Custom Search

Saturday, September 26, 2009

1999, உறுதி , லெனின் எம்.சிவம்

\\ ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.

பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.\\

http://snegethyj.blogspot.com/2009/08/blog-post.html

\\பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.அம்மா அப்பாவிடம் இருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமல் ஏங்கி ஏங்கியே ஒருநாள் மாண்டு போகிறார்கள்.ஆனால் வெளியில தெரியிற உண்மை??? அந்தப்பெடியன் காங்ஸராம்.அந்தப்பெட்டை பாரில வேலை; டான்ஸ் ஆடுறளாம்.பெடியங்களோட திரியிறாளாம்.கதைக்க நல்லாயிருக்கும்.நீங்கள் குடுக்க வேண்டிய அன்பை அவர்களுக்குக் குடுத்தா அவர்கள் ஏன் அதை வெளியில் தேடிப்போகிறார்கள்.\\ - http://snegethyj.blogspot.com/2007/02/blog-post_18.html


\\Its stories are of immigrants from a Sri Lanka torn by years of bloody conflict, youths who in Canada lack the support they got from extended families back home. They are caught between opposing cultures - one at home, the other at school.

"They tend to pick the bad things from both cultures," Sivam explained. "Gangs give them a purpose and a sense of belonging."\\

\\ஆண்கள் அழமாட்டார்களாம் ஆதிரை. ஏன் அவைக்கு கண்ணீர்ச்சுரப்பியில்லையா? ஆண்கள் அழுவதில்லை. அவர்கள் பிறப்பிலேயே மனசாலும் உடலாலும் பலமுள்ளவர்கள் என்றொரு முகமூடியைச் சிறுவனாக இருக்கும்போதே போட்டு விட்டாச்சு. ஆண்களுக்கு பிரச்சனைகளே வராது அப்பிடியே வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது தாங்களாகவே சமாளிக்கப்பழகவேணும் என்றெல்லாம் சொல்லிவச்சா\\ http://snegethyj.blogspot.com/2008/01/blog-post_15.html

" His short film Uruthy (Strength) in 2007 is about the stigma attached to mental illness in a culture where people believe "men should be macho and not cry."

இங்கே நான் தமிழில் கொடுத்திருப்பவை நான் தத்தக்க பித்தக்கவில் அப்பப்போ எழுதிய பதிவுகளிலிருந்து எடுத்த வரிகள். ஆங்கிலத்தில் இருப்பவை 1999 என்ற விரைவில் வன்கூவர் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடக் காத்திருக்கிற படத்தின் இயக்குநர் லெனின் எம் சிவம் ஒரு செவ்வியில் சொன்னவை. 2 கருத்துக்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக எனக்குப் படுகிறது.



குழுவன்முறைகள் பற்றிய ஒரு படம் உருவாகிக்கொண்டிருப்தாக ஏற்கனவே facebookdன் புண்ணியத்தில் அறிந்துகொண்டேன். நேற்று www.insidetoronto.com ல் இந்தப்படம் பற்றிய ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதை வாசித்ததும் இதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோணியது. அதற்கு முக்கியமான இன்னொரு காரணம் அண்மையில் கேள்விப்பட்ட ஒரு கொலைச்சம்பவம்.

பல வருடங்களுக்கு முன்னர் வேறொரு நாட்டில் குடியேறியிருந்த ஒரு குடும்ப நண்பரின் மகன் முன்பு குழுவன்முறையில் ஈடுபட்டவர். வீட்டுக்காரர் கேட்கும்போதெல்லாம் நான் நல்லவர்களுடன் சண்டைக்குப் போவதில்லை. பெட்டையளுக்கு torture குடுக்கிறவன்களை அடிச்சிருக்கிறன். சின்னப் பெட்டையளை வன்புணர்ந்தவன் சட்டத்தில இருந்து தப்பிட்டான். அவனை நாங்கள் கொஞ்சப்பேர் தூக்கிப்போட்டு மிரிச்சம் இப்ப அவன் நல்லாயிருக்கிறான். ஆங்கிலமே தெரியாத ஒரு அண்ணா தமிழ்க்கடையில வேலை செய்தவர் அவருக்குக் கொஞ்சப் பெடியங்கள் பிரச்சனை குடுத்தாங்கள்...பாவம் அந்தண்ணை மனிசையை ஸ்பொன்ஸர் பண்ணிட்டு காத்திந்தவர் அந்த நேரத்தில அவர் இவங்கள் மேல கையை வைச்சா அவருக்குப் பிரச்சனை அதான் நாங்களே அவன்களைச் சாத்தினாங்கள்.நாங்கள் ஒண்டும் நீங்கள் நினைக்கிறது போல பொறுக்கியில்லை என்டெல்லாம் சொல்லுவான். இப்ப கொஞ்சம் கொஞ்சமா நண்பர்கள் வாழ்க்கையில் செட்டிலாகத் தொடங்கியதும் வீடு வேலையென்று இருக்கிறமாதிரித்தான் தெரியுது ஆனால் அந்நியன் விக்கிரம் போலயா இல்லையா என்று யாருக்கென்ன தெரியும் என்று அவனுடைய தந்தை நக்கலாச் சொல்லுவார்.இப்ப கிட்டடியில அவன்ர நண்பன் ஏன் எதற்கு என்று தெரியாமல் சிலபேரால் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.அந்த மரணம் அவனின் நண்பர்களை மிகவும் பாதித்திருக்கிறது.

அப்படி ஒரு மரணத்தின் பாதிப்பிலிருந்து தொடங்கியதுதான் இந்த 1999 படமும் என்று அதன் இயக்குநர் லெனின் சிவம் குறிப்பிடுகின்றார். இதில் நடித்திருப்பவர்களை ஏற்கனவே வேறு சிலக் கனேடியத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். படங்களின் பெயர்களை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இந்த 1999ல் குமாராக நடிப்பவர் இன்னுமொரு படத்தில் ஒருவருடைய வீட்டுக்கு துவக்கு வேண்டப்போகும் ஒரு காட்சியில் பார்த்த ஞாபகம்.



1997-1999 குழுவன்முறைகள் உச்சத்தில் இருந்த காலம்.Cross Country Donuts at Bridletowne Circle and Finch Avenue East - இந்த இடத்தில் வைத்து கபிலன் பாலச்சந்திரன் என்ற 19 வயது Waterloo பல்கலைக்கழக மாணவன் வன்முறைக்குழுச் சண்டையில் அநிநாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறான். அதே பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த லெனின் சிவத்தால் இந்தப்படம் இயக்கப்பட்டிருக்கிறது.

" வெள்ளிக்கிழமை இரவுகளில் தமிழ் இளைஞர்கள் சில இடங்களுக்குச் சென்றால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் சில இடங்கள் இருக்கின்றன" என்று கூறும் லெனின் சிவம் குழுக்களில் இருந்த பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். "அவர்கள் இப்போது திருமணமாகி அவர்களுக்கு சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்."

மீனவப்பெண் என்ற ஈழத்துத் திரைப்படத்தில் ஜெயகாந்த் என்ற பெயரில் நடித்தவரும் உதவி இயக்குநருமான V.M.L. சிவம் என்பவரின் மகன்தான் இந்த லெனின் சிவம்.

( உறுதி)

மனவழுத்தம் பற்றி ' உறுதி' ஒரு படம் எடுத்திருக்கிறார் முன்பு. இந்தப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கவேண்டும். வேறும் சில படங்கள் எடுத்திருக்கிறார்கள் இந்தக்குழுவினர்.

1999 படத்தின் பாடல் வெளியீடு Oct. 1 ம்திகதி 3330 Pharmacy Ave ல் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

Premiere Show :Oct. 22 ம் திகதி Scotiabank Cineplex Theatre, Toronto .

மிச்சம் இந்தப்படம் பார்த்த பிறகு....

மேலதிக தகவல்களுக்கு :
1999 : http://www.1999movie.com/
உறுதி : http://www.bagavan.com/Uruthy/story.htm


* பின் குறிப்பு : 1999 திரைப்படத்துக்கு இசையமைத்த ராஜ் தில்லையம்பலம் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவராம் என்று வந்தியண்ணா சொல்கிறார் *

சர்வதேசத் திரைப்படவிழாவுக்குப் போகும் தமிழரின் படம்

இதைப்படியுங்க விரைவில் தமிழில் எழுதுகிறேன்..


New film to put spotlight on Tamil gang violence
Scarborough story will open at Vancouver Film Festival

New film to put spotlight on Tamil gang violence. Thelepan Somasegaram, left, and Deva Gasperson appear in the Tamil anti-violence film, '1999'. Courtesy photo One December night in 1997, four hooded men fired guns into Cross Country Donuts at Bridletowne Circle and Finch Avenue East. They fled, not caring they had just killed Kapilan Palasanthiran, 19, an aspiring scientist never in trouble with the law.
The murder of Palasanthiran - one of several innocents killed by chance during the years the VVT and AK Kannans fought in Scarborough's streets - was not recreated for 1999, Lenin M. Sivam's film drama about Tamil youth gangs, but Sivam remembers Palasanthiran's funeral as a turning point.

"He was such a bright student and didn't know these things were happening. The issue was bothering people," said the director, whose first full-length feature will be shown at next month's Vancouver International Film Festival (VIFF) and then premiere in Toronto at Scotiabank Cineplex Theatre on Oct. 22.

Like Palasanthiran, Sivam was attending the University of Waterloo in 1997, but the filmmaker says he is more aware of the war between the gangs and the dangers that went with it.

"There were places I knew I shouldn't be at on a Friday night. Being Tamil, you don't want to be there."

But years after arrests and changes of heart removed gang leadership, there were questions Sivam wanted answered about who the gang members were and how the violence happened.

Over a year, he met and interviewed youth workers and a number of ex-gangsters, none of whom, Sivam said, were still engaged in crime. "They are all out of it. They have little kids. They admit how stupid and foolish they were," he said.

"They really think through my movie they will bring an awareness, so these things will not happen again."

Those interviews formed 1999's main characters: the underachiever Anpu, Kumar the gang leader and Ahilan, a straight-arrow university student.

"These characters did exist. You could have found one," Sivam said. "The way they talk, what they do on a Saturday morning, why do they fight, how do they get involved (in a gang), how do they get out of it. These were stories that I got from the real people."

1999 is not a Hollywood treatment of gangs. Its stories are of immigrants from a Sri Lanka torn by years of bloody conflict, youths who in Canada lack the support they got from extended families back home. They are caught between opposing cultures - one at home, the other at school.

"They tend to pick the bad things from both cultures," Sivam explained. "Gangs give them a purpose and a sense of belonging."

Though this summer fights between young Tamils have again resulted in deaths in Scarborough, trouble on the streets now is "totally different" and "not as organized as back then," said Sivam.

"Right now, it's guys hanging in the park or the mall and claiming it's their territory. These guys have no idea how to get a gun."

Making the film took investments and volunteer work from more than 100 people, mainly young family members and friends, willing to work 14 to 16-hour days over a dozen weekends in Scarborough, said executive producer Sebesan Jeyarajasingam, who had production equipment from a past project when he met Sivam a few years ago.

"We want to make this a full-time job," Jeyarajasingam said.

Sivam said the crew had to be particularly creative to "achieve a million-dollar shot with almost nothing" as his idol, the director Robert Rodrigues, did (as every aspiring independent filmmaker knows) when making El Mariachi for $7,000.

His father V.M.L. Sivam was a filmmaker too, assistant director in one of Sri Lanka's first Tamil-language films, then (under the screen name Jeyakanth) playing the male lead in another, Meenavapenn.

After working as a computer programmer and computer architect, Sivam realized he wanted to take on "touchy subjects." His short film Uruthy (Strength) in 2007 is about the stigma attached to mental illness in a culture where people believe "men should be macho and not cry."

Sivam said he had a cousin who killed himself. "He was suffering from depression and didn't know what he was going through."

The subject of 1990s gang violence may also offend some members of the Tamil community - groups such as the Canadian Tamil Youth Development Centre have worked to wipe the "gangs" association away and prove Tamil youth deserve a positive image - but Sivam said issues from those years must be faced.

"This is going to be our home for generations. It is important to look at our past. We should take this movie as a positive. We had a problem and we solved it," he said.

The Canadian Tamil Congress apparently agrees. It called 1999 "a rare and powerful story" and said the VIFF selection is a milestone for Tamil Canadians, the first time a film made by members of the community will be shown at an international festival.

1999, a Khatpanalaya Production, will open the festival's Canada Images Program on Oct. 14 and Oct. 15.

The soundtrack, featuring Lyrically Strapped and S.P. Balasubramaniyam, will be launched Oct. 1 at 3330 Pharmacy Ave. in a free event starting at 6:30 p.m.

Source : http://www.insidetoronto.com/news/local/article/151934--new-film-to-put-spotlight-on-tamil-gang-violence

Wednesday, September 23, 2009

கறுப்பான கையால....

இன்னமும் பார்க்காத ஆக்களுக்காக....

Monday, September 21, 2009

நானெல்லாம் வாயே திறக்கக்கூடாது



கொஞ்சநாளாவே என் புலம்பல்ஸ் கூடிட்டுது. நேரம் காணாது. வேலை கூடிட்டுது. நேரத்துக்கு வேலை எல்லாம் செய்து முடிக்கேலாம இருக்கு. நித்திரை காணாது இப்பிடி நிறையப் புலம்பிக்கொண்டிருந்தன். ஒன்டில் எல்லாரும் சரியான busy அல்லது செய்ய எதுவும் இல்லாமல் வெட்டியா இருக்கினம். இரண்டுமே பிரச்சனைதான். அதால என்னை நீ கவனிக்கேல உன்னை நான் கவனிக்கேல்ல என்டு மனஸ்தாபமும்....அடிபடாத குறைதான். இந்த நிலையில இதெல்லாம் ஒரு பிரச்சனை பொத்திக்கொண்டு போய் வேலையப் பாருடி என்று சொல்றமாதிரி ஒரு வீடியோ பார்த்தன் facebook ல:) நீங்களும் பாருங்கோ.

Monday, September 14, 2009

மறந்து போகுமா மண்ணின் வாசனை...

கொஞ்சக்காலமா இந்தப்பாடல் ஒருநாளைக்கு 4-5 தரம் கேட்டடிருக்கிறன். எங்கட வீட்ட 4 றேடியோ இருக்கு. ஒன்று அம்மான்ர றேடியோ அது எப்பவும் குசினில இருக்கிற பிறிட்ஜ்க்கு மேல இருந்து ஓயாமா கத்திக்கொண்டேயிருக்கும். மற்றது அப்பம்மான்ர றேடியோ அது அப்பம்மான்ர அறையில அவா நித்திரையெண்டாலும் றேடியோ அலறிக்கொண்டேயிருக்கும். அப்பான்ர றேடியோ செற் அது எல்லாத்தையும் விட மோசம் அதுக்கும் ஓய்வு கிடையாது. இதெல்லாத்தையும் விட எல்லாருக்கும் பொதுவாவும் ஒரு றேடியோ இருக்கு. இப்பிடி எப்பவும் ஏதோ ஒரு றேடியோ வேலை செய்துகொண்டிருக்கும். சில நேரம் ஒரே நேரத்தில 2 றேடியோவும் வேலை செய்யும்.

தை 2009 ல இருந்து வைகாசி 2009 வரைக்கும் கவனயீர்ப்பு கண்டன ஊர்வலத்துக்கு வரச்சொல்லி மக்களை அழைத்துக்கொண்டேயிருக்கும் வானொலிகள் எல்லாமே 'மறந்து போகுமா மண்ணின் வாசனை' என்று நடுகலும் கேட்டுக்கொண்டிருக்கும். நான் நினைக்கிறன் இந்தப் பாட்டைக் கேட்டுத்தான் அரைவாசிச் சனம் இந்த ஊர்வலங்களுக்கு வெளிக்கிடும் என்று.
நான் முதல் தரம் இந்தப் பாடலைக் கேட்டபோது " தூர தூர தூர தூர தூர தூர தேசத்தில் சுகல்யா ரகுநாதன் பாடிக்கொண்டிருந்தா. உண்மையைச் சொல்றன் எனக்கு அவா தூர தூர என்று பாடினது அப்பேக்க பிடிக்கேல்ல. பிறகொருநாள்தான் பாடலை முழுமையாக் கேட்டனான். அப்ப மனசைப்பிழியிறதெண்டு சொல்லுவினம் அப்பிடித்தான் எனக்கும் ஏதோ மாதிரியிருந்தது. பிறகு றேடியோவில எப்ப அந்தப் பாட்டுக்கேட்டாலும் நிண்டு கேப்பன். அந்தப்பாடல் வரிகளில் இழையோடும் சோகம் ஏக்கம் எல்லாருக்கும் பொதுதானே அதான் கேக்குற எல்லாருக்கும் பிடிச்சிடுதெண்டு நினைக்கிறன்.



மறந்து போகுமோ மண்ணின் வாசைன
தொலைந்து போவமோ தூரதேசத்தில்

வேப்பமரக்குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா
ஏக்கமுடன் நீபாடும் ஒத்தைக்குரல் ஒலிக்கிறதா?
மேப்பிள் மரநிழலோரம் மெல்ல விழி மூடுகையில்
கேட்குதடி உன்பாடல் தேம்புதடி என்னிதயம் - மறந்து

காலையிலே கண்விழித்தேன் காணவில்லை என்முகத்தை
சாலையிலே தொலைத்தேனோ வேலையிலே அழித்தேனோ?
தேடுகின்றேன் தேடுகின்றேன் தேடல் இன்னும் ஓயவில்லை
வாடுகின்றேன் ஊர் நினைவில் வாழ்க்கையென்று ஏதமில்லை - மறந்து

வந்தஇடம் ஒட்டவில்லை வாழ்நிலமோ கிட்டவில்லை
சொந்தங்களோ பக்கமில்லை சொல்லியழ நேரமில்லை
இந்தநிலை மாறிஎங்கள் சொந்தமண்ணை சேர்வதெப்போ
அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ -மறந்து


என்ர facebook ல 2-3 பேர் இசையரங்கத்தின் "மெல்லக் கசிந்தது'என்ற இசைத்தட்டு பற்றிய செய்தியுடன் அதற்கான இணைப்பும் கொடுத்திருந்தார்கள். ஆனால் அப்போது அதைப் போய்க் கேட்கும் நேரமோ மனநிலையோ இருக்கவில்லை. பின்னர் ஒருநாள் யாரோ அந்த இசைத்தட்டில் தமிழ்நதியும் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று சொன்னபிறகுதான் இணையத்தில் போய் தேடினால் இன்ப அதிர்ச்சி. எனக்கும் எல்லாருக்கும் பிடித்த அந்த 'மறந்து போகுமா மண்ணின் வாசனை' பாடலை எழுதியவர் சாட்சாத் தமிழ்நதியேதான்.

2) நிலவும் வானும் பிரிந்திருந்தால் அழகேதடி
நீயும் நானும் ஒன்று பெண்ணே விலகாதேடி

3) பிரம்மனோடு செவ்விகாண வேண்டும் - அவள்
பிறப்பின் ரகசியம் அறியவேண்டும்

4)வாழ்க்கையென்பதென்ன
கனவின் தொகுப்பா கடலில் உப்பா

5)கண்களுக் காயிரம் காரணம் சொல்லியே
சென்றது நாள் நூறடி

6)மெல்லக் கசிந்தது புல்லாங்குழலே
மேவி இசைத்தது கொல்லைக்குயிலே

7)பெண் என்பவள் கவிதை
ஆனாலென்ன அடிமை

8)இசையெனும் மழைதனில் நனைகிறதே -

9)கண்களால் எழுதிடும் கவிதையே காதலோ
கருத்தினால் இதயங்கள் கலப்பதே காதலோ

10)இசையே உனைப்போல் துணை ஏது

11)பனிப்பாலை வெளி வெறுத்து ஊரேகினோம்
இனித் துயர் இல்லையென்று வேரேகினோம்

12)மழை என்றழைக்காதே... அன்பே
காலம் தவறி பொழியும் என்னை

போன்ற பாடல்களையும் தமிழ்நதியே எழுதியிருக்கிறார். எல்லாப்பாடல்களும் இணையத்தில் இல்லை. நான் இன்னும் இசைத்தட்டும் வாங்கவில்லை.

நீங்களும் பாடல்களைக் கேட்க/ வாங்க. http://www.isaiyarangam.com/cd_release.html

போனமாதம் ஒருமாதிரி அம்மணியைச் சந்திக்க முடிந்தது.வேலையால் போனதால் சற்றுத் தாமதாயே போய்ச் சேர்ந்தேன். தேவுடா என்று என்னைத் திட்டிக்கொண்டே காத்திருந்தார்கள் போலும். படத்தில பார்த்ததை விட நேரில முகத்தில நிறையப் பால்வடியுது. இளவேனில்ல வெளுத்து வாங்கிறவாவா இவா என்று எனக்கு நம்பவே முடியல்ல. அவ்வளவு அப்பாவியா இருந்தா பார்க்க:) வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" மற்றும் "சூரியன் தனித்தலையும் பகல்" 2ம் தந்துவிட்டவா. நாங்கள் சந்தித்த அன்று என் அக்காவின் திருமண நாள். நான் அதை மறந்து தமிழ்நதியை பார்க்கவாறன் என்று சொல்லிட்டன். ஆனால் கனநேரம் கதைபேச முடியாமல் போயிற்று.

ஐயோ ஐயோ அவாட தொடர்மாடிக்கட்டிடத்தின் இட்டுமுட்டான பாரக்கிங்ல காரைவிட்டிட்டு நான் வெளில வரப்பட்டபாடு இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. அத விட காரை எங்கயோ விட்டிட்டு 2 பேரும் போய் பக்கத்து பில்டிங் பார்க்கிங்லொட்ல கார் தேடினாங்கள் கொஞ்சநேரம்...என்னத்த சொல்லி என்னத்த விட்டு.

Sunday, September 13, 2009

விரதம், நோன்பு , பசி , சாப்பாடு

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ :)

இதெல்லாத்தையும் விட மக்டோனல்ட்ஸ் KFC , Taco , Wendy's , Arby's ,Harvey's , Mr Sub , Subway தவிர Pizza Pizza , Piza Nova , Piza Hut , Dominos இப்பிடி 1008 சாப்பாட்டுக்கடைகள் போற வழியெல்லாம் இருக்கேக்க ஒரு மனுசரால எப்பிடி விடிய 5 மணில இருந்து பின்னேரம் 7.40 வரைக்கும் சாப்பிடாம இருக்கலாம்??

வேலையால ஒரு பயிற்சிப் பட்டறைக்குப் போயிருந்தோம் ஒரு இடத்துக்கு. காலைல 9 மணில இருந்து பின்னேரம் 6 மணி வரைக்கும் 3 பட்டறைகள். அவர்கள் கொண்டு வந்து வைத்திருந்த சாப்பாட்டை நாங்கள் வெள்ளனவே சாப்பிட்டு முடிச்சிட்டம். பசியெடுத்த கொஞ்சாக்கள் மதிய இடைவேளைக்கு வெளில சாப்பிடுவம் என்று வெளிக்கிட்டம். எங்களுடன் ஒரு பெங்காலிப் பெடியனும் வந்திருந்தான். அவன் தான் நோன்பிருக்கிறன் சாப்பிட மாட்டன் என்டான். சாப்பிடாட்ட அப்ப ஏதும் வேண்டிக் குடியெண்டால் அதுவும் கூடாதெண்டான். எங்களுக்கு சங்கடமாப்போச்சு. நோன்பு இருக்கிற ஒராளை வைச்சுக் கொண்டு எப்பிடிச் சாப்பிடுறதெண்டு. அவன் சொன்னான் நாங்கள் சூரியன் உதிக்கிற நேரம் அதாவது காலைல 5 மணியில இருந்து சூரியன் மறையிற நேரம் மாலை 7.40 வரைக்கும் சாப்பிடக்கூடாதெண்டு. அதும் இப்ப இங்க கோடை காலம் அதால சூரியன் மறைய நேரமெடுக்கும் அதால அவர்களின் மதகுருக்கள் கணிப்பிட்ட நேரத்தின் படி 7.40 வரை சாப்பிட முடியாதாம். அவன்ர அம்மா விடுமுறைக்கு வந்து நிண்டவா அப்பா நல்லாச் சமைச்சுக்குடுத்திருப்பா போல. அவா போனதும் சும்மாவே பெடியன் சோர்ந்து போயிருந்தான். இதில நோன்பு வேற. அவன்ர துரதிஸ்டம் அந்த ஏரியால Bangladesh கடைகளும் இருந்தன. அவனுக்கு நல்ல பசி போல. இந்த Bangladesh கடையில சாப்பாடு நல்லா இருக்குமெண்டு வேற சொன்னான்.

நான் கேட்டன் இப்படி உங்களை வருத்தி கட்டாயம் நோன்பிருக்கோணும் என்டு கடவுள் சொன்னவரா? அதுவும் ஒரு மாசம் எப்பிடி முடியுமென்டு. ஒருதரும் கட்டாயப்படுத்திறேல்ல ஆனால் ஒருமுறை நோன்பிருக்கத் தொடங்கினால் தொடர்ந்து நோன்பிருக்கத்தான் மனசு சொல்லுமாம். இது மனக்கட்டுப்பாடு சம்மந்தப்பட்டது. நான் ஆரம்பித்தில என்னால என்னுடைய நாவை உடம்பை மனசை் கட்டுப்படுத்த முடியுமா என்று சோதிக்கத்தான் நோன்பிருக்கத் தொடங்கினான். இன்டைக்கு இந்த பட்டறையில கேட்ட விசயத்தையே கேட்டு வெறுத்திட்டு அதான் நானிப்பிடி இருக்கிறன். நான் வீட்ட போய் கொஞ்சமா தண்ணியடிச்சிட்டு சாப்பிட்டால் ஓகே என்டான். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி.

நான் சொன்ன் எங்கட மதப்படி விரதம் பிடிச்சால் தண்ணியடிக்கிறேல்ல என்டு. அவன் சொன்னான் ஓம் தெரியும் நீங்கள் மச்சமும் சாப்பிட மாட்டிங்கள் என்டு. பிறகு சொன்னான் நாங்கள் நோன்பு முடிய நல்லா மச்சம் சாப்பிடுவம். கொஞ்சம் தண்ணியடிப்பம்.

என்ர அம்மா என்னோட கோவிச்சுக்கொள்றது இந்த விசயத்திலதான். எனக்கு விரதம் சரிப்பட்டு வாறேல்ல. நான் நினைக்கிறன் ஒரு 10 வருசத்துக்கு முதல் சரஸ்வதிபூசை நேரம் கடைசி 3 நாளும் விரதம் பிடிச்சனான் என்று. கடவுள் பல சந்தர்ப்பத்தில காலை வாரி விட்டதால எனக்கு கடவுளுக்கும் பெருசா ஒத்து வாறேல்ல. முடியாக்கட்டத்தில கோயிலுக்குப்போனாலும் எரிச்சலோட திரும்பி வாறது என்னமோ போங்கோ கடவுளுக்குத்தான் தெரியும் உண்மை.கிட்டடியில Rogester க்கும் Pittsburgh வெங்கடேஸ்வரா கோயிலுக்கும் போனம். கோயிலுக்குள்ள போறதுக்கு ஒரு பெரிய கியு. அதில நிண்டு உள்ளுக்கு போனா சாமிக்கு முன்னால ஒரு நிமிசம் கூட நிக்கேலாது. பொலிஸ் மாதிரி நீட்டுக்கு ஆக்கள் நிண்டுகொண்டு காணும் சாமியைப் பார்த்தது போங்கோ அங்கால துரத்திக்கொண்டு நிக்கினம். ஒரு 5 நிமிசம் கோயிலுக்குள்ள போய் வெளில வாறதுக்கு 8 மணித்தியாலப் பிரயாணம். மியுசியத்தில கூட இத விட வடிவாப் பார்க்கலாம் சாமி சிலையை.

கிட்டடில இங்க ரொரன்டோவில ஐயப்பன் கோயியல்ல எண்ணெய்க்காப்பு சாத்தினவை. ஒராளுக்கு $5 கொடுக்கோணுமாம். அம்மா சொன்னா லட்சக்கணக்கில சனம் வந்ததெண்டு. காலம 8 மணிக்கு போய் கியுல நிண்டு பின்னேரம் 3மணிக்குத்தான் எண்ணெய்க்காப்புச் சாத்தினவையைாம். கனடா கந்தசாமி கோயில் , நயினை நாகபூசணி அம்மன் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், நல்லூர்க்கந்தன் , வரசித்தி விநாயகர், சிறீ துர்க்கா, சந்நிதி முருகன் ,சந்திரமெளலீஸ்வரர் ,ஐயப்பன் கோயில் இதத்தவிர இன்னும் ஒரு புதுக்கோயில் வரப்போவுது.

மில்லியன் கணக்கில காசைக்கொட்டி இப்பிடிச் சந்திக்கொரு கோயில் திறக்கிறத விட இருக்கிற கோயில்கள்ல பூசையோடு சேர்த்து வேற நல்ல காரியங்களையும் செய்தா நல்லம்.

பசிக்குது சாப்பிட்டு வாறன்.

Friday, September 11, 2009

பள்ளிப் பயின்றதொரு காலம் - தொடர் விளையாட்டு



இந்தக்கிழமை நிறைய ஆசிரியர் பற்றிய பதிவுகள் வாசிச்சிட்டன். ஆயில்யான் சந்தனமுல்லை மற்றும் சிலர் ஆசிரியர் பற்றி எழுதியிருந்தார்கள்.அதெல்லாம் வாசிச்சிட்டு ஆசிரியர்களின் நினைவுகளுடன் கூகிலில் நான் படித்த பாடசாலை மற்றும் ஆசிரியர்களின் பெயர்களைப்போட்டுத் தேடினேன். யாழ்ப்பாணத்தில் படிப்பித்த ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை ஆனால் ஒரு சந்தோசமான ஆச்சரியம் நான் மாத்தளையில் படித்த பாக்கியம் தேசியக் கல்லூரிக்கு ஒரு இணையத்தளமே உருவாக்கியிருக்கிறார்கள். அநேகமா இந்த வருடம்தான் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால் நான் போன வருடமும் தேடிய ஞாபகம் உண்டு.

மலையகப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கென்று ஒரு தனி domain வழங்கப்பட்டிருக்கிறது போல. சில பாடசாலைகள் தங்களுக்கென்று இணையத்தளம் அமைத்திருக்கிறார்கள். நேற்று கனநேரமா இந்த இணையத்தளத்தில் போய் படம் பார்க்கிறதிலேயே செலவழிச்சன். ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நான் பழைய ஞாபகங்களையெல்லாம் கொண்டுவர முயற்சி செய்தேன்.

முதல் பக்கத்திலயே சிரிச்சுக்கொண்டு நிண்டவா பள்ளிக்கூட அதிபர். அவாவையும் அவான்ர மகன் மகளையும் ஞாபகமிருக்கு.மற்றம்படி பெருசா ஒன்டும் ஞாபகமில்ல...ம் ம் பாடசாலையில் சேரும்போது கொடுத்த donation தொகை ஞாபகமிருக்கு.

எனக்குப் பிடிச்ச தமிழ் ஆசிரியர் றூபினி மிஸ்; அவான்ர படத்தை தேடுறன் தேடுறன் காணேல்ல. தமிழ்ப் பிரிவு என்று போட்டு ஒரு படமிருக்கு. அதில இருக்கிற ஒராளைப் பார்த்தா றூபினி மிஸ் போலவும் இருக்கு ஆனா அது அவா இல்லை. எனக்கு உண்மையா கணிதத்தில இருந்த ஆர்வம் தமிழ்ல இருக்கேல்ல.என்ன ஒரே நிறைய எழுதச்சசொல்லினம் என்று பெருசா ஆர்வமில்ல. அதோட கணிதமெண்டா எதையோ நாங்கள் தேடிக் கண்டடையிற சுகமிருக்கும். ஆனால் தமிழ்ல அப்பிடியில்ல. நிறையப் பொய்தான் சொல்ற மாதிரியிருக்கும். ஆனால் றூபினி மிஸ் நல்ல வடிவா ஆசையாத் தமிழ் படிப்பிப்பா. நான் இந்தப் பாடசாலையில போய் சேரேக்க எங்கட வகுப்பில நான் மட்டும்தான் யாழ்ப்பாணத்துப்பிள்ளை.மிச்ச எல்லாரும் அநேகமா அங்கயே பிறந்து வளர்ந்தாக்கள். பிடுங்கி நடப்பட்ட செடி வளர கொஞ்சம் கஸ்டப்படும்தானே. எனக்கு அங்க இருந்த மாணவர்களோட பெருசா ஒட்டேல்ல. அப்ப றூபினி மிஸ்தான் என்னைக் கூப்பிட்டு யாழ்ப்பாணத் தமிழ்ல கதைக்கச்சொல்லுவா. வகுப்பில யாரும் சிரிச்சால் நீங்கள் கதைக்கிறதுதான் பிழை இந்தப்பிள்ளை எப்பிடி வடிவா அறுத்துறுத்துக் கதைக்குதெண்டு சொல்லுவா. எனக்கென்னவோ நான் மட்டும் வேற்றுக்கிரகத்தில இருந்து வந்த மாதிரியிருக்கும். முதல் termல்லயே எனக்கு எல்லாப்பாடமும் நல்ல மார்க்ஸ். பிறகு நண்பர்களும் கிடைத்தார்கள். முதல்ல முறைச்சுக்கொண்டு திரிஞ்சாக்கள் எல்லாம் நண்பர்களான பிறகு சந்தோசமாப்படிச்சன்.



எனக்கு விஞ்சானம் படிப்பிச்சது விஜி(?) மிஸ். ஆளை ஞாபகமிருக்கு. இந்தப்படத்தில பச்சை சாறி - கண்ணாடி போட்டிருக்கிறா. பெரிய விருப்பம் எண்டில்ல ஆனா ஒரு பிரமிப்பு இருந்தது. அப்ப அவாக்கு என்ன ஒரு 30 வயசிருக்குமென்டு நினைக்கிறன். லண்டன்ல கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில படிச்சவா. கொஞ்சம் வித்தியாசமாத்தான் பேப்பரெல்லாம் திருத்துவா. மார்க்ஸ் எல்லாம் அள்ளி அள்ளித் தரமாட்டா. மைனஸ் மார்க்ஸ் எல்லாம் போடுவா. ஆனால் நல்லாப் படிப்பிப்பா. கரும்பலகைல வடிவாப் படம் கீறி விளங்கப்படுத்துவா. முதுகில அடிப்பா நல்லா. சும்மா கதைக்கேக்க கூட அடிச்சிடுவா. பரீட்சை முடிஞ்சு மார்க்ஸ் பார்க்கப் போகேக்க நான் பயப்பட்டுக்கொண்டு போறது இவாட்ட மட்டும்தான். என்னதான் நல்லாப் படிச்ச எழுதினாலும் மார்க்ஸ் எதிர்பார்க்கிறமாதிரி வராது.



சமூகக்கல்வி படிப்பிச்சது கமலாம்பாள் மிஸ்.இந்தப்படத்தில முதலாவதா இருக்கிறா. பள்ளிக்கூடத்துக்கு கிட்ட மிஸ்ஸின்ர வீடு. குழப்படி செய்தா தலையில குட்டுவா. அம்மா போல எல்லாப்பிள்ளையள்லயும் சரியான பாசம் அவாக்கு. அவாக்கு பொம்பிளைப்பிள்ளையள் இல்லை. ஒரேயொரு மகன்தான். கொஞ்சம் குழப்படி. எல்லா மாணவர்களின் பிரச்சனைகளும் அவாக்கு அத்துப்படி. மாணவர்களின் பெற்றோருடனும் நெருக்கமான உறவைப் பேணுவதன் மூலம் தன் மாணவிகள் எல்லாரும் நல்லாப் படிக்கோணும் என்று எப்போதும் அக்கறைப் படுபவர். நான் மீண்டும் சந்திக்கோணும் என்று நினைக்கும் ஒரு அன்புள்ள ஆசிரியர்.

இப்படி நான் அன்புடன் நினைவில் வந்து போகும் என்னுடைய பாலர் வகுப்பு ரீச்சர் மங்கையற்கரசி மிஸ் முதற்கொண்டு கணிதம் படிப்பித்த கிருஸ்ணகுமார் மாஸ்டர் வரை எல்லோரும் எனக்குப்பிடித்த ஆசிரியர்கள்.கனடாவிலும் எனக்கு நல்ல ஆசிரியர்கள் கி்டைந்திருந்தார்கள். களைச்சுப்போனன். இன்னொருநாள் ஆறுதலா எழுதிறன்.

இதையும் ஒரு தொடர்விளையாட்டாக ஆக்குவம் என்று நினைக்கிறன்.

1. உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.
2. பள்ளியில் நீங்கள் அடி/ திட்டு வாங்கிய சம்பவங்கள்
3. பிடித்த பிடிக்காத பாடசலை ரியூசன் அனுபவங்கள்
4. பப்பி லவ் கதைகள்
5. இவை தொடர்பான சுவாரிசயமான வேறு விடயங்கள்.

பற்றி எழுத நான் அழைப்பவர்கள்

1. வந்தியண்ணா
2. துளசிப் பெரியம்மா
3. எம்.ரிஷான் ஷெரீப்

Friday, September 04, 2009

ப்றும் ப்றும்

ஐயோ சிரிச்சு சிரிச்சு என்னால முடியல...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


Wednesday, September 02, 2009

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டு


எதையாவது எழுதுவம் எழுதுவம் என்டிட்டு தொடங்கி தொடங்கிப்போட்டு அப்பிடியே நிறைய drafts இருக்கு ஆனால் இது இன்டைக்கு எழுதி முடிக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன். வந்தியண்ணாக்கு ரொம்ப நன்றி.


2005 வைகாசி மாதத்திலிருந்து எழுதுறனாம் என்டு சொல்லுது என்ர தத்தக்க பித்தக்க றங்குப்பெட்டி சொல்லுது. என்ர ராசா அப்ப எழுதத் தொடங்கி 4 வருசம் முடிஞ்சா?? அடக்கடவுளே.

நான் ஏற்கனவே நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன். எண்டொரு பதிவு எழுதினான். அது எழுத வந்து 6 மாசத்தில எழுதின பதிவு.

அந்தப்பதிவு இப்பிடித் தொடங்கி

\\ வைகாசி ,இருபத்தேழாம் திகதி ,2005 தொடங்கிய என் தொடர்வண்டிப் பயணம் 50 தரிப்புகள் கடந்தும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

நிலவு நண்பனின் உதவியோடு பிரயாணத்தை தொடங்கினேன்.டி.சேயின் உதவியோடு தமிழ்மண நட்சத்திரங்களையும் சூடிக்கொண்டேன்.பிறகென்ன கிடுகிடு வேகம்தான்.இடையிடையில பயணக்கழைப்பால் தூங்கியும் இருக்கிறேன்.நித்திரை முழிச்சு வர்ற நேரத்தில நீ யார் என்று கேக்காமல் இருந்த பக்கத்துச்சீட்டு பிரயாணிகள் எல்லாருக்கும் நன்றி.

பிரயாணத்தின் போது கொஞ்ச நேரம் அலட்டியிருக்கிறன்.கொஞ்ச நேரம் படம் காட்டியிருக்கிறன்.மிச்ச நேரம் என் சிற்றறிவுக்குத் தெரிந்த சில உருப்படியான கருத்துக்களைப் பரிமாறியிருக்கிறன்.\\

இப்பிடி முடிஞ்சிருக்கு.


\\ வலைப்பதிய தொடங்கி ஆறு மாதத்தில ஐம்பத்தேழு பதிவ போட்டாச்சு மூன்று பதிவு தூக்கியாச்சு..693 பின்னோட்டம் வாங்கியாச்சு.8344 பேர் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கினம்.\\

ஐயோ ஐயோ என்ன கொடுமையிது...எப்பிடித்தான் என்ர இம்சையெல்லாம் தாங்கினிங்கிளோ:) நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க!!!

நான் பறவால்ல தம்பி கிருத்திகன் (கீத்) எழுத வந்து 6 மாசத்திலயே 140 பதிவுக்கு மேல எழுதியிருக்கிறாராம் :))

என்ர விண்ணானக் கதை :

கதையாச் சொல்றளவுக்கு எனக்குப் பெருசா ஒண்டும் ஞாபகம் இல்லை. எப்பிடி அறிமுகமாச்செண்டு தெரியேல்ல ஆனால் நிலவுநண்பனின் வலைப்பதிவில் கவிதைகள் படிக்கிற பழக்கமிருந்தது. அவருடைய வலைப்பதிவுக்கு எப்பிடிப்போனான் என்டெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால் நிலவுநண்பன் தான் வலைப்பதிவு எப்பிடி ஆரம்பிக்கலாம் என்டெல்லாம் சொல்லித்தந்தவர். அவருக்கு நன்றி. எழுத வர பெரிசா ஒரு காரணமும் இல்லை. இதுவரை எழுதினவை சொல்ற மாதிரி தனிமையெல்லாம் இல்லை. ஆனால் தமிழ் கதைக்க ஒருதரும் இல்லாததாலயா இருக்கலாம்.அதுக்குப்பிறகு நடந்த எல்லாம் தான் உங்களுக்குத் தெரியும்தானே.

இங்க கனடாவில 'தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி' என்ற கல்லூரியில் தமிழ் படிச்சனான். அங்க ஒரு ஒப்படை தந்தவை. 10 தலைப்பு தந்து அதில் ஒன்றைத் தெரிவு செய்து ஒரு நூல் மாதிரிச் செய்யவேணும். நான் தெரிவு செய்த தலைப்பு " தமிழீழ விடுதலைப்போராட்டம் - தோற்றமும் வளர்ச்சியும்". அந்த ஒப்படைக்காக நான் இணையங்களில் தேடல் புரிந்த காலம் 2001. இப்ப யோசிக்கிறன் நான் எப்பிடித் தேடியிருப்பன் எண்டு. ஆனால் எனக்கு அப்பவே யுனிகோட்ல ரைப் பண்ணத் தெரிஞ்சிருக்குமோ??? சந்தேகமா இருக்கு.

ஓகே இங்க இருந்து தட்டச்சு அனுபவம் தொடங்குது சரியா :)

அந்தக்கல்லூரியில நான் தொண்டராவும் வேலை செஞ்சனான் அப்ப அங்க தமிழ் கீபோட் இருந்தது. அதிலதான் நான் தமிழ் ரைப்பிங் பழகினான். யாரும் எனக்குச் சொல்லித் தரேல்ல ஆனால் ஒருநாள் பொழுது போகாமல் ஒரு தட்டில இருந்த தமிழ் கீபோட் எடுத்துக் கொழுவி கையிலயும் பாமினி எழுத்துரு மாதிரி ஒரு பிறின்ர் அவுட் எடுத்து வைச்சுக்கொண்டு என்னென்னவோ முயற்சியெல்லாம் செய்து நான் ரைப்பிங் பழகினான். நான் சொன்ன அந்த தமிழ்ப் பாடம் ஒரு வருசக் course. வருசக்கடைசிலதான் அந்த ஒப்படை குடுக்கோணும். மிச்சாக்கள் எல்லாம் வேற ஆக்களிட்ட குடுத்து ரைப் பண்ணினவை. அக்கா கையால எழுதிக்குடுத்தவா ( அவான் கையெழுத்து கையால எழுதினாலே ரைப் பண்ணினது போலதானிருக்கும்)

நான் ஏதோ வெறி பிடிச்சது போல நிறைய ரைப்பினான். அம்மா அப்பா மாமா சித்தப்பாவைக்கெல்லாம் அந்த நேரம் எவ்வளவு விசராயிருந்திருக்கும் என்று யோசிக்கிறன். கொஞ்சநாளா அவையை நான் படுத்தின பாடு. பழைய வரலாறு ஒண்டும் தெரியாது தானே அதால குட்டி மணி யாரு? குமரப்பா யாரு என்டு அவையளைப்போட்டு படுத்தியெடுத்திட்டன்.
கடைசில என்ர ஒப்படை 150 பக்கத்துக்கு கிட்ட வந்திட்டுது. எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது. தங்கப்பதக்கம் எல்லாம் தந்தவை ஆனால் அதுக்குப்பிறகுதான் சோகம். ஒரு கண்காட்சி வைச்சவை அப்பத்தான் என்ர ஒப்படையைக் கண்ணால பார்த்தனான். அதுக்குப்பிறகு நோர்வேக்கு அனுப்பிட்டம் அங்க அனுப்பிட்டம் இங்க அனுப்பிட்டம் ...எடுத்துத்தாறம் எண்டிச்சினம். கடைசி வரைக்கும் அதைத் தரவேயில்லை. அது என்ர எத்தின நாள் உழைப்பு. இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.

அப்ப நான் அந்த ஒப்படையை பாமினி எழுத்துருவிலதான் ரைப் பண்ணினான்.அந்த ஒப்படையைத் திருத்தின ஒரு ஆசிரியர்களில் ஒருவரை அண்மையில சந்திச்சனான். கேக்கணுமென்டு நினைச்சனான் என்ர ஒப்படைக்கு என்ன நடந்தது விபரம் ஏதும் உங்களுக்குத் தெரியுமா என்டு ஆனால் அவேன்ர பின்னவீனத்துவம் பெருங்கதையாடல் எல்லாம் கேட்டதில எனக்கு மூளை விறைச்சுப்போய் எல்லா தொழிற்பாடுகளும் நிண்டிட்டு. ஒன்டுமே கேக்கேல்ல நான்.

வாசிக்கிறாக்கள் நல்லா நற நறக்கிறீங்கிளா?? பதிவெழுத வந்த கதையைச் சொல்லச்சொன்னா இதென்ன கதையென்டு :))

நான் வலைப்பதிவெழுத முதலே யாழ் இணையத்தில் இணைந்திருந்தேன் ஆனால் அங்கும் ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் பாமினியில் எழுதினால் யுனிகோட்டுக்கு மாற்றலாம் என்று தெரிந்திருந்தது. அதனால் யாழ் மற்றும் சுரதா அண்ணாவின் உருமாற்றிப் பாவித்துத்தான் என்னுடைய முதல் பதிவை எழுதினான். பிறகு யாரோ ஈ கலப்பை பற்றிச் சொல்லித் தந்ததால் இப்ப அதான் பாவிக்கிறன். ஆனால் இந்தக் கலப்பையிலயும் மாடு என்னவோ பாமினிதான். நான் குழப்பியடிக்கிறனோ தெரியா ஆனால் இந்த தொழில்நுட்ப விசயங்கள் பெரிசா தெரியாது. இப்பவும் பாமினியில் ரைப் பண்ணும்போது அ=m , k=ம் , kh=மா என்று எழுதினனோ அதையேதான் செய்றன் ஆனால் என்ன மேல ஒரு பெட்டி கீழ ஒரு பெட்டியெண்டில்லை. ஆங்கில எழுத்திலும் ( comma) போன்றவை எல்லாம் இலகுவாக எழுத முடியுது. அது ஒரு பெரிய நன்மை.


பின்னோட்டங்கள் மற்றும் அனுபவங்கள்.


நான் எழுத வந்த புதிசில சரியான ஓட்டைவாய். நிறைய அலட்டுவன். அதால நல்லதும் நடந்திருக்கு கெட்டதும் நடந்திருக்கு. நிறைய நண்பர்கள் அண்ணர்கள் அக்காக்கள் ஏன் தாத்தா கூட கிடைத்தார். நிறையப்பேர் பின்னோட்டம் போட்டு தனிப்பட்ட முறையிலும் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் எழுதத் தொடங்கினான். அப்ப இருந்த வேகம் இப்ப இல்லை. நேரமும் இல்லை. மற்றது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலும் சில மிரட்டல்கள் எல்லாம் அனுப்பினார்கள். எனக்கு மட்டுமில்லாமல் எனக்கு நண்பர்களாக இருந்தவர்களையும் சிலர் காயப்படுத்தினார்கள். என்னிடம் ஐபி பார்க்கும் வசதி இருந்ததில்லை. யார் இதெல்லாம் செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை நான்.

என்னுடைய அலட்டல் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் சிலர். உளவியல் தொடர்பான பதிவுகளை வாசிப்பவர்கள் சிலர். ஒரு சிலர் இரண்டு விதமான பதிவுகளையும் வாசிப்பார்கள். இப்பிடி 2ஐயும் வாசித்து என்னை அடிக்கடி பப்பாவில் ஏத்துறவா சந்தனமுல்லை :)) இன்னும் எனக்கு உறுதுணையா இருந்தவர்கள் இருப்பவர்கள் நிறையப்பேர்.

அண்மையில் என்னைக் கொஞ்சம் பாதித்த யோசிக்க வைத்தது ஒரு பின்னோட்டம். அண்மையில் நான் "உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்" என்றொரு பதிவெழுதினான். அதில் நான்

\\அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.\\

என்று எழுதியிருந்தேன். இதற்கு ஒரு கேவலமான பின்னோட்டம் வந்திருந்தது. இதற்கு நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அந்தப்பின்னோட்டத்தை வாசித்ததும் கவலையா இருந்தது. பிறகு அதை நான் மறந்திட்டன். ஆனால் இந்தப் பதிவு எழுத தொடங்கினதும் அந்தப்பின்னோட்டம் ஞாபகம் வந்திட்டுது.

இன்னும் சில அனுபவங்கள்
ஆக்களின்ட உண்மையான பெயர் போட்டு பதிவெழுதிய அறிவுக்கொழுந்து நான். வெள்ளவத்தை ராமகிருஸ்ணமிஸனில் ஒன்றாகத் தங்கியிருந்த அக்கா ஒருவர் நான் என் ரீச்சர் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு மூலம் என்னை அடையாளம் கண்டு கொண்டிருந்தார்.

" ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!" என்டொரு பதிவு எழுதினேன். வலைப்பதிவுகள் மூலமாக அறிமுகமான ஒரு அண்ணா மூலம் அவளுடன் எப்படியும் தொடர்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தேன் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அவள் உயிரோடு இருந்தால் போதும்.

* வலையுலகில் அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்திந்திருக்கிறேன். அது பற்றி பின்னர் ஆறுதலாக எழுதுகிறேன்.


கதை சொல்ல நானழைப்பவர்கள் :


1. சந்தனமுல்லை

2. சகாராத்தென்றல்

3. ஆயில்யன்

4. கோபிநாத்

5. வி.ஜே. சந்திரன்

6. அகிலன்

7. சோமிதரன்

8. கலை

9. தமிழ்நதி

10. டிஜே

11. நிவேதா - ரேகுப்தி



உங்களுக்கான விதிமுறைகள்: ஆனால் நீங்க எப்பிடி வேணுமென்டாலும் எழுதுங்கோ :)

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.