எனக்குக் கேட்டிச்சு!
இரவு நேரப் பயணம் ஒன்றின் போது வீடுபோய்ச் சேர இன்னும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்கிறதே என தூங்க முயற்றி செய்து கொண்டிருந்த போது என்னை ஈர்த்த உரையாடலிது.முன்னாலிருந்தவர்கள் புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடி என்று நினைக்கிறேன்.நான் பின்னாலிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லையோ அல்லது என் காதில் இருந்த ஹெட்போனைப் பார்த்துவிட்டு எனக்குக் கேக்காதென்று நினைத்துக் கதைத்தார்களோ யாமிறியோம் பராபரமே.
பெண் : தள்ளி இருடா எனக்கு விசரக் கிளப்பாத!
ஆண்: தொடங்காத இப்ப.இப்ப நான் என்னத்த செஞ்சிட்டன் என்று மூஞ்சை இந்தளவுக்கு நீண்டிருக்கு.
பெ : நான் ஆசையா வாங்கின அந்த கிளாஸ் வாஸை கவனமா வச்சிருக்கத்தெரியாம அதை ரெயின்ல ஏற முதலே உடைச்சுப்போட்டு இப்ப ஒன்றுமே நடக்காத மாதிரிக் கேள்வி வேற.
ஆ: இப்ப என்ன அந்தக் கிளாஸ் போலவே நாளைக்கே நானொன்று வேண்டித்தந்தா சரியா.
பெ :
ஆ: என்ன சத்தத்தையே காணம்.
பெ:
ஆ:ஓகே என்னோட கதைக்கவேண்டாம்.நானிந்தப் பேப்பரோட கதைக்கிறன்.
ஹேய் சுபோ இங்க பார் இன்றைக்கு யாரோ ஒரு தமிழாள் தன்ர மகள் மகளி்ன்ர boy friend மற்றது இன்னும் சில பெடியளுக்கு மேல ஜீப் ஏத்தினதென்று காலம நியூஸ்ல சொன்னதெல்லா அதப்பற்றி இதில இருக்கு.ம் ம் எல்லாரும் என்ன மாதிரி நல்லவனா இருப்பினமா.அத்தைன்ர நல்ல மனசுக்கு என்னைப்போல ஒரு தங்கமான மருமகன் வந்து வாச்சிருக்கிறன்.எனக்குத்தான் குடுப்பின இல்ல அத்தை மாதிரி இல்லாம இப்பிடி ஒருத்தி எனக்கு பொண்டாட்டியா வந்து வச்சிருக்கு. oh no அந்தப்பெடியன்ர படம் போட்டிருக்கு.பெடியன வடிவாப்பார் உங்கட சொந்தக்காரப் பெடியன் நிமால் மாதிரிக்கிடக்கு!
பெ: வட் ? காட்டுங்கோ ஒருக்கா.அவன்தான்.ஐயோ பாவம் சுகுணான்ரி.அம்மாக்குத் தெரியுமோ தெரியாது.அம்மாக்கொருக்கா போனடியுங்கோ.
பெ: ஹலோ அம்மா நியூஸ் கேட்டனீங்கிளே.ஜீப்பால ஏத்தினது நிமாலுக்கம்மா.பேப்பரில படம் கிடக்கு.பாவமம்மா அவை.சுகுணான்ரி வேற இப்பத்தான் ஓரளவுக்குச் சுகமாகிக்கொண்டு வாற இதைப் பார்த்தா திரும்ப ஹோமாவுக்கே போடுவா.நிமாலுக்கு மண்டைக்க ஓன்றுமில்லையே.ஏற்கனவே அவன் அந்த gang பெடியங்களக் காட்டிக்குடுத்ததென்று அவங்கள் அவனுக்குக் குறி வச்சுப் போட்ட fire bomb ஆல அம்மாவும் தங்கச்சியும் எரிகாயங்களால ஹொஸ்பிற்றல்ல இருக்கினம் இந்த நேரத்தில இவனேன் girl friendஓட பார்க்குப் போனவன்.
(கதை கேக்க நான் பாட்டை pause பண்ணிட்டுக் கதை கேட்டுக்கொண்டிருந்தன் ஆனாலும் அம்மா கதைக்கிறது எனக்கு கேக்கல)
பெ: ஓமண சண் பேப்பரில கவர் ஸ்ரோரியே இதான்.அந்த girl இரண்டு நாளா வீட்டயே போகேல்லயாம்.தாயும் தேப்பனும் தமக்கையும் தேடித்திரிஞ்சவையாம் இவன்ர ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கிற பார்க்ல இரண்டுபேரும் வேற சில பிரண்ட்ஸ்ம் கதைச்சுக்கொண்டிருந்தவையாம்.கண்ட உடன கோவத்தில அப்பிடியே கொண்டுபோய் ஜீப்பை ஏத்திப்போட்டாராம்.படத்தில நிமால் போட்டிருந்த உடுப்பெல்லாம் கிளிஞ்சுபோய் அழுதுகொண்டிருக்கிறான் .பார்க்கவே விசராக்கிடக்கு.நான் பேப்பர் கொண்டுவாறன் பாரண நீயே.
பெ: தேப்பனைப் பொலிஸ் பிடிக்கேக்க டான்ஸ் ஆடினவராம் சிரிச்சவராம் என்று பொலிஸ் மென்ரல் அசெஸ்மென்ற் கேட்டிருக்கினமாம்.
ஏனம்மா அவைக்கு மட்டும் இப்பிடியெல்லாம் நடக்குது.எனக்குத் தெரிஞ்சு நிமால் நல்ல பெடியன் தானே.இப்ப பாருங்கொ இந்த girl friend பிரச்சனையாலதான் fire bomb போட்டதென்டு கதைக்கப்போகுதுகள் சனங்கள்.சும்மாவே சிங்கள gang ஒன்றும் இல்லாம் தமிழ் gang தான் என்று சொல்லிக்கொண்டு திரியிறவைக்கெல்லாம் இது அவல் குடுத்த மாதிரி. ம் சரி கொஞ்ச நேரத்தில வீட்ட வாறம்.bye.
ஆ: நிமால் பாவம்.அந்த girl ன்ர தேப்பன் இனி வெளில வாறது கஸ்டம் தான்.
பெ: கோவத்தில இல்லாட்டி மனவுளைச்சல் அதுஇதென்று சொல்லி வெளில வந்தால்?
ஆ: நான் நினைக்கேல்ல. triple attempted murder!
பிறகு அவைன்ர ஸ்டாப் வந்திட்டு இறங்கிப்போட்டினம்.
7 comments:
அநாநிஸ் 2 கொமன்ற் போட்டது ஒராளா இல்ல வெவ்வேற ஆளா தெரியாது 2 கொமன்ற்ஸ் வெளியிடபட்படவில்லை மன்னிக்கவும்!
கோபத்தில் மனிதர்களின் வேகம் விவேகத்தை குறைத்துவிடுகிறது!. பேசி தீர்க்க கூடிய விடயங்களை ஒரு தொடர் பிரச்சனையாக்கி விடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் "கமலம்" கொலை வழக்கு எத்தனை உயிர்களை எடுத்தது. "மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்" ஆய்வுக்கு தேவை அதிகரித்துவிட்டதோ?
ஒண்டு சொல்லுறனுங்கோ.. ஒட்டுக் கேக்குறது கெட்ட பழக்கம்.. அதை இப்புடி வலையடிச் சந்திக்கு கொண்டு வாறது..?? அதை இனித்தான் முடிவு செய்யணும். :) - சோழியான் .
என்ன சோழியனண்ணா என்ன முடிவ பண்ணனும்? என்ன தண்டனை குடுக்கிறதெண்டா?
அநாநி இந்தக்கமலம் கொலைவழக்கு வழக்கு என்று எல்லாரும் சொல்றீங்க ஆனால் யாருமே முழு விபரமும் சொல்லாயிங்கிளாம்!
//இந்தக்கமலம் கொலைவழக்கு வழக்கு என்று எல்லாரும் சொல்றீங்க ஆனால் யாருமே முழு விபரமும் சொல்லாயிங்கிளாம்//
சிநேகதி இந்த பதிவிலை கொஞ்சம் இதை பற்றி கிடக்கு இங்கே அழுத்தவும்
ஏன் எல்லாரும் அநாநியா வாறீ்ங்கள்..நான் பாவம்தானே உங்கட பேரிலயோ வாங்கோவன்!
இனைண்புக்க நன்றி அநாநி!
Post a Comment