரப்பிலயிருந்து குரற்பதிவை இடுகையாக்க - அதுவும் தொடர்ச்சியான திட்டத்தோடு - முன்வந்த உங்களுக்கு நன்றி.
ஆரப்பா அது வலைப்பதிவுகளில பொம்பிளையளின்ர குரலே கேக்குதில்லை எண்டு சலிச்சது? இதோ வந்திட்டா அஞ்சா நெஞ்சி சினேகிதி.

சின்னக்குட்டி said...

எப்பவோ நீங்கள் வந்தததாலை தங்களுக்கு போட்டி எண்டு ஆரோ சொன மாதிரி கிடந்திச்சு

ஹிஹி...கொஞ்ச பேர் அங்காலை பெருமூச்சு விடற சத்தம் கேட்குது

சினேகிதி said...

இங்க சொன்ன மாதிரி அடுத்த ஒலிப்பதிவு இன்று போடமுடியவில்லை காரணம் சுமதி ரூபன்(நம்ம கறுப்பி )அவர்களின் உயிரிப்பூ நாடகப்பட்டறையின் 2வது நாடக நிகழ்வுக்குப்போய் இன்னும் ரொரண்டோவிலயே நிக்கிறன் வீட்ட போனதும் போடுறன் ( இங்க யாரும் காத்துக்கிடக்கலை என்று யாரு புறுபுறுக்கிறது)

நாடகங்களை பற்றி விரிவான பதிவும் நாளைதான் (குரல்பதிவு போடுவமோ என்று யோசிக்கிறன்)

எதுக்கும் டிஜே க்கு முதல் போடவேணும்

சினேகிதி said...

\\வணக்கம் அக்கோவ்,

நல்லவேளை காமொடி எண்டு நீங்கள் அடிக்கடி சொல்லுறதால அதைக் கேட்டு சிரிக்க முடிந்தது.\\


சோமியண்ணா உங்களுக்கு பொறாமை என்ன :-))) நான் ஜோக்ஸ் என்று சொல்லாட்டா உங்களுக்குச் சிரிப்பு வந்திருக்காதென்ன :-(((((((

பெரிய ஜோக்ஸ் இல்லைத்தான் பட் சின்னப்பிள்ளையள் செய்யிற சின்ன சின்ன விசயங்கள் கூட இரசிக்கத்தக்கதாயிருக்கும்.

\\இத்தகைய ஆரோக்கியமான முயற்சிகளுக்கு சிநேகிதியை தூண்டிய அனைத்துக் காரணிகளுக்கும் சகல அண்ணைமாருக்கும் நன்றி.
\\

அண்ணோய்ஸ் நன்றி!!!!!!!!!

DJ said...

DJஜ நாடகவிழாவில் கண்டு பயந்து பயந்து கதைத்ததையும் அடுத்த குரற்பதிவில் போடுங்கோ :-)

சயந்தன் said...

நமக்கொரு பெருமூச்சும் இல்லை.. ஆனா ஒலிப்பதிவில எல்லாரும் வந்த பிறகு நாங்களும் பத்தோட பதினொன்டா செய்யேலாது தானே.. அதனாலை அடுத்ததா என்ன செய்யிறது எண்டதை எங்கடை சிந்தனைப் பிரிவு ஆராய்கிறது. பெரும்பாலும் அடுத்தது வீடியோ பதிவு தான். இன்னொரு ஐடியாவும் இருக்கு.. சொல்ல மாட்டம்.. :)

சினேகிதி said...

\\DJஜ நாடகவிழாவில் கண்டு பயந்து பயந்து கதைத்ததையும் அடுத்த குரற்பதிவில் போடுங்கோ :-) \\


டிஜே இப்பிடி மொட்டையா சொன்னா எப்பிடி?? யார் யாரைப் பார்த்துப் பயந்தது என்று சொல்லுமன்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சினேகிதி!
அடுத்தமுறை சின்னவரின் குரல் பதிவையும் போடுங்கள்!!
இப்போ நீங்கள் குரல் பதிவில் "பாஸ்"வாங்கிட்டீங்க!!
பகிடி என்றில்லை; பாடினாலும் கேட்போம்.

சினேகிதி said...

\\சிநேகிதி
குட்டிப் பயலின்ர ஜோக்ஸ் நல்லாயிருக்கு.\\

நன்றி செல்லி

\\தேவையில்லாமல் எங்களை அழ வைக்க வேண்டாம்\\

சயந்தன் அண்ணா இதுக்கெல்லாம் போய் அழுதுகொண்டு...சரி சரி கண்ணைத்துடையுங்கோ :-)))

\\ஆளை ஒரு நாளைக்கு வளைச்சுப் போட்டு அவற்ற குரல்ல ஒரு பாட்டோ கதையோ போடுங்கோ. வலைப்பதிவில் முதல் முயற்சியாக இருக்கும். \\

ஓம் பிரபாண்ணா போடவேணும் பட் அவருக்கு வடிவா பாட்டு கதை எல்லாம் தெரியாது...ஒன்றிரண்டு வரிதான் பாடுவார் முயற்சி செய்றன்.

சினேகிதி said...

\\உங்க குரல் நல்லா இருக்கு, ஜோக் எல்லாம் தான் எனக்குப் புரியலை :(\\

நன்றி பொன்ஸ்...என்ன விளங்கேல்ல உங்களுக்கு..உதெல்லாம் ஜோக்ஸ் என்றும் சொல்லேலாதுதான்.

\\அண்ணன் மாருக்கு போட்டியாவோ தொடங்கின்னியள்...
எப்பவோ நீங்கள் வந்தததாலை தங்களுக்கு போட்டி எண்டு ஆரோ சொன மாதிரி கிடந்திச்சு,;)
\\

நன்றி விஜே...அது அவை சும்மா சொன்னவை.+


\\இன்னும் நிறைய குரல் பதிவு போடுங்கோ \\

உண்மையாவோ நிறையப்போடட்டுமோ?? அப்ப நீங்கaள் எப்ப குரல்பதிவு போடுற பிளான்?

சினேகிதி said...

\\சினேகிதி,
கானா பிரபா சொன்ன மாதிரி சின்னவரின்ர குரற்பதிவைப் போடுங்கோ...
பெண்கள் தரப்பிலயிருந்து குரற்பதிவை இடுகையாக்க - அதுவும் தொடர்ச்சியான திட்டத்தோடு - முன்வந்த உங்களுக்கு நன்றி.\\

நன்றி வசந்தன் அண்ணா ....தொடர்ச்சியாவோ?? இப்ப கொஞ்சநாளைக்கு ஆர்வத்தில போடுவன் பிறகு எனக்கும் கேக்கிற ஆக்களுக்கும் அலுக்காம இருக்கணுமே.

குட்டிப்பையனை வச்சு ஏதாவது செய்யணும் பார்ப்பம்.

\\ஹிஹி...கொஞ்ச பேர் அங்காலை பெருமூச்சு விடற சத்தம் கேட்குது
\\

வாங்கோ சின்னக்குட்டி...சும்மா எல்லாரும் அண்ணைமாரையும் என்னையும் கொழுவி வைக்கிற பிளானோ?
ஏற்கனவே கொழுவி வரலாறு இருட்டடிக்கப்படுதென்றார்.

சினேகிதி said...

\\நமக்கொரு பெருமூச்சும் இல்லை.. ஆனா ஒலிப்பதிவில எல்லாரும் வந்த பிறகு நாங்களும் பத்தோட பதினொன்டா செய்யேலாது தானே.. அதனாலை அடுத்ததா என்ன செய்யிறது எண்டதை எங்கடை சிந்தனைப் பிரிவு ஆராய்கிறது. \\

:-))))))))))))

\\பெரும்பாலும் அடுத்தது வீடியோ பதிவு தான். \\

வீடியோ பதிவா???????? ஆ ஆ ஆ. சரி சரி நடத்துங்கோ.

\\இன்னொரு ஐடியாவும் இருக்கு.. சொல்ல மாட்டம்.. :)\\

அது என்ன ஐடியா என்று எனக்குத்தெரியுமே.

சினேகிதி said...

\\சினேகிதி!
அடுத்தமுறை சின்னவரின் குரல் பதிவையும் போடுங்கள்!!
இப்போ நீங்கள் குரல் பதிவில் "பாஸ்"வாங்கிட்டீங்க!!
பகிடி என்றில்லை; பாடினாலும் கேட்போம். \\


பறவால்ல பாஸ் பண்ணிட்டீங்கள் என்னை :-)

ம் பாட்டுத்தானே போட்டிட்டா போச்சு ஆனா இசை இல்லாம பாட எனக்கே கேக்க ஒரு மாதிரியிருக்கு.