Custom Search

Sunday, January 20, 2008

வரட்டா போட்டு:-)


இன்றுடன் எனது நட்சத்திர வாரம் நிறைவடைகிறது. நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதப்படாமல் தூசிபடிந்து கிடந்த என் வலைப்பதிவை மீண்டும் தூசு தட்டி புதுப்பிக்க வைத்த தமிழ்மண நிர்வாகத்துக்கு எனது நன்றி!

முடிந்தளவு எனது கல்விசார் அனுபவங்களையும் சமூகம் சார்ந்த எண்ணங்களையும் ஏனைய வலைப்பதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எனது பதிவுகளைப் படித்து அவற்றுக்கு தங்கள் கருத்துக்களைதத் தெரிவித்தும் தவறுகளைச் சுட்டிக்காட்டியும் உற்சாகமளித்த நண்பர்களுக்கு நன்றி.

வாசித்துக் கருத்தெதுவும் சொல்லாமல் போனவர்களுக்கும் (:-)தனிமடலில் கருத்துக்களைச் சொன்னவர்களுக்கும் நன்றி.

வழமையாக பொழதுபோக்கும் அலட்டலுமாக போய்க்கொண்டிருந்த தத்தக்கபித்தக்க, நட்சத்திரவாரத்திலாவது ஆக்கபூர்வமாக எழுதவேண்டுமென்றுதான் இந்தப்பதிவுகள். சமூகம் நோக்கிய எந்தக்கருத்துக்களையும் சொல்வதல்ல நோக்கம்; இன்று தமிழ்ச்சமூகம் (குறிப்பாக ஈழத்தில் யுத்த சூழலிலும் ,யுத்த சூழலால் புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளிலும் ,தமிழக இயந்திரமயமாக்க சூழலிலும் வாழ்கிற தமிழ் மக்கள்) எதிர்நோக்கும் சமகால உளவியல் பிரச்சனைகளை மையப்படுத்தி சில அடிப்படையான எண்ணங்கைள வெளிப்படுத்தியிருக்கிறேன்.

இங்கு நான் சுட்டிக்காட்டியுள்ள சில விடயங்கள் தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்தும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டு தமிழ்ச் சமூக கலாச்சார பொருளாதார கட்டமைப்புகளை கருத்தில் கொண்ட தீர்வுகள் காணப்படவேண்டும்.இதுவே என் அவா.




நன்றி
தொடர்ந்தும் தத்தக்க பித்தக்க வலைப்பதிவினூடு உங்களிடம் வருவேன்.
அன்புடன்
சினேகிதி.

9 comments:

Dreamzz said...

நல்லா எழுதி இருந்தீங்க :) பாராட்டுக்கள்

MyFriend said...

//Dreamzz said...
நல்லா எழுதி இருந்தீங்க :) பாராட்டுக்கள்
//

ரிப்பீட்டேய்... :-)

காரூரன் said...

உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திக்காமல் அறிவு பூர்வமாகவும் சிந்திக்க வேண்டும் பொருள் பட்டு ஆக்கங்கள் சிறப்பாக இருந்தன. கற்றதை மற்றவர்களுக்கு புரிய வைப்பது சிறப்பு. ஒரு சிறிய ஆதங்கம்:
பாதிப்பின் விகிதாரத்தையோ அல்லது நடந்த காலத்தையோ குறிப்பிட்டிருந்தால் மேலும் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

a good effort in making anyone understand the problems and difficulties better

all kudos

keep it up

radhakrishnan

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்..பாராட்டுகள்..

மங்களூர் சிவா said...

சரி ரைட்டு!

கோபிநாத் said...

பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது இந்த வாரத்தில் ;)

வாழ்த்துக்களும், பாராட்டும் ;)

கலை said...

நிறைய நல்ல விசயங்களெல்லாம் எழுதினீங்கள். வாழ்த்துக்கள். போட்டு திருப்பியும் வாங்கோ. :)

சினேகிதி said...

எல்லாருக்கும் நன்றி!

\\பாதிப்பின் விகிதாரத்தையோ அல்லது நடந்த காலத்தையோ குறிப்பிட்டிருந்தால் மேலும் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.\\

புரியவில்லை காரூரன்!