Custom Search

Monday, September 14, 2009

மறந்து போகுமா மண்ணின் வாசனை...

கொஞ்சக்காலமா இந்தப்பாடல் ஒருநாளைக்கு 4-5 தரம் கேட்டடிருக்கிறன். எங்கட வீட்ட 4 றேடியோ இருக்கு. ஒன்று அம்மான்ர றேடியோ அது எப்பவும் குசினில இருக்கிற பிறிட்ஜ்க்கு மேல இருந்து ஓயாமா கத்திக்கொண்டேயிருக்கும். மற்றது அப்பம்மான்ர றேடியோ அது அப்பம்மான்ர அறையில அவா நித்திரையெண்டாலும் றேடியோ அலறிக்கொண்டேயிருக்கும். அப்பான்ர றேடியோ செற் அது எல்லாத்தையும் விட மோசம் அதுக்கும் ஓய்வு கிடையாது. இதெல்லாத்தையும் விட எல்லாருக்கும் பொதுவாவும் ஒரு றேடியோ இருக்கு. இப்பிடி எப்பவும் ஏதோ ஒரு றேடியோ வேலை செய்துகொண்டிருக்கும். சில நேரம் ஒரே நேரத்தில 2 றேடியோவும் வேலை செய்யும்.

தை 2009 ல இருந்து வைகாசி 2009 வரைக்கும் கவனயீர்ப்பு கண்டன ஊர்வலத்துக்கு வரச்சொல்லி மக்களை அழைத்துக்கொண்டேயிருக்கும் வானொலிகள் எல்லாமே 'மறந்து போகுமா மண்ணின் வாசனை' என்று நடுகலும் கேட்டுக்கொண்டிருக்கும். நான் நினைக்கிறன் இந்தப் பாட்டைக் கேட்டுத்தான் அரைவாசிச் சனம் இந்த ஊர்வலங்களுக்கு வெளிக்கிடும் என்று.
நான் முதல் தரம் இந்தப் பாடலைக் கேட்டபோது " தூர தூர தூர தூர தூர தூர தேசத்தில் சுகல்யா ரகுநாதன் பாடிக்கொண்டிருந்தா. உண்மையைச் சொல்றன் எனக்கு அவா தூர தூர என்று பாடினது அப்பேக்க பிடிக்கேல்ல. பிறகொருநாள்தான் பாடலை முழுமையாக் கேட்டனான். அப்ப மனசைப்பிழியிறதெண்டு சொல்லுவினம் அப்பிடித்தான் எனக்கும் ஏதோ மாதிரியிருந்தது. பிறகு றேடியோவில எப்ப அந்தப் பாட்டுக்கேட்டாலும் நிண்டு கேப்பன். அந்தப்பாடல் வரிகளில் இழையோடும் சோகம் ஏக்கம் எல்லாருக்கும் பொதுதானே அதான் கேக்குற எல்லாருக்கும் பிடிச்சிடுதெண்டு நினைக்கிறன்.



மறந்து போகுமோ மண்ணின் வாசைன
தொலைந்து போவமோ தூரதேசத்தில்

வேப்பமரக்குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா
ஏக்கமுடன் நீபாடும் ஒத்தைக்குரல் ஒலிக்கிறதா?
மேப்பிள் மரநிழலோரம் மெல்ல விழி மூடுகையில்
கேட்குதடி உன்பாடல் தேம்புதடி என்னிதயம் - மறந்து

காலையிலே கண்விழித்தேன் காணவில்லை என்முகத்தை
சாலையிலே தொலைத்தேனோ வேலையிலே அழித்தேனோ?
தேடுகின்றேன் தேடுகின்றேன் தேடல் இன்னும் ஓயவில்லை
வாடுகின்றேன் ஊர் நினைவில் வாழ்க்கையென்று ஏதமில்லை - மறந்து

வந்தஇடம் ஒட்டவில்லை வாழ்நிலமோ கிட்டவில்லை
சொந்தங்களோ பக்கமில்லை சொல்லியழ நேரமில்லை
இந்தநிலை மாறிஎங்கள் சொந்தமண்ணை சேர்வதெப்போ
அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ -மறந்து


என்ர facebook ல 2-3 பேர் இசையரங்கத்தின் "மெல்லக் கசிந்தது'என்ற இசைத்தட்டு பற்றிய செய்தியுடன் அதற்கான இணைப்பும் கொடுத்திருந்தார்கள். ஆனால் அப்போது அதைப் போய்க் கேட்கும் நேரமோ மனநிலையோ இருக்கவில்லை. பின்னர் ஒருநாள் யாரோ அந்த இசைத்தட்டில் தமிழ்நதியும் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று சொன்னபிறகுதான் இணையத்தில் போய் தேடினால் இன்ப அதிர்ச்சி. எனக்கும் எல்லாருக்கும் பிடித்த அந்த 'மறந்து போகுமா மண்ணின் வாசனை' பாடலை எழுதியவர் சாட்சாத் தமிழ்நதியேதான்.

2) நிலவும் வானும் பிரிந்திருந்தால் அழகேதடி
நீயும் நானும் ஒன்று பெண்ணே விலகாதேடி

3) பிரம்மனோடு செவ்விகாண வேண்டும் - அவள்
பிறப்பின் ரகசியம் அறியவேண்டும்

4)வாழ்க்கையென்பதென்ன
கனவின் தொகுப்பா கடலில் உப்பா

5)கண்களுக் காயிரம் காரணம் சொல்லியே
சென்றது நாள் நூறடி

6)மெல்லக் கசிந்தது புல்லாங்குழலே
மேவி இசைத்தது கொல்லைக்குயிலே

7)பெண் என்பவள் கவிதை
ஆனாலென்ன அடிமை

8)இசையெனும் மழைதனில் நனைகிறதே -

9)கண்களால் எழுதிடும் கவிதையே காதலோ
கருத்தினால் இதயங்கள் கலப்பதே காதலோ

10)இசையே உனைப்போல் துணை ஏது

11)பனிப்பாலை வெளி வெறுத்து ஊரேகினோம்
இனித் துயர் இல்லையென்று வேரேகினோம்

12)மழை என்றழைக்காதே... அன்பே
காலம் தவறி பொழியும் என்னை

போன்ற பாடல்களையும் தமிழ்நதியே எழுதியிருக்கிறார். எல்லாப்பாடல்களும் இணையத்தில் இல்லை. நான் இன்னும் இசைத்தட்டும் வாங்கவில்லை.

நீங்களும் பாடல்களைக் கேட்க/ வாங்க. http://www.isaiyarangam.com/cd_release.html

போனமாதம் ஒருமாதிரி அம்மணியைச் சந்திக்க முடிந்தது.வேலையால் போனதால் சற்றுத் தாமதாயே போய்ச் சேர்ந்தேன். தேவுடா என்று என்னைத் திட்டிக்கொண்டே காத்திருந்தார்கள் போலும். படத்தில பார்த்ததை விட நேரில முகத்தில நிறையப் பால்வடியுது. இளவேனில்ல வெளுத்து வாங்கிறவாவா இவா என்று எனக்கு நம்பவே முடியல்ல. அவ்வளவு அப்பாவியா இருந்தா பார்க்க:) வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" மற்றும் "சூரியன் தனித்தலையும் பகல்" 2ம் தந்துவிட்டவா. நாங்கள் சந்தித்த அன்று என் அக்காவின் திருமண நாள். நான் அதை மறந்து தமிழ்நதியை பார்க்கவாறன் என்று சொல்லிட்டன். ஆனால் கனநேரம் கதைபேச முடியாமல் போயிற்று.

ஐயோ ஐயோ அவாட தொடர்மாடிக்கட்டிடத்தின் இட்டுமுட்டான பாரக்கிங்ல காரைவிட்டிட்டு நான் வெளில வரப்பட்டபாடு இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. அத விட காரை எங்கயோ விட்டிட்டு 2 பேரும் போய் பக்கத்து பில்டிங் பார்க்கிங்லொட்ல கார் தேடினாங்கள் கொஞ்சநேரம்...என்னத்த சொல்லி என்னத்த விட்டு.

16 comments:

வந்தியத்தேவன் said...

மண்ணின் வாசனை என்றைக்கும் மறக்கமுடியாது

நல்ல கவிதைகள். கனடாவிலை சின்னப் பிள்ளையளுக்கும் லைசன்ஸ் தருவினமோ கார் ஓட.

ஹேமா said...

நன்றி தோழி.அத்தனை பாடல்களையுமே ரசித்தேன்.அவற்றுள் இப்பாடல் முத்துத்தான்.
வானொலியில் ஒரே ஒரு முறை கேட்டிருக்கிறேன்.நன்றி மீண்டும்.

கோபிநாத் said...

\\'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" மற்றும் "சூரியன் தனித்தலையும் பகல்"\\

அப்போ 2 பதிவு வரும் ;))

thiyaa said...

மண்ணின் வாசனை
அருமை

சந்தனமுல்லை said...

ரேடியோ பத்தின பகிர்வு அருமை...நங்க ஸ்கூல் கிள்ம்பும்போது இந்த டைமுக்குத்தான் செட் ஆகியிருந்தோம்!! பாட்டு மிக அருமையாக இருந்தது..தமிழ்நதிக்கு வாழ்த்துகள்!!

//நல்ல கவிதைகள். கனடாவிலை சின்னப் பிள்ளையளுக்கும் லைசன்ஸ் தருவினமோ கார் ஓட.//

ஹிஹி....எல்லோருக்கும் உண்மை தெரிஞ்சுதான் இருக்கு போல!! :)))

ஆயில்யன் said...

பகிர்விற்கு நன்றி சிநேகிதி!

சில இடங்களில் வார்த்தை பிரயோகங்களில் சோகமும் ஏக்கமும் நிறைந்திருக்க வரிகளில் பார்ப்பதை உணர்ந்து சற்று நினைத்துப்பார்க்கையில் வலியாய் உணர்கிறேன்!

:(

ஆயில்யன் said...

//அந்தப் பாட்டுக்கேட்டாலும் நிண்டு கேப்பன். அந்தப்பாடல் வரிகளில் இழையோடும் சோகம் ஏக்கம் எல்லாருக்கும் பொதுதானே அதான் கேக்குற எல்லாருக்கும் பிடிச்சிடுதெண்டு நினைக்கிறன்./

உண்மை!

சினேகிதி said...

\\மண்ணின் வாசனை என்றைக்கும் மறக்கமுடியாது

நல்ல கவிதைகள். கனடாவிலை சின்னப் பிள்ளையளுக்கும் லைசன்ஸ் தருவினமோ கார் ஓட\\

ஓ 16 வயசிலயே தருவினம் லைசன்ஸ்:)

சினேகிதி said...

\\நன்றி தோழி.அத்தனை பாடல்களையுமே ரசித்தேன்.அவற்றுள் இப்பாடல் முத்துத்தான்.
வானொலியில் ஒரே ஒரு முறை கேட்டிருக்கிறேன்.நன்றி மீண்டும்.\\

ம் முத்தான முத்தல்லவோ:)

சினேகிதி said...

\\\\'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" மற்றும் "சூரியன் தனித்தலையும் பகல்"\\

அப்போ 2 பதிவு வரும் ;))\\

முதல்ல நீங்க பதிவெழுத வந்த கதையை எழுதுங்கோ :)

சினேகிதி said...

\\ரேடியோ பத்தின பகிர்வு அருமை...நங்க ஸ்கூல் கிள்ம்பும்போது இந்த டைமுக்குத்தான் செட் ஆகியிருந்தோம்!!\\

கீழ் வீட்டில (basement )பாடுற றேடியோக்களைப் பற்றியும் எழுதியிருப்பன் நீங்கெல்லாம் பாவமென்டு விட்டிட்டன்.

நன்றி தியா.

சினேகிதி said...

\\பகிர்விற்கு நன்றி சிநேகிதி!

சில இடங்களில் வார்த்தை பிரயோகங்களில் சோகமும் ஏக்கமும் நிறைந்திருக்க வரிகளில் பார்ப்பதை உணர்ந்து சற்று நினைத்துப்பார்க்கையில் வலியாய் உணர்கிறேன்!
\\

பாட்டு வரியா என் பதிவு வரியா ? :)

தமிழ்நதி said...

சிநேகிதி,

இப்ப கொஞ்சநாளாக ஆளாளுக்குப் புகழுகினம். உங்களுக்குத் தெரியுந்தானே... ஆட்டை வெட்டுறதுக்கு முதல் குளிக்கவாத்து, பொட்டு வைச்சு மாலையெல்லாம் போடுவினம். எனக்கென்னமோ அதுதான் ஞாபகம் வருகுது. எண்டாலும் இவ்வளவு மினக்கெட்டு இன்னொரு ஆளைப்பற்றி எழுதிறதெண்டால் நல்ல மனந்தான். வாசிக்க சந்தோசமா இருந்துச்சு.

"படத்தில பார்த்ததை விட நேரில முகத்தில நிறையப் பால்வடியுது. இளவேனில்ல வெளுத்து வாங்கிறவாவா இவா என்று எனக்கு நம்பவே முடியல்ல. அவ்வளவு அப்பாவியா இருந்தா பார்க்க:) "

என் முகத்தில் பால்வடிவதாக நிறையப் பேர் சொல்லியிருக்கிறார்கள்:) எழுதுறதை விட்டுப்போட்டு பேசாமல் பால்பண்ணை ஒண்டு வைக்கட்டோ எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன்.

வந்தியத்தேவன் said...

//"படத்தில பார்த்ததை விட நேரில முகத்தில நிறையப் பால்வடியுது. இளவேனில்ல வெளுத்து வாங்கிறவாவா இவா என்று எனக்கு நம்பவே முடியல்ல. அவ்வளவு அப்பாவியா இருந்தா பார்க்க:) "//

ஆனால் பதிவுகளும் பின்னூட்டங்களும் மட்டும் டெரர்.

Chandravathanaa said...

நல்ல பதிவு சினேகிதி.
அந்தப் பாடலுக்கும் நன்றி.

தமிழ்நதியின் புகைப்படத்தைப் பார்த்து நானும் நினைத்திருக்கிறேன்.
எழுத்தின் காரமும், வீரியமும் அவ முகத்தில் இல்லை. பதுமையாக, அழகாக இருக்கிறா.

soorya said...

கனடா வந்தேன். தமிழ்நதியைக் கண்டேன் பேசினேன். உங்களைக் காணவில்லையே...! இந்த மரமண்டைக்கு உங்கள் ஞாபகம் வந்து தொலைக்கவில்லையே...!
பார்க்கலாம் பிறிதொரு சந்தர்ப்பம் வரமாலா போகும்?.