Custom Search

Saturday, January 12, 2008

வணக்கம் வணக்கம் வணக்கம் !!!

எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்? எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும் இனிய பொங்கல் வாழ்த்துக்களும். பொங்கல் பொங்கி சாப்பிட்டாச்சா ? பொங்கினாக்கள் எனக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்கோ என்ன:-)பொங்கல் நாளுக்கு வீட்ட நிக்காம விடுதிக்கு வந்திட்டன். நின்டிருந்தால் அப்பாட்ட கொஞ்சம் காசடிச்சிருக்கலாம். சரி விடுவம் ..தமிழ்மணத்தில பொங்கல் வாரத்தில நட்சத்திர போனஸ் கிடைச்சிருக்கே என்று சந்தோசப்பட்டுக்கிறன்.

ஆனால் என்ன என்னை அநேகமா நீங்கள் மறந்துபோன நேரமாப் பார்த்து நட்சத்திர வாரத்தில் எழுதுமாறு தமிழ்மண நிர்வாகத்தினர் அழைத்திருக்கிறார்கள். இது யாருடைய அதிஸ்டம் அல்லது துரதிஸ்டம் என்று எனக்குத் தெரியாது. நான் நிறைய எழுதவேணும் என்று ஆசைப்பட்டது ஒரு காலம். ஆர்வம் என்றது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்குது. எழுதுறது மட்டுமில்ல எதிலயுமே ஆர்வத்தின் ஆயுட்காலம் வரவரக் குறைஞ்சு கொண்டே போகுது. இதுக்கு ஏதாவது மருந்திருக்கா?

கார்த்திகை மாத நடுவில் இடைக்காலத் தேர்வுகளும் மற்ற பாடங்களின் assignments, term papers இப்படி பல dead-lineகளும் கனவில கூட பயமுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒருநாளில் “தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைக்கிறோம்” என்று ஒரு மெயில் வந்தது. நிறைய தகவல்களின் சேர்க்கையால் மூளை கொஞ்சம் கொஞ்சமா செயலிழக்கத் தொடங்கியிருந்த சாமவேளையில நித்திரை தூங்கிறதும் மடிக்கணணியின் சூடு தாங்காமல் திடுக்கிட்டு எழும்பி திரும்ப படிக்கிறதுமா இருந்த ஒரு இரவில்தான் அந்த மெயில் வந்திருந்தது. என்ன எழுதுறன் என்ற யோசனையே இல்லாம “மன்னிக்கோணும் எனக்கு ஜனவரியில அடுத்த semester தொடங்கிடும் எழுத நேரம் இருக்காது ” என்று பதிலெழுதிட்டன். மெயிலனுப்பின பிறகுதான் யோசிச்சன் கிறிஸ்மஸ் விடுமுறையெண்டு ஒண்டிருக்கல்லோ அந்த நேரம் எழுதி வச்சிட்டு ஜனவரியில post பண்ணலாம்தானே எண்டு. எனக்கு மூளை கொஞ்சம் தாமதாவே செயல்படுது என்றத நிரூபிக்கிற மாதிரி நான் நினைத்ததையே பிரதிபலிக்கிற மாதிரி தமிழ்மண நட்சத்திர நிர்வாகியிடமிருந்து அடுத்த மெயில் வந்தது. சரியென்டு நட்சத்திர வாரத்தில எழுதுறன் என்று சொல்லிட்டன். ஆனால் விடுமுறைக்கு வீட்ட போன நேரம் வீட்டில இணைய வசதி இல்லாதால நான் நினைத்தமாதிரி எழுத முடியாமல் போச்சு. இப்ப விடுதிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன். அதால நிறையத் திட்டாதயுங்கோ என்னை plzzz.

எழுத வந்த புதுசில 2005 ல நினைக்கிறதெல்லாத்தையும் எழுதிக்கொண்டிருந்தன். அப்ப இந்த நட்சத்திர எழுத்தாளர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டிருக்கிறன். இன்னும் ஒருக்காலும் நட்சத்திரமாகேல்லயா என்று கேட்ட ஆக்களுக்கு நாமளும் ஒருநாளைக்கு நட்சத்திரமாவமில்ல அப்ப பார்த்துக்கிறன் உங்களையெல்லாமெண்டு மனசுக்குள்ள நினச்சிருக்கிறன். ஆனால் பிறகு அந்த ஆசையில்லாமல் போட்டுது.

இப்பெல்லாம் எழுத்துக்கும் என்னைப் பிடிக்காமல் போச்சு எனக்கும் அதை இப்ப பிடிக்கிறேல்ல. அப்பப்ப தாயகப்பறவைகளுக்கு மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறன். நிறைய எழுதவேணும் என்று எனக்கு நானே சொல்றதும் அது நடக்காமல் போறதும் வழமையாகிட்டு. இனிமேலாவது செயலுக்கு அதிகமுக்கியத்துவம் குடுக்கிறன். ஒவ்வொரு lecture லயும் interesting ஏதாவது படிச்சால் இதைப்பற்றி எழுதவேணும் என்று குறிச்சு வச்ச விசயங்கள் என்ர gmail draft ல நிரம்பிக்கிடக்கிறதுதான் மிச்சம். எழுதுவதற்கான நேரமும் ஆர்வமும் தான் இல்லை. இப்ப வலுக்கட்டாயமாக என்னைக் கெஞ்சிக்கேட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறன். இதை எழுதி முடிக்கிறதுக்குள்ள நான் எத்தின தரம் பாட்டுப் பார்ப்பன், msn க்குப் போவன், சாப்பிடுவன், தேத்தண்ணி குடிப்பன் என்றதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒருநாளைக்கு ஒரு பதிவாவது எழுதவேணும் என்ற முடிவில இருக்கிறன். இனி எல்லாம் என்ர மனசைப் பொறுத்தது.
ஆனால் ஒரு விசயம். நான் final exam க்குப் படிக்கும்போது கூட இவ்வளவு கரிசனையாப் படிச்சதில்ல ஆனால் நட்சத்திர வாரத்துக்கு ஒழுங்கா எழுதவேணும் என்று நினைச்சதில இருந்து கட்டில் நிறைய என்ர பாடப்புத்தகங்களும் மடிக்கணனியின் desktop முழுவதும் பழைய lecture slides எல்லாம் நிறைஞ்சு கிடக்கு. என்னால முடிஞ்சளவுக்கு இந்த வாரத்தை உருப்படியா பிரயோசனமாக்கணும் என்றுதான் நினைக்கிறன். பிழைகள் ஏதாவது வந்திட்டால் சுட்டிக்காட்டுங்கோ. குட் லக்.

50 comments:

பாரி.அரசு said...

அப்பாடா தமிழ்மணத்தின் இரண்டு வார தமிழ்ராய்ச்சி வாரம் முடிவுக்கு வந்துட்டு :))

நட்சத்திர வாழ்த்துக்கள்!

என்னை மாதிரி அரைகுறைக்கெல்லாம் புரியுற மாதிரி எழுதுணும் ஆமா:))

முபாரக் said...

நட்சத்திர, பொங்கல் வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

enRenRum-anbudan.BALA said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள், நிறைய எழுத வேண்டும் என்றில்லை, நிறைவாக எழுதவும் :)

//
மெயிலனுப்பின பிறகுதான் யேதசிச்சன் கிறிஸ்மஸ் விடுமுறையெண்டு ஒண்டிருக்கல்லேத அந்த நேரம் எழுதி வச்சிட்டு ஜனவரியில post பண்ணலாம்தானே எண்டு. எனக்கு மூளை கொஞ்சம் தாமதாவே செயல்படுது என்றத நிரூபிக்கிற மாதிரி நான் நினைத்ததையே பிரதிபலிக்கிற மாதிரி தமிழ்மண நட்சத்திர நிர்வாகியிடமிருந்து அடுத்த மெயில் வந்தது.
//
தேர்வுக்கு தயார் செய்கிற மாதிரி, நட்சத்திர வாரப் பதிவுகளுக்கும் செய்ய வேண்டியிருக்கு, இல்லையா ??? எனது நட்சத்திர வாரத்திற்கும், நானும் அப்படித் தான் செய்தேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Kanags said...

இவ்வார நட்சத்திரத்திற்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி said...

:)))))

வாழ்த்துக்கள் சிநேகிதி.. அறிமுகமும் .. வணக்கமும் அருமையா இருக்கு... அந்த பூனைக்குட்டி கேக்கிறது அட்டகாசம்.

பாச மலர் said...

வாழ்த்துகள்..நட்சத்திரப் பதிவருக்கு.

மாயா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

மணியன் said...

நட்சத்திர வாழ்த்துகள் !!

பொங்கல் நாளைதான், பொங்கலுடன் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும் !!

அய்யனார் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

புகைப்படத்தில் இருக்கும் கனேடிய நடிகை தற்போது நடிக்கும் படத்தின் பெயர் என்ன? :)

கானா பிரபா said...

வாம்மா மயிலு

பாரி அரசு வந்திருக்காக, முபாரக் வந்திருக்காக, குசும்பன், அய்யனார் மற்றும் சுத்துப் பத்து ஜனங்க வந்திருக்காக

;-)

நட்சத்திர வாழ்த்துக்கள் தங்கச்சி, இந்த வாரத்திலாவது உங்கட உளவியல், மனோதத்துவத்தை மூட்டை கட்டி வைக்க எல்லாம் வல்ல கனடா முருகனை வேண்டுகின்றேன்.

ஜமாலன் said...

நட்சத்திர மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

அறிமுகம் அருமை. குறிப்பாக 'நான்' குறித்த உங்கள் மனஅலசல். அப்புறம் pschology (அதனை உளவியல் என்ற கூறாமல் வேறு என்ன சொல்வது என்று சொல்லவே இல்லையே.) படிக்கும் ஒரு பதிவராக உங்களிடம் உளவியல் பற்றி அதிகம் எதிர்பர்ப்பது நியாயம் என்று உணர்வீர்கள்.

இப்திவிலும் உங்களது வெளிப்படையான ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்துவகை அருமை. ஒருவேளை உளவியல் தந்த பயிற்சியோ?

//ஏதாவது படிச்சால் இதைப்பற்றி எழுதவேணும் என்று குறிச்சு வச்ச விசயங்கள் என்ர gmail draft ல நிரம்பிக்கிடக்கிறதுதான் மிச்சம். எழுதுவதற்கான நேரமும் ஆர்வமும் தான் இல்லை. இப்ப வலுக்கட்டாயமாக என்னைக் கெஞ்சிக்கேட்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறன்.//

பெரும்பாலோருக்கு அப்படித்தான். ஒரு வித்தியாசம் நீங்கள் உங்களையே கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு புரிந்துள்ளதுதான்.

அப்புறம் அய்யனார் சொன்ன நடிகையின் படத்தையும் சொல்லி விடுங்கள்.

அன்புடன்
ஜமாலன்.

மஞ்சூர் ராசா said...

இனிய வாழ்த்துகள்

இந்த நட்சத்திர வாரமும் பொங்கல் திருநாள் வாரமும் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துகள்

சின்னக்குட்டி said...

ஆகா ...போன வருஷ ஸ்னோ க்குள்ளை நனைஞ்ச போட்டோவோடை இந்த வருஷ ஸ்னோவாடை நட்சத்திரமாய் வந்திருக்கிறீர்கள்... நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா ...கலக்குங்க இந்த வாரத்தை.....

தமிழ்பித்தன் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் அத்துடன் நட்சத்திர வாழ்த்துக்கள்

வசந்தன் said...

//எனக்கு மூளை கொஞ்சம் தாமதாவே செயல்படுது என்றத நிரூபிக்கிற மாதிரி //

'பெண்புத்தி பின்புத்தி' எண்டு சொல்லிறதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்கோ?

லக்கிலுக் இதை வைச்சும் ஒரு கதை எழுதலாமே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள் சிநேகிதி..

கருத்துள்ள பதிவுதான் எழுதணும்ன்னு இல்ல. மனசுல என்ன தோணுதோ.. அதை அப்படியே எழுதுங்க..

நாம அடிக்கடி டிஸ்கஸ் பண்ணுவோமே.. அந்த மாதிரி ரேர் கலேக்ஷன் சாங்ஸ்.. உங்க பழைய பாட்டு போட்டி, அப்புறம் உங்க படிப்பு சம்பந்தப்பட்ட அந்த பிலோசாப்பிக்கள்ன்னு தினமும் கலக்கிடுங்க. :-)

Anonymous said...

//அப்பாடா தமிழ்மணத்தின் இரண்டு வார தமிழ்ராய்ச்சி வாரம் முடிவுக்கு வந்துட்டு :))//

தமிழாராய்ச்சி வாரம் முடிஞ்சுது... ஆனா உள ஆராய்ச்சி வாரம் தொடங்கிடுச்சு... சேது, நந்தா, கஜினி, பிதாமகன், அந்நியன், எவனோ ஒருவன், சத்தம் போடாதே எல்லாம் ஓடப்போகுது. அவ்வ்வ்வ்வ்வ!!!!!

வி. ஜெ. சந்திரன் said...

வாழ்த்துக்கள்!

சினேகிதி said...

நன்றி நன்றி நன்றி!!! மிச்சம் பின்னேரம்.

சதங்கா (Sathanga) said...

நட்சத்திர வாழ்த்துக்கள்! சினேகிதி

காட்டாறு said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சிநேகிதி. புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களும்.

Sabesh said...

Santa தான் snow உடன் வருவதென்று சொல்லுவார்கள். தைப்பொங்கலுக்கு Toronoto-வில் snow உடன் நட்சத்திரமாக வந்திருக்கிறீர்கள். நட்சத்திர வாழ்த்துக்கள். மேலும் சந்திப்போம்.

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துகள் சினேகிதி!!!

DJ said...

/இதை எழுதி முடிக்கிறதுக்குள்ள நான் எத்தின தரம் பாட்டுப் பார்ப்பன், msn க்குப் போவன், சாப்பிடுவன், தேத்தண்ணி குடிப்பன் என்றதெல்லாம் எனக்குத் தெரியாது./
சிநேகிதி, வேறொரு 'சிக்கலில்' மாட்டியிருந்தாலும் இப்படித்தான் நடக்கக்கூடுமென்று உளவியல் கூறுமென்று நினைக்கின்றேன் :-).
...
பொஙகலுக்கு உங்களுக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

//
நாம அடிக்கடி டிஸ்கஸ் பண்ணுவோமே.. அந்த மாதிரி ரேர் கலேக்ஷன் சாங்ஸ்.. உங்க பழைய பாட்டு போட்டி, அப்புறம் உங்க படிப்பு சம்பந்தப்பட்ட அந்த பிலோசாப்பிக்கள்ன்னு தினமும் கலக்கிடுங்க. :-)
//
இந்த மலேசியா மாரியாத்தாவுக்கு கும்மியடிக்கிறது, மொக்கை போடுறது, அரட்டையடிக்கிறது தவிர வேற பொழப்பே இல்லைன்னு விளக்கமா சொல்லுங்க!

Anonymous said...

//
//அப்பாடா தமிழ்மணத்தின் இரண்டு வார தமிழ்ராய்ச்சி வாரம் முடிவுக்கு வந்துட்டு :))//

தமிழாராய்ச்சி வாரம் முடிஞ்சுது... ஆனா உள ஆராய்ச்சி வாரம் தொடங்கிடுச்சு... சேது, நந்தா, கஜினி, பிதாமகன், அந்நியன், எவனோ ஒருவன், சத்தம் போடாதே எல்லாம் ஓடப்போகுது. அவ்வ்வ்வ்வ்வ!!!!!
//
இதுக்கு உம்முடைய சொந்த பேரிலேயே வந்திருக்கலாமுல்ல :( உங்கட குசும்பு வெட்ட வெளிச்சமாயிடுச்சே! ஹே! டண்டணக்கா...

பாரி.அரசு said...

//
ஆகா ...போன வருஷ ஸ்னோ க்குள்ளை நனைஞ்ச போட்டோவோடை இந்த வருஷ ஸ்னோவாடை நட்சத்திரமாய் வந்திருக்கிறீர்கள்... நட்சத்திர வாழ்த்துக்கள் அக்கா ...கலக்குங்க இந்த வாரத்தை.....
//
இந்த உள்குத்தை கவனிக்கவும்...

மங்களூர் சிவா said...

இனிய வாழ்த்துகள்

இந்த நட்சத்திர வாரமும் பொங்கல் திருநாள் வாரமும் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
வாழ்த்துக்கள் சிநேகிதி..

கருத்துள்ள பதிவுதான் எழுதணும்ன்னு இல்ல. மனசுல என்ன தோணுதோ.. அதை அப்படியே எழுதுங்க..
//
ரிப்பீட்டேய்

எது எழுதினாலும் யாருக்கும் புரியப்பிடாது ஒரே கண்டிசன் அம்புட்டுதான்!!

இராம்/Raam said...

நட்சத்திர & தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்'க்கா.... :)

ப்ரியா வேங்கடகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..
வாங்க!!

அற்புதன் said...

என்ன கனகாலமா சொந்தக்காரைக் காணன் எண்டு சொமி,கொழுவி,வசந்தன் ஆக்களிட்டக் கேக்க நட்சத்திர வாரத்தில நீங்க எழுதுறியள், வாழ்த்துக்கள்.

Anonymous said...

//
//இதை எழுதி முடிக்கிறதுக்குள்ள நான் எத்தின தரம் பாட்டுப் பார்ப்பன், msn க்குப் போவன், சாப்பிடுவன், தேத்தண்ணி குடிப்பன் என்றதெல்லாம் எனக்குத் தெரியாது.//

சிநேகிதி, வேறொரு 'சிக்கலில்' மாட்டியிருந்தாலும் இப்படித்தான் நடக்கக்கூடுமென்று உளவியல் கூறுமென்று நினைக்கின்றேன் :-).
...
பொஙகலுக்கு உங்களுக்கும் வாழ்த்துகள்.//

அதே! அதே!
டிசே'யின் அனுபவம் பேசுது.

சினேகிதி said...

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி!!

பாரி அரசு! யாரு நீங்களா அரைகுறை :-)சரி நம்பிட்டன்.

\\நிறைய எழுத வேண்டும் என்றில்லை, நிறைவாக எழுதவும் \\
நிச்சயமா என்றென்றும் அன்புடன் பாலா.

முத்துலட்சுமி பூனைக்குட்டிச் சொந்தக்காரர் அடிக்க வராதவரை அட்டகாசமாத்தானிருக்கும்.

சினேகிதி said...

மணியன் எங்களுக்கு இன்றுதான் பொங்கல்.

\\இந்த வாரத்திலாவது உங்கட உளவியல், மனோதத்துவத்தை மூட்டை கட்டி வைக்க எல்லாம் வல்ல கனடா முருகனை வேண்டுகின்றேன்\\

பிரபாண்ணான்ர வேண்டுதல் பலிக்கவேண்டும் என்று நானும் அந்த முருகனை வேண்டுறன் ஆனால் அந்த முருகனுக்கே ஏதும் உளவியல் பிரச்சனையிருந்தால்...

சினேகிதி said...

\\Psychology படிக்கும் ஒரு பதிவராக உங்களிடம் உளவியல் பற்றி அதிகம் எதிர்பர்ப்பது நியாயம் என்று உணர்வீர்கள்\\

முருகா என்ர நிலமையப் பாரு.....

ஜமாலன் இப்பிடிச் சொல்றாரு பிரபாண்ணா அப்பிடிச் சொல்றாரு.

உளவியல் என்றத விட நல்லா சொல்லா நாங்கள்தான் கண்டுபிடிக்கோணும்.

மைபிரன்ட் rare songs collections கைவசம் இல்லை ஆனால் ஏதும் தேடிப்போட்டிருவோம்.

சினேகிதி said...

என்ன டிசே நக்கலா :-)

மைபிரன்ட் உங்களை யாரோ மாரியாத்தாவாக்கிப்போட்டினம் வேப்பிலை வேண்டிக்கொண்டு வரட்டே :-)

\\அக்கா ...கலக்குங்க இந்த வாரத்தை.....
//
இந்த உள்குத்தை கவனிக்கவும்\\

பாரி அரசு உங்களுக்குத் தெரியதா?? சின்னக்குட்டிக்கு இப்பத்தான் 18 வயது :-)

சினேகிதி said...

\\ எது எழுதினாலும் யாருக்கும் புரியப்பிடாது ஒரே கண்டிசன் அம்புட்டுதான்!! \\

அம்புட்டுத்தானா விளங்கிடுச்சுங்கோ:-)

\\என்ன கனகாலமா சொந்தக்காரைக் காணன் எண்டு சொமி,கொழுவி,வசந்தன் ஆக்களிட்டக் கேக்க நட்சத்திர வாரத்தில நீங்க எழுதுறியள், வாழ்த்துக்கள்.\\

ஏன் அவைட்ட எல்லாம் கேட்டதுக்கு என்னட்டயே கேட்டிருக்கலாமே :-)

சோமி அண்ணா எப்ப சொமியானவர் :-)

துளசி கோபால் said...

தை மாசம் நட்சத்திரமே,

வருக வருக.

வாழ்த்து(க்)கள்.

cheena (சீனா) said...

தை மாத நட்சத்திர, மற்றும் இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.

சினேகிதி said...

நன்றி துளசி பெரியம்மா மற்று சீனா!

Chandravathanaa said...

வாழ்த்துக்கள் சிநேகிதி

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
PRINCENRSAMA said...

பொங்கலில் பூத்திருக்கும் நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்

வரவனையான் said...

சினேகிதி, நலமா . நட்சத்திர வார வாழ்த்துகள். காலம் பிந்திய வாழ்த்திற்கு மன்னிகவும்.


உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

சினேகிதி said...

நன்றி Princerama,சந்திரவதனா.

வரவணையான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

சோமி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

sinegithy, r u became a post modernisht writer?

niraya puriyallappaa!

சினேகிதி said...

சோமியண்ணா என்ன நக்கலா:-)
நான் கட்டுக்கடங்கா காட்டாறு அத மாதிரி நானும் என்ர blog ம் என்ர கிறுக்கல்களும்.. எனக்கென்று ஒரு தனி ஸ்ரைல் இருக்கு :-))

சினேகிதி said...

\\தமிழாராய்ச்சி வாரம் முடிஞ்சுது... ஆனா உள ஆராய்ச்சி வாரம் தொடங்கிடுச்சு... சேது, நந்தா, கஜினி, பிதாமகன், அந்நியன், எவனோ ஒருவன், சத்தம் போடாதே எல்லாம் ஓடப்போகுது. அவ்வ்வ்வ்வ்வ!!!!! \\

:-)No comments!