Custom Search

Tuesday, March 27, 2007

நானொரு மாதிரி ........ நீங்கள் ஒரு மாதிரி

சிந்தாநதி,ஸ்ரேயா நானுங்களுக்கு என்ன பாவம் செய்தன்.. உந்த விளையாட்டில என்னை சேர்த்துவிட்டிட்டிங்கிளே.என்ர வண்டவாளத்தையெல்லாம் சொன்னால் பிறகு சினேகிதின்ர கௌரவம் என்னாகும் என்று கொஞ்சமாவது யோசிச்சுப்பார்த்திங்கிளே.

சரி ஏதோ நான் சொல்வதெல்லாம் பொய் பொய்யத்தவிர வேறெதுவுமில்லை..ஐயொ நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறெதுவுமில்லை.

ஒருதரும் சிரிக்காதயுங்கோ..குழந்தைப்பிள்ளைகள் சாப்பிடுற சாப்பாடுகள் எனக்குப்பிடிக்கும்.
எனக்கும் தங்கச்சிக்கும் ஒன்பது வயது வித்தியாசம் ஸோ அம்மா தங்கச்சிக்கு செர்லக் தீத்தேக்க எனக்கும் தாறவா இல்லாட்டா நான் மூஞ்சைய நீட்டுவன் என்று.இங்கயும் எங்கட றெஸ்ரோரன்ரில இருக்கிற கிட்ஸ் மீல்ஸ்ல அநேகமானவை எனக்குப் பிடிக்கும்.

ஊரில பச்சைப்புளியா ஒரு நாரத்தங்காய் இருக்குத் தெரியுமா? அத எங்கட வீட்ட ஒருதரும் கவனிக்கிறதேயில்லை.ஆனால் நான் ஒவ்வொருநாளும் பிடுங்கிச் சாப்பிடுவன்.அதுவும் சும்மாயில்லை ஒவ்வொரு சுளையிலுமுள்ள முத்துக்களை தனித்தனியா எடுத்துச் சாப்பிடுவன்.அம்மம்மா பார்த்திட்டுச் சொல்லுவா உனக்கென்ன விசரோ உதை வச்சு உறிஞ்சுக்கொண்டு நிக்கிறாய்..மாதாளம்பழம் புடுங்கித் தின்னு என்றுவா.நான் நட்ட மரங்கள் எல்லாமே நல்லாய் காய்க்கும் என்று சொல்றவை வீட்ட (அதுவும் வியேட் தானே)

புல் பூண்டுகள் அவற்றிலுள்ள தும்புகள் அழகான இலைகள் சேர்த்து வச்சு சும்மா பலவித வடிவங்களில் அவற்றை ஒட்டிக் காயவச்சு பிரேம் பண்ணுவது பிடிக்கும்.கனடாவில இருக்கிற என் கஸின்ஸ்கும் சொல்லிக்குடுத்திருக்கிறன் இந்தப்பழக்கத்தை.( இதையேதான் ஸ்ரேயாவும் எழுதியிருக்கிறா).

அப்பா ஸ்பெயின், ஜேர்மனி, லண்டன் ,அமெரிக்கா, இத்தாலி என்று பல நாடுகளில் இருந்திருக்கிறார்.அது தவிர கப்பலில் வேலை செய்ததால் பல நாட்டுக் காசுகளை எனக்காக கொண்டுவந்து தந்திருக்கிறார் ஏனென்றால் தாள் காசு மற்றும் நாணயங்களைச் சேரத்து வைக்கிற குணமிருக்கு எனக்கு.ஊரை விட்டு வரும்போது எல்லாத்தையும் ஒராளிட்ட குடுத்திட்டு வந்தனான் போகும்போது கேட்டு வாங்கவேணும்.இப்ப கனடா 25 சத நாணயத்தில் 29 வகையான நாணயங்கள் வைத்திருக்கிறேன்.தவிர சிங்கப்பூர் அமெரிக்கா நியுசிலான்ட் நாட்டு நாணயங்களும் சிலது வைத்திருக்கிறேன்.

எனக்கும் கனவுகளுக்கும் தூரம் அதிகம் இருந்தாலும் அதிசயமா வாற கனவுகள் வியேர்ட் ஆ இருக்கும். உதாரணமா ஊhர் நண்பர்கள், மாத்தளை நண்பர்கள் ,கனடா நண்பர்கள் எல்லாரும் ஒன்றா இருந்து படிக்கிற மாதிரி அதுவும் ஹோல்வேயில இருந்து படிக்கிற மாதிரி, சாப்பிடுற மாதிரியெல்லாம் கனவு வரும்.சிரிப்பென்னெண்டால் ஒருமுறை அண்ணி நாடகத்தில நடிச்ச ஒரு கேர்ளும் என்ர பிரண்டா ஒரு கனவில வந்தா.

எவ்வளவு சோகப்படம் பார்த்தாலும் என் கண்ணில தண்ணி வராது.வீட்டுக்காரர் முழுப்பேரும் மூக்கை உறிஞ்சிக்கொண்டிருப்பினம் நான் மட்டும் அவையைப் பார்த்துக்கொண்டிருப்பன்.அவைக்கு சிரிப்பு வராத ஜோக்குக்கெல்லாம் எனக்கு பயங்கரமாச் சிரிப்பு வரும்.செத்தவீடுகளுக்குப்போனாலும் எனக்கு அழுகை வாறதில்லை.அதால போகவே பயம் என்னைப்பார்த்து மற்றாக்கள் என்னவும் நினைப்பினமோ என்று.

லெக்ஸர் ஹோல்ல இருந்துகொண்டு boring ரொபிக் என்று சொல்லி என்ர நண்பர்கள் பக்கத்தில இருக்கிற ஆக்களுக்கு ரெக்ஸ்ற் மெஸேஜ் அனுப்பிக்கொண்டிருப்பினம் எனக்கு அன்றைக்குத்தான் படிக்கவேணும் நோட்ஸ் எடுக்கவேணும் போல இருக்கும்.”காதலே காதலே” என்றொரு படம் வந்தது அந்த ஹீரொவ எனக்குப்பிடிக்கும் என்ர நண்பிகள் சொல்லுவினம் போயும் போயும் இவனைப்போய் கியுட் என்று சொல்றா நீயும் உன்ர ரேஸ்ற்றும் என்று.என்ர தங்கச்சியும் அதத்தான் சொன்னா.

லக்கி பென், லக்கி பான்ற்ஸ், லக்கி றூம் ( எக்ஸாம் எழுத) இப்பிடியெல்லாம் நிறைய லக்கி இருக்கு.ஏதாவது ஒரு சின்ன விசயத்துக்கு முடிவெடுக்க முடியாட்டா நான் உடன நேரத்தப்பார்ப்பன் ஒற்றை நம்பர் என்றா ஒரு முடிவு இரட்டை நம்பர் என்றா மற்ற முடிவு.எனக்கே சிலநேரம் விசர் வரும் என்ர இந்தக்குணத்தைப் பார்த்து.மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறன்.

எங்கட வீட்ட எனக்கு லேற்கோச்சி என்று பட்டம்.கொம்பறிமூக்கன் என்றும் ஒரு பெயர் இருக்கு.வெளில நான் நல்ல பிள்ளை. எல்லாரும் சேர்ந்து சாப்பிட இல்லாட்டி மோலுக்கு எங்கயும் போவம் என்று வெளிக்கிட்டா நான் வரேல்ல என்று சொல்லிட்டு இருப்பன் அவை வாசல் வரைக்கும் போக யாரோ மண்டைல குட்டி போ போ போய் வெளிக்கிடு என்று சொல்ற மாதிரியிருக்கும்...உடன நில்லுங்கோ நானும் வாறன் என்றிட்டு வெளிக்கிட ஓடுவன்.எல்லாருக்கும் பயங்கரக்கோவம் வரும் பிறகு மோலுக்குப் போய் 15-20 நிமிசத்திலயே அலுப்பாயிருக்கும்.அப்பாவோட போய் இருந்திடுவன்.அக்காட்டயும் தங்கச்சிட்டயும் பேச்சு வாங்கிறது இதுக்குத்தான்.நான் போடுற முக்காவாசி உடுப்பும் அவை செலக்ட் பண்றதுதான்.

அம்மா சொல்லுவா சின்ன வயசிலயே என்னை ஒருதரும் நித்திரையாக்கத் தேவையில்லையாம்.நானே றேடியோவப் போட்டிட்டு தலையணியை எடுத்துக் கால்ல போட்டு ஆட்டிக்கொண்டு நித்திரையாப்போடுவனாம். வளர்ந்தபிறகும் என்னை யாரும் இதைச் செய் அதச் செய் என்று யாரும் சொல்றதில்லை.என் வேலை எல்லாம் நானே பார்ப்பன்.

றிப்போர்ட் கொண்டுவந்து முதல் பொய் பொய்யாச் சொல்லுவன்.அம்மா நான் இந்தப்பாடத்தில 60 மார்க்ஸ்தான் வாங்கினான் என்று.அம்மா றிப்போர்ட்ட வாங்கிப் பார்த்திட்டு பேசுவா ஏனுப்பிடி பழகுறாய். 90 மார்க்ஸ் 60 என்று சொன்னா சாத்தான் அப்பிடியே ஆகட்டும் என்று சொல்லிடும் என்று. அந்தக்குணம் இப்பவும் கொஞ்சமிருக்கு.

நான் ஏதும் சொன்னால் அது உடன நடந்திடும்.இப்ப நான் ரை பண்ணிப் பார்க்கேல்ல.முந்தி நடந்ததைச் சொல்றன். ஓருநாள் ஹெலியைப் பார்த்து இப்ப சுடப்போறான் என்று சொல்லி வாய்மூடேல்ல அவன் பட பட என்று சுடத்தொடங்கிட்டான்.
பிறகொருநாள் நான் அப்பம்மா வீட்ட போக சித்தப்பா கிணத்துத் தட்டில இருந்துகொண்டு மண்ணெண்ணெய் (பெரல்????) தகரத்ததை சுட்டியலால தட்டி நிமித்திக்கொண்டிருந்தவர்.என்னைக் கண்டிட்டு சொன்னார் வந்திட்டா கணவாய்க்கறி மணந்ததோ உங்கட வீடுவரைக்கும் என்றார்..எனக்குக் கோவம் வந்திட்டு பின்ன உங்களுக்கு மணக்காமலோ அப்பம்மாட்ட வந்தனீங்கள் என்று சொல்லிட்டு சுட்டியல் கிணத்துக்கு விழப்போது பாருங்கோ என்றன் அது உண்மையாவே விழுந்திட்டுது.நான் ஓடித்தப்பிட்டன்.

நீங்களும் உங்கள் லூசுக்குணங்களைச் சொல்லுங்கள்.

டிஜே
தர்சன்
தமிழ்நதி
மோகன்டோஸ்
சோமியண்ணா
( நான் கூப்பிட நினச்ச மிச்ச ஆக்களை மலைநாடான் கூப்பிட்டிட்டார்)

25 comments:

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி :),
அப்ப கன பேர் இருக்கிறியள் சாத்திரம் சொல்ல, செல்லி, நீங்கள் ...

நாக்கில கறுப்பு அடையாளம் இருக்கோ??

//லேற்கோச்சி //சில நேரம் டியுப் லைட் எண்டும் சொல்லலாம் போல :))

கானா பிரபா said...

// 90 மார்க்ஸ் 60 என்று சொன்னா சாத்தான் அப்பிடியே ஆகட்டும் என்று சொல்லிடும் என்று.//

திரும்பவும் பொய்யா ;-)

சோம்பேறிக்குணம் கூடாது பிள்ளை, உதை மாத்தவேணும், இல்லாட்டா வாறவனிட்டை உதை வாங்கவேணும்

றினிஸ் வளர்ந்து திருத்த முதல் இப்பவே ஒவ்வொண்டா மாத்தவும் ;-)

மலைநாடான் said...

நிறையச் சொல்லியிருக்கிறியள். நீங்கள் ஒரு நிறைவான வியர்ட்தான்:))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஊரில பச்சைப்புளியா ஒரு நாரத்தங்காய் இருக்குத் தெரியுமா? அத எங்கட வீட்ட ஒருதரும் கவனிக்கிறதேயில்லை.//

நாரதங்காய்ன்னா என்னங்க்க?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தவிர சிங்கப்பூர் அமெரிக்கா நியுசிலான்ட் நாட்டு நாணயங்களும் சிலது வைத்திருக்கிறேன்.
//

ம்லேசியா நாணயம் வேண்டுமா?

நானும் ஒரு காலத்தில் அந்த மாதிரியான நாணயங்களை சேர்த்து வைத்தேன். மலேசியாவின்ன் பழைய காலத்து நணயம் முதல் லேட்டஸ்ட் நாணயம் வரை சேர்த்து வைத்திருக்கிறேன். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எவ்வளவு சோகப்படம் பார்த்தாலும் என் கண்ணில தண்ணி வராது.//

நான் காமெடி படம் பார்த்தாலும் என் கண்ணில் கண்ணீர் வரும்..
நான் சிரித்தாலே என் கண்ணில் கண்ணீர் வரும்.. after all, நானும் ஒரு வியர்ட்தானே!

ramachandranusha said...

எவ்வளவு சோகப்படம் பார்த்தாலும் என் கண்ணில தண்ணி வராது.வீட்டுக்காரர் முழுப்பேரும் மூக்கை உறிஞ்சிக்கொண்டிருப்பினம் நான் மட்டும் அவையைப் பார்த்துக்கொண்டிருப்பன்.அவைக்கு சிரிப்பு வராத ஜோக்குக்கெல்லாம் எனக்கு பயங்கரமாச் சிரிப்பு வரும்//

சிநேகிதி! செண்டிமெண்டலா மூக்கை உறிஞ்சும்போது வரும் சிரிப்பை அடக்க நான் படும்பாடு :-) சில சமயம் என் சிரிப்பைப் பார்த்து என் கணவர், கோபமாய் எழுந்து போயிடுவார்.
ஒருமுறை, துக்கம் விசாரிக்கப் போன இடத்தில் அதை மறந்து கதை பேசிவிட்டு வந்தேன்.
அது சரி, 60, 90 மார்க் இடம் மாறி போச்சுதானே :-)))))

சோமி said...

தங்கச்சி,
பிள்ளைக்கு ஏதாவது கோபமெண்டால் அண்ணாவ இப்படியே மாட்டி விடுறது.

எனக்கு சிலதுகள் அகாவேண்டியிருக்கு உங்களுக்கு லிஸ்ட் அனுபுறன் உங்கட கரி நாக்கால சொல்லுங்கோ., அப்பிடியாகிலும் நடக்குதோ எண்டு பாப்பம்.

எங்கட ஊர் வீட்டில நிண்ட நாரத்தங்காய் மரத்துக்கும் எனக்குமான உறவை நினைவு படுத்திற்றியள்.அந்த மரம் 2000 தில நடந்த சண்டையில அந்த மரத்துக்கு மேல குண்டு விழுந்து முகால்வாசி கருகிப் போச்சு...

இன்னும் நிறைய எதிர்பார்த்தன் ....முடிந்தல் சொல்லுங்க.

சயந்தன் said...

//ஓருநாள் ஹெலியைப் பார்த்து இப்ப சுடப்போறான் என்று சொல்லி வாய்மூடேல்ல அவன் பட பட என்று சுடத்தொடங்கிட்டான்.//

தங்கச்சி.. உப்பிடித்தான் ரெயினில நான் போய்க் கொண்டிருந்த போது அடுத்த ஸ்ரேசனில நிப்பாட்டுவான் எண்டு சொன்னன்.. என்ன ஆச்சரியம்.. சொன்னமாதிரி அடுத்த ஸ்ரேசனில நிறுத்திட்டாங்கள். மற்ற ஆக்களுக்கு ஒரே ஆச்சரியம்.
நான் சொல்ல வாறது விளங்குதோ..

சினேகிதி said...

Sayanthan anna...matravaiku vilangutho ilayao enaku nalla villanguthu:-)))) vera ondum ilai ungaluku enila sariyana erichal:-)))

சின்னக்குட்டி said...

ஏம்மா சிநேகதி ...டெலிபதியை பற்றி சொல்லுறார்.. தேவையில்லாமால் அபாண்டமாய் அவரில் பழி சுமத்திறியளே..

சோமி said...

சயந்தன், தங்கச்சி சினேகிதிய நீங்கள் கிண்டல் பண்ணுறமாதிரி இருக்கு எண்டு இராசதந்திர வட்டாரங்கள் தெரிவிக்குது.

நான் தங்கச்சிக்கு சில கோரிக்கைகள் அனுப்பிவைக்கவுள்ளன் தனிமடலில. இலங்கை இனப்பிரச்சனை பற்றி சினேகிதி என்ன நினைக்கிறா என்பது போன்ற அரசியல் ரீதியான கருத்துகளையும் எதிர்வு கூறல்களையும் இனி அவா வெளியிட வேண்டுமென்று எனது தாழ்மையான கருத்தை சொல்லுறன்.

(சிலர் எரிச்சலில கிண்டல் பண்ணுவதுபோல் இதையும் கிண்டல் எண்டு எடுத்துக் கொள்ள வேண்டாம்)

நன்றி
அன்புடன்
அண்ணன்

சினேகிதி said...

ethina pear kilambi irukreengal ipdi ha??

anaimaar vendam snegethy oda koluvathengo soliden :-)))))

sinakutty sayanthan anna ena solrar endu nalla vilangichu!!!

Anonymous said...

hahaha ethuvum avasarapattu thittatheengo...

-ram

மோகன்தாஸ் said...

போட்டுட்டேன்ல http://imohandoss.blogspot.com/2007/03/weird.html.

கேட்டுப்பாருங்க.

சினேகிதி said...

\\சினேகிதி :),
அப்ப கன பேர் இருக்கிறியள் சாத்திரம் சொல்ல, செல்லி, நீங்கள் ...

நாக்கில கறுப்பு அடையாளம் இருக்கோ??\\

உது சாத்திரமோ?? நாக்கல ஒரு சின்ன கறுப்புக் கூட இல்லை..


//லேற்கோச்சி //சில நேரம் டியுப் லைட் எண்டும் சொல்லலாம் போல :)) \\

டியுப் லைற் இல்லை...பொறுமை இல்லை அதான்..கடைசி நேரத்தில ஒரு உந்துதல் வரும் ஏனேன்று தெரியா.

சினேகிதி said...

\\சோம்பேறிக்குணம் கூடாது பிள்ளை, உதை மாத்தவேணும், இல்லாட்டா வாறவனிட்டை உதை வாங்கவேணும்

றினிஸ் வளர்ந்து திருத்த முதல் இப்பவே ஒவ்வொண்டா மாத்தவும் ) \\

உதென்ன ஒராள் டியுப் லைற்றாம் நீங்கள் சோம்பல்...நானேதும் மாறிச்சொல்லிட்டனோ?? சோம்பல் இல்லையே....ஆனால் கடைசிவரைக்கும் வேலைகளைத் தள்ளி வைக்கிற பழக்கம் இருக்கு ஆனால் எப்பவும் ஏதும் செய்துகொண்டுதானிருப்பன்.

வாறவன் உதைவிட நான் சும்மா இருப்பனோ :-))

சினேகிதி said...

\\நிறையச் சொல்லியிருக்கிறியள். நீங்கள் ஒரு நிறைவான வியர்ட்தான்:)) \\

வாங்க மலைநாடான்...உங்கட வியேட் குணங்கள் எனக்குமிருக்கு..குறிப்பா மலை பார்க்கிறது..அங்க போய் பாக்ல முட்டையடிக்கிறது.

சினேகிதி said...

மை பிரண்ட்....நாரத்தங்காய் என்றால் உங்க ஊரு சாத்துக்குடியா இருக்கும் என்று நினைக்கிறன் எதுக்கும் சோமியண்ணாட்ட கேட்டுச் சொல்றன்.

நாணயங்கள் சேர்க்கிறது நிறையப்பேருக்கு விருப்பம்
போல.

கொழுவி said...

//எதுக்கும் சோமியண்ணாட்ட கேட்டுச் சொல்றன்.//

ஏன்.. ஈழ மற்றும் தமிழக பழம் பொருள் ஆய்வாளரோ அவர்..?

சினேகிதி said...

vaanga usha mam...kana kaalathuku piraku intha pakam vanthrukreenga :-))

60 m 90 ipa konajm idam maarithan poikondu iruku but ipa amma appa ethina marks endellam kedathane:-))

paavam unga veedukarar nimathiya TV iavatahu parka vidungovan:-))

சினேகிதி said...

Somi anna,
ivalu sonatheke intha paadu pada vendi iruku ithila innum solratho..grrr.

apa ungalukum naarathangai virupama?? My Friend narathangai endal ena endu kekira...India la athuku ena pear??

ama neenga innum wierd pathivu podamal innum sothiku thengai tiruvikondu irukrengelo:-))))

சினேகிதி said...

Neengalum ungada rasa tahanthirangalum :-)) enakum arasiyalukum vegu thooram.Selli ammava kellunga ava nalla sathiram solluvavam.

Nanri Mohandoss innum parkella ungada pathivai!

Kolluvi...avar thol porul aarachi seyella My Friend kedathala somi anna thamiznadila narathangaiku ena pear endu solluvar endu ninachu sonan...chuma vayasu pona nerathila ungaloda periya tholai:-)))

தூயா said...

ஹி ஹி ஹி நீங்க பயங்கர வியட் தான்..

சினேகிதி said...

vaanga thooya!
ellarume wierd thane ..avlo payankaramana wierd a nanu?