Custom Search

Saturday, January 19, 2008

வயதேறும் - வடு மாறா !

child clinical psychologists மற்றும் social wokers என ஐவர் அடங்கிய குழு ஒன்று விவரிக்கமுடியாத ஒரு எதிர்பார்ப்புடன் 14 வயதான மைதிலியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பொதுவாகவே 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு psychological assessment பண்ணும்போது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூட இருக்கவேண்டும் என்பது நியதி. ஆனால் மைதிலியோ தான் assessment க்கு வரும்போது தன் குடும்ப உறுப்பினர்கள் வரக்கூடாதென்று கேட்டுக்கொண்டதால்தான் உளவியல் ஆலோசகர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு. குடும்பத்தினர்களிடமிருந்து மறைக்கவேண்டிய ஏதோ ஒன்று பற்றி மைதிலி சொல்லப்போகிறாள் என்ற எண்ணத்தில் காத்திருக்கிறார்கள்.

மைதிலியைப் பார்த்தால் 14 வயதிலிருக்கும் எல்லாரையும் போலச் சாதாரணமாகத்தான் காணப்பட்டாள்.குடும்பத்தைப்பற்றிய விவரங்களைக் கேட்டபடியே assessment ஆரம்பமானது.அம்மாவைப் பற்றி அதிகம் சொன்னாள். அப்பாவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.தனது உயிரியல் தந்தையைத்தான் எப்போதாவது போய்ப் பார்த்து வந்ததாகவும் தற்போது சில வருடங்களாக அவர் எங்கேயிருக்கிறார் என்று தெரியாதென்றும் சொன்னாள். அவளுக்கு 2 வயதாகவிருக்கும்போது step father ம் அவளுடைய அம்மாவும் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆரம்பத்தில் தனக்கு அது பற்றிய கவலையொன்றும் இல்லையென்றும் ஆனால் நாளடைவில் அவளுடைய step father சுயநலம் மிக்கவராக மாறிவிட்டாராம்.

தன்னால வீட்டில நிம்மதியா இருக்க முடியாமலிருக்காம்.தன்னால சந்தோசமா இருக்க முடியேல்லயாம். இரவில் நித்திரை வருவதில்லையாம். தான் திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் பார்க்கும் பயங்கர உருவங்கள் தன்னையும் அம்மாவையும் பிடிக்க வாறமாதிரி எண்ணங்கள் வருதாம்.

இப்படி மைதிலி தன்னைப்பற்றித்தானே சொன்ன விடயங்களை வைத்து உளவில் ஆலோசகர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. மைதிலியின் தாயைச் சந்தித்தார்கள்.

மைதிலி எப்பவும் தாயை விட்டுப்பிரிந்திருக்க மாட்டாளாம். தாய் சமையலறையிலிருக்கும்போது மைதிலி தன்ர அறைக்குப் போக வேண்டி வந்தால் நீளமான துணியொன்றில் ஒரு நுனியைத் தாயிடம் கொடுத்துவிட்டு மறுநுனியைப்பிடித்துக்கொண்டு போவாளம். எப்போதும் தாய் தன் கண்ணில் படுமாறு இருக்கவேண்டும் என்று சொல்லிவைத்திருந்தாளாம்.மைதிலிக்குச் சின்ன வயதிலிருந்தே தனியப்படுக்கும் பழக்கமில்லையாம். ஒரளவு வளர்ந்த பிறகும் அம்மாவுடன் படுப்பதற்கு அடம் பிடிப்பாளாம்.அதற்கு step father மறுப்புத் தெரிவித்ததால்தான் அவரிடம் மைதிலிக்கு ஒரு விதமான வெறுப்பு வளர்ந்திருக்கிறது.

இப்படி மைதிலியின் தாய் சொல்வதைக் கேட்ட உளவியல் ஆலோசகர்களுக்கு ஒருவேளை மைதிலிக்கு seperation anxiety disorder இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.
ஆனால் மைதிலியிடம் இன்னொரு பழக்கமிருந்தது. அவளுடைய அறையில் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட இடமுண்டு. அந்தந்தப் பொருள் அந்தந்த இடத்திலிருக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் ஒரு பிரளயமே நடக்குமாம்.இது obssesive compulsion disorder ன் அறிகுறியாகும்.

மைதிலிக்கு பாடசாலையில் நண்பர்கள் எவருமில்லை. பாடங்களில் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. பாடங்களை விளங்கிக்கொள்ளமுடியவில்லையென்று பாடசாலை நிர்வாகத்தினர் மைதிலியின் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள். அப்ப learning disability disorder ஆக இருக்குமா? நண்பர்கள் இல்லாத போதும் personality disorder ஆக இருக்க முடியாது ஏனெனில் 16-18 வயதுக்குப்பிறகுதான் ஒருவருக்கு personality disorder இருக்கென்று ஒருவரை வகைப்படுத்த முடியும்.

அப்போ மைதிலிக்கு என்னதான் பிரச்சனை? உளவியல் ஆலோசகர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. seperation anxiety, depression, insomnia, adjustment disorder, learning disabilty, Obsessive-compulsive disorder (OCD) இப்படி எல்லாமே ஒன்றாக இருப்பது அதிசயமாகப் பட்டது.

கடைசி முயற்சியாக மீண்டும் மைதிலியின் தாயைச் சந்தித்தார்கள். மைதிலி கருவில் இருக்கும்போது மைதிலியின் தாயாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் பற்றிக்கேட்ட போது மைதிலி 5 மாதக் கருவாக இருக்கும்போது தாய் மாடிப்படியில் தவறி விழுந்திருக்கிறார். அதன் பின்னர் சில நாட்களில் சாலை விபத்தொன்றில் காயமடைந்து 2 வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருக்கிறார். மைதிலி 7 மாதக் கருவாக இருந்தபோது மைதிலியின் தந்தைக்கும் வேறொரு பெண்ணுக்கும் இருந்த தொடர்புபற்றித் தெரிய வந்து அவரை விவகாரத்துப் பண்ணியிருக்கிறார். அவருடைய குழந்தையைச் சுமப்பது பிடிக்காமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் தாய். முதல் முயற்சியில் காப்பாற்றப்பட்டு 2வது முயற்சியின் பின்னர் தீவிரக்கண்காணிப்பிலிருந்த போது 3 கிழமைகள் முன்னதாகவே மைதிலி பிறந்திருக்கிறாள். கணவன் மேலிருந்த வெறுப்பு முழுவதும் குழந்தைமேல் திரும்ப குழந்தைக்குப் பால்குடுப்பதையே வெறுத்திருக்கிறார் மைதிலியின் தாயார். மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத் தாய்ப்பாலூட்டியிருக்கிறார்.

மைதிலிக்கு 2 வயதாகியபோதுதான் மைதிலியின் தாயார் மறுமணம் செய்துள்ளார். அப்படி வந்த step father க்கும் மைதிலுக்குமிடையே யார் மீது அம்மா அதிக பாசம் வைத்திருக்கிறார் என்ற போட்டி நிலவியிருக்கிறது. ஏற்கனவே பிறந்த குழந்தைக்குத் தாயிடமிருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமலிருந்த மைதிலிக்கு step father க்கில்லாமல் தாயின் அன்பு அரவணைப்பு முழுதும் தனக்கே கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

பல நாட்கள் நடைபெற்ற clinical assessment ன் பின்னர் மைதிலிக்கு post-tramatic stress disorder என்று சொல்லப்பட்டது. இது நடந்தது 2000 ம் ஆண்டில். இன்றுவரை மைதிலியால் சாதாரண நிலமைக்குத் திரும்பமுடியவில்லை.

ஏதாவது ஒரு அறிகுறியை மட்டும் கணக்கெடுத்து சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் பல psychological disorders களால் அவதிப்படும் மைதிலி தன்னுடைய 22 வயதில் வயதுக்கேற்ற முதிர்ச்சியின்றி இன்னமும் குளிக்கச் செல்லக்கூட தாய் கட்டாயம் கூட வரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறாள். எல்லாம் தாய் மயமாக இருக்கிறாள்.

அப்பாமாரே நீங்கள் செய்யும் துரோகம் உங்கள் மனைவிக்கு மாத்திரமல்ல பிள்ளைகளுக்கும் கொடுமைதான்.!

அம்மாமாரே கணவன்மார் செய்ற தப்புக்கெல்லாம் குழந்தைகளைத் தண்டிச்சா எப்பிடிங்க?

12 comments:

மங்களூர் சிவா said...

ப்ச்
:(

மங்களூர் சிவா said...

//
ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட இடமுண்டு. அந்தந்தப் பொருள் அந்தந்த இடத்திலிருக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் ஒரு பிரளயமே நடக்குமாம்.இது obssesive compulsion disorder ன் அறிகுறியாகும்.
//

புதுசு புதுசா என்னாமா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா

எனக்கெல்லாம் obessive perfection disorder தான்.

Sridhar V said...

சோகமான நிகழ்வு.
//பல psychological disorders களால் அவதிப்படும் மைதிலி //
:-(((( அவர் சீக்கிரம் குணமடைய பிரார்திப்போம்.

இப்படி நிறைய சம்பவங்களை உங்கள் தொழிலினால் நீங்கள் தெரிந்து கொள்ள நேரிடும் பொழுது எப்படி எடுத்து கொள்வீர்கள்? அவரவர் விதிப்படி நடக்கிறது என்று எண்ணுவீர்களா? எப்படி?

கோபிநாத் said...

:((

Thekkikattan|தெகா said...

பல நாட்கள் நடைபெற்ற clinical assessment ன் பின்னர் மைதிலிக்கு post dramatic disorder என்று சொல்லப்பட்டது.//

நல்ல பிரயோசனமான பதிவுங்க, நன்றி!

நீங்க சொன்னபடி அது post dramatic disorder இல்லேன்னு நினைக்கிறேன், இப்படி இருக்கணுமோ - Post Traumatic Stress Disorder (PTSD).

சினேகிதி said...

யாருமே அந்த வீடியோ பார்க்கேல்லயா :-(

மங்களூர் சிவா said...

//

சினேகிதி said...
யாருமே அந்த வீடியோ பார்க்கேல்லயா :-(
//
இந்த கமெண்ட் பாத்த பின்னாடிதான் வீடியோ பாத்தேன். Fight for kisses ரொம்ப அருமையான வீடியோ.

குழந்தைகளின் மன நிலையை அருமையா பிரதிபலிச்சிருக்கு.

சினேகிதி said...

lol சிவா :-)
\\புதுசு புதுசா என்னாமா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா

எனக்கெல்லாம் obessive perfection disorder தான்\\

நான் சொன்னது ஒரு அறிகுறி மட்டும்.

சினேகிதி said...

\\இப்படி நிறைய சம்பவங்களை உங்கள் தொழிலினால் நீங்கள் தெரிந்து கொள்ள நேரிடும் பொழுது எப்படி எடுத்து கொள்வீர்கள்? அவரவர் விதிப்படி நடக்கிறது என்று எண்ணுவீர்களா? எப்படி?\\

விதியைக் கை காட்ட முடியாது சிறீதர் :-((

சமூகக் காரணிகள் தான் நிறையத் தாக்கம் செலுத்தும் என்று நினைக்கிறன்.

கணனிக்கு முன்னால நானிருந்து எழுதும்போது வாற அதே உணர்ச்சிகள் நேரில எனக்கு வருமா என்றது சந்தேகம்தான்.

சினேகிதி said...

\\நீங்க சொன்னபடி அது post dramatic disorder இல்லேன்னு நினைக்கிறேன், இப்படி இருக்கணுமோ - Post Traumatic Stress Disorder (PTSD).\\

நன்றி தெகா. மாத்திட்டன்.

Anonymous said...

சிறந்த ஓர் பதிவு.....

பதிவின் ஆழத்தை அச்சிறு ஒளிப்படம் அழகாக விளக்கியுள்ளது....

சினேகிதி said...

நன்றி றமணன் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.