Custom Search

Thursday, August 20, 2009

Toronto வில் Tornado


படம் பெறப்பட்டது : www.cp24.ca ( City Pulse 24)

இரவு 7 மணி அப்பிடியிருக்கும் நான் அத்தை வீட்ட நின்டனான். திடிரென்டு பெரிய இரைச்சலுடன் இடியிடிக்க மழை கொட்டத் தொடங்கியது. மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடத்தொடங்கிச்சு. நானிருந்த அறையில இருந்து பார்க்க பக்கத்து வீட்டிலிருந்த மரத்திலிருந்து பியர்ஸ் காய்கள் எல்லாம் காத்துக்குப் பறக்குது. சுவாரிசயமாக் கதைச்சுக்கொண்டிருந்த அத்தை அம்மா அப்பம்மா எல்லாரும் கதையை நிப்பாட்டிட்டு வாசலுக்குப் போட்டினம் புதினம் பார்க்க.

இருளத்தொடங்கியிருந்தது 7 மணியளவில். புயலுடன் கூடிய மழை அடிச்சு ஓய்ஞ்சுது கொஞ்ச நேரத்தில. மழை நிண்டதும் இருளத்தொடங்கியிருந்த வானம் பட்டப்பகல் போல மீண்டும் வெளிச்சமாகியது. என்னதான் நடக்குது எண்டிட்டு செய்தியைப் போய்ப் பார்த்தால் எங்கள் மார்க்கம் ( வீட்டிலிருந்து ஒரு 20 கி.மீ தொலைவில் ) நகரில் சில வீட்டுக்கூரைகள் சேதம் ,அங்கால இன்னும் கொஞ்சம் தள்ளியுள்ள நகரங்களிலும் வீடுகள் சேதம் , ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் அறிவித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

புயலுடன் கூடிய மழை ஓய்ந்து விட்டாலும் சாதுவான மழை தூறியபடியே இருக்கிறது. இடி இடித்துக்கொண்டேயிருக்கிறது. வீட்டிலிருந்து அடுத்த தொலைபேசி அழைப்பு வரமுதல் அத்தை வீட்டிலிருந்து வெளிக்கிடோணும் ஆனால் கார் ஓடவும் பயமா இருக்கு. நான் கொண்டு போய் விட்டிட்டு வாறன் என்று சின்ன மச்சான் நக்கல் அடிக்கிறான் ..ரோசம் வந்து வெளிக்கிட்டம் நானும் அம்மாவும். வீட்ட வந்தால் அப்பாவைக் காணேல்ல.

அக்கா சொன்னா நிமல் அண்ணா வீட்டு கூரை எல்லாம் உடைஞ்சிட்டாம் வீடெல்லாம் தண்ணியாம்..அவையைக்கூட்டிக்கொண்டு வர அப்பா போட்டார் என்டு. என்னால நம்ப ஏலாம இருந்தது ஏனென்டால் ஒரு சின்ன விசயத்துக்கும் ரென்சன் ஆகிற / பயப்படுற ஆள் நிமலண்ணா அப்ப நான் நினைச்சன் அக்கா சும்மா வேணுமென்று சொல்றா என்டு. அம்மாவும் சொன்னா ஏனப்படி சொல்றாய் பாவம் நிமல் விளையாட்டுக்கும் அப்பிடிச்சொல்லாத எண்டு.

உண்மையா எந்தக் கெட்டதும் எங்களுக்கு நடக்காதெண்டதுதான் எல்லாற்ற எண்ணமும் ஆனால் அது சிலநேரம் நடந்திடும். அப்பிடித்தான் நிமலண்ணா வீட்ட வந்து நிண்ட அவற்ற நண்பர் ஒராள் கார்ல ஏதோ எடுக்க எண்டு போனவர் ..அவற்ற மனைவியின் அலறல் சத்தம் கேட்டு நிமலண்ணா வெளியில ஓடிப்போனால் வேகமா வந்துகொண்டிருந்த புயல் நிமலண்ணாவை மேல தூக்கி இழுக்குதாம். கீழ நிமலண்ணா , நிமலண்ணான்ர மனைவி ,நண்பரின் மனைவி இவ்வளவு பேரும் அவரை மேல போகவிடாமல் அழுத்திப்பிடிக்கிறார்களாம். ஏற்கனவே புயலில் அள்ளுப்பட்டுக்கொண்டு வந்து மரத்துண்டுகள் , கொப்புகள் மற்றைய பொருட்கள் எல்லாம் இவர்களுக்கு மேல் விழுந்து அழுத்துகிறது...அப்பிடியே மேலெழும்பிய புயல் நிமலண்ணாட வீட்டுக் கூரை ,கதவு யன்னல் எல்லாத்தையும் சேதமாக்கிக் கொண்டு பக்கத்து வீடுகளையும் பதம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் அமைதியாகிக் கடந்து போகிறது.

என்ன நடந்தது என்று திகைச்சு நிக்கிறதுக்கள்ளயே எல்லாம் நடந்து முடிந்திற்று. இதுவரையில் இந்தப் புயலால் ஒருவர் இறந்திருக்கிறார் காயப்பட்டோர் போன்ற ஏனைய தகவல்கள் இன்னும் வரவில்லை. ஒவ்வொரு ஊர் ஊராக அலையும் இந்தப் புயல் இப்ப எங்க என்ன ஆட்டம் போடுதெண்டு தெரியேல்ல.

இன்றைய இந்தச் சூறாவளியால் Vaughan , Maple போன்ற நகரங்களிலிருந்து இதுவரை 120 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டிருக்கின்றது. 2 நாட்களுக்கு முதல் எங்கள் பகுதியிலும் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைபட்டிருந்தது. நாளையும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது வேலைக்குப் போகாமல் விடலாம் போலத்தான் தெரிகிறது.


இப்ப எனக்கு ஞாபகம் வாறது "Dante's Peak" என்ற திரைப்படம் தான். வாழ்வதற்கு சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் வெடிக்கவிருக்கும் எரிமலை பற்றி எதிர்வுகூறும் நிபுணரின் கருத்துகளை புறக்கணித்துவிட்ட பின்னர் அந்த இடத்தில் உள்ள மக்கள் படும் துன்பங்களையும் பூகம்பம் , எரிமலை வெடிப்பு வெடிப்புக்கு பின்னர் நடைபெறும் லாவா மக்மாக்களின் களியாட்டம் என எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்த படம் அது. பார்த்துப் பல வருடங்களாகியும் பலகாட்டிசிகள் இப்பவும் ஞாபகம் வருது. அதும் முக்கியமா இந்தப்படத்தில போட்டிருக்கிற காட்சியில அந்தக் கொதி பிடிச்ச மேலதிகாரி சாகுற காட்சி. சாவது போல காட்சி இல்லை ஆனால் பாலம் முறிஞ்சிடும்.

அம்மாட்ட நானிந்த படத்தைப் பற்றிச் சொல்றன். அம்மா பல வருடங்களுக்கு முன்பு வடமராட்சியில் ஏற்பட்ட சூறாவளியில் தாத்தான்ர கடையின் கூரையைச் சேதமெதுவும் இல்லாமல் காற்று எப்பிடித் தூக்கிப் பக்கத்து தோட்டத்தில போட்டதெண்ட கதையைச் சொல்றா எனக்கு.

19 comments:

ஆயில்யன் said...

சூறாவளி காற்று அனுபவங்களை படங்களில் மட்டுமே பார்த்து தெரிந்திருந்த எனக்கு உங்களின் அனுபவம் சற்று நடுக்கத்தையே கொடுத்தது! (அப்படியே ஆளை புடிச்சு இழுத்துட்டுபோய் எங்கயாச்சும் தூக்கி போட்டா அத்தனை வலுவான காற்றின் வேகத்தில் மனிதர்கள் எத்தனை பேர் பலியாககூடும்?! :( )

டிஸ்கவரி சேனலிலோ அல்லது ஏதோ ஒரு படத்தில் மாடு ஒன்று சுழன்று செல்லும் காட்சி நினைவில் வந்தமர்ந்தது!

தமிழன்-கறுப்பி... said...

நிறையக்கேள்விகளோடை இயற்கை பயப்படுத்துற இந்த விசயங்கள்...

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்...நிமலண்ணா & கோ இப்போ ஓகேயா?!! கேக்கவே டெரரா இருக்கு! உங்களுக்கு அசாத்திய தைரியம்தான்!!
ஆனாலும் சிநேகிதி..ஒரு இடத்திலே ஒரு சூறாவளிதான் இருக்க முடியுமாம்..சிநேகிதி இருக்கப்போ நான் எதுக்குன்னு சூறாவளி போய்டுச்சாம்!ஹிஹி

Vetrimagal said...

Twister படம் நினைவுக்கு வருகிறது.
உங்கள் உறவுகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று நம்புகிறேன்.

soorya said...

அடுத்தவாரம் ரொறென்ரோ வருகிறேன். அதுவும் உங்கள் மார்க்கம் பக்கந்தான். ஒரு விடுமுறைக்கு கனடா வருவோம்..எண்டு பாத்தா, உங்கடை பதிவு பயப்பிடுத்துதே...!
அதுவும் எனக்கு ரொனாடோ என்றால்..சரியான பயம்.
இங்கே டென்மார்க்கில் ரொனாடோ வந்ததேயில்லையாம்.
நன்றி.

கோபிநாத் said...

\\ சந்தனமுல்லை said...
அவ்வ்வ்...நிமலண்ணா & கோ இப்போ ஓகேயா?!! கேக்கவே டெரரா இருக்கு! உங்களுக்கு அசாத்திய தைரியம்தான்!!
ஆனாலும் சிநேகிதி..ஒரு இடத்திலே ஒரு சூறாவளிதான் இருக்க முடியுமாம்..சிநேகிதி இருக்கப்போ நான் எதுக்குன்னு சூறாவளி போய்டுச்சாம்!ஹிஹி
\\

;)))) ரீப்பிட்டே ;))

கானா பிரபா said...

Tornado கிலியை பதிவு காட்டிக்கொடுத்துவிட்டது, என்னப்பா இது போன இடத்திலும் நிம்மதி இல்லையா

சகாராதென்றல் said...

நண்பருக்கு,
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்.
பார்க்கவும். சுட்டி: http://saharathendral.blogspot.com/2009/08/blog-post.html

Anonymous said...

வணக்கம் என்னுடைய சிநேகிதியே உங்கள் பதிவில் எனது முதலாவது பின்னூட்டம் இது .. உங்களுடைய எல்லா பதிவுகளையும் வாசித்தேன் எவ்வளவு நேரம் முடிந்தது வாசித்து முடிக்க என்று மட்டும் கேட்க கூடாது (lolz)...உம்மளை நம்பி காரிலை ஏறி வந்த அம்மா வை தான் பாராட்டனும் .. எனது பெயரை நான் இங்கு குறிப்பிடவில்லை யாரு என்று கண்டு பிடியும் ...(ஒரு காலத்தில் ஒன்றாக சுத்தியவர்கள்)

வந்தியத்தேவன் said...

தொடர் விளையாட்டு

அன்பின் சினேகிதி இந்த தொடர் விளையாட்டுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றேன்

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_29.html

அன்புடன்
வந்தி

சினேகிதி said...

\\டிஸ்கவரி சேனலிலோ அல்லது ஏதோ ஒரு படத்தில் மாடு ஒன்று சுழன்று செல்லும் காட்சி நினைவில் வந்தமர்ந்தது!
\\

நானும் பார்த்திருக்கிறேன் ஆயில்யான். வீட்டுக்கூரையைத் தூக்கி வைக்க முடியுமானால் மனிதர் எல்லாம் எம்மாத்திரம்.

சினேகிதி said...

\\நிறையக்கேள்விகளோடை இயற்கை பயப்படுத்துற இந்த விசயங்கள்...\\

இயற்கை எப்பவும் ஒரு புதிர்தான்.

சினேகிதி said...

\\அவ்வ்வ்...நிமலண்ணா & கோ இப்போ ஓகேயா?!! கேக்கவே டெரரா இருக்கு! உங்களுக்கு அசாத்திய தைரியம்தான்!! \\

ம் அவை ஓகே இப்ப. ஆனால் வீடு இன்னும் சரிசெய்யப்படவில்லை.


\\ஆனாலும் சிநேகிதி..ஒரு இடத்திலே ஒரு சூறாவளிதான் இருக்க முடியுமாம்..சிநேகிதி இருக்கப்போ நான் எதுக்குன்னு சூறாவளி போய்டுச்சாம்!ஹிஹி\\

அவ்வ்வ் எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் :)

சினேகிதி said...

\\Twister படம் நினைவுக்கு வருகிறது.
உங்கள் உறவுகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று நம்புகிறேன்.\\

அதான் எனக்கும் ஞாபகம் வந்தது.

சினேகிதி said...

\\அடுத்தவாரம் ரொறென்ரோ வருகிறேன். அதுவும் உங்கள் மார்க்கம் பக்கந்தான். ஒரு விடுமுறைக்கு கனடா வருவோம்..எண்டு பாத்தா, உங்கடை பதிவு பயப்பிடுத்துதே...!
அதுவும் எனக்கு ரொனாடோ என்றால்..சரியான பயம்.
இங்கே டென்மார்க்கில் ரொனாடோ வந்ததேயில்லையாம்.
நன்றி.\\

வந்து போட்டிங்கிளா? இல்லையெண்டால் தைரியமா வாங்கோ ரொனாடோ போயிட்டுது :)

சினேகிதி said...

\\Tornado கிலியை பதிவு காட்டிக்கொடுத்துவிட்டது, என்னப்பா இது போன இடத்திலும் நிம்மதி இல்லையா\\

உங்க ஊர்ப்பக்கம்தான் வந்ததாமே இங்க இருந்து.?

சினேகிதி said...

\\நண்பருக்கு,
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்.
பார்க்கவும். சுட்டி: http://saharathendral.blogspot.com/2009/08/blog-post.html\\

பார்த்தேன் சகாரா. நன்றி :)

சினேகிதி said...

\\வணக்கம் என்னுடைய சிநேகிதியே உங்கள் பதிவில் எனது முதலாவது பின்னூட்டம் இது .. உங்களுடைய எல்லா பதிவுகளையும் வாசித்தேன் எவ்வளவு நேரம் முடிந்தது வாசித்து முடிக்க என்று மட்டும் கேட்க கூடாது (lolz)...உம்மளை நம்பி காரிலை ஏறி வந்த அம்மா வை தான் பாராட்டனும் .. எனது பெயரை நான் இங்கு குறிப்பிடவில்லை யாரு என்று கண்டு பிடியும் ...(ஒரு காலத்தில் ஒன்றாக சுத்தியவர்கள்)\\

இப்படி அநாநியா வந்து கருத்துச்சொன்னா நான் பாவம். எப்பிடி கண்டுபிடிக்கிறது. யாரிது? பிரபா?

சினேகிதி said...

\\தொடர் விளையாட்டு

அன்பின் சினேகிதி இந்த தொடர் விளையாட்டுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றேன்

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_29.html

அன்புடன்
வந்தி

\\

வந்தியண்ணா நானும் விளையாட்டு தொடங்கிட்டன்:)