Custom Search

Monday, June 04, 2007

உறைப்பு சாப்பிட்டால் அல்சர் வருமா ?

அம்மா இன்றைக்கு என்ன சாப்பாடு?

இட்லி அவிக்கப் போறன் ஜசி நீ இன்றைக்குச் சாம்பார் வை பாப்பம்.


சாம்பாரா?? சாம்பாரோட யார் சாப்பிடுவினம்..எனக்கும் அப்பாவுக்கும் நான் கூட்டு அரைக்கிறன் ஓகே.

தாத்தாவும் முந்தி உப்பிடித்தான் தேங்காய் போடாமல் தனிய மிளகாயையும் வெங்காயத்தையும் போட்டு அரைச்சுப்போட்டுக் கூட்டு அரைச்சு சாப்பிட்டிட்டு உறைப்புத் தாங்கேலாம நாக்கை நீட்டிக்கொண்டிடு திரியிறவர் பிறகு அல்சர் வந்து எவ்வளவு கஸ்டப்பட்டவர் எனக்குத்தானே தெரியும்.கூட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பேசமா சாம்பார் வைக்கிறதுக்கு மரக்கறி வெட்டு நான் வந்து வைக்கிறன் சாம்பார்.

கூட்டுச் சாப்பிடுறதுக்கும் அல்சருக்கும் என்னம்மா சம்பந்தம்?? அல்சர் வாறதுக்கு Helicobacter pylori என்ன பக்ரீரியாதான் காரணம் என்று சில அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்கினம் தெரியுமோ..உறைப்புச்சாப்பிட்டால் அல்சர் வருமென்டு சும்மா என்னைப் பேக்காட்டதயுங்கோ சரியோ.

ஓமடி ஓம் உன்னைப்பேக்காட்டுறன் நான்.கொப்பரும் நீயும் நான் சொன்னாக் கேக்கவே போறீங்கிள்.பக்ரீரியா முக்கியமான காரணிதான் இருந்தாலும், உறைப்புச்சாப்பாடு சாப்பிடுறது, எந்தநேரமும் எதைப்பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது, விடிஞ்சாப் பொழுதுபட்டால் எண்டு எந்த நேரமும் கம்புயூட்டருக்கு முன்னாலயே தவம் கிடந்து போட்டு காலமச் சாப்பாட்டை மத்தியானமும் மத்தியானச் சாப்பாட்டை பின்னேரமும் இரவுச்சாப்பாட்டை நடுச்சாமத்திலயும் சாப்பிடுற உன்னை மாதிரி ஆக்களுக்கும், எதுக்கெடுத்தாலும் கோவப்படுற அப்பா மாதிரி ஆக்களுக்கும் அல்சர் வாறதுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமா இருக்கெண்டும் அதைப்பற்றி ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கென்றும் அதே விஞ்ஞானிகள்தான் சொல்லியிருக்கினம்.


அம்மா விட்டால் அல்சரைப் பற்றி என்ர ஓர்கானிக் கெமிஸ்ரி வாத்தியை விட நல்லாவே லெக்சர் அடிப்பீங்கள் போல இருக்கு. சரி சரி தொடங்கிட்டிங்கிள் மிச்சத்தையும் சொல்லி முடியுங்கோ.அல்சரைப் பற்றி வேற என்ன தெரியும் அம்மா?

எனக்கென்ன தெரியும்..அல்சர் என்றது வயிற்றுப்பகுதியில முன் சிறுகுடல் பக்கமா எந்தநேரமும் வலி இருந்துகொண்டே இருக்கும். சாப்பிட ஏலாது. எப்பவும் வயிறு முட்டச் சாப்பாடு இருக்கிற மாதிரி இருக்கும். பசிக்காது, சிலருக்கு மயக்கமாவும் இருக்கும். சிலருக்கு இரத்தவாந்தி கூட வருமாம்.

அம்மா வடஅமெரிக்காவில மட்டும் ஒரு வருசத்தில 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் ஆக்கள் அல்சரால பாதிக்கப்படுகிறார்களாம்.1980ம் ஆண்டு வரை மருத்துவர்கள் எல்லாரும் இந்த அல்சருக்கு எங்கட வயித்தில கூடுதலான அமிலம் சுரக்கிறதுதான் காரணம் என்று நினைச்சுக்கொண்டிருந்தவையாம், அதோட நீங்கள் சொன்ன காரணங்கள் போல கோபப்படுறது புகைத்தல் மற்றும் மதுப்பழக்கம் மற்றும் மனவழுத்தம் போன்றவையும் அல்சர் வாறதுக்குக் காரணம் என்று சொன்னவையாம். வயிற்றில சுரக்கிற அமிலத்தின்ர அளவைக் கட்டுப்படுத்தினா அல்சர் வராதென்று நினைச்சு அல்சரால பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சத்திரசிகிச்சை செய்தவையாம். பிறகு 1990 ம் ஆண்டு Tagamet, Zantac என்று 2 மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால அல்சர் வந்தா சத்திரசிகிச்சை செய்யணும் என்ற நிலை மாறிட்டுதாம் ஆனால் அல்சர் ஒருக்கா வந்து மாறினாலும் அது திரும்பவும் வந்து கரைச்சல் பண்றதால திரும்ப திரும்ப வைத்தியம் பார்க்க வேண்டியதாப்போச்சாம்.

ஏன் ஜசி இந்த வயித்தில நிறைய அமிலம் சுரக்கிறதைப் பற்றிக் கதைக்கேக்க சன் ரீவில போற விளம்பரம் ஏதும் ஞாபகம் வந்திச்சா உனக்கு?

எது? ஒரு அலுவலகத்தில தன்ர கேர்ள்பிரண்டை முதலாளி திட்டுறதைப் பொறுக்காம COOLZ எடுத்துக்கொண்டு போய் முதலாளின்ர முகத்தில ஊத்தினதும் முதலாளிக்கு அசிடிற்றி பிரச்சனை தீர்ந்து அவர் கூல் ஆகிடுவாரே..அந்த விளம்பரம் தானே.

ம் ம் அதே தான். அது சரி இந்த அல்சர் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?

அம்மா நான் முதலே சொன்னமாதிரி அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் Helicobacter pylori என்ற பக்ரீரியாவாலதான் அல்சர் வருதென்று கண்டுபிடிச்சாலும் அதற்கான அன்ரிபயோற்றிக்ஸ் 1995ம் ஆண்டுதான் பாவனைக்கு வந்ததாம். ஏனென்றால் அந்தநேரம் இருந்த மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த Helicobacter pylori பக்ரீரியா பற்றின ஆராய்ச்சியில அக்கறை காட்டாம விலை குறைவான Tagamet, Zantac போன்ற மருந்துகளையே உற்பத்தி செய்துகொண்டிருந்தனவாம். பிறகு 1995 ல Helicobacter pylori அன்ரிபயோற்றிக்ஸால 86 % அல்சர் திரும்ப வாறதைத் தடுக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டதால இப்ப இந்த Erythromycin, Ampicillin, Amoxicillin போன்ற அன்ரிபயோற்றிக்ஸ்களைப் பயன்படுத்துகிறார்களாம். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லினமம்மா 13 வருசமா இழுத்தடிக்காம முதலே அன்ரிபயோற்றிக்ஸ்களை உற்பத்தி செய்றதில மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள் ஆர்வம் காட்டியிருந்தால் ஒரு வருசத்துக்கு அல்சருக்காக சத்திரசிகிச்சை போன்றவற்றில் விரயமாகும் பணத்தில் 600 மில்லியனிலிருந்து 800 மில்லியன்வரை மிச்சப்படுத்தியிருக்கலமாம்.

அல்சர் ஐ பற்றி எல்லாத்தையும் தெரிஞ்சுவைச்சுக்கொண்டுதான் இப்ப நீ கூட்டரைக்க வெளிக்கிட்டனி என்ன உங்களைத் திருத்தவே முடியாது...எங்க பார்ப்பம் சாம்பார் எந்த நிலமைல கிடக்கெண்டு.

அம்மா இப்ப நில்லுங்கோ ஓடிவாறன்...எஸ்கேப்.


தாயகப்பறவைகள் - யூன் இதழ்

5 comments:

அற்புதன் said...

அப்ப ஒழுங்காச் சாப்பிடாம கணனிக்கு முன்னால இருக்க மருந்தோட ரெடியாக்கும்?

அல்சரைப் பற்றி நல்லா ஆராச்சி செய்து எழுதி இருக்கியள்,உபயோகமான தகவல்.

சினேகிதி said...

அற்புதன் அண்ணா இருந்தாலும் உங்கள மாதிரி ஆராய்ச்சி செய்ய எல்லாம் நம்மளால முடியாது:-)

Vasaki said...

கன பேர் ஒழுங்காக சாப்பிடுறேல்ல எண்டு சொல்லுறதை பெருமையா நெக்கினம். என்னதான் இருக்கோ. ஆனா நான் சாப்பிடுறனான். என்ன நம்மூரில உறைப்பை சாப்பிட்டு பழகிட்டுது விட கஷ்டமா இருக்கு. அதுக்காக சலட் கூட சேர்க்கிறதுதான்.

நல்ல தகவல் சினேகிதி. ஏற்கனவே வாசித்தேன். நன்றி

சினேகிதி said...

\\கன பேர் ஒழுங்காக சாப்பிடுறேல்ல எண்டு சொல்லுறதை பெருமையா நெக்கினம்.\\

வாசகி நானும் நல்லாச் சாப்ிடுவன் :-)

Anonymous said...

Superb Snegethi..uraiyadaludan vidayaththai sonna vitham arumai..paarattukkal :)