"I now pronounce you man and wife"
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்போது பாதிரியார் கூறும் கூற்று -"I now pronounce you man and wife".திருமணத்துக்கும் முன்பும் பின்பும் ஆண் ஆண்தான்.பெண் என்பவள் திருமணத்துக்கு முன்னர் பெண்ணாகவும் திருமணத்துக்குப் பிறகு மனைவியாகவும் அறிவிக்கப்படுகிறாள். கல்யாணம் பண்ணிக்கொண்ட எல்லாரும் சொல்லுங்க.இதுக்கு என்ன அர்த்தம்?? இதுக்கு என்ன அர்த்தம்?? (எல்லாருக்கும் இந்தப் பாட்டு தெரியும் தானே?)
இப்ப ஒரே பால் திருமணம் செய்து வைக்கும் போது “"I now pronounce you man and man" என்று சொல்வார்களோ?
தமிழ்க்கல்யாணத்தில் “மாங்கல்யாம் தந்துனானே” ....(மிச்சம் தெரியாதுங்கோ :-)) என்று சொல்வதன் அர்த்தம் இந்தப்பெண்ணை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி அதன் பிறகு உனக்கு தாரை வார்க்கிறேன் என்று அர்த்தமாமே... உண்மையாவா??ஆமா இதே இன்னும் தெரியாது இந்த லட்சணத்தில இவா “"I now pronounce you man and wife என்று பதிவு போட வந்திட்டா என்று சொல்லாதங்கோ.தெரியாததை தெரியாதெண்டு தானே சொல்லணும்.
இந்தத் தமிழ்க்கல்யாணம் என்று ஒரு சொல்லிருக்கா?? நானாவது கொஞ்சம் பறவாயில்லை 13 வயசு வரைக்கும் ஊரிலயும் பிறகு மூன்று வருசம் மலைநாட்டிலயும் இருந்த புண்ணியத்தில தமிழை கொஞ்சமாவது தெரிஞ்சு வைச்சிருக்கிறன்.என்ர தங்கச்சி விரதக் கோப்பையை தமிழ்க்கோப்பை என்று சொல்லுவாள்.முதலாவது லாச்சியை மூத்த லாச்சி என்று சொல்லுவாள் உப்பிடி நிறைய சொற்கள் (இதுக்குமொரு தனிப் பதிவு போட்டுட்டாப் போச்சு :- காசியங்கிள் என்ன காசா கேக்கப்போறார்)
மொழியாழுமையில கூட பெண்களை தள்ளியே வைச்சிட்டுதுகள் படிச்ச அறிவுஜீவிகள்.ஆங்கிலத்தில எனக்குத் தெரிந்த சொற்களை இங்க எழுதுகிறேன் நீங்க தமிழில் இந்த வரிசையில் வரும் சொற்களை அறியத்தாருங்கள்.
Bachelor of Arts
Bachelor of master
Master of ceremony
Policeman
Mailman
Tradesman
Milkman
Mankind
Manhole
To be continued:-
தமிழில் பால்க்காரி பெண் காவலதிகாரி இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு.
கனடா நண்பிகளே!!!
உங்கள் எல்லாருக்கும் எங்களை அதாவது மகள்மாரை கனடா தன் தேசிய கீதத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிற விசயம் தெரியுமா?
“O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command.” இவ்வாறு எழுதிய மதிப்புக்குரிய “Mr. Justice Robert Stanley Weir ” மகளவையே இல்லையேர்? யாமறியோம் பராபரமே.
சரி சரி ரொம்ப கோபப்படவேண்டாம் தோழிகளே தொடர்ந்து வாசியுங்க. (இதைப் படிச்சுட்டு வாசிச்ச குறையில ஓடவும் வேண்டாம் தோழர்களே)
1981ம் ஆண்டு Canadian charter of rights and freedom யாப்பில்(?) "man” என்றிருந்த எல்லாச் சொற்களுமே “personn” என்ற சொல்லாக மாற்றப்பட்டது.
1986 ல் ஒட்டாவா “National museum of man" “ National museum of civilization” ஆக மாற்றப்பட்டது.
1988 ல் Toronto Alderman என்ற பதம் Toronto Counselor ஆக மாற்றப்பட்டது.
அதே வரிசையில் Workman’s compensation ம் worker’s compensation ஆக மாற்றப்பட்டது.
அப்புறம் என்ன?அப்புறம் சொல்லுங்க. ..
நாளைக்கு வந்து சொல்லுறன்.
24 comments:
//தமிழ்க்கல்யாணத்தில் “மாங்கல்யாம் தந்துனானே”//
இந்து முறைப்படி நடக்கும் சில சாதிப்பிரிவினரின் கல்யாணம் என்றால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியெல்லாம் சொல்லாமல் நடக்கும் வேறு சாதிப்பிரிவினர்களின் திருமணங்களும், கிறிஸ்துவ, முஸ்லீம் திருமணங்களும் தமிழ்நாட்டில் இருக்கிறது. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துவதைப் பற்றிய பதிவென்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி நீங்கள் சொல்லியபடி ஆணாதிக்க மொழியில் இப்படியான வழக்குகள் இருப்பது இயல்பானதுதான். மாறவேண்டியதுதான்.
\\இந்து முறைப்படி நடக்கும் சில சாதிப்பிரிவினரின் கல்யாணம் என்றால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்\\
Nanri thangamani.
inthu murai thirumanathilum ovoru sathikum ovoru thirumana mauraya?
அது இருக்கட்டும்.
முதல்லே இந்த 'விரதக்கோப்பை'ன்னு சொன்னால் என்ன?
ethu irukatum periyamma?
enga veetila virathakoopai endal kanthasasti,Gowry viratham ippidi viratham ellam varume..antha nerangilil saapida samaika endu seperate a plate ellam irukume athan.
unmayathane keetinga? i don't see any smileys in ur comment.
எனக்குப் பிடிச்சது 'தமிழ்க் கோப்பை'யும் 'மூத்த லாச்சி'யும் தான்.
அதுசரி, பல்கலைக் கழகத்திலயிருந்து தானே பதியிறியள்?
கடமையில தவறக்கூடாது;-)
vasanthan netru inga sunday.
//Bachelor of Arts
Bachelor of master
Master of ceremony
Policeman
Mailman
Tradesman
Milkman
Mankind
Manhole//
அப்படியே இதற்கு டொச் தெரிந்தால் அதையும் எழுதுங்கள். :-(
தர்சன் அவர்கள் கேட்டதற்கு பதில்கள்:
Bachelor of Arts = Bakkalaureus der philosophischen Fakultaet
Master of Arts = Magister Artium
Policeman = Polizist
Mailman = Brieftraeger
Tradesman = Haendler
Milkman = Milchmann
Mankind = Menschheit
Manhole = Mannloch
அன்புடன்,
டோண்டு ராகவன்
Master fo ceremony = Zeremonienmeister
அன்புடன்,
டோண்டு ராகவன்
tharshan nalla varuveer..aala parungo ean neer itai appidiye Dotch ila elluti viduman.
nanri Dondu aiya.
நன்றி டோண்டு அவர்களே. எல்லாம் தெரிந்த சொல்லுகள்தான். ஆனால் அதை ஆங்கிலத்தில் பார்த்ததில் புரியவில்லை.:-)) (சிலதைத்தவிர)
//tharshan nalla varuveer..aala parungo ean neer itai appidiye Dotch ila elluti viduman.//
முயற்சி செய்கிறேன். :-))
U.P elluthi appidiye Dotch manthila post pannum.
snehidi
Here is link that gives you the 12 steps in hindu marriage
read it when you have time
http://www.ramanuja.org/sv/rituals/sacraments/marriage_mantras.html
சினேகிதி அவர்களே,
நீங்கள் சொல்வதை ஏற்கனவே பலரும் கூறி இப்போதெல்லாம் பொலிடிகல்லி கரெக்ட் என்ற முறையில் பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் கூறிய உதாரணங்களுக்கே வருகிறேன்.
Bachelor of Arts: No change
Master of arts: No change
Master of ceremony: compering person
Policeman: policeperson
Mailman: Mailperson
Tradesman: Tradeperson
Milkman: Milkmaid is already there
Mankind: Humankind
Manhole: One would be better off with the present word and not try to do anything. Hope you understand.
ஆனால் ஒன்று. முதலில் மேற்கூறிய வார்த்தைகள் வந்தபோது ஆண்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எல்லாம் புழக்கத்தில் இருந்ததால் அப்படியே ரிடைன் செய்யப்பட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mandarin?
:)
"I now pronounce you man and wife"
அதுவேற ஒன்னும் இல்லைங்க! கல்யாணத்துக்கு பிறகு 'பெண்' என்பவள் மனைவி என்ற தகுதியை அடைகிறாள். ஆனால் நாங்க அப்போதான் 'ஆண்' என்ற தகுதியையே அடைகிறோம் என்று அர்த்தம்!
ஹிஹி..
இணைப்புக்கு நன்றி கணேஷ
டேண்டு ஐயா மாற்றம் கொண்டுவந்தாலும் mediologists இலிருந்து சாதாரண மக்கள் வரையிலும் நாங்கள் இப்படியான வார்த்தைகளை சரியான முறையில் பயன் படுத்துகிறமா?
நீங்க சொல்ற மாதிரி முற்காலத்தில் ஆண்கள் மட்டுமே அச்சொற்களோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக்கு சரியாகத் தெரியாததால் இப்போதைக்கு நீங்க சொல்றதை நம்புகிறேன்.
ஆதிரை என்னது உங்களுக்கு mandarin language தெரியுமா? nEhamA?
மாப்பு வாங்க !
வச்சீங்களே ஆப்பு.
//-"I now pronounce you man and wife".//
Senegethy, I never attend any Christian weddings here. But I heard in movies (and sometimes in books) that they they call 'husband' instead of man. I'm confusing with which is the right one.
Well, To find out the truth, I'm going to throw a Christian way of wedding in future.
DJ don't be confused.I would suggest that you do a reserach on this issue before u plan for a christian wedding :-)
Post a Comment