Custom Search

Monday, June 25, 2007

புதிர் மனிதர்கள்

போன வாரம் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவம் என்னை யோசிக்க வைத்தது.நீங்களும் இப்படியானவர்களை நிச்சயம் சந்தித்திருப்பீர்கள்.

எங்கள் பார்வைக்கு அந்த மனிதனின் செய்கைகள் பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தன.ஒருவேளை drugs அடிச்சிட்டு வந்திருக்கிறானோ என்றுகூட நான் நினைத்தேன்.இரவு பத்து மணிக்கு பேருந்தில் இருக்கிறவர்களின் காலைத் தட்டிவிட்டிட்டு நிலத்தில கிடக்கிற அழுக்குகளை வெறும் நகத்தால் சுரண்டி எடுத்து ஒரு இடத்தில் போட்டுச்சேர்க்கிறான்.பிறகு காற்சட்டைப்பொக்கற்றில கையை விட்டு வெறும் தண்ணிப்போத்தலை எடுத்து தண்ணி இருக்கிற மாதிரி பாவனை செய்து குடிக்கிறான்.சிகரட்டை எடுத்து பிச்சு பிச்சு தான் சேர்த்து வைச்ச அழுக்கு கும்பிக்கு மேல போடுறான்.பிறகு பக்கத்தில இருக்கிற ஆளிட்ட சிகரட் கேக்கிறான் அவர் தன்னட்ட சிகரெட் இல்லை என்று சொன்னதும் தன்னட்ட இருக்கிற மற்ற சிகரெட்டையும் பிச்சு பிச்சுப் போடுறான்.இவ்வளத்தையும் நான் அவனுக்குப்பின்னால இருக்கிற சீற்ல இருந்து பார்த்துக்கொண்டிருந்தனான் கொஞ்ச நேரத்தில அவன் எனக்குப் பக்கத்தில வந்திருந்துகொண்டு அந்த இடத்தில நிலத்தில இருக்கிற அழுக்கைச் சுரண்டத் தொடங்கிட்டான்.அவன் அங்கால இங்கால திரும்பிறதும் என் காலுக்குப் பக்கத்தில கையை விடுறதும் ஐயோ..எனக்குப் பயம் பிடிச்சிடுச்சு.அவன் ஒருக்கால் மற்றப்பக்கம் திரும்பினதும் என்னை விட்டாக்காணும் என்று நான் எழும்பிப்போய் ஒரு அன்ரிக்குப் பக்கத்தில போய் இருந்தன்.அவா சொன்னா பயப்பிடாத நானும் அவனுக்குப்பக்கத்தில இருந்திட்டுத்தான் எழும்பி வந்தனான்.அவன்ர செய்கைகள் எல்லாம் விசித்திரமாக்கிடக்கு.அவனுக்கு மூளைக்கோளாறோ தெரியேல்ல என்று.

கோடைக்கேற்றறதுபோல உடுப்பு போட்டிருக்கிறான்.ipod ல பாட்டுக்கேக்கிறான்.உடம்பு முழுக்க tatoo..பார்க்க நல்லாத்தானே இருக்கிறான்.ஒரே விசயத்தைத் திரும்ப திரும்ப செய்யுறான் ஒருவேளை Obsessive-Compulsive Disorder மாதிரி என்னவும் இருக்குமோ என்று நான் யோசிச்சுக்கொண்டிருக்கவே அவன்ர ஸ்ரொப் வந்திட்டுப்போல இறங்கிப்போட்டான்.கொஞ்ச நேரத்தில நாங்கள் இருந்த பக்கத்துக்கு வந்த டிரைவர் கேட்டா இங்க என்ன நடந்தது? நாங்கள் அவாக்கு விளக்கம் சொல்ல அவா சொன்னா அவன் இறங்கிப்போகேக்க தன்னட்ட "பஸ் சரியான ஊத்தையா இருக்கு ஒருக்கா கிளீன் பண்ணனும்" garageக்கொண்டு போங்கோ "என்று சொல்லிட்டுப் போறானாம்.அவனை என்னவோ நினச்சோம்....

13 comments:

Anonymous said...

இதுதான் பெரியவர்கள் சொன்னார்கள் "கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரப்பதேமேல்!" என்று. இப்பிடித்தான் நீங்களும் ஏதும் செய்ய யாரும் நினைப்பினம். ஒருத்தன சமுதாயத்தில பற்றா இருக்க விடமாட்டீங்க போல இருக்கே!!

ஏக்கத்துடன்....

Vasaki said...

ம் பஸ்,ரயில் பயணங்களில் இப்படியானவை சகஜமா போயிடுச்சு என்ன.

ஆனால்..அவர் ஏன் மற்றவரிடம் சிகரெட் கேட்டார்?? தன்னோடதை பிச்சு போட்டார்? அதுதன் விளங்கல எனக்கு

Anonymous said...

அதென்னங்கோ Obsessive-Compulsive Disorder? நமக்கும் விளங்கிற மாதிரி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ!

நீங்கள் சொல்லிற ஆள் ஒரு Homelees people ஆ இருக்கலாம். உவங்கள் பஸ்ஸுக்க, தெருவில செய்யுற சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

ஆம்பளை எனக்கே உவங்கள் செய்யுற சேட்டைகள பார்க்க வயிற்றக் கலக்கும். நீங்கள் கொஞ்சம் துணிஞ்ச கட்டை போல இருக்கிறீங்கள்!

ஒருவன் குடிச்சுப்போட்டு நிலத்தில எறியிற சிகரட் துண்ட இன்னொருவன் ஓடிப்போய் பொறுக்கி பொக்கற்றுக்க வைப்பான். இப்படி கருமங்கள நான் சிறீ லங்கா நாட்டில கூட காணேல, ஆனா கனடாவில பார்க்க வேண்டி இருக்கு. கவர்மெண்ட் தான்பார்த்துகீத்து இவங்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேணும்.

நான் டொரண்டோவின்ர மேயரா வந்தா இல்லாட்டி கனடா பிரதமரா ஒரு காலத்தில் வந்தா உதைத்தான் முதலில செய்வன். இவங்கள் தொல்லை தாங்க முடியவில்லை. நான் இருக்கும் ஏரியா அப்படி!

நான் எலெக்சனில ஒரு கண்டிடேட்டா நிண்டா சினேகிதி எனக்கு வோட்டு போடுவீங்கள் தானே? சிகரட் அடிக்கட்டையைதான் கட்சி சின்னமா வைக்கவேணும் போல இருக்கு!

கொழுவி said...

//ஆம்பளை எனக்கே //

அதென்ன ஆம்பிளை எனக்கே.....
ஆம்பிளையெண்டால் பெரிய கொம்பா முளைச்சிருக்கு---

பத்த வைச்சிருக்கு.. பாப்பம்..

Anonymous said...

அண்ணே Hook,

ஆம்பளை என்றால் தெரியாதோ? விளக்கம் வேற வேணுமோ? லிப்கோ இல்லாட்டி ஒக்ஸ்போர்ட் டிக்சனரிய புரட்டி பாருங்கோ ஆம்பளைக்கு என்ன விளக்கம் எழுதி இருக்கிறாங்கள் என்று..

நமக்கு கொம்பு ஒன்றும் முளைக்கவில்லை.. இருக்கிற மயிர் கொட்டுப்பட்டு கெதியில் மொட்டை விழும்போல இருக்கு! சந்தோசம்தானே?

எத பத்தவச்சு இருக்கிறீங்கள்? நான் நினைச்சன் நீங்கள் கொழுவி வைப்பீங்களாக்கும் என்று.. உங்கள் பெயரை தீக்குச்சி என்று மாற்றினால் சூப்பராக இருக்கும்.

Vishnu said...

இது மாதிரி நிறைய ஆட்களை நானும் பார்க்கிறனான்.. அnனிக்கு ரெயில இருக்க.. ஒருதர் கதவை திறந்திட்டு போனார். அது தானா மூடுற கதவு.. அது மூடுற டைம்ல இன்னொருவர் அதால கடந்தார். கதவு ஆளுக்கு இடிச்சுப் போட்டுது. திரும்ப தள்ளினால் கதவு போகும். பட் அவருக்கு கோபம் வந்திட்டுது.. கதவை தள்ளி நெளிச்சுப்போட்டு போனார்.. நானும் பக்கத்த இருந்தவங்களும் சிரிச்சம்.. அது ஆளுக்கு கோபம் வந்திட்டுது.. வந்து அடிக்கிறமாதிரி நிண்டார்.. பிறகு கதவில உதைஞ்சிட்டு போயிட்டார்.. இவருக்கு என்ன பிரச்சினையோ...

இதுகளை பாத்து கஸ்ட படுறதை விட.. ஒரு புத்தகம் கொண்டு போய் வாசிக்கலாம்..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மே. இசக்கிமுத்து said...

மனிதர்கள் பலவிதம்!! இவர்களை மாதிரி சமுதாயத்தில் பலரை பார்க்கலாம்!! என்ன சொல்வது!!

சினேகிதி said...

இசக்கிமுத்து வாங்கோ!ஏதோ படத்தில கேள்விப்பட்ட பெயருங்கட பெயர்.