சுய தம்பட்டம் என்று சொல்லலாம்.
எல்லாருக்கும் மீண்டுமொரு வணக்கம். அடிக்கடி காணாமல் போறது வழக்கமாப்போச்சு. என்ன பண்றது எழுதணும் என்டு ஆசை இருந்தாலும் நேரம் கூடி வராதாம் ( சும்மாமாமா பில்ட் அப்தான்). 2009 முடியமுதல் ஏதும் எழுதணும்னு நினச்சன் ஆனால் உருப்படியா எதும் எழுதத் தோணல சரி 2010 ம் வந்திட்டு இப்பவாவது எழுதுவம் என்டு நினைச்சு login பண்ணினன் ஆனால் எழுதுறத விட வாசிக்கிறதுதான் சுகமா இருக்கு இப்பெல்லாம். ஆனால் நல்ல பதிவுகளை வாசிக்கும்போது ஐயோ நானும் எழுதோணும் என்டு ஆசை வருவதென்னவோ உண்மைாதான்.
அதான் இந்த Live Traffic Feed இருக்குத்தானே ..அதில போய் நானே என்ர ப்ளாக்க நோட்டம் விட்டன். யார் எல்லாம் வரினம் எந்த எந்தப்பதிவெல்லாம் கிட்டடியில படிச்சிருக்கினம் என்டு பாப்பம் என்டு வெளிக்கிட்டால் சந்தோசம் துக்கம் இப்பிடிக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வேறு சில உணர்வுகளும் வருது.
அல்சர் , மல்லுக்கு ,வயதுக்கு ,நிம்மதியான தூக்கம் ,உடல் நலம் ,கல்யாணம் ,தத்துவங்கள்,சாப்பாடு,பாலியல் துன்புறுத்தல் போன்ற சொற்களை எல்லாம் கூகில்ல ஆக்கள் தேடேக்க அவையள் எல்லாம் என்ர வலைப்பக்கம் வந்து போயிருக்கினம் என்டு Live Traffic Feed சொல்லுது.
அதோட விக்கிப்பீடியால பூப்பு என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்து எழுதப்பட்ட கட்டுரையின் கீழ் நான் நட்சத்திர வாரத்தில் எழுதிய " வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும் " என்ற கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே விக்கிப்பீடியாவில் பூப்பு பற்றி வாசிக்க வந்தவர்களில் பலரும் என்னுடைய வலைப்பக்கம் வந்து சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
சரி இப்ப என்ன எழுதலாம் என்று யோசிச்சிட்டு வாறன்.
அப்புறம் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்.
17 comments:
காணாமற்போயிருந்துவிட்டு நீண்டகாலத்திற்குப் பிறகு வந்தாலும் 'லொள்ளு' மட்டும் இன்னும் மாறவில்லை :-)
...
புதுவருடத்தில் எழுதுவதாய்ச் சொல்கிறீர்கள், ஆனால் மார்கழி 30 என்றுதான் ப்ளோக்கர் காட்டுகிறதே? மேலும் அன்று ஏதோவொரு பார்ட்டியில் இருந்து பலபேரைப் பாடிப் பயமுறுத்தியதாக அல்லவா காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன்.
...
இந்த ஆண்டில் நிறைய எழுத என் வாழ்த்து!
டிசம்பர் 30 எழுத வெளிக்கிட்டு ஜனவரி 11ல் எழுதி பதிவேற்றியதை என்னவென்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வது :)
ஆமாம் அன்றைய பார்ட்டியில் நாம் ஏன் எழுதுகிறோம் அல்லது ஏன் எழுதுவதை நிறுத்துகிறோம் என்று கதைத்ததில் ஏதோ கொஞ்சம் ஞாபகம். அதன்பிறகுதான் எழுதவேண்டும் என்று 4 வரி எழுதிப்போட்டு மேற்சொன்ன 2 கேள்விகளையும் கேட்டுவிட்டுத் தூங்கி விட்டேன். இன்று ஏதோ எண்ணத்தில் draft ல் இருந்தததைப் பதிவு செய்திருக்கிறன் பார்ப்பம் இந்த ஆண்டு எப்படிப் போகிறதென்டு.
அப்போ இந்த வருஷம் நிறைய பதிவுகள் வரும் போல!!...குட் குட் ;)))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும் :-)
ஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்க
வாங்கோ... வாங்கோ வந்திட்டீங்களோ.
தமிழர் திருநாள் வாழ்துக்கள் தோழி.
பெரிய பாண்டி கமெண்ட் - :))
பெரிய ஆளாகிட்டீங்க..ஆனாலும் எங்களுக்காக அப்போப்போ எழுதுங்க மேடம்! அப்புறம், அந்த பாட்டு பாடினதையும் பத்தி சொல்லுங்க - அட்லீஸ்ட் மடல்லேயாவது! :-)
உடல்நலம் மட்டுமில்லாம மன நலனுக்கும் உங்களுக்கு உங்களைப்பிடிக்குமா எழுதிய டாக்டர்.. :)
பேசுவது போலவே இருக்கிறது எழுத்து.
மீண்டும் தத்தக்க பித்தக்க என நடனமாட வாழ்த்துக்கள்.
உங்களின் படம் அழகாக இருக்கின்றது.
\\அப்போ இந்த வருஷம் நிறைய பதிவுகள் வரும் போல!!...குட் குட் ;)))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும் :-)\\
நன்றி கோபிநாத்.
ஓமோம் நிறைய்ய்யயய வரும் பார்த்துக்கொண்டேயிருங்கோ.
\\ஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்க\\
நீங்கள் திருந்த மாட்டிங்கள் :) உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்காம விடமாட்டிங்கிள் போல பிரபாண்ணா.
ஹேமா said...
வாங்கோ... வாங்கோ வந்திட்டீங்களோ.
தமிழர் திருநாள் வாழ்துக்கள் தோழி.
நன்றி ஹேமா!
\\பெரிய ஆளாகிட்டீங்க.\\
எங்க? எப்ப? எனக்குத்தெரியாமலா?
\\ அப்புறம், அந்த பாட்டு பாடினதையும் பத்தி சொல்லுங்க - அட்லீஸ்ட் மடல்லேயாவது! :-)\\
அது ஒரு சோகக்கதை. பிறந்தநாள் கொண்டாட்டம் என்டு கூப்பிட்டு ஏமாத்திட்டினம். பிரியாணி செய்து தாறன் என்டு சொல்லி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களா அந்த சோகத்தில நான் புலம்பினது பாட்டுப்பாடினது போல இருந்திட்டுப் போல. அடுத்த முறை கவனமா இருக்கணும்.
\\உடல்நலம் மட்டுமில்லாம மன நலனுக்கும் உங்களுக்கு உங்களைப்பிடிக்குமா எழுதிய டாக்டர்.. :)\\
அவ்வ்வ்வ்வ நீங்களுமா முத்துலட்சுமி.
\\பேசுவது போலவே இருக்கிறது எழுத்து.\\
நமக்குத் தெரிஞ்சததானே எழுத முடியும் ராதாகிருஷ்ணன்.
\\வந்தியத்தேவன் said...
மீண்டும் தத்தக்க பித்தக்க என நடனமாட வாழ்த்துக்கள்.
உங்களின் படம் அழகாக இருக்கின்றது.\\
வந்தியண்ணா நடமாடவா நடனமாடவா:)
//சரி இப்ப என்ன எழுதலாம் என்று யோசிச்சிட்டு வாறன்//
அது சரி ! டிரையல் பார்த்துட்டு போக வந்தீங்களா பாஸ் :)
//வெ.இராதாகிருஷ்ணன் said...
பேசுவது போலவே இருக்கிறது எழுத்து.//
:) அதே! பேசிக்கிட்டே இருந்ததை யாரோ டைப் செஞ்சு போஸ்டிட்டாங்க போல பாஸ் தனியா உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கீங்களோ? :)))))))))
[மன்னிக்கவும் வெ.இரா]
// கானா பிரபா said...
ஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்க//
[பெரியபாண்டி கமெண்ட்டெல்லாம் ஒவர் நக்கலுதான் இருந்தாலும்] ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
Post a Comment