Custom Search

Friday, November 11, 2005

உஷா எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான்

இந்தப் பதிவை வாசிக்க முதல் என் இதற்கு முதலான பதிவில் உஷாவின் பின்னோட்டத்தை வாசிச்சிட்டு வாங்க.
http://www.blogger.com/comment.g?blogID=13204662&postID=113174835510547584

உஷா
சோசலிச சமுதாயம் உருவாகணும் என்பது நல்ல கருத்துதான் இதற்கு மாறாக நான் என்ன சொல்லியிருக்கிறேன்?

நான் அசின் போட்ட உடையைப் பற்றித் தெளிவாகச் சொல்லவில்லை போலிருக்கிறது.பெண்கள் புடவை கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் -நானே ஏதாவது விழாக்களுக்கு சேலை கட்டணும் எண்டா அக்காவைக் கொண்டு கட்டுவிக்கிறனான்-:

உஷா படத்தில அசின் சோட்ஸ்ம் ஸ்லீவ்லெஸ்ம் போட்டுக் கொண்டு வர விஜய் சொல்லுவாரு “தாவணியும் இல்லை பாவாடையும் இல்லை யட்டியோடயும் பிறாவோடயும் வந்து நிக்கிறாய்” .அந்தக் காட்சிக்குப்பிறகு அசின்ர அப்பா வீட்ட போய் அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு செல்லமா வளர்ந்திட்டா ...etc.பதிவிலயே சொல்லியிருக்கிறன் ஆடை அணிதல் அவரவர் விருப்பம் எண்டு.

படத்த பார்த்த பிறகும் நீங்க அசின் போடுற உடுப்பில பெண் சுதந்திரம் இருக்கெண்டு சொல்ல மாட்டீங்க என்று நினைக்கிறன்.பெண் சுதந்திரமா இருக்க சுதந்திரத்தைப் பயன்படுத்த வேறு உபயோகமான நேரங்கள் வழிகள் இருக்கென்று நான் நம்புகிறேன்.உதாரணமாக இரவு எட்டரை மணிக்குத்தான் ஒரு வகுப்பு முடியுமென்றால் பெண் சுதந்திரமாக அந்த வகுப்புக்கும் சென்று வர சுதந்திரம் தேவைதான்.

அம்மாக்களை பற்றி நான் சொன்னது உங்கள் பார்வையில் தப்பாக(?) தெரிகிறதா?என்னைப் பொறுத்தவரையில் எந்த அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு தன் மகள் சுயமாக சிந்தித்து செயற்படுவதையே விரும்புவாள்.

புதிய படம் ஒன்று வெளிவந்தால் அதைப்பற்றிய விமர்சனங்கள் எழுதுவது இயல்புதானே உஷா?? என் பதிவுகளைப் பார்த்தால் தெரியும் நான் இதுவரை சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளே போட்டதில்லை.நான் படம் பார்ப்பதும் குறைவு.நேற்று சிவகாசி பார்த்தேன்.2 தேர்வெழுதிப்போட்டு ரிலாக்ஸா இருக்க கொஞ்சம் சிரிக்க வைச்ச படம்.

நான் சொன்னவை என் சிற்றறிவுக்கு எட்டியவை.அவ்வளவே.ஒரு படம் எடுக்க எவ்வளவு பேர் எவ்வளவு உழைக்க வேணும் எண்டு எனக்கும் கொஞ்சம் தெரியும் உஷா.எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் “Beneath the skin” என்றொரு படம் எடுக்கத் தொடங்கி கையைச் சுட்டுக்கிட்டார்.

படத்ததைப் பார்த்திட்டு வாங்க திரும்பவும்.

உங்க பின்னோட்டத்தை பார்த்ததில எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான்.

13 comments:

ramachandranusha(உஷா) said...

அட தெய்வமே! என்னங்க இது? கீழ ஸ்மைலி போட்டத பார்க்கலையா? மேலே போடாததற்கு இவ்வளவு தப்பா போச்சே?
அவசரமா அடிச்சதுல விட்டுப் போச்சுங்க.
இப்ப அங்க ஸமைலி போட்டுட்டு படிச்சி பாருங்க. ரொம்ப ஸாரிங்க. தயவு செய்து புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
உடனே பதிலை எதிர்பார்க்கிறேன்.
உஷா

சினேகிதி said...

hehe :- ippidi 28 palaum kadeye pulachu poran.

sari sari tension akathinga.unga :- parakam vididan than.
ippa enna pathiva thookanuma illa ippidiye vidava? :-

ramachandranusha(உஷா) said...

அய்., எதுக்கு தூக்கணும்? என்னோட பேரையே வைத்து ஒரு பதிவுனா எப்பேர்ப்பட்ட விஷயம். -இங்க நோ ஸ்மைலி ;-)

சினேகிதி said...

okay cool,i was waiting 4 ur reply.gtg to sleep.bye :) take it easy eh.

தருமி said...

எல்லாம் இந்த "அங்கதம்" செய்யும் வேலை.
சினேகிதியின் அங்கதம் புரியாமல் சில பின்னூட்டங்கள்.
உஷாவின் எழுத்து புரியாமல் இன்னொரு பதிவு.
இது நமது பதிவுகளின் ஊடே அடிக்கடி நடை பெறுகிறது. ஸ்மைலிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த தவறுகL நடப்பது வேடிக்கைதான்!!!!!!!

சிங். செயகுமார். said...

என்ன நடக்குது இங்கே?

சினேகிதி said...

Dharumi angatham endal enna? ithu enakoru puthu sol.

சினேகிதி said...

Sing. perisa ondum nadakala summa jujupi matter.romba yosikathinga.

Ganesh Gopalasubramanian said...

ஆகா நல்லா ஆரம்பிச்சீங்க இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே... ஏதோ ஸ்வாரஸ்யமா நடக்குதுன்னு பார்த்தா...:-)

(கீழ ஸ்மைலி போட்டிருக்கேன்... )

Ganesh Gopalasubramanian said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

சினேகிதி,
அங்கதம் = இங்கிலிபீசுல satire - சரீங்களா..?

நம்ம பதிவாளர்கள் எல்லாருமே கொஞ்சம் உணர்ச்சி வசப்படுற ஆளுங்கதான் போல. உதாரணமா, என் 100வது பதிவில ஒரு முக்கியமான விஷயம் எழுதிட்டு, என் போட்டோவும் போட்டேன். வந்த பின்னூட்டங்கள் (இரண்டைத் தவிர)எல்லாமே போட்டோபற்றி வந்ததேயொழிய சொன்ன விஷயம பற்றி இல்லாமல் ஆயிடுச்சு.
அதுமாதிரி நீங்கள் ஒன்று சொல்லப் போக, வந்த பின்னூட்டங்கள் சிவகாசியை நீங்க ரொம்ப தூக்கிட்டதாக நினச்சி... என்னமோ போங்க...

சினேகிதி said...

Ganesh enna enna partha unga ellaruku nakala pocha??ungala maathiri ellam nan innum kai therntha elluthalara varala so thodangina viruvirupoda mudika ellam inimal than palaka venum.

சினேகிதி said...

ohh villanguthu dharumi sir.ellarum oru murayavathu enada nama elluthinathu enavo matavangaluku vilanginathi enavo endu ninachiruppam.