Custom Search

Wednesday, July 29, 2009

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின்றனதான். சமீபத்தில் கனடியர்களான ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்களின் மரணம் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை குடும்பம்தான் கொலை செய்ததாக ("Honor killing ") கிடைத்த தகவலின் படி விசாரணை நடக்கிறது தற்பொழுது ஆனால் அது கொலைதான் என்று நிரூபிக்கும் முதலே ஒவ்வொருதரும் ஒவ்வொருவிதமாகக் கதை கட்டுகிறார்கள். இதற்கு முதலும் சில வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார்.

தமிழர் அல்லது ஆப்கான் போன்ற சிறுபான்மை இனமக்களிடையே இடம்பெறும் பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுவதோடு "தமிழ் இளைஞர் கொலை " அல்லது "ஆப்கான் பெண்கள் கொலை" என்று போடுவார்கள் பத்திரிகையில். கொலை கொள்ளை என்று வரும்போது அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை. அண்மையில் அமெரிக்காவில் 29 வயதான ஒருவருக்கு 21 பிள்ளைகள் இருக்காம் என்ற செய்தியை வெகு சாதாரணமாக ஒரு சாதனை போல எழுதியிருந்தார்கள் அதை வாசித்த ஒரு முஸ்லிம் நண்பி சொன்னாள் இதே ஒரு முஸ்லிம் ஆண் செய்திருந்தால் இவர்கள் என்னவெல்லாம் எழுதியிருப்பார்கள் என்று.

அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அதேபோல children aid socity யால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்ட கதை இங்கு நிறையச் சமூகங்களில் உண்டு. தமிழர்களிடம் மட்டுமல்ல மற்றைய 4மூகங்களிலும் children aid socity எண்டாலே பிள்ளை பிடிகாறர் என்றமாதிரியான பயமுண்டு. மற்றைய மக்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால் பலர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் சொல்ல முடியவில்லை ஆனால் உதாரணத்துக்கு பிள்ளை கக்கா இருந்ததும் அம்மா இல்லாத நேரம் அப்பா கழுவி விடுவது சாதாரணமாகத்தான் எனக்குப் படுகிறது ஆனால் அது அசாதாரணமாக மற்றவர்களால் பார்க்கப்படலாம். இப்படி பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுச் சட்ட திட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது தண்டனைக்கு மிக அருகில் போய் மனவுளைச்சல் பட்டவர்கள் உள்ளார்கள். உண்மையில் இதுக்கெல்லாம் என்ன காரணம்? யார் தப்பு?

மற்றது Dating Violence பற்றியது : தமிழ் இளைஞர்கள் தங்கள் காதலிகளைக் கொடுமைப்படுத்துகிறார்களாம். எல்லாச் சட்டமும் ஆய்வுகளும் பெண்களுக்கே உதவி செய்யுது. ஆண்களைப் பற்றிக் கவனிக்க ஒருதருமில்லை என்றும் சொல்லலாம்தான். எங்காவது ஒரு சில இடங்களில் நடப்பதை வைச்சுக்கொணடு ஒரு முடிவுக்கும் வரேலாது ஆனால் பல தசாப்த காலமாக யுத்த தேசத்திலிருந்து வந்த இந்தச் சந்ததிக்கும் இங்கு நடக்கும் வன்முறைகளுக்கும் dating violence க்கும் தொடர்பிருக்கா என்ற ரீதியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதாவது ஒரு காரசாரமான சண்டையில் காதலியைக் கை நீட்டி அடிப்பது, பெருந்தெருவில் இறக்கி விட்டுவிட்டு வருவது, உடலுறவுக்குச் சம்மதிக்காதபோது வார்த்தைகளால் நோகடிப்பது, வேறு பெண்களைக் கூட்டிக்கொண்டு வந்து நீ உடலுறவுக்குச் சம்மதிக்காட்டால் நானிப்படித்தான் செய்வன் என்பது இன்ற இந்தப்பட்டியல் நீள்கிறது.

இங்கு நான் எழுதியது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய அனுபவங்கள் என்ன?

14 comments:

Unknown said...

எனக்கென்னவோ எங்களவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கொஞ்சம் அதிகமாக வன்முறையை நாடுகிறார்கள் என்றே படுகிறது. மிக இலகுவில் பொறுமை இழக்கிறார்கள். அதற்கும் தாயக சூழலுக்குமான தொடர்பைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. நிஜத்தில் மேலைத்தேயப் பண்பாடுகளுக்கும் எங்களவர் வாழ்வியலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்களைப் போல் வாழ்வேண்டும் உடுத்த வேண்டும் என்ற ‘அக்கரைப் பச்சை' மனநிலை கொண்ட சில இளைஞர்கள் நீங்கள் சொல்லும் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். அடுத்தது எங்களது விழுமியங்களை மட்டுமே முன்னிறுதும், இந்த நாட்டின் கலாசார சூழல் பற்றிய புரிந்துணர்வு இல்லாத பெற்றோரும் இவ்விளைஞர்கள் தடம்மாறக் காரணமாகிறார்கள். பல பெற்றோரின் அணுகுமுறை பிள்ளைகளிடம் இவர்கள் சொல்வதற்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஒரு வக்கிர மனநிலையைத் தோற்றுவிக்கின்றமையை கண்கூடக் கண்டிருக்கிறேன். இருந்தும், இருந்தும்... சமீபத்தில் இரண்டு Middle School Graduationகளுக்குப் போயிருந்தபோது ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைக் கவனித்தேன். அங்கே கொடுக்கப்பட்ட பாடசாலை மட்ட Awardகளில் ஏறத்தாள 75%ஐ வென்றவர்களின் வரலாற்றைப் பார்த்தால், அவர்களுக்கு மூன்று அடிகள் (Roots) இருந்து ஆச்சரியப்படுத்தின. அவர்கள் எல்லோரும் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், மற்றது நம்மவர்கள்.ஒருவகைக் கர்வம் மேலோங்கியது அந்த இரு நாட்களிலும். ஆக மொத்தத்தில் இங்கே இருக்கிற சிறுபான்மைச் சமூகங்களின் வன்முறைப் போக்கு அவர்களின் தாயக சூழலிலிருந்து மட்டும் வரவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

வந்தியத்தேவன் said...

இதனை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். பெரும்பாலான ஆசிய நாட்டுக் குழந்தைகள் பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு படிப்பு சம்பந்தமாகவோ இல்லை வேலை சம்பந்தமாகவோ செல்லும் போது தங்கள் தடைகளை மீறுகின்றார்கள். இதனை மீறுவதில் ஒரு சின்ன சந்தோஷம். இது நாட்டுக்கு நாடல்ல பிரதேசத்துக்கு பிரதேசமும் மாறுபடுகின்றது. வடக்கு கிழக்கில் அமைதியாக பாடசாலைக் கல்வியுடன் மாத்திரம் இருந்த ஒரு மாணவன் கொழும்பு வந்தால் கேங் அமைத்து ஏனைய பாடசாலை மாணவர்களுடன் சண்டைப்படுவதும் காயப்படுவதும் சகஜமான நிகழ்வாக இங்கேமாறிவிட்டது. அதே மாணவன் பின்னர் பல்கலைக் கழகம் சென்றால் அரசியல் ரீதியாகவும் இனரீதியாகவும் சண்டைப்போடுவதற்க்கு வழிவகுக்கின்றது.

அதே நேரம் வெளிநாட்டில் தமிழர்கள், ஆப்கான்காரர்கள், இல்லை பாகிஸ்தானிகள் எதாவது குற்றம் செய்தால் அந்த நாட்டு ஊடகங்கள் அதனை பெரிதாக தூக்கிப்பிடித்து அவர்கள் மேல் பயங்கரவாதி என்ற முத்திரையைக் குத்திவிடுவார்கள். வளைகுடாநாடுகளில் ஒரு தெருச்சண்டையோ அல்லது கேங் சண்டையோ நடந்தால் நிச்சயம் அந்தச் சண்டையில் ஒரு பாகிஸ்தானி இருப்பார் என்பது வெளிப்படை உண்மை.

அமைதியாக இருந்த நம்மவர்கள் இன்றைக்கு சண்டைபோடக்காரணம் தாயக நிலைமைகளாகவும் இருக்கலாம். எந்த நாட்டிலையும் குழப்பம் விளைவிக்கவென ஒரு கூட்டமே இருக்கின்றது. முன்னர் நீக்ரோக்கள் தான் குழப்பவாதிகள் என்றால் இன்று அது தமிழன், பாகிஸ்தானி, ஆப்கானி என நீள்கின்றது.

டேட்டிங் மட்டுமல்ல சாதாரண ஒருவிடயத்தில் கூட ஆணைவிட பெண்ணுக்கே மக்கள் மட்டும் நீதிமன்ற ஆதரவு அதிகம். ஒரு பெண்ணினால் சொல்லப்படும் பொய் மெய்யாகவே பெரும்பாலும் பார்க்கப்படும்.

கலை said...

நிறைய பிரச்சனைகளுக்கு டேற்றிங் அடிப்படையாக இருக்கின்றது. எமது சமூகத்தில் பெண்ணின் ஒழுக்கம் என்பது செக்சை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு பெண் ஒரு ஆணுடன் சென்றால் அதை யாரோ பார்த்து என்னும் நாலு பேருக்கு சொல்வார்கள். அது குடும்ப கொளரவம் திருமணம் வரை பாதிக்பதாக உள்ளது. இதனால் பல பெண்கள் எமது இளைஞர்களுடன் டேற்றிங்கை தவிர்த்து வேற்றினத்தவருடன் செல்வதால் வேற்றினத்தவருக்கும் எமது இளைஞர்களுக்குமிடையில் பல சண்டைகள் நிகழ்ந்திருக்கின்றது. எமக்குள் இருக்கும் பிரச்சனைகள் எமது சுதந்திரத்தை எப்போதும் கேள்விக்குறியாக்குகின்றது. பல பிரச்சனைகளுக்கு அடித்தளமிடுகின்றது.

எமது ஊரில் டேற்றிங் கிடையாது இங்கே அதை பழகவேண்டியுள்ளது. அதே நேரம் எமது ஊரின் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. பழக்கவழக்கம் என்று எதுவும் இல்லை அறியாமை என்றே சொல்ல முடியும்.

எமது ஊரில் டேற்றிங் இரகசியமானது. பல இயல்பான உறவுகள் இரகசியமானது தவிர இல்லை என்பதிற்கில்லை. ஒழுக்கம் என்பது பல இடங்களில் எம்மை நாமே ஏமாற்றும் ஒன்றாக இருக்கின்றது.

வன்முறை என்பதற்கு முதற்படி ஒருவர் மீதான வெறுப்பு. வன்முறை என்பது பல கட்டங்களை தாண்டி வரும் வடிவம். அது எங்கிருந்து வளர்கின்றது என்பதை பொறுத்தது. சிறுபிராயத்தில் ஏற்படும் தனிப்பட்ட கசப்புகள் பின்னாளில் பொதுவான வெறுப்பாக மாறும். கொடுமைகள் மாறும். அதே போல் எமது சமுதாயத்தில் ஒருவரை ஏற்றுக்கொள்ளாமைக்கான காரணம் சாதியத்தில் இருக்கின்றது. நாம் ஒரு அர்த்தமற்ற மனித குலத்துக்கு விரோதமான சாதிய சிந்தனையால் சக மனிதனை வெறுக்கவும் ஏற்றுக்கொள்ளாமைக்கும் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். நேசிப்பதற்கு சில காரணங்கள் வெறுப்பதற்கு சில காரணங்கள் ஆனால் இரண்டுக்கும் அப்பாற்பட்டு வெறுப்பதற்க்கான கல்வியாக போதனையாக சாதியம் இருந்துவரும் சமுதாயத்தில் இருந்து வருகின்றறோம். இவ்வாறன சமுதாயத்தில் வளரும் ஒருவனுக்கு அல்லது சமுதயத்தில் பெற்றோரை உடைய ஒருவனுக்கு வெறுப்புக்கான அடிப்படை ஒரு வீதமேனும் அதிகமாக இருக்கின்றது. அதே மன நிலை பல இடங்களில் பிரயோகிக்கப்படலாம். பிற சம்பவம் ஒன்றில் கணிசமானளவு ஆதிக்கத்தை செலுத்தும். சாதியம் உள்ள ஒரு சமூகம் வன்முறைக்கு ஏற்புடைய சமூகம் என்பது உண்மை ஏனெனில் அங்கே வெறுப்புக்கான மன நிலை இயல்பாக போதிக்கப்படுகின்றது.

கோபிநாத் said...

வந்தியத்தேவன் அவர்கள் பின்னூட்டத்தை வழிமொழிக்கிறேன்.

\\ அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை\\

அங்கு மட்டும் இல்ல எங்கும் அதிப்படியாக மனிதபிமானம் குறைந்து அரசியல் தான் வளர்ந்து கொண்டுயிருக்கிறது. இதை வளரும் இந்த காலத்து பிள்ளைகளுக்கு மீடியா நன்றாகவே விருந்து வைத்து கொண்டுயிருக்கிறது.

\\என்ன காரணம்? யார் தப்பு?\\

என்ன காரணம்? யார் தப்பு? என்று குறிப்பிட்டு பதில் சொல்ல முடியாத கேள்வி இது. ஊரோட ஒத்து வாழ் என்பது தான் இன்றைய நிலைமை. அவர்களுக்கு விளக்கம் சொல்ல போனால் நமக்கு மீண்டும் மீண்டும் நம்மீது வேற மாதிரியான முத்திரைகளை பதித்துவிடுவார்கள்.

மற்றொரு காரணம் மீடியா அவர்கள் செய்வது தான் அதிகபடியான தப்பு என்று சொல்வேன். அவர்கள் மக்களுக்கு செய்தியை கொடுக்க வேண்டும் அதனால் விழிப்புணர்வு வர வேண்டும் என்று எண்ணுவது எல்லாம் குறைந்து விட்டது. எல்லாம் வியாபாரம் தான்.

வி. ஜெ. சந்திரன் said...

எங்களது இளையவர்கள் அதிகம் வன்முறையை நாடுகிறார்களா? அல்லது அவர்களது வன்முறை மட்டும் இனம் குறிப்பிடப்பட்டு வெளிவருவதால் அதிகமாக தெரிகிறதா? இதுவரை 30 கொலைகள் ரொரண்டோவில் நடந்துள்ளன. அவர்களில் 2 பேர் தமிழர்கள். மீதி??

அதுபோக அண்மையில் கொல்லபட்ட தமிழ் இளைஞனின் கொலையாளிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரது பெயரையும் பார்த்தால் அவர்கள் இந்திய வம்சாவளியினர் போல உள்ளது. ஆனால் சந்தேக நபர்களை அறிய/ கைது செய்யமுதலே ஊடகங்கள் கொலையாளிகளும் தமிழர்களே என செய்தி போட்டு வீட்டார்கள். குறிப்பிட்ட ஊடகங்களை ரோரண்டோ தமிழர்கள் நீங்கள் ஏன் கேட்கமல் இருக்கிறீகள்?????

http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20090730/murder_arest_090730/20090730/?hub=TorontoNewHome

On Thursday morning, 21-year-old Vikas Dahiya of Toronto and 19-year-old Antrikh Singh of Markham appeared in court. Each was charged with first-degree murder.

Kristian Thanapalan, 22, whose parents are originally from Sri Lanka, was killed by a group of Tamil men in that incident.

சினேகிதி said...

கீத் உண்மையில் பெற்றோர்களை மட்டும் குறைகூற முடியாது. பிள்ளைகள் நல்லாயிருக்கோணும் என்டதுக்காக அவர்கள் தங்களை வருத்தி உழைக்கிறார்கள் அதால பிள்ளைகளோட செலவழிக்க நேரமில்லை. பிள்ளை என்ன செய்கிறது எப்பிடிப் படிக்கிறது யாரோட கதைக்குது எண்டு கவனிக்க நேரமில்லை.

நன்றாகப் படிக்கிற மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இளைஞர்கள் இருக்கிறார்கள்தான் ஆனால் ஓரு சிலரால் எல்லாரையும் தான் மாலைக்கண் கொண்டு பார்க்கிறார்கள் மற்றவர்கள்.

வி. ஜெ. சந்திரன் said...

//எங்களது இளையவர்கள் அதிகம் வன்முறையை நாடுகிறார்களா? அல்லது அவர்களது வன்முறை மட்டும் இனம் குறிப்பிடப்பட்டு வெளிவருவதால் அதிகமாக தெரிகிறதா? இதுவரை 30 கொலைகள் ரொரண்டோவில் நடந்துள்ளன. அவர்களில் 2 பேர் தமிழர்கள். மீதி??//

அதற்காக வன்முறையில் ஈடுபடும் தமிழ் இளையவர்களை நியாயபடுத்துவதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

சினேகிதி said...

\\வடக்கு கிழக்கில் அமைதியாக பாடசாலைக் கல்வியுடன் மாத்திரம் இருந்த ஒரு மாணவன் கொழும்பு வந்தால் கேங் அமைத்து ஏனைய பாடசாலை மாணவர்களுடன் சண்டைப்படுவதும் காயப்படுவதும் சகஜமான நிகழ்வாக இங்கேமாறிவிட்டது. அதே மாணவன் பின்னர் பல்கலைக் கழகம் சென்றால் அரசியல் ரீதியாகவும் இனரீதியாகவும் சண்டைப்போடுவதற்க்கு வழிவகுக்கின்றது.\\

இந்தத் தகவல் எனக்குப் புதியது வந்தியத்தேவன்.

எங்கயும் அமத்தி அமத்தி வைக்கப்படுவர்கள் ஒரு நாளில் சுதந்திரம் என்று நினைத்து எல்லாத்தையும் பரீட்சித்துப் பார்த்தல் நடக்கிறதுதான். ஆனால் அது விபரீதம் ஆகும்போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

அங்கு மாணவர்கள் காங் அமைத்துச் சண்டை போடுவதைப் பற்றி விரிவாக எழுதுங்கள்.

சினேகிதி said...

\\எமது ஊரில் டேற்றிங் இரகசியமானது. பல இயல்பான உறவுகள் இரகசியமானது தவிர இல்லை என்பதிற்கில்லை. ஒழுக்கம் என்பது பல இடங்களில் எம்மை நாமே ஏமாற்றும் ஒன்றாக இருக்கின்றது.\\

வாங்க கலைவாணி. உங்கள் பதிவுகளில் கூட மிகவும் நல்ல விடயங்களைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீங்கள். தமிழ்மணத்தில் சேர்க்கவில்லையா?

சாதியம் தொடர்பான போதனைகள் இந்த வெறுப்பில் எவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் சாதியப்பிரச்சினை இன்னும் இருக்கிறது. அதெல்லாமில்லை என்று நாவால் சொன்னாலும் காதல் அல்லது திருமணம் என்று வரும்போது இதெல்லாம் பார்க்கிறார்கள். அப்படி பார்ப்பதால் காதல் தொடராமல் போகும்போது அங்கே வன்முறை எண்ணங்கள் எழலாம்.

வி. ஜெ. சந்திரன் said...

//மற்றது Dating Violence பற்றியது : தமிழ் இளைஞர்கள் தங்கள் காதலிகளைக் கொடுமைப்படுத்துகிறார்களாம். எல்லாச் சட்டமும் ஆய்வுகளும் பெண்களுக்கே உதவி செய்யுது. ஆண்களைப் பற்றிக் கவனிக்க ஒருதருமில்லை என்றும் சொல்லலாம்தான். எங்காவது ஒரு சில இடங்களில் நடப்பதை வைச்சுக்கொணடு ஒரு முடிவுக்கும் வரேலாது ஆனால் பல தசாப்த காலமாக யுத்த தேசத்திலிருந்து வந்த இந்தச் சந்ததிக்கும் இங்கு நடக்கும் வன்முறைகளுக்கும் dating violence க்கும் தொடர்பிருக்கா என்ற ரீதியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதாவது ஒரு காரசாரமான சண்டையில் காதலியைக் கை நீட்டி அடிப்பது, பெருந்தெருவில் இறக்கி விட்டுவிட்டு வருவது, உடலுறவுக்குச் சம்மதிக்காதபோது வார்த்தைகளால் நோகடிப்பது, வேறு பெண்களைக் கூட்டிக்கொண்டு வந்து நீ உடலுறவுக்குச் சம்மதிக்காட்டால் நானிப்படித்தான் செய்வன் என்பது இன்ற இந்தப்பட்டியல் நீள்கிறது. //

உண்மையில் இந்த சம்பவங்கள் எமது சமூகத்தில் அதிகமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் மற்றைய சமூகத்தவர்களும் குறைந்தவர்கள் இல்லை. சில வேளை தமிழ் சமூகம் கனடாவுக்கு ஓப்பீட்டளவில் புதிய சமூகமாக இருக்கிற படியா அந்த சமூகத்தின் நடத்தை கோலங்கள் பற்றி இனிதான் ஆராய்ஞ்சு ஆறியவேணும் எண்டு நினைக்கிறன், அதையும் நீங்கள் சொன்ன மாதிரி மேற்கத்தேய கண்ணாடி போடு ஆரய்ஞ்சால் அறியிறது கசிட்டம். சரி அது போகட்டும்,

மனிதர்கள் எந்த இனம், மதம், நாட்டவர்களாக இருந்தாலும் சில அடிப்படை இயல்புகள் அனைவருக்கும் இருக்கத்தான் செய்ய்யும். அதை

சினேகிதி said...

\\மற்றொரு காரணம் மீடியா அவர்கள் செய்வது தான் அதிகபடியான தப்பு என்று சொல்வேன். அவர்கள் மக்களுக்கு செய்தியை கொடுக்க வேண்டும் அதனால் விழிப்புணர்வு வர வேண்டும் என்று எண்ணுவது எல்லாம் குறைந்து விட்டது. எல்லாம் வியாபாரம் தான்.\\

உண்மைதான் கோபிநாத்.அநேகமான மக்களின் கோவம் மீடியாக்களின் மீதுள்ளது. ஒரு நாய்க்குட்டி காணமால் போனால் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் மக்களின் மரணத்துக் கொடுப்பதில்லை.

சினேகிதி said...

விஜே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது 2வது கொலை தொடர்பாக.

முதலாவது கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.அந்தக் கொலை அந்த மைதானத்தில் விளையாடும் 2 தமிழ்க்குழுக்களுள் ஏற்பட்ட தகராறின் விளைவு.அதனால்தான் தமிழர் என்று போடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி எடுத்த எடுப்பில் தமிழ் இளைஞர் கொலை என்றுதான் எழுதுகிறார்கள். மற்றது சாலை மறியல் போராட்டம் போன்றவற்றால் தமிழ் மக்கள் கொஞ்சம் பிரபலமாகி விட்டார்கள் எனவே "ஒ என்ன தமிழ் இளைஞர் கொலையாமே"என்று கேட்பதும் சகஞமாகி விட்டது.

வர்மா said...

உலகம்தெரியாமல் வளர்பவர்களால் பிரச்சிசைகளைப் புரிந்துகொள்ளமுடியாதநிலை ஏற்படும்போது வன்முறைகள் ஆரம்பமாகிறது.
அன்புடன்
வர்மா

சினேகிதி said...

உண்மைதான்..நன்றி வர்மா.