Custom Search

Friday, January 18, 2008

விளையாட்டா ஒரு ஞாபகப் பதிவு

நட்சத்திரவாரத்துக்கும் ஞாபகத்துக்கும் என்ன தொடர்பு என்று என்னட்ட கேக்கவேண்டாம் ; அப்பிடியே நீங்கள் கேட்டாலும் அது எனக்கு ஞாபகம் வருமோ யாருக்குத் தெரியும்.என்ர கதையை விடுங்கோ உங்கட ஞாபக சக்தி எப்பிடி?
நான் அரிச்சந்திரன்ர தங்கச்சிக்கு தோழி ; அதால நான் சொல்றதை எல்லாம் நீங்கள் கேள்வி கேக்காம நம்பணும். அப்ப கதையைச் சொல்லத் தொடங்கட்டா? “சரி மேற்றர் என்னன்னா லச்சுமி லச்சுமின்னு ஒரு ஆட்டோ அதை ஓட்டுறது சந்துரு. அவனை ஓட்டுறது ராணி” என் ஞாபக சக்தி வாழ்க !!! நட்சத்திர வாரத்துக்கு உங்களையெல்லாம் வாரணுமே ஏதாவது எழுதுவம் என்று நினச்சு ரைப்பத் தொடங்கினனா அப்ப பார்த்து ‘ஓரம்போ’ trailer வந்து என்னப்பார் ரிக்கற் வாங்கு தியேட்டர்ல வந்து பார் என்று ஒரே தொல்லை. ஆமா நான் எழுதவந்த விசயம் என்ன?

ஒரு ஓரில ஒரு சின்னப்பொண்ணு இருந்தாளாம். அவளுக்கு நல்ல ஞாபகசக்தியாம். நல்ல கெட்டிக்காரியென்று ஊரே சொல்லுமாம். அவளின்ர அம்மம்மாக்கு தன்ர பேத்திக்கு ஞாபகசக்தி எப்பவும் இப்பிடியே இருக்கோணும் என்று ஆசை. தானே பார்த்து பார்த்து ஆய்ஞ்ச வல்லாரைக் கீரையைத் துப்பரவு பண்ணி சம்பலரைச்சுக் குடுப்பா. ஆனா அந்தச் சின்னப்பொண்ணிருக்கே அது ஒரு லூசு. அம்மம்மா செய்து குடுத்த வல்லாரைச் சம்பலைக் களவா எறிஞ்சுபோட்டு தாத்தாக்கு அரைச்சு வச்ச மிளகாய்க் கூட்டைக் களவா எடுத்து தின்டிடுமாம். அந்தப்பொண்ணு வளர வளர ஞாபகசக்தி மட்டும் வளரவேயில்லை.

||இதுக்குமேல கதை எழுத வராதாம். அந்தச் சின்னப்பொண்ணு நான்தான். மிச்சக்கதையை மறந்திட்டன். இன்றுபோய் நாளை வாங்கோ. நன்றி வணக்கம் || அப்பிடிச் சொல்லி முடிப்பம் என்று நினச்சன் ஆனால் இது ஏன் எழுதத் தொடங்கினான் என்று ஞாபகம் வந்திட்டுது.

போன மாதம் cognition எக்ஸாம் எழுதேக்க எனக்கு நிறைய விசயம் மறந்திட்டுது. நானும் பேப்பர்ல எழுதி வச்சிருக்கிற குறிப்புகளைத் திரும்ப திரும்ப வாசிச்சு வரிச்சு நான் என்ன எழுத நினைக்கிறனோ அதை என் மனக்கண்ணில ஓட விடுவம் என்று பார்க்கிறன் ஆனால் என்ர மனசுக்குள்ள இருக்கிற டிவிடி ல என்ன பிரச்சனையோ யாரறவார்?? அது ஒழுங்கா படம் வரவேயில்ல.இதில பகிடி என்னெண்டால் எனக்கு ஞாபகம் வராமல் போனதே ஞாபகத்தைப்பற்றித்தான். இப்ப எக்ஸாம் முடிஞ்சு இரண்டு கிழமைக்குப் பிறகுதான் நானிதை ரைப் பண்றன் ஆனால் எனக்கந்த எக்ஸாமில பதில் மறந்து போன கேள்வி இப்ப சரியா ஞாபகம் வரேல்ல ஆனால் ஒரு பாட்டு ஞாபகம் வருது. அந்தப் பாட்டு எந்தப்படத்தில என்றும் ஞாபகமிருக்கு. கிழக்குக் கடற்கரைச்சாலை என்றொரு சுனாமாமிப் படம் வந்திச்சே அடச்சா சுனாமி படம் வந்திச்சே அதில கஞ்சப்பெண்ணே கஞ்சாப்பெண்ணெ என்றொரு பாட்டிருக்கு உங்களுக்கு ஞாபகமிருக்கா? அதில சில வரிகள வரும் “நீ பரீட்சையில் மறந்திடும் விடைகளா, கடைசிப் பக்கம் கிழிந்த நாவலா, வார்த்தை மறந்த பாடலா ,நினைவில் வர அடம்பிடிக்கும் முகம் நீயா” இன்னும் ஏதோ எல்லாம் வரும்.

[ஒரு முக்கியமான விசயம் மறந்திட்டுது. Memory என்றால் ஞாபகம் தானே?? அப்பிடியென்று நினச்சுக்கொண்டுதான் நானிதை ரைப்புறன் அதுவும் என்ர மறதியென்றால் நீங்கள் போய் படுங்கோ குட்நைற்.]

ரீச்சர் ஞாபகத்தைப்பற்றிப் படிப்பிக்கேக்க கேட்டா short term memory ல இருந்து long term memory க்கு தகவல்களை எப்பிடி அனுப்புறதென்று சொன்னது ஞாபகமிருக்கா என்று. நாங்கள் ஒன்றும் சொல்லாமலிருக்க ஒன்றில் சேது மாதிரி தலையை ஆட்டுங்கோ இல்லாட்டி கஜனி மாதிரி ஆட்டுங்கோ என்று சொன்னா. ( நான் அப்பவே சொன்னான் அரிச்சந்திரன்ர தங்கச்சி என்ர தோழி என்று :-) கனேடியன் prof க்கு சேது வை கஜனியை எல்லாம் தெரியும் என்றால் அதை நீங்கள் நம்போணும் ஓகே )

எப்பவும் நாங்கள் LTM ல சேமிச்சு வைக்கோணும் என்று நினைக்கிற தகவல்களை ஒன்றோட ஒன்று தொடர்புபடுத்தி ஒரு கோர்வையாக பாடமாக்கினம் என்டால் அது இலகுவா LTM ல போய்ச் சேருமாம் பிறகு அது ஒன்றை ஞாபகப்படுத்தினால் காணும் மற்றது தன்ரபாட்டில ஞாபகம் வருமென்றா. சத்தியமா அவா சொன்னத நான் நம்பேல்ல. அவ ஒரு உதாரணம் சொன்னா அத நான் மறக்கவே மாட்டன். எக்ஸாமில நீங்கள் இதுவரைக்கும் படிச்ச ஒவ்வொரு theorist ஐப் பற்றி சிறுகுறிப்பு வரைக என்றொரு கேள்வி வந்தா அதற்கான பதிலை நாங்கள் இலகுவாக ஞாபகம் வச்சிருக்க ஒரு வழி சொன்னா ஆனால் அது இலகுவான வழியில்லை.

இப்ப நான் Pavlo (classical conditioning) , Piaget (Developmental stages) , Freud (Psycho dynamic) , Bandura (Observational learning) இவையைத்தான் முக்கியமா ஞாபகம் வச்சிருக்கோணுமென்றால் இவை நாலுபேரும் எங்கட வீட்டுக் கூடத்தில இருந்து கும்மியடிக்கினம் oops கதைச்சுக்கொண்டிருக்கினம் என்று நினைக்கட்டாம்.

• Pavlo ஒரு சோபாவில இருந்துகொண்டு மணி அடிக்கிறதும் நாய்க்கு சாப்பாடு போடுறதுமா விளையாட்டுக்காட்டுறார்.

• Piaget ஒரு குழந்தைப்பிள்ளையைத் தவள விட்டிட்டு ஒரு பொம்மையை பெட்சீற்றுக்கு கீழ ஒழிச்சு வச்சிட்டு அது தேடுதோ என்று பார்த்துக்கொண்டே அவர் அந்த பொம்மையைத் தேடுறார்.பிறகு கொஞ்ச வாண்டுகளை வச்சுக்கொண்டு அதுகளோட கண்ணாடிக்குவளைகள் வச்சு தண்ணி அளந்து ஊத்தி விளையாடுறார்.

• அடுத்தது நம்ம Freud தாத்தா. அவர் தன்ர மகளை ஒரு கண்ணாடி அறைக்குள்ளு பூட்டி வச்சிட்டு அந்த அனாப்பொண்ணு வெளில நிக்கிறாக்களைப் பார்த்து சிரிக்குதா ஒழுங்காச் சாப்பிடுதா. கண்ணாடி அறைக்குள்ள வெப்ப தட்பம் எல்லாம் சரியா இருக்கா என்று நோட்டம் விட்டுக்கொண்டெ இந்தப்பொண்ணுக்கு ஈகோ எப்ப உருவாகும்? எப்பிடி அது வெளிப்படும் ? பெரிசா வளர்ந்து வந்து தன்னைப்பற்றி எல்லாத்தையும் என்னட்ட சொல்லுமா? இல்லாட்டி அப்பா விரும்புற மகளா இருக்கோணும் என்று எனக்குப் பிடிச்ச மாதிரி தான் இருக்கிறதா காட்ட நிறையப் பொய் சொல்லுமா ? என்று யோசிச்சுக்கொண்டு தனக்குத்தானே கதைக்கிறார்.

• கடைசியா என்ர பண்டுரா மாமா( அவர் எனக்கு மட்டும்தான் மாமா உங்களுக்கில்ல சரியா..இன்னும் உயிரோடதான் இருக்கார் British Columbia or Vancouver ல)
o பண்டுரா மாமா சின்னப்பிள்ளையள் கொஞ்சப்பேருக்கு ஒரு ரீவில ஒரு கனல் கண்ணன் மாஸ்டர்ட சண்டைக்காட்சியைப் போட்டுக்காட்டிட்டு பிறகு ஒரு அறைக்குள்ள கொஞ்ச பொம்மைகளையும் குடுத்து அந்தப்பிள்ளையளைப் பூட்டிவிட்டிட்டு அதுகள் அந்தப்பொம்மைக்கு எப்பிடி உதைக்குதுகள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.

இவ்வளவு விசயமும் எங்கட வீட்டுக்கூடத்தில நடக்க என்ர அம்மா விடுவா என்று நினக்கிறீங்கள்???? பெட்டைக்கு நல்லா முத்திட்டுதெண்டு நினச்சிடுவா.

எனக்கு இன்னொரு விசயம் ஞாபகம் வந்திட்டுது. ஊரில எனக்கு வகுப்பில விஞ்ஞானம் படிப்பிச்ச மாஸ்டருக்கு பெயர் விஜயகுமார்.என்னை முதல் முதல் முட்டிபோட வச்ச வாத்தி எப்பிடி மறப்பன். அன்டைக்கு நான் Periodic table பாடமாக்கிக்கொண்டு போகோணும். ரியுசன்ல யாரோ சொன்னதக் கேட்டு Hello Hero Li(H He Li) (இது மறந்திட்டன் மிச்சம்) Benz Car என்று பாடமாக்கிக்கொண்டு போனன். அங்க போனால் அது இடையில மறந்து போச்சு. நானும் ஞாபகப்படுத்துறதுக்கும் வாத்திட்ட இருந்து தப்புறதுக்கும் ஏதேதோ முயற்சி பண்ணிப்பார்த்தன் ஒன்டும் சரியா வரேல்ல கடைசில பிரின்ஸிட வாசல்ல அன்டைக்கு தவம்தான்.

இந்த மறதி என்றதில்லாம ஞபாகம் மட்டும் வாழ்க்கைல இருந்தா நல்லாத்தானிருக்கும்போல...இல்ல இல்ல தப்பு தப்பு தெரியாமல் சொல்லிட்டன் ஞாபகம் என்றொன்று இருந்தால் கட்டாயம் மறதியும் இருக்கோணும் இல்லாட்டா அவ்வளவும்தான். மறக்கவேண்டிய எவ்வளவு விசயத்தை ஞாபகம் வச்சிருக்கிறம்..ஏனப்பிடி?

மனசுக்குப் பிடிக்காத விசயங்கள் எங்கட LTM க்குப்போய்ச் சேராதாம். ஞாபகத்துக்கும் emotion க்கும் தொடர்பிருக்காம். அப்ப ஞாபகத்துக்கும் காதலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கு. அப்பிடி மனசுக்குப் பிடிக்காத விசயம் LTM க்குப்போய்ச் சேராதெண்டால் ஏன் தோற்றுப்போன காதல் யாருக்கும் மறக்கிறதே இல்ல? தோக்கிற காதல்தான் மனசுக்கு பிடிச்ச காதலா?

சுத்தம் எனக்கு நாளைக்கு என்ன எழுதோணும் என்றது மறந்து போச்சு.
எதுக்கும் நீங்கள் இப்ப நான் சொல்ற படங்களைப் பார்த்திட்டு வாங்கோ மிச்சத்த நாளைக்கு கதைப்பம். Memento , 50 First dates, Mulholland Drive , The Bourne Identity அப்புறம் மறக்காம நம்ம Nemo வையும் பாருங்கோ.

6 comments:

Anonymous said...

/ ரியுசன்ல யாரோ சொன்னதக் கேட்டு Hello Hero Li(H He Li) (இது மறந்திட்டன் மிச்சம்)/

Hello HEro LIke BEautiful Benz Car N O F NEe NAan MGr ALlathu SIvaji Pakam Sarjothevi CLulithu ARdinaar Kulak CAriyil
ஹலோ ஹீரோ லைக் ப்யூட்டிபுல் பென்ஸ் கார் நம்பர் ஒஃப்வ் நீ நான் எம்ஜிஆர் அல்லது சிவாஜி, சரோஜாதேவி குளித்து ஆடினார் குளக் கரையில்.

இப்படித்தான் நான் படிக்கும்போது நினைவுபடுத்துகிறனான். கன வருசத்துக்குப் பிறகு ஒருக்காய் நினைவுபடுத்திப் பார்த்தேன் :-)

MyFriend said...

மறந்து போச்சு மறந்து போச்சுன்னு சொல்லி இத்தனை மேட்டர் பேசியிருக்கீங்களே..

ஆனால் ஒன்னு.. ஒன்னொன்னுக்கு சம்பந்தம் இல்லாமல் எனென்னமோ பேசி.. ஞாபகம் வந்துட்டுச்சுன்னு என்னென்னமோ பேசி.. கொஞ்சம் கொஞ்சம் ஞாப்கத்துல இருந்த என்னோட மேமோரி பவர் ச்சுத்தமா போச்சு..

நடுவுல அந்த சைண்டிபிக் டெர்ம் வேற. அது உங்க பாட புத்தகத்துல இருந்து சுட்டதுதானே? :-)

வி. ஜெ. சந்திரன் said...

//Hello Hero Li(H He Li) //

ஆவர்த்தன அட்டவணையை பாடமாக்க இப்படி ஒரு பாட்டும் எனக்கு தெரியா. ஆனா தாக்க வீத தொடருக்கு இரண்டு பாட்டு? இருக்கு

ஒண்டு கீழ இருந்து மேல போகும்.

பொன்னார் ( பிளான்(Pl) வெறும் (Ag)பாதக (Hg) செயல் (Cu) ஐயா ?? ஈழ(Pb) தமிழர்(Sn) இலங்கை (Fe) நாட்டில் (Zn) அல்லலுறும் (Al) மக்கள் (Mg) கண்ணீர்(Ca) சோவென (Na) பொழிந்தனர் (K)

மற்றது மேல இருந்து கீழ

போவேஸ் காசோ மக்கநாகுகட்டி..?? :(

கோபிநாத் said...

சுத்தம் இப்போ நான் எதுக்கு இந்த பதிவை படிச்சேன்னு மறந்தே போச்சு...அவ்வ்வவ்வ்வ்வ் ;)

மங்களூர் சிவா said...

கீழ்பாக்கத்துல டைரக்ட் அட்மிசன் கிடைக்கும் இந்த பதிவ படிச்சவங்களுக்கு !!!!

கொழுவி said...

//பொன்னார் ( பிளான்(Pl) வெறும் (Ag)பாதக (Hg) செயல் (Cu) ஐயா ?? ஈழ(Pb) தமிழர்(Sn) இலங்கை (Fe) நாட்டில் (Zn) அல்லலுறும் (Al) மக்கள் (Mg) கண்ணீர்(Ca) சோவென (Na) பொழிந்தனர் (K)//


உப்பிடியில்லையே.. கடைசியா யாரோ குளிக்கையில் யார் கண்டது கமல் எண்ட மாதிரித்தானே நான் பாடமாக்கினேன்.

கடைசியில குளித்தது தான் நினைவில நிண்டது. ஆவர்த்தனமெல்லாம் மறந்து போச்சு