Custom Search

Friday, September 11, 2009

பள்ளிப் பயின்றதொரு காலம் - தொடர் விளையாட்டுஇந்தக்கிழமை நிறைய ஆசிரியர் பற்றிய பதிவுகள் வாசிச்சிட்டன். ஆயில்யான் சந்தனமுல்லை மற்றும் சிலர் ஆசிரியர் பற்றி எழுதியிருந்தார்கள்.அதெல்லாம் வாசிச்சிட்டு ஆசிரியர்களின் நினைவுகளுடன் கூகிலில் நான் படித்த பாடசாலை மற்றும் ஆசிரியர்களின் பெயர்களைப்போட்டுத் தேடினேன். யாழ்ப்பாணத்தில் படிப்பித்த ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை ஆனால் ஒரு சந்தோசமான ஆச்சரியம் நான் மாத்தளையில் படித்த பாக்கியம் தேசியக் கல்லூரிக்கு ஒரு இணையத்தளமே உருவாக்கியிருக்கிறார்கள். அநேகமா இந்த வருடம்தான் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால் நான் போன வருடமும் தேடிய ஞாபகம் உண்டு.

மலையகப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கென்று ஒரு தனி domain வழங்கப்பட்டிருக்கிறது போல. சில பாடசாலைகள் தங்களுக்கென்று இணையத்தளம் அமைத்திருக்கிறார்கள். நேற்று கனநேரமா இந்த இணையத்தளத்தில் போய் படம் பார்க்கிறதிலேயே செலவழிச்சன். ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நான் பழைய ஞாபகங்களையெல்லாம் கொண்டுவர முயற்சி செய்தேன்.

முதல் பக்கத்திலயே சிரிச்சுக்கொண்டு நிண்டவா பள்ளிக்கூட அதிபர். அவாவையும் அவான்ர மகன் மகளையும் ஞாபகமிருக்கு.மற்றம்படி பெருசா ஒன்டும் ஞாபகமில்ல...ம் ம் பாடசாலையில் சேரும்போது கொடுத்த donation தொகை ஞாபகமிருக்கு.

எனக்குப் பிடிச்ச தமிழ் ஆசிரியர் றூபினி மிஸ்; அவான்ர படத்தை தேடுறன் தேடுறன் காணேல்ல. தமிழ்ப் பிரிவு என்று போட்டு ஒரு படமிருக்கு. அதில இருக்கிற ஒராளைப் பார்த்தா றூபினி மிஸ் போலவும் இருக்கு ஆனா அது அவா இல்லை. எனக்கு உண்மையா கணிதத்தில இருந்த ஆர்வம் தமிழ்ல இருக்கேல்ல.என்ன ஒரே நிறைய எழுதச்சசொல்லினம் என்று பெருசா ஆர்வமில்ல. அதோட கணிதமெண்டா எதையோ நாங்கள் தேடிக் கண்டடையிற சுகமிருக்கும். ஆனால் தமிழ்ல அப்பிடியில்ல. நிறையப் பொய்தான் சொல்ற மாதிரியிருக்கும். ஆனால் றூபினி மிஸ் நல்ல வடிவா ஆசையாத் தமிழ் படிப்பிப்பா. நான் இந்தப் பாடசாலையில போய் சேரேக்க எங்கட வகுப்பில நான் மட்டும்தான் யாழ்ப்பாணத்துப்பிள்ளை.மிச்ச எல்லாரும் அநேகமா அங்கயே பிறந்து வளர்ந்தாக்கள். பிடுங்கி நடப்பட்ட செடி வளர கொஞ்சம் கஸ்டப்படும்தானே. எனக்கு அங்க இருந்த மாணவர்களோட பெருசா ஒட்டேல்ல. அப்ப றூபினி மிஸ்தான் என்னைக் கூப்பிட்டு யாழ்ப்பாணத் தமிழ்ல கதைக்கச்சொல்லுவா. வகுப்பில யாரும் சிரிச்சால் நீங்கள் கதைக்கிறதுதான் பிழை இந்தப்பிள்ளை எப்பிடி வடிவா அறுத்துறுத்துக் கதைக்குதெண்டு சொல்லுவா. எனக்கென்னவோ நான் மட்டும் வேற்றுக்கிரகத்தில இருந்து வந்த மாதிரியிருக்கும். முதல் termல்லயே எனக்கு எல்லாப்பாடமும் நல்ல மார்க்ஸ். பிறகு நண்பர்களும் கிடைத்தார்கள். முதல்ல முறைச்சுக்கொண்டு திரிஞ்சாக்கள் எல்லாம் நண்பர்களான பிறகு சந்தோசமாப்படிச்சன்.எனக்கு விஞ்சானம் படிப்பிச்சது விஜி(?) மிஸ். ஆளை ஞாபகமிருக்கு. இந்தப்படத்தில பச்சை சாறி - கண்ணாடி போட்டிருக்கிறா. பெரிய விருப்பம் எண்டில்ல ஆனா ஒரு பிரமிப்பு இருந்தது. அப்ப அவாக்கு என்ன ஒரு 30 வயசிருக்குமென்டு நினைக்கிறன். லண்டன்ல கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில படிச்சவா. கொஞ்சம் வித்தியாசமாத்தான் பேப்பரெல்லாம் திருத்துவா. மார்க்ஸ் எல்லாம் அள்ளி அள்ளித் தரமாட்டா. மைனஸ் மார்க்ஸ் எல்லாம் போடுவா. ஆனால் நல்லாப் படிப்பிப்பா. கரும்பலகைல வடிவாப் படம் கீறி விளங்கப்படுத்துவா. முதுகில அடிப்பா நல்லா. சும்மா கதைக்கேக்க கூட அடிச்சிடுவா. பரீட்சை முடிஞ்சு மார்க்ஸ் பார்க்கப் போகேக்க நான் பயப்பட்டுக்கொண்டு போறது இவாட்ட மட்டும்தான். என்னதான் நல்லாப் படிச்ச எழுதினாலும் மார்க்ஸ் எதிர்பார்க்கிறமாதிரி வராது.சமூகக்கல்வி படிப்பிச்சது கமலாம்பாள் மிஸ்.இந்தப்படத்தில முதலாவதா இருக்கிறா. பள்ளிக்கூடத்துக்கு கிட்ட மிஸ்ஸின்ர வீடு. குழப்படி செய்தா தலையில குட்டுவா. அம்மா போல எல்லாப்பிள்ளையள்லயும் சரியான பாசம் அவாக்கு. அவாக்கு பொம்பிளைப்பிள்ளையள் இல்லை. ஒரேயொரு மகன்தான். கொஞ்சம் குழப்படி. எல்லா மாணவர்களின் பிரச்சனைகளும் அவாக்கு அத்துப்படி. மாணவர்களின் பெற்றோருடனும் நெருக்கமான உறவைப் பேணுவதன் மூலம் தன் மாணவிகள் எல்லாரும் நல்லாப் படிக்கோணும் என்று எப்போதும் அக்கறைப் படுபவர். நான் மீண்டும் சந்திக்கோணும் என்று நினைக்கும் ஒரு அன்புள்ள ஆசிரியர்.

இப்படி நான் அன்புடன் நினைவில் வந்து போகும் என்னுடைய பாலர் வகுப்பு ரீச்சர் மங்கையற்கரசி மிஸ் முதற்கொண்டு கணிதம் படிப்பித்த கிருஸ்ணகுமார் மாஸ்டர் வரை எல்லோரும் எனக்குப்பிடித்த ஆசிரியர்கள்.கனடாவிலும் எனக்கு நல்ல ஆசிரியர்கள் கி்டைந்திருந்தார்கள். களைச்சுப்போனன். இன்னொருநாள் ஆறுதலா எழுதிறன்.

இதையும் ஒரு தொடர்விளையாட்டாக ஆக்குவம் என்று நினைக்கிறன்.

1. உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.
2. பள்ளியில் நீங்கள் அடி/ திட்டு வாங்கிய சம்பவங்கள்
3. பிடித்த பிடிக்காத பாடசலை ரியூசன் அனுபவங்கள்
4. பப்பி லவ் கதைகள்
5. இவை தொடர்பான சுவாரிசயமான வேறு விடயங்கள்.

பற்றி எழுத நான் அழைப்பவர்கள்

1. வந்தியண்ணா
2. துளசிப் பெரியம்மா
3. எம்.ரிஷான் ஷெரீப்

21 comments:

ஜெரி ஈசானந்தா. said...

பிரிய சிநேகிதி, சுகம் தானே? ஆசிரியர் பதிவு "என்னையும் பால்யதிற்க்கே அழைத்து சென்று விட்டது.

வந்தியத்தேவன் said...

நன்றிகள் சினேகிதி என் பாடசாலை நேரம் தவறாமைக்கு இணங்க நான் எழுதிவிட்டேன்

கோபிநாத் said...

பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ;))

தொடர் விளையாட்டுன்னு படித்தவுடன் ஏற்கனவே இருக்குற கணக்கு ஞாபகத்துக்கு வச்சிடுச்சி ;))

\\சும்மா கதைக்கேக்க கூட அடிச்சிடுவா\\

\\குழப்படி செய்தா தலையில குட்டுவா\\

அப்போ நீங்க இந்த ரெண்டு விஷயத்தில் நீங்க தான் பள்ளியில் முதல் ஆளு போல!! ;))

\\மங்கையற்கரசி மிஸ்\\

ஆகா!! உங்களுக்கும் ஒரு மங்கையற்கரசி மிஸ் இருக்காங்களா!! எனக்கும் உண்டு என்னோட கணக்கு டீச்சர். வாழ்க்கையில் மறக்கவே முடியாத மனுஷி அவுங்க.

தியாவின் பேனா said...

\\குழப்படி செய்தா தலையில குட்டுவா\\
ஹி... ஹி... ஹி... ஹி...

ஆயில்யன் said...

ரொம்ப அழகா நினைவுல வைச்சிருந்து எழுதுறது ஒரு சிறப்பாக இருந்தாலும் ஆசிரியர்கள் போட்டோக்களை வைச்சுக்கிட்டு அவுங்களை பத்தி சொல்றதுல உண்மையிலேயே ஒரு பெரிய கிப்ட் மாதிரிதான் !

போட்டோக்களை பார்க்கும்போது கண்டிப்பா நாம நல்லபடியா ஒரு பெரிய இடத்துக்கு - உத்யோகத்துக்கு - போகணும்ன்னு நினைச்ச அந்த ஆசிரிய உள்ளங்களை மனசார வேண்டி நன்றி சொல்ல தோணுது!

வாய்ப்புக்கள் கிடைத்தால் ஆசிரியர்களை சந்தித்தால் கண்டிப்பாக சொல்லுங்கள் உங்களது புகைப்படங்கள் பள்ளியின் இணையத்தளம் பற்றிய மகிழ்ச்சியான அனுபவங்களை !

:)

சினேகிதி said...

\\பிரிய சிநேகிதி, சுகம் தானே? ஆசிரியர் பதிவு "என்னையும் பால்யதிற்க்கே அழைத்து சென்று விட்டது.\\


வணக்கம் ஜெரி. நலம் நலம் நீங்கள்?
நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சினேகிதி said...

\\நன்றிகள் சினேகிதி என் பாடசாலை நேரம் தவறாமைக்கு இணங்க நான் எழுதிவிட்டேன்\\

உங்களைப்போல ஒரு சுறுசுறுப்பாளியை நான் பார்த்ததே இல்ல :)

சினேகிதி said...

\\ஆகா!! உங்களுக்கும் ஒரு மங்கையற்கரசி மிஸ் இருக்காங்களா!! எனக்கும் உண்டு என்னோட கணக்கு டீச்சர். வாழ்க்கையில் மறக்கவே முடியாத மனுஷி அவுங்க.\\

கோபிநாத் நீங்க இன்னும் பதிவெழுத வந்த கதை எழுதேல்ல :)

மங்கையற்கரசி ரீச்சர்தான் என்னோட முதல் ரீச்சர். நல்ல வடிவு. அவாவைப்பற்றி ஒரு பதிவே போடலாம்.

சினேகிதி said...

\\ தியாவின் பேனா said...

குழப்படி செய்தா தலையில குட்டுவா\\
ஹி... ஹி... ஹி... ஹி...

\\

என்ன அந்தநாள் ஞாபகம் வந்திட்டா :)

சினேகிதி said...

\\ரொம்ப அழகா நினைவுல வைச்சிருந்து எழுதுறது ஒரு சிறப்பாக இருந்தாலும் ஆசிரியர்கள் போட்டோக்களை வைச்சுக்கிட்டு அவுங்களை பத்தி சொல்றதுல உண்மையிலேயே ஒரு பெரிய கிப்ட் மாதிரிதான் !\\

உங்கட பதிவை வாசிச்சிட்டுதான் தேடினான். உடன கிடைச்சிட்டுது. உண்மையா 2-3 பதிவெழுதலாம் இந்த நினைவுகளை வைச்சு.

சந்தனமுல்லை said...

:-) சிநேகிதி...என்ன ஒரு நியாபக சக்தி!! உங்க அம்மா என்ன கொடுத்தாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க!! :))


மிக அழகான மலரும் நினைவுகள்!! எல்லா ஊரிலேயும் டீச்சர்ஸ்க்குன்னு ஒரே முகம், ஒரே மாதிரி அடையாளம்இருக்கு போல!! எனக்கும் ஸ்கூல் டீச்சர்கள் நினைவு வந்துட்டுது!! அதுவும் படங்களோட அழகா எழுதியிருக்கீங்க....என்கிட்டே இப்படி இல்லையேன்னு ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க!!

அப்புறம் சும்மா பேசினாவே அடிப்பாங்கன்னா - அப்படி என்ன பேசினீங்க மேடம்??! :))

சந்தனமுல்லை said...

அப்புறம், மங்கையர்க்கரசி எங்க பெரிம்மா பேரு - அவங்களும் டீச்சர்தான்!! :))

தமிழன்-கறுப்பி... said...

சினேகிதி, துண்டு துண்டா இருக்கிற நினைவுகளை வச்சு நிறைய எழுதலாம் போல இருக்கும் எழுத வெளிக்கிட்டா ஒண்டுமே வராது! சொல்லப்போனா எனக்கு இந்த மூளை ஞாபக சக்தியை இழந்து கொண்டிருக்கு எண்டுதான் நினைக்கிறன்..

ஆனால் ஊர்ல படிச்ச பள்ளிக்கூட கதையை எழுதல்லையே, மாத்தளை கதைதானே இருக்கு.

நினைவுகளை கிளறுகிற பதிவு..!

சினேகிதி said...

\\மிக அழகான மலரும் நினைவுகள்!! எல்லா ஊரிலேயும் டீச்சர்ஸ்க்குன்னு ஒரே முகம், ஒரே மாதிரி அடையாளம்இருக்கு போல!! எனக்கும் ஸ்கூல் டீச்சர்கள் நினைவு வந்துட்டுது!! அதுவும் படங்களோட அழகா எழுதியிருக்கீங்க....என்கிட்டே இப்படி இல்லையேன்னு ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க!!

அப்புறம் சும்மா பேசினாவே அடிப்பாங்கன்னா - அப்படி என்ன பேசினீங்க மேடம்??! :))மிக அழகான மலரும் நினைவுகள்!! எல்லா ஊரிலேயும் டீச்சர்ஸ்க்குன்னு ஒரே முகம், ஒரே மாதிரி அடையாளம்இருக்கு போல!! எனக்கும் ஸ்கூல் டீச்சர்கள் நினைவு வந்துட்டுது!! அதுவும் படங்களோட அழகா எழுதியிருக்கீங்க....என்கிட்டே இப்படி இல்லையேன்னு ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க!!

அப்புறம் சும்மா பேசினாவே அடிப்பாங்கன்னா - அப்படி என்ன பேசினீங்க மேடம்??! :))\\

இதுக்கு முதல் எல்லாம் எவ்வளவோ தேடியும் எதும் கிடைக்கல்ல. அன்டைக்கு அதிஸ்டவசமாக இந்தப் படங்களெல்லாம் பாடசாலைக்காக அமைத்திருக்கும் புதிய இணையத்தளத்தில் கி்டைத்தது. பதிவு நீண்டுவிடும் என்று நிறைய எழுதவில்லை.தள்ளிப்போடாமல் ஆசிரியர்கள் பற்றி இன்னொரு பதிவு எழுதவேணும்.

சும்மா சும்மா நாங்க என்ன பேசுவோம்னு உங்களுக்குத் தெரியாதா என்ன :)

சினேகிதி said...

\\அப்புறம், மங்கையர்க்கரசி எங்க பெரிம்மா பேரு - அவங்களும் டீச்சர்தான்!! :))\\

கோபிநாத் ரீச்சருக்கும் அதான் பெயராம். ஒருவேளை அந்தப்பெயருக்கும் ஆசியர் பணிக்கும் ரொம்ப நல்ல ராசியோ :)

சினேகிதி said...

\\சினேகிதி, துண்டு துண்டா இருக்கிற நினைவுகளை வச்சு நிறைய எழுதலாம் போல இருக்கும் எழுத வெளிக்கிட்டா ஒண்டுமே வராது! சொல்லப்போனா எனக்கு இந்த மூளை ஞாபக சக்தியை இழந்து கொண்டிருக்கு எண்டுதான் நினைக்கிறன்..

ஆனால் ஊர்ல படிச்ச பள்ளிக்கூட கதையை எழுதல்லையே, மாத்தளை கதைதானே இருக்கு.

நினைவுகளை கிளறுகிற பதிவு..!\\

ஊர் ஆசிரியர்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதைத்தேடிக்கொண்டிருக்கிறன்.

பாடசாலைகளின் பெயர்களை கூகிலில் தேடும்போது மாத்தளைப் பாடசாலையின் புதிய இணையத்தளம் அம்பிட்டுது அதான் படங்களைப் பார்த்ததும் ஞாபகங்களைப் பதிந்தேன்.

கலை said...

நான்கூட என்னுடைய இரு ஆசிரியர்கள்பற்றி என்னுடைய வலைப் பதிவில எழுதியிருக்கிறேன். அது எப்பவோஓஓஓஓஓஓஓஓ எழுதினது :).

அதெல்லாம் இருக்கட்டும், ஏன் இன்னும் அழைக்கப்பட்ட தொடர் விளையாட்டுக்கு இடுகை எழுதேல்லை என்று சினேகிதி அங்க இருந்து கத்துறது இங்க வரை கேக்குது :). பொறுங்கோ பொறுங்கோ எழுதுறன்.

சஜிதரன் said...

இப்பதான் உங்கட வலைத்தளத்தப் பார்க்கக் கிடைச்சுது... நம்ம ஊர்ல படிச்சிருக்கீங்க என்றது சந்தோஷமான செய்தி (நான் பிறந்தது யாழ்ப்பாணமென்றாலும் வளர்ந்ததெல்லாம் மாத்தளை... யாழ்ப்பாணம் போனாத்தான் எனக்கு வேற்றுக் கிரகம் போன மாதிரி இருக்கும்... :) வலைப்பதிவர்கள்ல ஸ்ரீதர்ஷன் (http://sridharshan.blogspot.com/) பாக்கியம் வித்தியாலத்தில் படித்தவர்.. - primary education (தரம் 5 இலிருந்து என்னுடன் மாத்தளை இந்துக் கல்லூரியில் படித்தவர் - எனக்குப் பிடித்தமான தோழன்...) கமலாம்பாள் மிஸ் உடைய மகன் எனக்கு ஒரு வருஷம் சீனியர்... அண்ணாவின் பட்ச் (நீங்கள் குழப்படிக்காரன் என்று சொல்லியதை முடிந்தால் சொல்லி வைக்கிறேன்... இப்போது இந்தியாவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்..:)

வர்மா said...

பாக்கியம்வித்தியாலயத்தில்தான் எனது தகப்பன் ஆசிரியராகக் கட்மையாற்றினார்.அவருடையபெயர் சூ.ஏகாம்பரம்.60ஆம் ஆண்டுமுதல் 70 ஆம் ஆண்டுவரை பாக்கியம்வித்தியாலயத்திலும் மாத்தளை இந்துக்கல்லூரியிலும் படிப்பித்தார்.சிறுவயதில் இரண்டுபாடசாலைகளூக்கும் போயிருக்கிறேன். இரண்டுபாடசாலைகளூக்கும் போவதற்கு முயற்சிக்கிறேன் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அன்புடன்
வர்மா

தர்ஷன் said...
This comment has been removed by the author.
சினேகிதி said...

வணக்கம் தர்ஸன் !

உலகம் சிறியது என்டதை நான் ஒத்துக்கொண்டுதான் ஆகோணும் போல இருக்கு. நான் ஒரு ஓட்டைவாய் எல்லாத்தையும் எழுதியிருக்கிறன். ரீச்சர்ட பெயரை வேற மறந்து ஐயோ ஐயோ நீங்களு வாசிச்சால் இனி அவாவும் வாசிக்க கன நாளாது. கடவுளே கடவுளே.