திருவடியார்களுக்குத் திருவணக்கம்!!!
தாயகப்பறவைகள் ஐப்பசி இதழ் சமுதாயக் கண்ணோட்டத்துக்கு எழுதியது.
"திருவடியார்களே, இன்றைய திருநாளில் நாமனைவரும் ஆண்டவன் சந்நிதானத்தில் கூடியிருக்கிறோம். ஒரு திருப்பணிக்காக அதிஸ்டலாபச்சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குப் பிரியமானவர்களின் பெயர்களில் அதிஸ்டலாபச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் அதிஸ்டசாலிகளாயின் ஒரு camry அவர்கள் வசமாகும் . திருப்பணிக்காக ஒவ்வொருவரும் 10 டொலர்களை அளித்து அதிஸ்டலாபச்சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள்"
அப்பா : அறிவிப்பாளர் சரியில்லை.
அம்மா : பின்ன நான் போய்ச் சொல்றன் ஒலிபெருக்கியை உங்களிட்டத் தரச்சொல்லி
அப்பா : ஓ பின்ன நானிவரை விட வடிவாக் கதைப்பன்
அம்மா : சுமி அர்ச்சனை ரிக்கற் வாங்கிக்கொண்டு வாங்கோ .அப்பா 10 டொலர் குடுத்துவிடுங்கோ.சகானா அக்காவோட கூடப்போய் ரிக்கற் எடுத்துக்கொண்டு வாங்கோ.
சகானா : அப்பா 15டொலர் தாங்கோ 5 டொலர் ஐஸ்கிறீம் வாங்க.
அப்பா : வந்த உடனயா முதல் ரிக்கற்றை வேண்டிக்கொண்டு வாங்கோ இரண்டு பேரும். வீட்டில ஒரு துரும்பை எடுத்து அங்கால போடச்சொன்னா காய்ச்சல் தடிமன் எல்லாம் வரும்.ஐஸ்கிறீம் ஐ கண்டால் அதெல்லாம் எங்க போகுதோ தெரியேல்ல.
சகானா: ம்.
நான் : ஒரு அர்ச்சனை ரிக்கற் தாங்கோ. (10 டொலர் ஐ குடுக்கிறன்)
ரிக்கற் விற்பவர் : இன்றைக்கு ரிக்கற் 11 டொலர்.
நான் : வழமையா 10 டொலர்தானே?
ரி.வி. திருவிழா நேரம் ரிக்கற் விலை கூட.
நான் : அப்ப ஏன் ரிக்கற்ல 10 டொலர் என்று போட்டிருக்கு.
(கோயிலுக்கு 1 டொலர் கூடக்குடுக்க யோசிக்குதுகள் என்ற தோரணையில் முகத்தை உர் என்று வைச்சிருக்கிறார்)
நானும் மனசுக்குள்ள கோயிலும் சந்தையாப் போச்சு.என்று நினைச்சுக்கொண்டு சகானா கொண்டுவந்த 1 டொலரைக்குடுத்திட்டு ரிக்கற்றை வாங்கிக்கொண்டு பெயரை எழுதுவம் என்று குனிய ரிக்கற் வித்தவருக்கு நான் கேள்வி கேட்டிட்டன் என்று கோவம் அதால என்னைத்தள்ளி நின்று எழுதச் சொன்னார் பெயரை.(ரிக்கற் வாங்க பின்னால ஒருதரும் லைன்ல இல்லை).நானும் கோயிலாச்சே என்று வாயை மூடிக்கொண்டு ரிக்கற்றை கொண்டே அம்மாட்ட குடுக்க அம்மான்ர பிரண்ட் கேட்டா:
அ.பி. : என்ன சுமி அர்ச்சனைத்தட்டு எங்க?
நான் : என்ன தட்டு? எனக்குத்தெரியா அவை ஒன்றும் தரேல்ல.
அம்மா : எல்லாத்திலயும் அவசரம். அவை தந்திருப்பினம் நீங்கள் கவனிக்காமல் வந்திருப்பீங்கள் போய் கேட்டு வாங்கிக்கொண்டு வாங்கோ
(கொர்ர்ர்ர்ர் திரும்பவும் அந்த உர் பார்ட்டின்ர போகணுமா நான் )
நான் : நீங்கள் அர்ச்சனை தட்டுத் தரேல்ல.
ர.வி : நீங்கள் கேக்கவேயில்லையே.
நான் 10 டொலர் ரிக்கற்றை 11 டொலருக்கு விற்கத்தெரியும். ஆனால் சின்னப்பிள்ளையள் 10 டொலர் ரிக்கற்றுக்கு அர்ச்சனைத்தட்டும் வருமென்று தெரியாமலிருக்கலாம் என்று குடுக்கவெல்லோ வேணும் என்று மனசுக்குள்ள திட்டிக்கொண்டே ஒரு அர்ச்சனைத் தட்டை எடுத்துக்கொண்டு போய் கோவத்தோட குடுத்தன் அம்மாட்ட.
நான் : இதுக்குத்தான் நான் கோயிலுக்கு வரமாட்டன் என்று சொல்றனான். இங்க வந்தால் எனக்கு கோயிலுக்கு வந்திருக்கிறம் என்ற நினைப்பே வாறேல்ல.
அம்மா : இப்ப ஏன் கத்துவான்? உங்களுக்கு கோயில் வேண்டாம் கடவுள் வேண்டாம் சொந்தக்காரர் வேண்டாம். ஒரு செல்போனும் லாப்ராப் ம் பிரண்ட்ஸ் மட்டும் காணும். வேற ஒன்றும் (ஒருதரும்) தேவையில்லை.நீங்கள் எல்லாம் நாங்கள் இல்லாத நேரத்தில என்ன செய்யப்போறீங்கிளோ தெரியேல்ல.
நான் : காணும் தொடங்காதயுங்கோ இப்ப. நான் சொல்றதில என்ன பிழை? யாரிட்டாவது கேட்டுப்பாருங்கோ இது கோயிலே?. அன்டைக்கு இப்பிடித்தான் உங்கட கல்யாண நாளுக்குக் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யேக்க அர்ச்சனை செய்து முடிக்க முதல் அந்த ஐயா எத்தின தரம் அங்கால டான்ஸ் பிறக்ரிஸ் பண்ணின ஆக்களைத் திரும்பி திரும்பி பார்த்தவர் என்றும் விளக்கை விழுத்தினவர் என்றும் பார்த்தனீங்கள்தானே. பிறகும் சுருதி தாளம் ஒன்றுமில்லாம அங்க நடக்குற கூத்தை நின்றுப் பார்க்கட்டாம் எங்களை நீங்களும் வெக்கம் இல்லாம நின்று பார்த்திட்டு வாறீங்கள். காசும் வேணும் ஆனால் ஒழுங்கா பக்தியோட அர்ச்சனையும் செய்ய மாட்டினம் அவை அதில இந்த கோயில் நிர்வாகி மாரின்ர லொள்ளு வேற. எல்லாம் உங்களை மாதிரி ஆக்களால வாறதுதான்.கடவுளின்ர நினைப்பு மனசில இருந்தாக்காணும்.உங்களைப்போல கோயிலுக்கு வந்ததான் கடவுளை நினைக்கோணும் என்றில்லை.
அம்மா : காணும் நிப்பாட்டு இது கோயில்.
நான் : நான் நிப்பாட்டுறன் நீங்கள் கஸ்டப்பட்டு ரிக்கற் எடுத்ததுக்கு அர்ச்சனையைச் செய்திட்டு வாங்கோ நாங்கள் இதில இருக்கிறம். அப்பா சகானா வாங்கோ.
அம்மா : அர்ச்சனை செய்தாச்சு வாங்கோ கோயிலுக்குள்ள போய் சுத்திக்கும்பிட்டிட்டு போவம் வீட்ட.
நான் : கோயிலுக்குள்ள சரியான சனம் வாங்கோ வீட்ட போவம்
அம்மா : கோயிலுக்குள்ள போகாமல் வீட்ட போறேல்ல நடவுங்கோ கோயிலுக்குள்ள.
கோயில் நிர்வாகியொருவர் : இப்ப சாப்பாடு குடுக்கமாட்டம். சாமி வெளியிலதான் நிக்குது.
(எனக்கு வந்த கோவத்துக்கு அம்மாவைத்திரும்பி பார்த்து முறைக்க எனக்கு முன்னால நின்றவர் )
ஒருவர் : வோஸ்றூம் போறாக்கள் நடந்து காலுளைஞ்சவை இப்பிடியானவையம் கோயிலுக்குள்ளதான் போகணும் தம்பி.
கோ.நி. : போங்கோ போங்கோ ( அவர் கை காட்டின விதம் என்னவாவது பண்ணித் துலையுங்கோ என்றது மாதிரி)
நான் : அம்மா இதுக்கு மேலயும் நீங்கள் கட்டாயம் கோயிலுக்குள்ள போகோணுமே? இவைக்குக் குடுக்கிற காசை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு மாசம் மாசம் 30 டொலர் இல்லாட்டா வருசத்துக்கு 250 டொலர் குடுத்தா யாரோ ஒரு பிள்ளை உங்கட புண்ணியத்தில நல்லாயிருக்கும்.
அம்மா : ம் சரி இப்ப டக்கென்டு சுத்திட்டுப்போவம்.
கோயிலுக்குள்ள அப்பான்ர ஊர் ஐயர் ஒராள் நின்டார்.
அப்பா : என்ன ரத்தினய்யா கோயில் இப்பிடியாகிட்டுது. எல்லாரையும் எடுத்தெறிஞ்சு கதைக்கினம் நிர்வாகத்தாக்கள்
ரத்தினய்யா : என்ன தம்பி செய்யிறது. எங்களுக்கும் மரியாதையில்லை. வேற வழியில்லாமல் கடவுள் மேல பாரத்தைப்போட்டிட்டு இங்கயே இருக்கிறன். இது முழுக்க முழுக்க பணத்தை எதிர்பார்த்து நடக்குற மாதிரியாகிட்டுது. றோட்டுக்கொரு கோயில். ஐயர் மாருக்குள்ளயும் போட்டி.நிர்வாகத்துக்குள்ளயும் போட்டி பொறாமை.எங்க போய் முடியுமோ.
அப்பா : சரி ஐயா நாங்கள் போப்போறம்.
ஐயா : சரி தம்பி சந்திப்பம்.
இதோ திரு சரவணபவானந்தன் 20 டொடலர்களையளித்த 2 அதிஸ்டலாலப்சீட்டுகளைப் பெற்றுக்கொள்கிறார் . திருவடியார்களே கோயில் திருப்பணிக்குதவுங்கள்!
11 comments:
நல்ல பதிவு,
எங்க உங்களைக் கொன்ச நாளாக் காணன்?
கடவுள் எல்லாம் வல்லவர், அவருக்கு லன்சம் கொடுத்தால் என்னைக் கவனிப்பார் என்னும் நம்பிக்கை இருக்கும் வரை இந்த வியாபாரம் சூடாத் தான் நடக்கும்.
என்ன ஊரில நாசுக்கா நடந்த வியாபாராம் இங்க வெளிப்படையா நடக்குது, அது தான் உங்களுக்கு உறுத்தலா இருக்குது.
மேற் சொன்ன நம்பிக்கைகள் இருக்கும் வரை ,பிரச்சினைகளுக்கான தீர்வாக கோவில்களும் பூசாரிகளுமே இருப்பார்கள்.
எதையும் மன நிறைவாக நாம் செய்ய வேண்டும். அது கோயிலாக இருந்தாலும் சரி, பொது தொண்டாக இருந்தாலும் சரி. கேட்பார் யாரும் இல்லை என்ற எண்ணம் எந்த அமைப்பில் இருந்தாலும் இந்த மாதிரி எடுத்தெறிந்து பேசும் பழக்கம் இருக்கும். திருப்பதிக்கு போனால் இதை விட ஆச்சரியமாக இருக்கும் ( அதனாலோ என்னவோ நாமம் போடுதல் என்கிறர்களோ?)
எங்கு போனாலும் ஒரு நான்கு கோயிலாவது கட்டாவிடில் எமது கலாச்சாரத்தை எப்படி கட்டிக்காப்பது.
இது நகைச்சுவை பதிவல்ல... நாற்றம் . !! புரியுமா????
தர்சன் என்னை ஏன் திட்டுறீர்?
// தர்சன் என்னை ஏன் திட்டுறீர்? //
உங்களை மட்டுமல்ல என்னையும் சேர்த்துத்தான் திட்டுகிறேன். தமிழனாய் இருக்கும் காரணத்திற்காக..
ஓ நான் என்னைத்தான் திட்டுறீங்கிளோன்னு நினைச்சன் :-)
என்ன இருந்தாலும் நீங்கள் தர்சனை சீண்டியிருக்கக் கூடாது ;)
அத விடுங்கோ பிரபாண்ணா...சும்மா இருந்த என்னை ஐஸ்கிறீம் வாங்கித்தாறன் என்று றியாஸ் க்கு கிட்ட வரச்சொல்லிட்டு 2 மணித்தியாலம எங்க போட்டிங்கிள்?தோசைக்கடையக் கண்டால் இப்பிடியா எல்லாத்தையம் மறப்பீங்கிள்..grrr
வெரி சொறி தங்கச்சி
நான் கல்யாணி கிறீம் ஹவுசில ஸ்பெஷல் பலூடா குடிச்சுக்கொண்டிருந்திட்டன்
சிறப்பாக இருக்கிறது!
எனது பதிவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
http://tamilmediblog.blogspot.com/
Post a Comment