Custom Search

Monday, January 11, 2010

Facebook பற்றிய திரைப்படம்


ஒருநாளைக்கு காலை மாலை இரவு படுக்க முதல் facebook பக்கம் போகாவிட்டால் எதையோ இழந்தது போல கொஞ்சம் தலையிடி போல மற்றும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அறிகுறிகள் எல்லாம் இருக்குதெண்டு சொன்னால் நீங்கள் facebook க்கு அடிமை என்று சின்னக் குழந்தை கூடச் சொல்லிடும். அந்தளவுக்கு சின்னப் பிள்ளைகள் முதல் 65 வயது முதியோர்கள் வரை மணித்தியாலங்களைச் செலவிடும் ஒரு தொடர்பாடல் வலையமைப்பாகி விட்டது FB.

எனக்குத் தெரிந்து 10 வயதேயான என் குட்டி மச்சான்கள் முதல் வயது போனவர்கள் என்று எல்லோரும் சந்தோசமாக FB ஐப் பயன்படுத்தி வருகிறார்கள். எனக்கும் எரிச்சல் படுத்துகின்ற கேளிக்கை விளையாட்டுகளும் மற்றைய FB Applications களும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. கோழி வளர்ப்பதும் வேலி அமைப்பதும் கத்தரிக்காய் நடுவதுமாக அவர்களுடைய பொழுது மகிழ்வாகவே கரைகிறது. யாரென்றே தெரியாத ஒருவரின் படங்கள் எல்லாம் பார்க்கக் கூடியதாக இருப்பதால் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற ஸ்காபுரோ வாசியாக இருப்பதால் தெருவில் பேருந்தில் பார்ப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்களாகவே தெரிகிறார்கள். எப்படி அவர்களுடைய முகம் எனக்குப் பரிச்சயமாகத் தோன்றியது என்று யோசித்துப் பார்த்தால் ஐயகோ Facebook stalking.

இந்த FB எப்படி உருவானது என்பது பற்றி சுவாரிசயமான கதையிருக்கிறது.அந்தக்கதையை வைத்து blockbuster படம் எடுக்குமளவுக்கு விசயமிருக்கிறதா என்று எனக்கும் கேள்வி வந்தது ஆனால் October 2010 ல் வெளிவரவிருக்கின்ற "The Social Network" என்ற இந்தப்படம் செக்ஸ்,பணம்,ஜீனியஸ்(அறவாளி?) மற்றும் துரோகம் பற்றியதென்று சொல்லப்படுகின்றது. ஏற்கனவே FB ன் உரிமை பற்றி வழக்குகள் நடந்தது. அந்த வழக்குககள் பற்றிய சுவாரிசயமான விடயங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுமா என்று தெரியவில்லை.

FB ன் தந்தை என்று சொல்லப்படுகின்ற Mark Zuckerburg 25 வயதுடைய ஒரு Harvard பல்கலைக்கழக மாணவன். படித்துக்கொண்டிருக்கும்போது 2004ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி ஒரு செயற்பாட்டுக்காக நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிய இந்த FB என்கின்ற சமூகத் தொடர்பாடல் வலையமைப்பு Mark Zuckerbur ஐ திடீர் பில்லியனர் ஆக்கிய பின்னர் அவர் இன்னமும் படிப்பை முடிப்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு திரும்பவில்லையாம்.

இங்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் பாடசாலை முடியும் நேரம் Grade 8ல் இருந்தென்று நினைக்கிறன் Year Book என்று ஒன்று வெளியிடுவார்கள். அந்தந Year book ல் பாடசாலையில் படிக்கும் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் என எல்லாற்ற படமும் போடப்படும். இந்த year book ஐத் தயாரிக்கவென்று year book committee என்று ஒரு குழு இருக்கும். அவையள் எப்பவும் கமராவும் கையுமாத் திரிவினம். பாடசாலையில பெயர்போன காதலர்கள் கர்ப்பிணியா இருக்கும் ஆசிரியர்கள் crazy hair இப்பிடி எல்லாத்தையும் சுட்டுத்தள்ளுவினம். கடைசியல year book ஐப் பார்க்க நல்லாத்தானிருக்கும். இந்தப்புத்தகத்தில தான் தங்கட தங்கட high school sweethearts எல்லாரையும் வட்டம் போட்டு வைக்கிறது இதயம் கீறி வைக்கிறது இப்பிடி நிறைய விசயங்கள் எல்லாம் நடக்கும். படிச்சி முடிஞ்சு பல வருடங்களால அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்க்க பரவசமாத்தானிருக்கும்.

ம்...அப்பிடி ஒரு yearbook ஐ ஹவார்ட் பல்கலைக்கழகத்துக்காக உருவாக்கும் முயற்சியில் முதலில் தனிய ஹவார்ட்க்கு மட்டும் உருவாக்கிப் பின்னர் Stanford, Dartmouth, Columbia, Cornell ,Yale போன்ற மற்றைய பல்கலைக்கழகங்களுக்குப் பரவி பின்னர் உலகிலுள்ள மற்றைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்களும் விரிவுரையாளர்களும் கூட பாடத்திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வலையமைப்பாகவும் இருந்தது இப்பொழுதும் இருக்கிறது. எனக்குத் தெரிந்து பல உயர்தரப் பாடசாலைகளில் எல்லாம் FB பரவலாகப் பாடத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். அது கூடப் பறவாயில்லை 10-12 வயசு வாலுகள் எல்லாம் FB க்கு வந்து அடிக்கிற லூட்டி தாங்க முடியல்ல.

Mark Zuckerburg தங்களுக்கு developer ஆக வேலை செய்தபோது தங்களுடைய ஐடியாவைத் திருடி FB ஐ உருவாக்கியிருக்கிறார் என்று தொடரப்பட்ட வழக்கு இறுதியில் Mark Zuckerburg 65 மில்லியன் டொடலர்கள் செலுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து யூன் 25 2008ல் முடிவுக்கு வந்ததென்பது ஆச்சர்யமான விசயம்.

350 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட இந்த சமூகத் தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பாக இன்னும் பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

8 comments:

சந்தனமுல்லை said...

ஆகா..இத இதத்தான் எதிர்பார்த்தோம்...வெல்கம் பேக் சிநேகிதி மேடம்! :-)

சுவாரசியமான தகவல்கள் - ஏனோ இது வரைக்கும் FB-லே எட்டிப்பாக்கல...அந்த ஆர்க்குட் மாதிரிதானேன்னு விட்டுட்டேன்..இப்போ புதுசா டூப்லேன்னு ஒன்னு வந்திருக்கு போல!! :-)))

அருண்மொழிவர்மன் said...

//ear book committee என்று ஒரு குழு இருக்கும். அவையள் எப்பவும் கமராவும் கையுமாத் திரிவினம். பாடசாலையில பெயர்போன காதலர்கள் கர்ப்பிணியா இருக்கும் ஆசிரியர்கள் crazy hair இப்பிடி எல்லாத்தையும் சுட்டுத்தள்ளுவினம். கடைசியல year book ஐப் பார்க்க நல்லாத்தானிருக்கும். இந்தப்புத்தகத்தில தான் தங்கட தங்கட high school sweethearts எல்லாரையும் வட்டம் போட்டு வைக்கிறது இதயம் கீறி வைக்கிறது இப்பிடி நிறைய விசயங்கள் எல்லாம் நடக்கும். படிச்சி முடிஞ்சு பல வருடங்களால அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்க்க பரவசமாத்தானிருக்கும்.//

ம்ம், எல்லா yearbook ம் இப்பவும் அப்படியே இருக்கு...

நான் நினைக்கிறேன் grade 9l இருந்து என்று

கோபிநாத் said...

நல்ல )எழுதியிருக்கிங்க...நாம தினமும் எல்லாம் போக முடியல அங்க..வாரம் ஒருமுறை ;)

சினேகிதி said...

ஹாய் முல்லை, உங்க தொந்தரவு தாங்க முடியல்ல அதான் வந்திட்டன் :)

நான் Orkut பக்கம் எட்டிப்பார்க்கிறேல்ல :) ஆமா Tubley என்டு இப்ப அடிக்கடி invitation வரத்தொடங்கியிருக்கு.

சினேகிதி said...

\\ம்ம், எல்லா yearbook ம் இப்பவும் அப்படியே இருக்கு...

நான் நினைக்கிறேன் grade 9l இருந்து என்று\\

ம் என்னட்டயும் இருக்கு 4 year book ம். Elementary schools லயும் இருக்கு year books.

சினேகிதி said...

\\நல்ல )எழுதியிருக்கிங்க...நாம தினமும் எல்லாம் போக முடியல அங்க..வாரம் ஒருமுறை ;)\\


வாங்க கோபிநாத். நான் எப்பிடி எழுதினாலும் நீங்கள் நல்லாயிருக்கு எண்டுதானே சொல்லுவீங்கள் :)
அதுசரி தாங்கள் எப்ப எழுதுற ஐடியால இருக்கிறீங்கள்?

எல் கே said...

FB is very boring ... athuvum antha games ayyo sagiakala....orkut 4 varusama use panren.. athuve porumnu FBla athigam talai katrathu illa

Jerry Eshananda said...

சிநேகிதி எப்படி இருக்கீங்க?என்ன ஆச்சு?ஏன் பதிவு போடுறதுல?