Custom Search

Saturday, September 26, 2009

1999, உறுதி , லெனின் எம்.சிவம்

\\ ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.

பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.\\

http://snegethyj.blogspot.com/2009/08/blog-post.html

\\பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.அம்மா அப்பாவிடம் இருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமல் ஏங்கி ஏங்கியே ஒருநாள் மாண்டு போகிறார்கள்.ஆனால் வெளியில தெரியிற உண்மை??? அந்தப்பெடியன் காங்ஸராம்.அந்தப்பெட்டை பாரில வேலை; டான்ஸ் ஆடுறளாம்.பெடியங்களோட திரியிறாளாம்.கதைக்க நல்லாயிருக்கும்.நீங்கள் குடுக்க வேண்டிய அன்பை அவர்களுக்குக் குடுத்தா அவர்கள் ஏன் அதை வெளியில் தேடிப்போகிறார்கள்.\\ - http://snegethyj.blogspot.com/2007/02/blog-post_18.html


\\Its stories are of immigrants from a Sri Lanka torn by years of bloody conflict, youths who in Canada lack the support they got from extended families back home. They are caught between opposing cultures - one at home, the other at school.

"They tend to pick the bad things from both cultures," Sivam explained. "Gangs give them a purpose and a sense of belonging."\\

\\ஆண்கள் அழமாட்டார்களாம் ஆதிரை. ஏன் அவைக்கு கண்ணீர்ச்சுரப்பியில்லையா? ஆண்கள் அழுவதில்லை. அவர்கள் பிறப்பிலேயே மனசாலும் உடலாலும் பலமுள்ளவர்கள் என்றொரு முகமூடியைச் சிறுவனாக இருக்கும்போதே போட்டு விட்டாச்சு. ஆண்களுக்கு பிரச்சனைகளே வராது அப்பிடியே வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது தாங்களாகவே சமாளிக்கப்பழகவேணும் என்றெல்லாம் சொல்லிவச்சா\\ http://snegethyj.blogspot.com/2008/01/blog-post_15.html

" His short film Uruthy (Strength) in 2007 is about the stigma attached to mental illness in a culture where people believe "men should be macho and not cry."

இங்கே நான் தமிழில் கொடுத்திருப்பவை நான் தத்தக்க பித்தக்கவில் அப்பப்போ எழுதிய பதிவுகளிலிருந்து எடுத்த வரிகள். ஆங்கிலத்தில் இருப்பவை 1999 என்ற விரைவில் வன்கூவர் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடக் காத்திருக்கிற படத்தின் இயக்குநர் லெனின் எம் சிவம் ஒரு செவ்வியில் சொன்னவை. 2 கருத்துக்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக எனக்குப் படுகிறது.குழுவன்முறைகள் பற்றிய ஒரு படம் உருவாகிக்கொண்டிருப்தாக ஏற்கனவே facebookdன் புண்ணியத்தில் அறிந்துகொண்டேன். நேற்று www.insidetoronto.com ல் இந்தப்படம் பற்றிய ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதை வாசித்ததும் இதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோணியது. அதற்கு முக்கியமான இன்னொரு காரணம் அண்மையில் கேள்விப்பட்ட ஒரு கொலைச்சம்பவம்.

பல வருடங்களுக்கு முன்னர் வேறொரு நாட்டில் குடியேறியிருந்த ஒரு குடும்ப நண்பரின் மகன் முன்பு குழுவன்முறையில் ஈடுபட்டவர். வீட்டுக்காரர் கேட்கும்போதெல்லாம் நான் நல்லவர்களுடன் சண்டைக்குப் போவதில்லை. பெட்டையளுக்கு torture குடுக்கிறவன்களை அடிச்சிருக்கிறன். சின்னப் பெட்டையளை வன்புணர்ந்தவன் சட்டத்தில இருந்து தப்பிட்டான். அவனை நாங்கள் கொஞ்சப்பேர் தூக்கிப்போட்டு மிரிச்சம் இப்ப அவன் நல்லாயிருக்கிறான். ஆங்கிலமே தெரியாத ஒரு அண்ணா தமிழ்க்கடையில வேலை செய்தவர் அவருக்குக் கொஞ்சப் பெடியங்கள் பிரச்சனை குடுத்தாங்கள்...பாவம் அந்தண்ணை மனிசையை ஸ்பொன்ஸர் பண்ணிட்டு காத்திந்தவர் அந்த நேரத்தில அவர் இவங்கள் மேல கையை வைச்சா அவருக்குப் பிரச்சனை அதான் நாங்களே அவன்களைச் சாத்தினாங்கள்.நாங்கள் ஒண்டும் நீங்கள் நினைக்கிறது போல பொறுக்கியில்லை என்டெல்லாம் சொல்லுவான். இப்ப கொஞ்சம் கொஞ்சமா நண்பர்கள் வாழ்க்கையில் செட்டிலாகத் தொடங்கியதும் வீடு வேலையென்று இருக்கிறமாதிரித்தான் தெரியுது ஆனால் அந்நியன் விக்கிரம் போலயா இல்லையா என்று யாருக்கென்ன தெரியும் என்று அவனுடைய தந்தை நக்கலாச் சொல்லுவார்.இப்ப கிட்டடியில அவன்ர நண்பன் ஏன் எதற்கு என்று தெரியாமல் சிலபேரால் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.அந்த மரணம் அவனின் நண்பர்களை மிகவும் பாதித்திருக்கிறது.

அப்படி ஒரு மரணத்தின் பாதிப்பிலிருந்து தொடங்கியதுதான் இந்த 1999 படமும் என்று அதன் இயக்குநர் லெனின் சிவம் குறிப்பிடுகின்றார். இதில் நடித்திருப்பவர்களை ஏற்கனவே வேறு சிலக் கனேடியத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். படங்களின் பெயர்களை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இந்த 1999ல் குமாராக நடிப்பவர் இன்னுமொரு படத்தில் ஒருவருடைய வீட்டுக்கு துவக்கு வேண்டப்போகும் ஒரு காட்சியில் பார்த்த ஞாபகம்.1997-1999 குழுவன்முறைகள் உச்சத்தில் இருந்த காலம்.Cross Country Donuts at Bridletowne Circle and Finch Avenue East - இந்த இடத்தில் வைத்து கபிலன் பாலச்சந்திரன் என்ற 19 வயது Waterloo பல்கலைக்கழக மாணவன் வன்முறைக்குழுச் சண்டையில் அநிநாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறான். அதே பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த லெனின் சிவத்தால் இந்தப்படம் இயக்கப்பட்டிருக்கிறது.

" வெள்ளிக்கிழமை இரவுகளில் தமிழ் இளைஞர்கள் சில இடங்களுக்குச் சென்றால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் சில இடங்கள் இருக்கின்றன" என்று கூறும் லெனின் சிவம் குழுக்களில் இருந்த பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். "அவர்கள் இப்போது திருமணமாகி அவர்களுக்கு சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்."

மீனவப்பெண் என்ற ஈழத்துத் திரைப்படத்தில் ஜெயகாந்த் என்ற பெயரில் நடித்தவரும் உதவி இயக்குநருமான V.M.L. சிவம் என்பவரின் மகன்தான் இந்த லெனின் சிவம்.

( உறுதி)

மனவழுத்தம் பற்றி ' உறுதி' ஒரு படம் எடுத்திருக்கிறார் முன்பு. இந்தப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கவேண்டும். வேறும் சில படங்கள் எடுத்திருக்கிறார்கள் இந்தக்குழுவினர்.

1999 படத்தின் பாடல் வெளியீடு Oct. 1 ம்திகதி 3330 Pharmacy Ave ல் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

Premiere Show :Oct. 22 ம் திகதி Scotiabank Cineplex Theatre, Toronto .

மிச்சம் இந்தப்படம் பார்த்த பிறகு....

மேலதிக தகவல்களுக்கு :
1999 : http://www.1999movie.com/
உறுதி : http://www.bagavan.com/Uruthy/story.htm


* பின் குறிப்பு : 1999 திரைப்படத்துக்கு இசையமைத்த ராஜ் தில்லையம்பலம் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவராம் என்று வந்தியண்ணா சொல்கிறார் *

10 comments:

ஆயில்யன் said...

/அந்நியன் விக்கிரம் போலயா இல்லையா என்று யாருக்கென்ன தெரியும் என்று அவனுடைய தந்தை நக்கலாச் சொல்லுவார்.இப்ப கிட்டடியில அவன்ர நண்பன் ஏன் எதற்கு என்று தெரியாமல் சிலபேரால் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.அந்த மரணம் அவனின் நண்பர்களை மிகவும் பாதித்திருக்கிறது./


தீய செயலுக்கு துணை போவதென்பது அச்செயலின் எந்த முடிவுக்கு விளைவுக்கும் தயாரக இருக்கவேண்டியது அவசியம்! ஆனால் வெகு இளம் வயதிலேயே இப்படியான முயற்சிகளில் இறங்குவது கவலைக்குரிய விசயமும் கூட :(

M.Thevesh said...

நாடுவிட்டு அன்னியதேசம் வரும்
போது அந்த நாட்டில் உங்களை
அடையாளப்படுத்தரொம்பக்கஷ்டப்
படவேண்டும்.அந்த மாதிரி அடை
யாளப்படுத்தப்படவே இளைஞர்
கள் குளுக்களில் சேருகிறார்கள்.
பாதுகாப்புக்கருதியும் சிலர் குளுக்
களில் அங்கத்தினரானதாகச்சொல்
லியிருக்கிறார்கள்.

M.Thevesh said...

அதேசமயம் நண்பர்களின் நிர்ப்
பந்தங்காரணமாகக்குளுக்களில்
சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
வயதுவந்து மேல்நிலைக்கு வந்த
பின்பும் பழையதொடர்பால் பாதிக்
கப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
இது மிகக்கவனமாக கையாள வேண்
டிய பிரச்சினையாகும்.

கோபிநாத் said...

இந்த படம் இணையத்தில் கிடைக்குமா!?

கானா பிரபா said...

படத்தை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்

வந்தியத்தேவன் said...

இந்தப் படத்தை நானும் எதிர்பார்க்கின்றேன். ராஜ்குமார் பள்ளியில் எனக்கு ஒருவருடம் மூத்தவர்.

சந்தனமுல்லை said...

நல்ல இடுகைக்கு நன்றி சிநேகிதி!!

ஹேமா said...

சிநேகிதி எம் கலைஞர்களின் கலை வெளிப்பாடு.உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
இணையத்தில் பார்க்கமுடியுமா ?

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

கந்தப்பு said...

சிட்னியில திரையிட்டார்கள். இப்படத்தை பலர் பார்த்து இரசித்தார்கள். எனக்கும் இப்படம் நன்றாகப் பிடித்திருக்கிறது.