Custom Search

Monday, January 14, 2008

உங்கட வீட்ட பொங்கியாச்சா ?

இன்டைக்கு பொங்கலாம் எல்லோ..உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே நானேன் போய் உங்களிட்ட சொல்லுவான். நீங்கள் எல்லாரும் இப்ப பொங்கி பொங்கலை நல்லா ஒரு பிடி
பிடிச்சிருப்பியள் ஆனால் என்ன மாதிரி விடுதியில இருக்கிறாக்களுக்கெல்லாம் cheerios ம் பாலும்தான் பொங்கல் (ஆமா அது ஒவ்வொரு நாளும் சாப்பிடுறது தானே) . நானிப்பிடி
எழுதுறதை என்ர அம்மா மட்டும் வாசிக்கோணும் அவ்வளவுதான் :-) ஆமா நீ வீட்டில நிண்டாலும் பொங்கல் சாப்பிடுற ஆள்தானே என்று கட்டாயம் சொல்லுவா.என்னதான் பொங்ல் பிடிக்காட்டாலும் பொங்கல் நாளுக்கு வீட்டில நிண்டால் ஒரு சந்தோசம்தான் என்ன ? இப்ப பாருங்கோ நான் மட்டும் விடுதில நிண்டு இதை எழுதிக்கொண்டிருக்கிறன் ஆனால் வீட்ட அக்கா குடும்பத்தோட அம்மா வீட்ட போய் நிக்கிறா. போனது காணாதெண்டு போன் பண்ணி எனக்கு வெறுப்பேத்துதுகள் பெரிசுகள்தான் இந்தப்பாடெண்டால் அக்கான்ர மகன்கள்
இரண்டுபேரும் என்னை நக்கலடிக்க வெளிக்கிட்டுதுகள். அவை எல்லாரும் ஒன்றா இருந்து fun அடிக்கினமாம் நான் இங்க தனிய நிக்கிறன் என்றதில ஒரு சிரிப்பவைக்கு.

பொங்கல் எனக்கு சாப்பிட விருப்பமில்லை ஆனால் பொங்கலுக்கென்று வேண்டுற கச்சான் kaju nuts இதெல்லாம் உடைச்சு வெட்டி வைக்க முதல் கால்வாசி என்ர வாய்க்குள்ளயும்
கால்வாசி அக்கான்ர வாய்க்குள்ளயும் போயிடும் மிச்சம்தான் பொங்கல் பானைக்குள்ள போகும். (அம்மம்மா என்ன யார் பக்கத்தில இருந்தாலும் எப்பிடி களவாச் சாப்பிடுதென்று
எங்களுக்குத் தெரியுமில்ல :-) ஆனால் சில நேரம் இப்பிடிக் களவாச் சாப்பிடுற சின்ன விசயத்தில தொடங்கி அம்மம்மாக்கு மாமாக்களுக்கென்று யாரிட்டயாவது வாய்காட்டிப்போட்டு
நல்ல நாளதுவுமா நல்லா மண்டகப்படி வாங்கிப்போட்டு நாள் முளுக்க பம்மிக்கொண்டும் சில நேரம் இருப்பம்.

இப்ப மட்டுமில்ல எப்பவுமே எனக்கு பொங்கல் பிடிச்ச சாப்பாடில்ல பொங்கல் மட்டுமில்ல இனிப்பானது எதுவுமே. ஆனால் பொங்கல் என்ற பெயரில நடக்கிற மிச்ச எல்லா விசயமும்
பிடிக்கும்.அம்மா குடும்பத்திலயும் சரி அப்பா குடும்பத்திலயும் சரி நிறையப் பிள்ளையள் அதால எனக்கு நிறைய சித்திமார் சித்தப்பாமார் மாமாமார் மாமிமார் பெரியப்பா அத்தை ;
பொங்கல் போன்ற பண்டிகை நாட்களையொட்டி நிறையக் காசு கிடைக்கும். அது தவிர நிறைய உடுப்புகள் கிடைக்கும். அதுவும் சித்தப்பாமார் அவைக்கு என்ன பிரச்சனை என்டாலும் பெறாமக்களுக்கு உடுப்பு வாங்கிக்குடுக்க பின்நிக்கிறதேயில்லை. புத்தகம் கொப்பி கொம்பாஸ் இப்பிடி நிறையக் கிடைக்கும். வீட்ட பொங்கி முடிஞ்ச கையோட நானும் அக்காவும் அம்மம்மாவீட்ட ஓடிடுவம் ஏனென்டால் எங்கட வீடு மட்டும் கொஞ்சம் தூரத்தில மற்ற மாமாக்கள் சித்தியவைன்ர வீடெல்லாம் ஒரே வளவுக்குள்ள இருக்கும். ஒவ்வொருத்தற்ற வீட்டயும் போய் என்னென்ன நொறுக்குச் சாப்பாடு இருக்கோ அதை எடுத்துக்கொண்டு அம்மம்மான்ர தோட்டக்காணிக்குப் போய் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம். அநேகமா பெடியங்களை விட பெட்டையளுக்குத்தான் நிறையப் பரிசுகள் கிடைக்கும். அதால பொங்கலண்டைக்கு அவங்கள் கொஞ்சம் மூஞ்சையத் தூக்கி வச்சுக்கொண்டு திரிவாங்கள் (இப்ப நினச்சா சிரிப்பா இருக்கு).

குடும்பத்தாக்களோட பொங்ல் கொண்டாடி முடிய தூரத்துச் சொந்தக்காரர் வீட்டயும் அயலவர் தெரிஞ்சாக்கள் வீட்டயும் போறது. அங்க போய் எனக்கு என்ர சித்தப்பா பொங்கலுக்கு
புதுக் கொம்பாஸ் வேண்டித்தந்தவர். அப்பா பொங்கல் வாழ்த்தும் காசும் அனுப்பினவர் கொழும்பு மாமா மங்குஸ்தான் பழம் கொண்டு வந்தவர் என்று அதுவரை கிடைச்சதெல்லாத்தையும் விளம்பரப்படுத்துறது அங்க இருக்கிற எங்கட வயசாக்களும் தங்கட பங்குக்கு எங்கட குட்டிச் சித்தப்பா லண்டன்ல இருந்து ஏதோதோ அனுப்பினவர் என்று சொல்லுவினம். வீட்ட போய் அம்மாவ நச்சரிக்கிறது ஏனம்மா எங்கட சுவிஸ் மாமா எங்களுக்கொண்டு அனுப்பேல்ல. அம்மா சொல்லுவா அவை அவேன்ர குட்டிச்சித்தப்பாவோட கதைக்கிறதேயில்ல உனக்குச் சும்மா சொல்லியிருக்கினம். ( யாரிட்டயும் ஏதும் வேண்டுறதிலயே நிக்கிறாள் என்று நினைக்கிறீங்களென்ன :-) சின்ன வயசில எப்பிடியிருந்தனோ அதைத்தானே சொல்ல முடியும் :-) ).

இவைதவிர பொங்கல் என்றால் எனக்கு ஞாபகம் வாறது எங்கட ஊரில இருக்கிற பிள்ளையார் கோயில் வையிரவர் கோயில் மற்றும் பாலாச்சி. வீட்டுப்பொங்கல் முடிய கோயில்லயும் போய் பொங்குவினம் அம்மாமார். நாங்கள் மரத்தில மாங்காய் காய்ச்சிருக்கோ பலா மரத்தில பூ பூத்திருக்கோ எப்ப காய் வரும் நிலத்தில நிண்டுகொண்டு ஆயுறமாதிரிக்காய்க்குமோ என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பம். ஆனால் அது பொறுக்காது அம்மா மாருக்கு சாணி காணாது பாலாச்சி வீட்ட போய் இன்னும் கொஞ்சம் சாணி வேண்டிக்கொண்டு வரச்சொல்லுவினம். மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டுவா அது வேணும் இதுவேணும் என்று ஆக்கினைப் படுத்துவினம். ஆக்கினை என்டு நினச்சதாலயோ என்னவோ இப்ப பொங்கல் என்றாலே நினைவுகள்
மட்டும்தானிருக்கு.

இப்பிடித்தான் ஒரு பொங்கலுக்கு முதல்நாளிரவு வெடி வேண்டிக்கொண்டு வந்து தந்திட்டு அண்ணா போராடப் போறன் என்று கடிதம் எழுதி வச்சிட்டுப் போட்டான். அடுத்த நாள் பொங்கல் பொங்கலோ பொங்கல்தான். பெரியப்பா பாவம் ஊாரில உள்ள எல்லாக்காம்புக்கும் திரிஞ்சுபோட்டு இரவு வந்தார் வீட்ட அவன் திரும்ப வரமாட்டானாம் என்டு.

பொங்கலண்டைக்கு எல்லாரையும் பானையில அரிசி போடச் சொல்லறவையெல்லா?? ஏதோவொரு தாயகப்படத்தில பொங்கல்பானையில அரிசி போட்டுக்கொண்டிருக்கும்போது பொம்மர் அடிச்சு அந்தக் குடும்பத்தில எல்லாரும்(?) சாவினம் யாருக்காவது ஞாபகம் இருக்கா என்ன படமென்று?

ஊரைவிட்டு வந்தாப்பிறகு பொங்கல் அதுபாட்டுக்கு வந்த சுவடு தெரியாமல் வந்து போகுது. பொங்கல் வரப்போகுதென்ற ஆரவாரமும் இல்லை எதிர்பார்ப்புமில்ல. எடுத்ததுக்கெல்லாம்
புதுச்சட்டை போட்டுப் பழகி புதுசாப் போடோணும் என்ற ஆசையும் வாறேல்ல. இங்க ஸ்காபுறோவில ரெடிமேற் பொங்கல்பானை விற்கிறார்கள். ஊரில பொங்கல்சாமான் என்று லிஸ்ட் போட்டு வேண்டினமாதிரிக் கஸ்டப்படத்தேவையில்ல. பொங்கலுக்குத்தேவையான எல்லாம் தருவினம் அதை வேண்டி கிச்சின்ல பொங்கலைப் பொங்கி விருப்பம் என்றால் சாப்பிடலாம் இல்லாட்டி பொங்கி வைச்சிட்டு தேவையான ஆக்கள் போட்டுச் சாப்பிடுங்கோ என்டிட்டு வேலைக்குப்போறாக்கள் போகலாம். பள்ளிக்கூடம் போறாக்கள் போகலாம். வீட்டில
இருக்கிறாகள் பொங்கல் வாழ்த்துச் சொல்ல வாற தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளித்துக்கொண்டு சன் ரீவியில் நயன்தாராவின் முதல் பேட்டியை அல்லது TVI ல ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். இல்லாட்டி என்னைப்போல நடுச்சாமத்தில கணனிக்கு முன்னால கொட்டாவி விட்டுக்கொண்டு எதையாவது டொக்கு டொக்கெண்டு தட்டிக்கொண்டிருக்கலாம் :-)

என்னதான் சொன்னாலும் தைப்பொங்கல் தைப்பொங்கல்தான்!
பொங்கல்பொங்கல் வாழ்த்துக்களுடன் -சிநேகிதி-

23 comments:

ILA (a) இளா said...

சில நேரங்களில் குடும்பத்திலிருந்து தள்ளி இருக்கிறது ரொம்ப கஷ்டங்க. சீரியலுடனே பொங்கல் வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

உங்களுக்கு அப்படி என்றால்... செவ்வாய்கிழமை பொங்கலை போன ஞாயிறே கொண்டாட வேண்டிய கட்டாயம்,பலருக்கு- சிங்கையில். :-)

வி. ஜெ. சந்திரன் said...

என்னோட பொங்கல் றைஸ் குக்கரிலை பொங்கி முடிஞ்சுது. இன்னும் சாப்பிட இல்லை.
பொங்கல் வாழ்த்துக்கள் .....

Anonymous said...

முந்தின மாதிரி சந்தோசமான, கலகலப்பான,
ஆரவாரம் நிறைந்த தைப்பொங்கல் பொங்குவதற்கு
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!

காட்டாறு said...

உங்க பதிவு கொசுவர்த்தி சுத்த வைக்குது. எளிமையா அருமையா எழுதியிருக்கீங்க. அறிமுகமே அடுத்த பதிவை எதிர்பார்க்க வைக்குது. :-)

குசும்பன் said...

பொங்கல் என்றால் கிராமத்தில் தான் சிறப்பாக இருக்கும், எல்லாத்தையும் விட்டு வீட்டை விட்டும் தூரத்தில் இருப்பது கஷ்டம் :(((

///கொப்பி கொம்பாஸ் /// அப்படி என்றால்?

MyFriend said...

சிநேகிதி....

ஒன்னும் பிரச்சனையில்ல. விடுதியிலேயே பொங்கி போங்கல் கொண்டாடிடலாம்ம்.. அப்படியே வாட்ச்மேன் காதுல் ஒரு பட்டாசும் கொளுத்தி போட்றலாம்.. என்ன சாரியா? :-)

மங்களூர் சிவா said...

//
ஊரைவிட்டு வந்தாப்பிறகு பொங்கல் அதுபாட்டுக்கு வந்த சுவடு தெரியாமல் வந்து போகுது. பொங்கல் வரப்போகுதென்ற ஆரவாரமும் இல்லை எதிர்பார்ப்புமில்ல. எடுத்ததுக்கெல்லாம்
புதுச்சட்டை போட்டுப் பழகி புதுசாப் போடோணும் என்ற ஆசையும் வாறேல்ல.
//
வெல் செட்

பொங்கல் என்றில்லை சினேகிதி அனேக பண்டிகைகளுமே இப்படித்தான் ஆகிவிட்டது!!

சேம் பிளட் :((

கானா பிரபா said...

நல்ல பதிவு, நிறைய விஷயங்களை நினைப்பித்தும் விட்டது.

பொங்கல் பதிவுக்கு போஸ் குடுத்த பெடியன் சூப்பர். (ஆனா உது பொங்கல் காலத்துப் படமில்லை என்றும் தெரியும் ;-)

சயந்தன் said...

இதென்ன கரைச்சல்.. சுவிசில நாளைக்கெல்லோ பொங்கல்.. (ஓம்.. உங்களுக்கெல்லாம் மாட்டுப்பொங்கல் நாளைக்குத்தான் எண்டு சொல்லப்படாது ) செவ்வாய்க் கிழமைதானே பொங்கல்.

பொங்கல் வாழ்த்துக்கள்

Anonymous said...

//உங்கட வீட்ட பொங்கியாச்சா ?//

ஏன் பொங்காட்டி வந்து பொங்கித் தருவீங்களோ???

கொழுவி said...

//கொப்பி கொம்பாஸ்//

நோட்டுப் புக், மத்தமெட்ரிக்ஸ் பாக்ஸ்

சினேகிதி said...

வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி..நாளைக்குப் பொங்கல் கொண்டாட இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் அப்ப உங்கட பொங்கல் ஞாயிறே முடிஞ்சுதா:-)

றைஸ் குக்கர்லதான் இங்க எல்லாற்ற பொங்கலும் விஜே :-)

நன்றி காட்டாறு :-)

குசும்பன் உங்கட கேள்விக்கு கொழுவி தாத்தா பதில் சொல்லியிருக்கிறார்.

மைபிரன்ட் அப்ப நீங்கள் அதான் செய்தனீங்களா விடுதியில :-)

சினேகிதி said...

\\பொங்கல் என்றில்லை சினேகிதி அனேக பண்டிகைகளுமே இப்படித்தான் ஆகிவிட்டது!!\\

ம் ம் இங்கயும்தான் மங்களூர் சிவா.


\\பொங்கல் பதிவுக்கு போஸ் குடுத்த பெடியன் சூப்பர். (ஆனா உது பொங்கல் காலத்துப் படமில்லை என்றும் தெரியும் ;-)\\

தெரிஞ்சுபோச்சா :-))

சயந்தனண்ணா எங்களுக்கு இன்டைக்குத்தான் பொங்கல்.

இராம.கி said...

எங்கள் ஊர்ப்பக்கம் "பால் பொங்கியாச்சா" என்று கேட்பார்கள். கூடவே "பொங்கலோ பொங்கல்" என்ற கூப்பாடு.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

ஆதிபகவன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

கனடாவில் இன்று திங்கட்கிழமை பொங்கல். காலையிலேயே பொங்கல் வைத்து கொண்டாடிவிட்டோம்!!!

Vasanthan said...

கனடாக்காரர் தானே உலகத்தில கடைசியா பொங்கல் கொண்டாட வேண்டிய ஆக்கள்? அவுஸ்திரேலிய - நியூசிலாந்து மக்கள்தான் உலகத்தில முதலில கொண்டாட வேண்டியவர்கள்.

இதென்ன எல்லாம் மாறிநடக்குது?
எங்களுக்கு இண்டைக்குத்தான் பொங்கல்.

சினேகிதி said...

வசந்தனண்ணா ஆதிபகவன் சொன்னதக் கேட்டிங்கிளா?? எனக்கும் குழப்பமாத்தானிருக்கு...

இராம கி மற்றும் ஆதிபகவன் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

ஆதிபகவன் said...

//கனடாக்காரர் தானே உலகத்தில கடைசியா பொங்கல் கொண்டாட வேண்டிய ஆக்கள்? அவுஸ்திரேலிய - நியூசிலாந்து மக்கள்தான் உலகத்தில முதலில கொண்டாட வேண்டியவர்கள்.//

உண்மைதான், என்ன செய்வது? கனேடிய நேரப்படி கணித்து 14ம் திகதி பொங்கல் என்று சொல்லிவிட்டார்கள்.

எல்லாம் இங்குள்ள குருக்கள் மயம்.

சினேகிதி said...

ஆதிபகவன்,
பொங்கல் நேற்றில்ல இன்டைக்கென்டு சொன்னால் வீட்டுக்காரர் சண்டைக்கு வரினம் :-)

ஊரோடின் ஒத்து ஓடாம் என்டினம்.

Anonymous said...

//எல்லாம் இங்குள்ள குருக்கள் மயம்.//
ஊரோடு ஒத்து வாழ் என்பதை இண்டையில இருந்து
உலகோடு ஒத்து வாழ்
என்று மாத்தி விட்டோம். அதால கனடாக்காரரெல்லாம் இண்டைக்கு பொங்கி உலகோடு ஒத்து வாழுங்கோ.

சினேகிதி said...

அநாநி நண்பரே ,
பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் முடிஞ்சுதாம் திரும்பப் பொங்கேலாதாம்.:-)

Unknown said...

//அநேகமா பெடியங்களை விட பெட்டையளுக்குத்தான் நிறையப் பரிசுகள் கிடைக்கும். அதால பொங்கலண்டைக்கு அவங்கள் கொஞ்சம் மூஞ்சையத் தூக்கி வச்சுக்கொண்டு திரிவாங்கள் (இப்ப நினச்சா சிரிப்பா இருக்கு)//

மற்றவரின் வேதனையில் சிரிப்பது தப்பில்லையா :)