Custom Search

Wednesday, July 18, 2007

நானும் வாறன் போட்டிக்கு....

பெருந்தலைகளைப் பகைச்சுக்க வேண்டாம் என்று என்னை மிரட்டி எனக்குள்ள நித்தா கொண்ட மிருகத்தை தட்டி எழுப்பிட்டார் ஒரு பெரும்புள்ளி அதால நானும் வாறன் புகைப்படப்போட்டிக்கு..இந்தாங்கோ படங்கள்.ஆமா யார் நடுவர்???



வெண்பனியின் வெண்மை அழகா? உன் புன்னகையின் வெண்மை அழகா?




இரட்டை நிலவு - ஒற்றைக் கனவு



அத்தி கானாப்பிரபா மாமா வின் பண்ணட்டும் என்னைப் படம் எடுக்காதயுங்கோ என்னைத் தூக்குங்கோ:-)

8 comments:

கொண்டோடி said...

//வெண்பனியின் வெண்மை அழகா? உன் புன்னகையின் வெண்மை அழகா?//

அம்மணி,
அந்தப் படத்தில தெரியிறது புன்னகை இல்லை. உப்பிடி வாய்கிழியச் சிரிச்சுக்கொண்டு அதை 'புன்னகை' எண்டு சொல்லிறது புன்னகை வரவழைக்குது.

வேணுமெண்டால் பெருநகை எண்டு சொல்லலாம்.

கானா பிரபா said...

திரும்பவும் சொல்றன், பெரிய மனுஷங்களைப் பகைச்சுக்காதீங்க, போட்டீல இருந்து வாபஸ் வாங்குங்க, எவ்வளவு சூட்கேசெண்டாலும் தருவம்

இது எச்சரிக்கை இல்லை வேண்டுகோள் ;-)

சினேகிதி said...

prabanna ipidi pali vangidengelea...karu iyatkai endu solamal vididingela :-((( enada oru mayil padam iruku and oru lake da padamaum irukanum thedi eduthu podu ungalai thurutharun paarungo podila irunthu!

கானா பிரபா said...

நான் அப்பவே சொன்னனான் தானே?

இயற்கை எண்டு சொன்னால், ஷாமும் குட்டி ராதிகாவும் இருக்கிற சினிமா ஸ்ரில் போட்டுடுவீங்கள்,

காரூரன் said...

சினேகிதி,

சிரிப்புக்களுக்குள் மழலையின் சிரிப்புக்கு நிகர் ஏது?

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இதுக்கும் சொதி தானா?

வாழ்த்துக்கள்.

கொழுவி said...

ஏதோ உங்கட லக்.. நாங்கள் போட்டியில கலந்து கொள்ளாமல் இருக்கிறது.. பொழச்சு போங்கோ.. வருவம் ஒரு நாளைக்கு..

சினேகிதி said...

கரூரன் & கொழுவி!
ஏதோ உங்கட ஆசீர்வாதத்தில நடுவர்கள் தங்கள் விதிமுறைகளைக் கொஞ்சம் தளர்த்தி போட்டிக் கருவான "இயற்கையோடு" மழலைகளையும் சேர்த்துக்கொண்டால் எனக்குப் பரிசு கிடைக்கலாம் ஐ மீன் சொதி கிடைக்கலாம் அப்பிடிக் கிடைச்சா கரூரரனுக்குக் கட்டாயம் தாறன்.

Anonymous said...

குழந்தை கொள்ளை அழகு :)