பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டு
எதையாவது எழுதுவம் எழுதுவம் என்டிட்டு தொடங்கி தொடங்கிப்போட்டு அப்பிடியே நிறைய drafts இருக்கு ஆனால் இது இன்டைக்கு எழுதி முடிக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன். வந்தியண்ணாக்கு ரொம்ப நன்றி.
2005 வைகாசி மாதத்திலிருந்து எழுதுறனாம் என்டு சொல்லுது என்ர தத்தக்க பித்தக்க றங்குப்பெட்டி சொல்லுது. என்ர ராசா அப்ப எழுதத் தொடங்கி 4 வருசம் முடிஞ்சா?? அடக்கடவுளே.
நான் ஏற்கனவே நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன். எண்டொரு பதிவு எழுதினான். அது எழுத வந்து 6 மாசத்தில எழுதின பதிவு.
அந்தப்பதிவு இப்பிடித் தொடங்கி
\\ வைகாசி ,இருபத்தேழாம் திகதி ,2005 தொடங்கிய என் தொடர்வண்டிப் பயணம் 50 தரிப்புகள் கடந்தும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
நிலவு நண்பனின் உதவியோடு பிரயாணத்தை தொடங்கினேன்.டி.சேயின் உதவியோடு தமிழ்மண நட்சத்திரங்களையும் சூடிக்கொண்டேன்.பிறகென்ன கிடுகிடு வேகம்தான்.இடையிடையில பயணக்கழைப்பால் தூங்கியும் இருக்கிறேன்.நித்திரை முழிச்சு வர்ற நேரத்தில நீ யார் என்று கேக்காமல் இருந்த பக்கத்துச்சீட்டு பிரயாணிகள் எல்லாருக்கும் நன்றி.
பிரயாணத்தின் போது கொஞ்ச நேரம் அலட்டியிருக்கிறன்.கொஞ்ச நேரம் படம் காட்டியிருக்கிறன்.மிச்ச நேரம் என் சிற்றறிவுக்குத் தெரிந்த சில உருப்படியான கருத்துக்களைப் பரிமாறியிருக்கிறன்.\\
இப்பிடி முடிஞ்சிருக்கு.
\\ வலைப்பதிய தொடங்கி ஆறு மாதத்தில ஐம்பத்தேழு பதிவ போட்டாச்சு மூன்று பதிவு தூக்கியாச்சு..693 பின்னோட்டம் வாங்கியாச்சு.8344 பேர் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கினம்.\\
ஐயோ ஐயோ என்ன கொடுமையிது...எப்பிடித்தான் என்ர இம்சையெல்லாம் தாங்கினிங்கிளோ:) நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க!!!
நான் பறவால்ல தம்பி கிருத்திகன் (கீத்) எழுத வந்து 6 மாசத்திலயே 140 பதிவுக்கு மேல எழுதியிருக்கிறாராம் :))
என்ர விண்ணானக் கதை :
கதையாச் சொல்றளவுக்கு எனக்குப் பெருசா ஒண்டும் ஞாபகம் இல்லை. எப்பிடி அறிமுகமாச்செண்டு தெரியேல்ல ஆனால் நிலவுநண்பனின் வலைப்பதிவில் கவிதைகள் படிக்கிற பழக்கமிருந்தது. அவருடைய வலைப்பதிவுக்கு எப்பிடிப்போனான் என்டெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால் நிலவுநண்பன் தான் வலைப்பதிவு எப்பிடி ஆரம்பிக்கலாம் என்டெல்லாம் சொல்லித்தந்தவர். அவருக்கு நன்றி. எழுத வர பெரிசா ஒரு காரணமும் இல்லை. இதுவரை எழுதினவை சொல்ற மாதிரி தனிமையெல்லாம் இல்லை. ஆனால் தமிழ் கதைக்க ஒருதரும் இல்லாததாலயா இருக்கலாம்.அதுக்குப்பிறகு நடந்த எல்லாம் தான் உங்களுக்குத் தெரியும்தானே.
இங்க கனடாவில 'தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி' என்ற கல்லூரியில் தமிழ் படிச்சனான். அங்க ஒரு ஒப்படை தந்தவை. 10 தலைப்பு தந்து அதில் ஒன்றைத் தெரிவு செய்து ஒரு நூல் மாதிரிச் செய்யவேணும். நான் தெரிவு செய்த தலைப்பு " தமிழீழ விடுதலைப்போராட்டம் - தோற்றமும் வளர்ச்சியும்". அந்த ஒப்படைக்காக நான் இணையங்களில் தேடல் புரிந்த காலம் 2001. இப்ப யோசிக்கிறன் நான் எப்பிடித் தேடியிருப்பன் எண்டு. ஆனால் எனக்கு அப்பவே யுனிகோட்ல ரைப் பண்ணத் தெரிஞ்சிருக்குமோ??? சந்தேகமா இருக்கு.
ஓகே இங்க இருந்து தட்டச்சு அனுபவம் தொடங்குது சரியா :)
அந்தக்கல்லூரியில நான் தொண்டராவும் வேலை செஞ்சனான் அப்ப அங்க தமிழ் கீபோட் இருந்தது. அதிலதான் நான் தமிழ் ரைப்பிங் பழகினான். யாரும் எனக்குச் சொல்லித் தரேல்ல ஆனால் ஒருநாள் பொழுது போகாமல் ஒரு தட்டில இருந்த தமிழ் கீபோட் எடுத்துக் கொழுவி கையிலயும் பாமினி எழுத்துரு மாதிரி ஒரு பிறின்ர் அவுட் எடுத்து வைச்சுக்கொண்டு என்னென்னவோ முயற்சியெல்லாம் செய்து நான் ரைப்பிங் பழகினான். நான் சொன்ன அந்த தமிழ்ப் பாடம் ஒரு வருசக் course. வருசக்கடைசிலதான் அந்த ஒப்படை குடுக்கோணும். மிச்சாக்கள் எல்லாம் வேற ஆக்களிட்ட குடுத்து ரைப் பண்ணினவை. அக்கா கையால எழுதிக்குடுத்தவா ( அவான் கையெழுத்து கையால எழுதினாலே ரைப் பண்ணினது போலதானிருக்கும்)
நான் ஏதோ வெறி பிடிச்சது போல நிறைய ரைப்பினான். அம்மா அப்பா மாமா சித்தப்பாவைக்கெல்லாம் அந்த நேரம் எவ்வளவு விசராயிருந்திருக்கும் என்று யோசிக்கிறன். கொஞ்சநாளா அவையை நான் படுத்தின பாடு. பழைய வரலாறு ஒண்டும் தெரியாது தானே அதால குட்டி மணி யாரு? குமரப்பா யாரு என்டு அவையளைப்போட்டு படுத்தியெடுத்திட்டன்.
கடைசில என்ர ஒப்படை 150 பக்கத்துக்கு கிட்ட வந்திட்டுது. எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது. தங்கப்பதக்கம் எல்லாம் தந்தவை ஆனால் அதுக்குப்பிறகுதான் சோகம். ஒரு கண்காட்சி வைச்சவை அப்பத்தான் என்ர ஒப்படையைக் கண்ணால பார்த்தனான். அதுக்குப்பிறகு நோர்வேக்கு அனுப்பிட்டம் அங்க அனுப்பிட்டம் இங்க அனுப்பிட்டம் ...எடுத்துத்தாறம் எண்டிச்சினம். கடைசி வரைக்கும் அதைத் தரவேயில்லை. அது என்ர எத்தின நாள் உழைப்பு. இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.
அப்ப நான் அந்த ஒப்படையை பாமினி எழுத்துருவிலதான் ரைப் பண்ணினான்.அந்த ஒப்படையைத் திருத்தின ஒரு ஆசிரியர்களில் ஒருவரை அண்மையில சந்திச்சனான். கேக்கணுமென்டு நினைச்சனான் என்ர ஒப்படைக்கு என்ன நடந்தது விபரம் ஏதும் உங்களுக்குத் தெரியுமா என்டு ஆனால் அவேன்ர பின்னவீனத்துவம் பெருங்கதையாடல் எல்லாம் கேட்டதில எனக்கு மூளை விறைச்சுப்போய் எல்லா தொழிற்பாடுகளும் நிண்டிட்டு. ஒன்டுமே கேக்கேல்ல நான்.
வாசிக்கிறாக்கள் நல்லா நற நறக்கிறீங்கிளா?? பதிவெழுத வந்த கதையைச் சொல்லச்சொன்னா இதென்ன கதையென்டு :))
நான் வலைப்பதிவெழுத முதலே யாழ் இணையத்தில் இணைந்திருந்தேன் ஆனால் அங்கும் ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் பாமினியில் எழுதினால் யுனிகோட்டுக்கு மாற்றலாம் என்று தெரிந்திருந்தது. அதனால் யாழ் மற்றும் சுரதா அண்ணாவின் உருமாற்றிப் பாவித்துத்தான் என்னுடைய முதல் பதிவை எழுதினான். பிறகு யாரோ ஈ கலப்பை பற்றிச் சொல்லித் தந்ததால் இப்ப அதான் பாவிக்கிறன். ஆனால் இந்தக் கலப்பையிலயும் மாடு என்னவோ பாமினிதான். நான் குழப்பியடிக்கிறனோ தெரியா ஆனால் இந்த தொழில்நுட்ப விசயங்கள் பெரிசா தெரியாது. இப்பவும் பாமினியில் ரைப் பண்ணும்போது அ=m , k=ம் , kh=மா என்று எழுதினனோ அதையேதான் செய்றன் ஆனால் என்ன மேல ஒரு பெட்டி கீழ ஒரு பெட்டியெண்டில்லை. ஆங்கில எழுத்திலும் ( comma) போன்றவை எல்லாம் இலகுவாக எழுத முடியுது. அது ஒரு பெரிய நன்மை.
பின்னோட்டங்கள் மற்றும் அனுபவங்கள்.
நான் எழுத வந்த புதிசில சரியான ஓட்டைவாய். நிறைய அலட்டுவன். அதால நல்லதும் நடந்திருக்கு கெட்டதும் நடந்திருக்கு. நிறைய நண்பர்கள் அண்ணர்கள் அக்காக்கள் ஏன் தாத்தா கூட கிடைத்தார். நிறையப்பேர் பின்னோட்டம் போட்டு தனிப்பட்ட முறையிலும் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் எழுதத் தொடங்கினான். அப்ப இருந்த வேகம் இப்ப இல்லை. நேரமும் இல்லை. மற்றது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலும் சில மிரட்டல்கள் எல்லாம் அனுப்பினார்கள். எனக்கு மட்டுமில்லாமல் எனக்கு நண்பர்களாக இருந்தவர்களையும் சிலர் காயப்படுத்தினார்கள். என்னிடம் ஐபி பார்க்கும் வசதி இருந்ததில்லை. யார் இதெல்லாம் செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை நான்.
என்னுடைய அலட்டல் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் சிலர். உளவியல் தொடர்பான பதிவுகளை வாசிப்பவர்கள் சிலர். ஒரு சிலர் இரண்டு விதமான பதிவுகளையும் வாசிப்பார்கள். இப்பிடி 2ஐயும் வாசித்து என்னை அடிக்கடி பப்பாவில் ஏத்துறவா சந்தனமுல்லை :)) இன்னும் எனக்கு உறுதுணையா இருந்தவர்கள் இருப்பவர்கள் நிறையப்பேர்.
அண்மையில் என்னைக் கொஞ்சம் பாதித்த யோசிக்க வைத்தது ஒரு பின்னோட்டம். அண்மையில் நான் "உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்" என்றொரு பதிவெழுதினான். அதில் நான்
\\அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.\\
என்று எழுதியிருந்தேன். இதற்கு ஒரு கேவலமான பின்னோட்டம் வந்திருந்தது. இதற்கு நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அந்தப்பின்னோட்டத்தை வாசித்ததும் கவலையா இருந்தது. பிறகு அதை நான் மறந்திட்டன். ஆனால் இந்தப் பதிவு எழுத தொடங்கினதும் அந்தப்பின்னோட்டம் ஞாபகம் வந்திட்டுது.
இன்னும் சில அனுபவங்கள்
ஆக்களின்ட உண்மையான பெயர் போட்டு பதிவெழுதிய அறிவுக்கொழுந்து நான். வெள்ளவத்தை ராமகிருஸ்ணமிஸனில் ஒன்றாகத் தங்கியிருந்த அக்கா ஒருவர் நான் என் ரீச்சர் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு மூலம் என்னை அடையாளம் கண்டு கொண்டிருந்தார்.
" ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!" என்டொரு பதிவு எழுதினேன். வலைப்பதிவுகள் மூலமாக அறிமுகமான ஒரு அண்ணா மூலம் அவளுடன் எப்படியும் தொடர்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தேன் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அவள் உயிரோடு இருந்தால் போதும்.
* வலையுலகில் அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்திந்திருக்கிறேன். அது பற்றி பின்னர் ஆறுதலாக எழுதுகிறேன்.
கதை சொல்ல நானழைப்பவர்கள் :
1. சந்தனமுல்லை
2. சகாராத்தென்றல்
3. ஆயில்யன்
4. கோபிநாத்
5. வி.ஜே. சந்திரன்
6. அகிலன்
7. சோமிதரன்
8. கலை
9. தமிழ்நதி
10. டிஜே
11. நிவேதா - ரேகுப்தி
உங்களுக்கான விதிமுறைகள்: ஆனால் நீங்க எப்பிடி வேணுமென்டாலும் எழுதுங்கோ :)
விதிமுறை:
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.
மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.
49 comments:
kalakkals ;)
மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள், அந்த ஒப்படையில் எழுதியவை ஞாபகம் இல்லையா?
//ஆக்களின்ட உண்மையான பெயர் போட்டு பதிவெழுதிய அறிவுக்கொழுந்து நான். //
உண்மைதான் உங்களது பதிவுகளை வைத்தே நானும் உங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்.
// வலைப்பதிய தொடங்கி ஆறு மாதத்தில ஐம்பத்தேழு பதிவ போட்டாச்சு மூன்று பதிவு தூக்கியாச்சு..693 பின்னோட்டம் வாங்கியாச்சு.8344 பேர் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கினம்.\\
விஜயகாந்த் ரசிகரோ!!!
என் அழைப்பை ஏற்று எழுதியதற்க்கு நன்றிகள், ஆனால் இப்படி 11 பேரை அழைத்து பெரிய புரட்சியே செய்துவிட்டீர்கள் ஹிஹிஹி.
//கடைசில என்ர ஒப்படை 150 பக்கத்துக்கு கிட்ட வந்திட்டுது. எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது. தங்கப்பதக்கம் எல்லாம் தந்தவை ஆனால் அதுக்குப்பிறகுதான் சோகம். ஒரு கண்காட்சி வைச்சவை அப்பத்தான் என்ர ஒப்படையைக் கண்ணால பார்த்தனான். அதுக்குப்பிறகு நோர்வேக்கு அனுப்பிட்டம் அங்க அனுப்பிட்டம் இங்க அனுப்பிட்டம் ...எடுத்துத்தாறம் எண்டிச்சினம். கடைசி வரைக்கும் அதைத் தரவேயில்லை. அது என்ர எத்தின நாள் உழைப்பு. இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.//
ஆஹா சூப்பர்!
கண்டிப்பாய் வடலியில் புத்தகம் இடும் கட்டுரைகள் தத்தக்க பித்தக்கவிலிருந்து வெளிவரும் :)
//ஒரு ஆசிரியர்களில் ஒருவரை அண்மையில சந்திச்சனான். கேக்கணுமென்டு நினைச்சனான் என்ர ஒப்படைக்கு என்ன நடந்தது விபரம் ஏதும் உங்களுக்குத் தெரியுமா என்டு ஆனால் அவேன்ர பின்னவீனத்துவம் பெருங்கதையாடல் எல்லாம் கேட்டதில எனக்கு மூளை விறைச்சுப்போய் எல்லா தொழிற்பாடுகளும் நிண்டிட்டு. ஒன்டுமே கேக்கேல்ல நான்./
அடடா இது தெரியாமற் போச்சே...இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானே உங்கள் ஆசிரியரிடம் அந்த இடத்தில் வைத்து கேட்டிருப்பேனே :-).
நல்லாயிருக்கு,
பதினொருபேரை அழைச்சிருக்கிறீங்கள்...
தொடர்பதிவு உடன முடியப்போகுது.. :)
நல்லாருக்கு சிநேகிதி...உங்க இடுகைகள்ல்லாம் எப்போ வாசிக்க ஆரம்பிச்சேன்னு தெரியலை..அநேகமா ஒரு ரேடியோக்கு நீங்க வச்ச ஆப்புதான்னு நினைக்கிறேன்! மறாகக் முடியுமா...:-))
அதுக்கு அப்புறம் உங்க எல்லா பழைய இடுகைகளையும் ஒரேயடியா வாசிச்சு முடிச்சேன்! உங்க மனோத்தத்துவ இடுகைகள் எனக்குப் பிடிக்கும்..அதே போல ஈழ நினைவுகளும் - உங்க எழுத்துப் பாணி எனக்கு ரொம்ப பிடிக்கும்!! தொடர்ந்து எழுதுங்க...
சீக்கிரம் வடலியிலிருந்து உங்கள் படைப்புகள் வெளிவர காத்திருக்கிறோம்...:-)
அந்த ஒப்படையோட சாஃப்ட்காப்பி இல்லையா?!!! அவ்வ்வ்!
கொழுவியையும் கூப்பிடவும்
ஹா ஹா... பதினொரு பேரை மாட்டி விட்டிட்டியள்..
அழகான பதிவு!
உங்கள் பதிவுகள் சீக்கிரமாக வடலி வெளியீடுகளில் வர வாழ்த்துக்கள்:)
முதலில் அழைப்புக்கு நன்றி ;))
ஆமா ரூம் போட்டு யோசிப்பிங்களா!! ;)) நன்றாக சொல்லியிருக்கிங்க கதையை!
உங்க அளவுக்கு சொல்ல முடியுமான்னு தெரியல ஆனால் கண்டிப்பாக சொல்கிறேன்.
படைப்பு வெளிவர வாழ்த்துக்கள் ;)
ஆமா அது என்ன 11 கணக்கு!? ஏதாவது ராசியா!! ? ;)
கடை விதிமுறை மிக உபயோகமானது ;)
நானும் என் பங்குக்கு எழுதப் பாக்கிறன். சனங்களை இப்பிடியும் வெருட்டலாமெண்டு ஐடியா தந்ததுக்கு நன்றி:)
என்ன எழுதுறது எண்டு தெரியேல்லை. ஞாயிற்று கிழமைக்கு பின்னர் தான் எழுத முடியும் என நினைக்கிறேன்.
//அந்த ஒப்படையைத் திருத்தின ஒரு ஆசிரியர்களில் ஒருவரை அண்மையில சந்திச்சனான். கேக்கணுமென்டு நினைச்சனான் என்ர ஒப்படைக்கு என்ன நடந்தது விபரம் ஏதும் உங்களுக்குத் தெரியுமா என்டு ஆனால் அவேன்ர பின்னவீனத்துவம் பெருங்கதையாடல் எல்லாம் கேட்டதில எனக்கு மூளை விறைச்சுப்போய் எல்லா தொழிற்பாடுகளும் நிண்டிட்டு. ஒன்டுமே கேக்கேல்ல நான்.//
ஆருது?
டீ.ஜே. தமிழனோ?
நல்லாக் கலககியிருககீஙக!
அவேன்ர பின்னவீனத்துவம் பெருங்கதையாடல் எல்லாம் கேட்டதில எனக்கு மூளை விறைச்சுப்போய் எல்லா தொழிற்பாடுகளும் நிண்டிட்டு. //
பின்னவீனத்துவத்தை நக்கலடிக்கிறது மரபுவாதத்தினதும் மரபைப்பேணுகிற குறும்பண்பாட்டுவாதத்தினதும் மேலும் பல வாதங்களினதும் கைங்கரியம்.
//இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.//
;-)))
//நிவேதா said...
//இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.//
;-)))//
ஹி ஹி ஹி ஹி..
நன்றி பிரபாண்ணா :)
\\என் அழைப்பை ஏற்று எழுதியதற்க்கு நன்றிகள், ஆனால் இப்படி 11 பேரை அழைத்து பெரிய புரட்சியே செய்துவிட்டீர்கள் ஹிஹிஹி.
\\
எங்க அவை யாருமே எழுதினமாதிரிக் காணோம். grrrr ..நற நற எண்டிட்டு இருக்கினம் எல்லாரும்.
\\கண்டிப்பாய் வடலியில் புத்தகம் இடும் கட்டுரைகள் தத்தக்க பித்தக்கவிலிருந்து வெளிவரும் :)\\
\\சீக்கிரம் வடலியிலிருந்து உங்கள் படைப்புகள் வெளிவர காத்திருக்கிறோம்...:-) \\
\\உங்கள் பதிவுகள் சீக்கிரமாக வடலி வெளியீடுகளில் வர வாழ்த்துக்கள்:)\\
\\//நிவேதா said...
//இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.//
;-)))//
ஹி ஹி ஹி ஹி..\\
எல்லாருக்கும் நக்கலாப்போச்சென்ன?? நான் என்ர ஆதங்கத்தை எழுதினா எல்லாரும் என்ன வடலிக்கு இலவச விளம்பரமா குடுக்கிறீங்கள்?
\\அடடா இது தெரியாமற் போச்சே...இது முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானே உங்கள் ஆசிரியரிடம் அந்த இடத்தில் வைத்து கேட்டிருப்பேனே :-).
\\
நான் வரேல்ல இந்த விளையாட்டுக்கு :))
என்னென்னெல்லாம் இல்லாமல் போட்டுது..ஒப்படையா முக்கியம் என்டு யாரும் கேட்டிட்டால்??
\\நல்லாயிருக்கு,
பதினொருபேரை அழைச்சிருக்கிறீங்கள்...
தொடர்பதிவு உடன முடியப்போகுது.. :)\\
இப்போதைக்கு முடியாது:)) அப்பிடியே முடிஞ்சாலும் வந்தியண்ணா வசம் நிறைய தொடர் விளையாட்டுக்கள் இருக்காம்.
\\நல்லாருக்கு சிநேகிதி...உங்க இடுகைகள்ல்லாம் எப்போ வாசிக்க ஆரம்பிச்சேன்னு தெரியலை..அநேகமா ஒரு ரேடியோக்கு நீங்க வச்ச ஆப்புதான்னு நினைக்கிறேன்! மறாகக் முடியுமா...:-))
அதுக்கு அப்புறம் உங்க எல்லா பழைய இடுகைகளையும் ஒரேயடியா வாசிச்சு முடிச்சேன்! உங்க மனோத்தத்துவ இடுகைகள் எனக்குப் பிடிக்கும்..அதே போல ஈழ நினைவுகளும் - உங்க எழுத்துப் பாணி எனக்கு ரொம்ப பிடிக்கும்!! தொடர்ந்து எழுதுங்க...\\
நன்றி நன்றி!!!
\\அந்த ஒப்படையோட சாஃப்ட்காப்பி இல்லையா?!!! அவ்வ்வ்!\\
என்னைய அழவைச்சிடாதீங்க :(( 2001 ல ஏதோ ஒரு floppy சேமிச்சனான் ஆனால் பள்ளிக்கூடத்தில turing எண்டொரு programming படிக்கேக்க எப்பிடியோ அந்த floppy ல இருந் எல்லாம் அழிபட்டிட்டு:(((. அப்ப blog , vadaly இதெல்லாம் யாரு யோசிச்சது.
\\Son of கொழுவி said...
கொழுவியையும் கூப்பிடவும்\\
sorry!
\\ஹா ஹா... பதினொரு பேரை மாட்டி விட்டிட்டியள்..\\
ம் ம் :) ஆனால் எல்லாரும் எழுதினால்சரி.
\\அழகான பதிவு \\
உண்மையாவா :) நன்றி மாயா.
\\ஆமா ரூம் போட்டு யோசிப்பிங்களா!! ;)) நன்றாக சொல்லியிருக்கிங்க கதையை!
உங்க அளவுக்கு சொல்ல முடியுமான்னு தெரியல ஆனால் கண்டிப்பாக சொல்கிறேன்.
கோபிநாத் said...
படைப்பு வெளிவர வாழ்த்துக்கள் ;)
ஆமா அது என்ன 11 கணக்கு!? ஏதாவது ராசியா!! ? ;)
கடை விதிமுறை மிக உபயோகமானது ;)
\\
ம் 2 நாளா யோசிச்சு யோசிச்சு எழுதினது :)) 11 ஆஆஆஆ ஓ எனக்கு ரொம்ர நல்ல ராசியது !
\\ தமிழ்நதி said...
நானும் என் பங்குக்கு எழுதப் பாக்கிறன். சனங்களை இப்பிடியும் வெருட்டலாமெண்டு ஐடியா தந்ததுக்கு நன்றி:)
\\
எங்க?? எப்ப வெருட்டுற பிளான்?
\\என்ன எழுதுறது எண்டு தெரியேல்லை. ஞாயிற்று கிழமைக்கு பின்னர் தான் எழுத முடியும் என நினைக்கிறேன்.
\\
அதான் விளக்கவுரை எல்லாம் தந்திருக்கல்லோ :)
\\நல்லாக் கலககியிருககீஙக!\\
நன்றி அருணா !
\\பின்னவீனத்துவத்தை நக்கலடிக்கிறது மரபுவாதத்தினதும் மரபைப்பேணுகிற குறும்பண்பாட்டுவாதத்தினதும் மேலும் பல வாதங்களினதும் கைங்கரியம்.
\\
மன்னிக்கோணும் எனக்கு தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர வேறெந்த மொழியையும் வாசிக்கத்தெரியாது.
/நிவேதா said...
//இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.//
;-)))//
ஹி ஹி ஹி ஹி..//
ஹி ஹி ஹி ஹி..ஹி ஹி ஹி ஹி..
இந்த கடகட எண்டு தொடர்ச்சியா வாற உங்கடை எழுத்து நடையில ஒரு கவர்தல் இருக்கத்தான் செய்யுது.
நல்ல கதை சினேகிதி...
பல நாட்களுக்கு பிறகு நிவேதாவின் பின்னூட்டம் ஒன்று.
எழுதுங்கோ, கனகாலம் எழுதி...
:)
நீங்க பதிவெழுத வந்த கதையை நல்லாத்தான் சொல்லியிருக்கிறீங்க.
என்னையும் அழைத்ததுக்கு நன்றி. (ஆடிக்கொருக்கால், ஆவணிக்கொருக்கால் - அதாவது ஒரு வருச ஆடிக்கும், அடுத்த வருட ஆவணிக்கும்) பதிவெழுதுற என்னையும் அழைக்க உங்களுக்கு ஒரு தனித் தைரியம் இருந்திருக்கு, என்ன?
இந்தப் பதிவையும், வலைப்பதிவில draft ஆயும், மனதில draft ஆயும் இருக்கிற எல்லாத்தையும் சேர்த்தால் கணக்கில்லாம கிடக்கு :). ஆனா எப்படியும் நீங்க அழைச்சதால இந்தப் பதிவை கெதியில எழுத வேணுமெண்டு யோசிச்சிருக்கிறன். பாப்பம் என்ன நடக்குதெண்டு :).
நீங்க அழைச்ச பிறகுதான், நான் பதிவெழுத வந்த கதையை திரும்பிப் பார்த்தன். எவ்வளவு மாற்றங்கள் எண்டு நினைச்சன். சரி இங்க எழுதிக் கொண்டிராமல், அங்க போய் தொடரை எழுதுங்கோ எண்டு சினேகிதி சத்தம் போடுற மாதிரி ஒரு பிரமை. எதுக்கும் போட்டு வாறன். :)
நீங்க பதிவெழுத வந்த கதையை நல்லாத்தான் சொல்லியிருக்கிறீங்க.
என்னையும் அழைத்ததுக்கு நன்றி. (ஆடிக்கொருக்கால், ஆவணிக்கொருக்கால் - அதாவது ஒரு வருச ஆடிக்கும், அடுத்த வருட ஆவணிக்கும்) பதிவெழுதுற என்னையும் அழைக்க உங்களுக்கு ஒரு தனித் தைரியம் இருந்திருக்கு, என்ன?
இந்தப் பதிவையும், வலைப்பதிவில draft ஆயும், மனதில draft ஆயும் இருக்கிற எல்லாத்தையும் சேர்த்தால் கணக்கில்லாம கிடக்கு :). ஆனா எப்படியும் நீங்க அழைச்சதால இந்தப் பதிவை கெதியில எழுத வேணுமெண்டு யோசிச்சிருக்கிறன். பாப்பம் என்ன நடக்குதெண்டு :).
நீங்க அழைச்ச பிறகுதான், நான் பதிவெழுத வந்த கதையை திரும்பிப் பார்த்தன். எவ்வளவு மாற்றங்கள் எண்டு நினைச்சன். சரி இங்க எழுதிக் கொண்டிராமல், அங்க போய் தொடரை எழுதுங்கோ எண்டு சினேகிதி சத்தம் போடுற மாதிரி ஒரு பிரமை. எதுக்கும் போட்டு வாறன். :)
//ஆருது?
டீ.ஜே. தமிழனோ?//
வசந்தன் அய்யா, எனக்கு இன்னும் 16 வயசுதான்.
\\
//இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.//
;-)))//
ஹி ஹி ஹி ஹி..//
ஹி ஹி ஹி ஹி..ஹி ஹி ஹி ஹி..
\\
முடியல.........
\\இந்த கடகட எண்டு தொடர்ச்சியா வாற உங்கடை எழுத்து நடையில ஒரு கவர்தல் இருக்கத்தான் செய்யுது.
நல்ல கதை சினேகிதி...
\\
எங்க எழுதவே வராதாம். இப்பெல்லாம் ஒரு பதிவெழுதுற எண்டா நிறைய மினக்கெட வேண்டியிருக்கு.
\\ தமிழன்-கறுப்பி... said...
பல நாட்களுக்கு பிறகு நிவேதாவின் பின்னூட்டம் ஒன்று.
எழுதுங்கோ, கனகாலம் எழுதி...
:)
\\
அதான் நானும் கூப்பிட்டனான் இனி அவா வந்து எழுதினாப்போலயெல்லோ.
\\சரி இங்க எழுதிக் கொண்டிராமல், அங்க போய் தொடரை எழுதுங்கோ எண்டு சினேகிதி சத்தம் போடுற மாதிரி ஒரு பிரமை. எதுக்கும் போட்டு வாறன். :)\\
கலையக்கா உண்மையா நான் அப்பிடி நினைக்கேல்ல நம்புங்கோ பிளீஸ். ஆமா இன்னுமா எழுதேல்ல நீங்கள்? அதான் வீட்டில ஆக்கள் இல்ல நிறைய நேரம் இருக்கல்லோ கெரியா எழுதுங்கோ.
\\//ஆருது?
டீ.ஜே. தமிழனோ?//
வசந்தன் அய்யா, எனக்கு இன்னும் 16 வயசுதான்.
\\
உம்மட எழுத்தைப்பார்த்து 36 ழச 46 எண்டு நினைச்சிட்டினம் போல. :)
////வசந்தன் அய்யா, எனக்கு இன்னும் 16 வயசுதான்.
\\
உம்மட எழுத்தைப்பார்த்து 36 ழச 46 எண்டு நினைச்சிட்டினம் போல. :)/////
நானும்கூட அப்படித்தான் நெனச்சனான்:)) (எப்போதும் ஈழத் தமிழ்ப் பேச்சுவழக்கு ஈர்த்துக்கொண்டேயிருப்பதால் முயன்று பார்த்தேன்)
சினேகிதி, உங்க கதை நன்றாக இருந்தது. நிவேதாவை எழுதவைத்தமைக்கு (பின்னூட்டமாவது) நன்றி. ரேகுப்தியில் அவரில்லாத வெறுமை போகும் ஒவ்வொருமுறையும்:((
//எங்க அவை யாருமே எழுதினமாதிரிக் காணோம். grrrr ..நற நற எண்டிட்டு இருக்கினம் எல்லாரும்.//
என்னைச் சொல்லேல்லை தானே;-)
//வசந்தன் அய்யா, எனக்கு இன்னும் 16 வயசுதான்.//
இருந்தாலும் சிலபேருக்கு நினைப்புத்தான்..:-(
என்னைப் பற்றியும் கனக்க பின்னூட்டம்.. ஆவ்வ்.. தமிழன் - கறுப்பிக்கும், செல்வநாயகிக்கும் நன்றி.. சிநேகிதின்ர திட்டுக்களிலயிருந்து தப்பிக்கவாவது எழுதத்தான் வேணும்போலக் கிடக்கு..
\\நானும்கூட அப்படித்தான் நெனச்சனான்:)) (எப்போதும் ஈழத் தமிழ்ப் பேச்சுவழக்கு ஈர்த்துக்கொண்டேயிருப்பதால் முயன்று பார்த்தேன்)
சினேகிதி, உங்க கதை நன்றாக இருந்தது. நிவேதாவை எழுதவைத்தமைக்கு (பின்னூட்டமாவது) நன்றி. ரேகுப்தியில் அவரில்லாத வெறுமை போகும் ஒவ்வொருமுறையும்:((\\
நல்லாத்தான் வருது ஈழத்தமிழ் உங்களுக்கு.
நிவேதாக்கு இப்படி தீவிர ரசிகர்கள் இருப்பது தெரிந்திருந்தால் கயிறு போட்டு கட்டியாவது இழுத்து வந்திருப்பேன்.:) எப்பிடியோ உங்கட மனசு புரிஞ்சு நிவேதாவே வந்திட்டா இனி ரேகுப்பதிட வெறுமை விலகும் என்டு நினைக்கிறன்.
\\இருந்தாலும் சிலபேருக்கு நினைப்புத்தான்..:-(\\
:-)
\\என்னைப் பற்றியும் கனக்க பின்னூட்டம்.. ஆவ்வ்.. தமிழன் - கறுப்பிக்கும், செல்வநாயகிக்கும் நன்றி.. சிநேகிதின்ர திட்டுக்களிலயிருந்து தப்பிக்கவாவது எழுதத்தான் வேணும்போலக் கிடக்கு..\\
எப்பங்கம்மணி எழுதுவீங்கள்?
//இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.//
;-)))//
ஹி ஹி ஹி ஹி..//
ஹி ஹி ஹி ஹி..ஹி ஹி ஹி ஹி..
\\
முடியல.........//
என்ன முடியல..? :)
\\முடியல.........//
என்ன முடியல..? :)\\
ஏதோ முடியல்ல விடுங்கோவன் :)
பதிவு போட்டாச்சு சினேகிதி...
சுட்டி: http://saharathendral.blogspot.com/2009/09/blog-post_16.html
சினேகிதி!
பதிவு போட்டாச்சு :)
நன்றி சினேகிதி...ரொம்ப நாட்களுக்கு முன்னர் நீங்கள் கூப்பிடிருந்தீர்கள்.சயந்தன் சொன்னான். இப்போதுதான் படித்தேன் கலை அக்கா வழியாக. நம்ம பங்குக்கு எழுதிவைக்கிறன் வந்து பாருங்க...
இத மாதிரி 2 வருசத்துக்கு முந்தியும் யரோ சிலர் கூப்பிட்டதாக நினைவு.
சரி யாரு அந்த வாத்தியாரு?
அட, சோமியை நீங்களும் கூப்பிட்டிருக்கிறீங்களா? கவனிக்கவேயில்லை நான். அதுவும் என்ரை பேருக்கு நேர மேல இருக்கு :). சரி, ரெண்டு பேர் கூப்பிட்டதால கெதியா எழுதுவார் எண்டு நினைக்கிறன். :) பாப்பம்.
நன்றி சகாரா & கலையக்கா.
இப்படி எல்லாம் விளையாட்டு நடந்திருக்கா பதிவுலகில...
சினேகிதி கெட்ட கருத்து வந்தா அப்படியே அதை விட்டிடனும்..... அதைபோய் ஏன் படிச்சு பாத்து புலம்பனும்....
மற்றப்படி பதிவு சூப்பர்.....
Post a Comment