Custom Search

Thursday, January 17, 2008

வரிசையாய் விளைவுகள் - விழுங்கும் குளிசைகளால்

போனவாரம் வந்த ஒரு fwd mail ல: 31 வயதுடைய Psychology விரிவுவரையாளர் ஒருவர் கருத்தடை மாத்திரை (OCS – oral contraceptives) எடுத்துக்கொண்ட காரணத்தால் stroke வந்து உயிரிழந்ததாகவும், எனவே அவர் உட்கொண்டு வந்த 2 கருத்தடை மாத்திரைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் - "please deal with your period once a month" என்றும் எழுதப்பட்டிருந்தது.

கருத்தடை மாத்திரை பாவிக்கிறவர்களுக்கு நிறைய பக்கவிளைவுகள் வருமென்று எனக்குத் தெரியும்தான் ஆனால் இப்படி உயிர்வாங்குமளவுக்கு பொல்லாததென்று நினைக்கேல்ல நான். எனக்குத் தெரிந்த சில சகோதரிகள் முக்கியமான பரீட்சைக்காலங்களில் அல்லது நடன நிகழ்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் period வந்து தொந்தரவு செய்யக்கூடாதென்பதற்காக கருத்தடை மாத்திரைகளைப் பாவிப்பதுண்டு. உண்மையாவே இப்படியான மாத்திரைகளைப் பாவிக்கிறாக்களுக்கு என்ன மாதிரியான சின்னச் சின்ன உபாதைகள் அல்லது பெரிய பெரிய வருத்தங்கள் வருமென்று பார்க்கத் தொடங்கினால் கிணறுவெட்ட பூதம் வெளிக்கிட்ட கதைதான்.Oral contraceptives (OCs) அல்லது birth control pills என்றால் என்னென்டு அநேகமானாக்களுக்குத் தெரியும். வாய் மூலம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம், மாதவிடாய்ச் சுழற்சியின் இயல்பை மாற்ற முற்படுபவர்கள்தான் இந்த கருத்தடை மாத்திரைகளை பாவிப்போர். மேலே சொன்னதுபோல கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள், முக்கியமாக மாதா மாதம் period மூலம் ஏற்படும் உடல் உள உபாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வேறு பல காரணங்களுக்காகவும் மாதவிடாயை 3,4,6 மாதத்துக்கொருமுறை அல்லது வருடத்துக்கொருமுறை வருமாறு செய்ய இம்மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத குடும்பப்பெண்கள் மற்றும் பலாத்காரத்துக்குள்ளான பெண்கள் போன்றோரும் இந்த மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள்.

இந்த மாத்திரைகளை ஏன் கருத்தடை மாத்திரைகள் என்று சொல்லவேணும்?
குழந்தை உருவாவதற்கு பெண்ணின் முதிர்ச்சியடைந்த கரு முட்டையும் ஆணின் விந்தும் சேரவேண்டும். முதிர்ச்சியடையாத கருமுட்டையிலிருந்து குழந்தை உருவாக முடியாது. இந்த கருமுட்டைகளை முதிர்ச்சியடையாமல் தடுப்பதுதான் இந்த கருத்தடை மாத்திரைகளின் முக்கியமான வேலை. மற்ற வேலை: ஆணின் விந்து நீந்திச்சென்று fallopian tube ல் முதிர்ச்சியடைந்த கருமுட்டையுடன் சேரவேண்டும் - அப்படி விந்து நீந்திச்செல்ல vagina விலுள்ள mucus வழுவழுப்பாக இருக்கவேண்டும். ஆனால் இந்த கருத்தடை மாத்திரைகள் mucus ன் வழுவழுப்பைக்குறைத்து தடிப்பாக்குவதன் மூலம் விந்து நீந்திச்செல்லும் தன்மையை வெகுவாகக்குறைத்து விடும்.உடலுறவின்போது condom பயன்படுத்தினாலும் 14% பெண்கள் கருத்தரிக்கிறார்களாம். அதனால்தான் பலர் கருத்தடைமாத்திரைகள் பக்கம் போகிறார்கள் ஆனால் எதுவுமே 100% நிவாரணியல்ல.

இப்படி கருத்தடை மாத்திரை பாவிப்பவர்களுக்கு blood clots, stroke, heart attacks தவிர புற்றுநோய்களும் வரலாம். அதுவும் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்கள் கருத்தடை பாவிப்பவர்களாயின் அவர்களுக்கு இந்நோய்களின் தாக்கம் அதிகமானதாக இருக்கும். வாந்தி, மயக்கம், அடிவயிற்றில் - மார்பகங்களில் இறுக்கமான தன்மை அல்லது வீக்கம், கால் கை மூட்டுகளில் வீக்கம், சோர்வு, vagina வில் வலி - அரிப்பு - எரிச்சல், இரத்தக்கொதிப்பு இப்படி பல விளைவுகளேற்படும். இவ்வளவற்றையும் தாங்கிக்கொண்டு இம்மாத்திரைகளை உட்கொள்வோர் ஒருநாள் தவறவிட்டாலும் கருவுறும் வாய்ப்புள்ளது.

இரத்தம் ஒரு இடத்தில் உறைந்துபோய் இருப்பதற்கான சில அறிகுறிகளாக சில நேரம் பார்வையில் அல்லது பேச்சில் தடுமாற்றம், மூர்ச்சையடைதல், பயங்கர தலைவலி, இருமலின் போது இரத்தம் வருதல், தொடர்ந்து அடிவயிற்றில் வலி, உடம்பின் சரிபாதிப் பகுதிகளில் வலி (உதாரணமாக ஒருபக்க நெஞ்சுவலி கால்வலி கைவலி) - இப்படியான அறிகுறிகள் தொடர்ந்து வரும்போது மருத்துவரின் ஆலோசனையை உடனடியாக நாடவேண்டும். Demulen, Desogen, Loestrin, Lo/Ovral, Nordette, Ortho-Novum, Ortho-Tri-Cyclen, Estrostep, Ortho-cept, Alesse, Levlite and Ovcon எனப்பல பெயர்களில் விற்பனையாகும் இம்மாத்திரைகளால் சில ஒவ்வாமைகளும் ஏற்படுவதுண்டு. உதாரணமாக அதிகநேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்கும் பல பெண்களுக்கு தோலில் சிறிய கொப்பளங்களுண்டாகி பின்னர் அது மறைய பல வருடங்களாகும்.

எனவே கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவோர் வேறு ஏதாவது வருத்தங்களுக்காக வேறு எந்த மாத்திரைகளைப் பயன்படுத்துவதென்றாலும் மருத்துவ ஆலோசனையின் பின்னரே உட்கொள்ளவேண்டும். ஏனெனில் அம்மாத்திரைகள் கருத்தடை மாத்திரையின் பயன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் வேறு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

2007 ஐப்பசியில் gene block birth control என்றொரு புதிய கருத்தடை முறை எலிகளில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. RNAi (RNA interference) மூலம் ஒரு gene ஐ செயலிழக்கச் செய்வதன் மூலம் விந்தும் முட்டையும் சேருவதைத் தடுக்கும் முயற்சியில் எலிகளை வைத்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. இம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்கள் - ஆனாலும் மனிதர்கள் இந்த முறையைப் பின்பற்ற இன்னும் 10 ஆண்டுகள் எடுக்குமாம். கருத்தடை மாத்திரைகளால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகள் இந்த gene block ல் இல்லையென்று கூறுகிறார்கள். ஆனால் வேறுவிதமான பக்க விளைவுகள் தோன்றக்கூடுமாம்.

எனவே எடுத்ததுக்கெல்லாம் கருத்தடை மாத்திரைகளின் உதவியை நாடாமல் முடிந்தவரை "please deal with your period once a month" என்றுதான் எனக்கும் சொல்லத்தோணுது. சின்ன விசயங்களுக்காக இம்மாத்திரைகளைப் பாவிக்க வெளிக்கிட்டு உயிர்விடவேண்டாமே. வாழ்வை வாழ்ந்துதான் பார்ப்போமே.

7 comments:

கானா பிரபா said...

ஊரில் முன்னர் ஏழெட்டுப் பிள்ளைகள் பெற்றவர்கள் சொல்லுவர்கள் இப்படி "கடவுளாப் பார்த்துத் தாறார்" எண்டு.

இப்ப தான் வாசித்து முடிந்தேன். நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை, (தொடர்ந்து இப்படியான பதிவு போட்டுக் ஸ்யப்பா கண்ணக் கட்டினாலும்)இதை ஒரு வாரப்பத்திரிகையில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

சயந்தன் said...

//இதை ஒரு வாரப்பத்திரிகையில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.//

அதே அதே.. முன்னைய கட்டுரைகளையும்.. (அதுக்காக மாவரிக்கும் பேப்பர்களுக்கு குடுக்க கூடாது. :)))

காட்டாறு said...

சிநேகிதி...பயனுள்ள பதிவுகள். முந்தைய பதிவில் எப்படி விஷயங்கள் நிரம்பி இருந்ததோ, அது போல் இதில் கருத்து சொல்ல விழைந்தது போல் இருந்தது. டாக்டர் டெல்ஃபின் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் அபார்ஷன் பத்தி வருத்தம் தெரிவித்திருந்தார்.

நன்றி! பாராட்டுக்கள்!

பாச மலர் said...

பயனுள்ள பதிவு..

எதக் கண்டுபிடித்தாலும் கூடவே பயமுறுத்தும் பக்க விளைவுகளும் வந்து சேர்கின்றன..

Anonymous said...

விழுங்கு குளிசைகளினால் இவ்வளவு வில்லங்கம் இருப்பது தெரிந்தும், வேறு வழியில்லையே என்று பலரும் இவ்வழியினையே கடைப்பிடிக்கின்றனர்.

இதற்கு சித்தவைத்தியம், ஆயுர்வேதவைத்தியம் போன்றவற்றிலுள்ள மருந்து மாத்திரைகளை பாவனையில் கொண்டு வர வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பக்க விளைவுகள் உடன் ஏற்படாத மருந்து வகைகள் ஒரு வகை நின்று
கொல்லும் நஞ்சுகளே!
தெரிந்தும், கற்றவர்கள் இந்த வழிகளை நாடுவது வியப்பாக உள்ளது.
இயன்றவரை தவிர்க்க முயன்று,இயற்கையுடன் ஒன்றி வாழ்வதே நன்று.

மங்களூர் சிவா said...

//
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பக்க விளைவுகள் உடன் ஏற்படாத மருந்து வகைகள் ஒரு வகை நின்று
கொல்லும் நஞ்சுகளே!
தெரிந்தும், கற்றவர்கள் இந்த வழிகளை நாடுவது வியப்பாக உள்ளது.
இயன்றவரை தவிர்க்க முயன்று,இயற்கையுடன் ஒன்றி வாழ்வதே நன்று.

//
ரிப்பீட்டேய்