Custom Search

Thursday, February 01, 2007

பதின்மவயதுப்பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. .

ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் . என்ர ஐயோ எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல . 100 தரம் போன் பண்ணிப்பார்த்திட்டன் நம்பரைப் பார்த்திட்டுக் கட் பண்றாள் போல கிடக்கு .
எங்கோ கேட்டது மாதிரி இருக்கா ? பதின்ம வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் ? அப்ப கட்டாயம் நிருஜான்ர கதை உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும் . நிருஜாக்கு இப்பத்தான் 16 வயதாகிறது . 16 வயதிலேயே தன்னால பெற்றோரை விட்டுத் தனியா காதலனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் . நிருஜாவினுடைய இந்த முடிவுக்கு அவளுடைய பெற்றோர்தான் முழுக்க முழுக்க காரணம் என்றுதான் நான் சொல்வேன் . வாசிக்கிற உங்களுக்கு வேறு கருத்துக்கள் இருக்கக்கூடும் . அதுவும் நீங்கள் ஒரு பதின்ம வயதுப் பிள்ளையின் பெற்றோரா இருந்தால் நிச்சயம் என் கருத்தோட ஒத்துப்போக மாட்டீர்கள் . வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் எங்கே அந்த நாட்டுக் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளைப் போட்டு எங்கட பிள்ளைகள் வாழ்க்கையில் தவறான பாதையில் போகக் காரணமாகி விடுகிறோம் .

எங்கட பிள்ளைக்கு இப்பத்தானே 15 வயதாகிறது . அது சின்னப்பிள்ளை அதுக்கு காதல், செக்ஸ் பற்றியெல்லாம் என்ன தெரியப்போகுது என்பதுதான் பலரின் நினைப்பு . ஆனால் எங்கட பிள்ளைகள் வளர்வது நாங்கள் வளர்ந்த மாதிரியான சூழலில் அல்ல என்பதை அநேகமான பெற்றோர்கள் மறந்துவிடுகிறார்கள் . அண்மையில் வடஅமெரிக்கப் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட ஆய்வின்படி அந்தப் பாடசாலையில் படிக்கின்ற 39 வீதமான ஐந்தாம் ஆண்டுப்பிள்ளைகள் தங்களுக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியும் என்று கூறியிருக்கிறார்கள் . இன்றைய பெற்றோராகிய நீங்கள் பதின்ம வயதில் இருக்கும்போது உங்களுக்கு இருந்த காதல் எண்ணங்கள் புலத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒன்பது பத்து வயதுகளிலேயே வந்து விடுகிறது என்பதுதான் உண்மை .

இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்களாகவே முன்வந்து காதலைப் பற்றியோ அல்லது செக்ஸ் ஐ பற்றியோ உரையாட முற்படும்போது “ வயசுக்கேத்த மாதிரிக்கதை ” , “ நீ சின்னப்பிள்ளை இதைப்பத்தியெல்லாம் கதைக்கக் கூடாது ” , “ படிக்கிற வயசில படிக்கிற வேலையை மட்டும் பார்க்கவேணும் “ இப்படியெல்லாம் உங்கட பிள்ளைகளைக் கதைக்கவிடாம சுலபமா அந்தத் தருணத்துக்கு தடுத்துவிடலாம் . அப்பாடா கதை இத்தோட நின்றுவிட்டது என்று அப்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம் . ஆனால் நீ சிந்திக்கிற விதம் சரியில்லை கதைக்கிற விடயம் பிழையானது என்று உங்கள் பிள்ளைகளுடைய சுயத்தை நீங்களே சிதைக்கிறீர்கள் அதனால்தான் அந்தப்பிள்ளைகள் வளர்ந்து பதின்ம வயதுக்கேயானா சந்தேகங்கள் , கேள்விகள் , தேடல்கள் தொடங்கும்போது உங்களிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி முடிந்தளவு தன் நண்பர்களோடு நேரத்தை செலவழிக்க நினைக்கிறார்கள் . உங்கள் பிள்ளைகள் பதின்ம வயதில் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாகவோ , பெண்ணாகவே உடலாலும் உள்ளத்தாலும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் அவர்களுக்குத் தேவையான ஒரு வழிகாட்டியாக நீங்கள் இல்லாமல் போவதால் தான் நிருஜா போன்ற பிள்ளைகள் 16 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் .

நிருஜாவினுடைய பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் . திருமணம் செய்துவிட்டோம் பிள்ளைகள் பெற்றுவிட்டோம் அதனால என்னதான் எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் பிள்ளைகளுக்கா நாங்கள் சேர்ந்துதான் வாழவேண்டும் என்று முட்டாள்தனமாக தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் . நிருஜாவுக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாக பெற்றோரின் வழமையான சண்டையையும் வாக்குவாதங்களையும் பார்த்து பார்த்து ஆண் பெண் உறவென்றால் இப்படித்தான் போல என்ற நினைப்பு . அதானால் தான் வீடு என்ற நரகத்திலிருந்து வெளியேறினாலே போதும் என்ற முடிவெடுக்க வைத்தது .

சின்ரெல்லா போன்ற கதைகளை வாசித்து கற்பனை உலகத்தில் வாழும் நிருஜா போன்றவர்கள் . கண்டதும் காதலில் விழுந்து பின்னர் அந்தக் காதலுக்கு அடிமையாகி காதலனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என யோசித்து யோசித்து அவர்களுக்காகவே வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் . சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டும் தங்களுக்குள்ள சண்டை வரக்கூடாது என்பதற்காக செய்யாத தப்புக்குக்கூட தாங்களாகவே முன்வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டும் நண்பர்களுடன் கழிக்கும் நேரங்களைக் கூட காதலனுடன் மட்டுமே கழிக்கவேண்டும் இனிமேல் தான் வாழ்வதே தன் காதலனுக்காகத்தான் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவனோடயே கழிக்கவேண்டும் என்ற மாதிரி ஒரு மனப்பிரமையில் அடிமையாகிப் போகிறார்கள் .

நான் இவனுடைய சொந்தம் என்ற எண்ணத்தோடுதான் நிருஜா போன்றவர்கள் தைரியமாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . அதுவே கொஞ்சநாளில் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுயகௌரவத்தையும் இழந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு மன்னிப்புக்கேட்பதிலயும் பயத்திலும் குற்ற உணர்விலும் சுழன்று திரும்பவும் வீட்டுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலையில்லை என முடிவு செய்து சிறுவர் காப்பகங்களில் தஞ்சம் புகவேண்டியவர்களாகின்றார்கள் .

" என்ன குறைவைச்சம் நாங்கள் ? வேலைக்குப்போய் வந்த அலுப்பில கூட ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டுபொய் விட்டிட்டு காருக்குள்ள எத்தினை நாள் படுத்து நித்திரை கொண்டிருப்பன் . ஒருநாள் முழுக்க நான் கஸ்டப்பட்டு உழைச்ச காசென்றும் பாராம எல்லாப்பிள்ளைகளைப் போல என்ர பிள்ளையும் சந்தோசமா இருக்க வேணும் என்று Baby phat ஜக்கற் , சப்பாத்து , நகைகள் , செல்போன் என்று எல்லாம் அவளுக்குப் பிடிச்ச பிரான்ட் நேமில வாங்கிக்குடுத்தனே இப்பிடிப்பண்ணிட்டுப் போய்ட்டாளே"
என்று ஒரு காலத்தில நீங்களும் புலம்பாம இருக்க வேண்டும் என்றால் உங்கள் பிள்ளைகளின் கருத்துக்களுக்கும் ஆசைகளுக்கும் மதிப்புக்கொடுங்கள் . தேவையான சுதந்திரம் கொடுங்கள் . அவர்களையும் உங்களுடைய எல்லா உரையாடல்களிலும் கலந்து கொள்ள வையுங்கள் . அவர்களுடைய எண்ணம் தவறானது என்று தோன்றினால் அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை விளக்கிவிட்டு முடிவை அவர்களையே எடுக்க விடுங்கள் . எல்லாத்துக்கும் மேலாக உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள் .

தாயகப்பறவைகள் ஜனவரி இதழுக்காக எழுதியது.

http://thayakaparavaikal.com/samudhayaalasal.php

- சிநேகிதி -

21 comments:

மங்கை said...

//.....அவனோடயே கழிக்கவேண்டும் என்ற மாதிரி ஒரு மனப்பிரமையில் அடிமையாகிப் போகிறார்கள் //

அருமையான பதிவு...குறிப்பாக இந்த பத்தி...வாழ்த்துக்கள்

அன்புடன்
மங்கை

SP.VR. SUBBIAH said...

பட்டறிவு' இல்லாத வயது அது!
நல்ல பதிவு அம்மணி! (சகோதரி)

கானா பிரபா said...

நல்ல சிந்தனையோட்டம், முழுதும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். உங்கள் பின்னூட்டத்திற்கான தமிழ் நிரலியைக் கவனிக்கவும். said என்று தான் எல்லோரின் பெயரும் காட்டுகிறது.

சினேகிதி said...

\\அருமையான பதிவு...குறிப்பாக இந்த பத்தி...வாழ்த்துக்கள்\\

நன்றி மங்கை
முதல் முறையாக தத்தக்க பித்தக்கவிற்கு வந்திருக்கிறீர்கள் ..வருக வருக!

சினேகிதி said...

\\பட்டறிவு' இல்லாத வயது அது!
நல்ல பதிவு அம்மணி! (சகோதரி)\\

நன்றி சுப்பையா.
முதல் முறையாக தத்தக்க பித்தக்கவிற்கு வந்திருக்கிறீர்கள் ..வருக வருக!

பட்டறிவு இல்லாத வயது பிள்ளைகளுக்கா? பெற்றோருக்கா?

சினேகிதி said...

\\காதல் வந்துருச்சி ஆசையில் ஓடி (வீட்டை விட்டு) வந்தேன்.

ஒரு கதை சொல்ல வழியில்ல . .
உடன புத்தகமா அடிச்சு விட்டுடுவாளவை போல... \\

யாரிந்த சிறுமி?? சிறுமி என்று பெயரை வைச்சிட்டு என்ன பேச்செல்லாம் பேசுது இந்தப்பொண்ணு.

சினேகிதி said...

\\நல்ல சிந்தனையோட்டம், முழுதும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். உங்கள் பின்னூட்டத்திற்கான தமிழ் நிரலியைக் கவனிக்கவும். said என்று தான் எல்லோரின் பெயரும் காட்டுகிறது. \\

நன்றி பிரபாண்ணா. உங்கட பதிவுகள்தான் மூச்சு விட்டு விட்டுப் படிக்கவேண்டியவை அவ்வளவு நீளம் ஆனால் நிறையத் தகவல்கள் இருக்கும்.

"said" மட்டும்தான் தெரிகிறது அதுதான் பழைய ரெம்ளெற்றுக்கே மாறிவிட்டேன்.

U.P.Tharsan said...

நல்லதொரு அலசல்,ஆனாலும் பெற்றோர்கள் விளங்கிக்கொள்வது கடினமே.

//said என்று தான் எல்லோரின் பெயரும் காட்டுகிறது//

எனக்கு தெரிகிறது போல் இருக்ககிறது.

அற்புதன் said...

உது பெடியளுக்கும் பொருந்துமோ?;-)
என்ன தான் முயன்றாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இது சரி வருவதில்லை.இது எமக்கு மட்டுமல்ல இங்குள்ள பெற்றோருக்கும் இருக்கும் பிரச்சினை.அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டர்கள். நாங்கள் தான் அழுது,குழறி...ஆன நாட்டை விட புலத்தில் பெற்றோர் இப்ப வலு முன் நேற்றம் அல்லோ.

வைசா said...

நல்ல பதிவு. எஸ்கே அவர்கள் சில மாதத்திற்கு முன் எழுதிய "பெற்றோர்களுக்குப் பாலியல் கல்வி" என்ற தொடரிலும் இதையே வலியுறுத்துகிறார்.

வைசா

பத்மா அர்விந்த் said...

போலியாக வாழ்வது எப்படி குழந்தைகள் மனத்தை புண்படுத்துன் என்பதையும் தொட்டு சென்றிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

சோமி said...

வாழ்த்துக்கள்.
நல்ல எழுத்து நடை.இன்னும் சிறப்பாக எழுதுங்கள்.

சினேகிதி said...

\\நல்லதொரு அலசல்,ஆனாலும் பெற்றோர்கள் விளங்கிக்கொள்வது கடினமே.

//said என்று தான் எல்லோரின் பெயரும் காட்டுகிறது//

எனக்கு தெரிகிறது போல் இருக்ககிறது\\

நன்றி தர்சன்.
நான் என்னுடைய புதிய ரெம்ளற்றை எடுத்துவிட்டு பழசையே விட்டிருக்கிறேன் தர்சன் அதனால்தான் தற்பொழுது பின்னோட்டம் போடுபவர்களுடைய பெயர்கள் தெரிகின்றன.

சினேகிதி said...

\\ஆன நாட்டை விட புலத்தில் பெற்றோர் இப்ப வலு முன் நேற்றம் அல்லோ. \\

புலத்திலுள்ள பெற்றோர்கள் எந்த விதத்தில் முன்னேற்றம் என்று சொல்றீர்கள் அற்புதன்?

சினேகிதி said...

\\நல்ல பதிவு. எஸ்கே அவர்கள் சில மாதத்திற்கு முன் எழுதிய "பெற்றோர்களுக்குப் பாலியல் கல்வி" என்ற தொடரிலும் இதையே வலியுறுத்துகிறார்.
\\

தகவலுக்கு நன்றி வைசா.SK எழுதியத பதிவை இனிமேல்தான் வாசிக்க வேண்டும்.

அற்புதன் said...

//புலத்திலுள்ள பெற்றோர்கள் எந்த விதத்தில் முன்னேற்றம் என்று சொல்றீர்கள் அற்புதன்? /

புலத்தில் பிள்ளைகளுடன் பெற்றோருக்கு இருக்கும் உறவு, நாட்டில பிள்ளைக்ளுக்கும் பெற்றோருக்கும் இருக்கும் உறவின் இடையிலிருக்கும் இடைவெளியை விடக் குறைவு என்று நினைக்கிறன்.இது எனது அவதானம் மட்டுமே.

VSK said...

என் தொடரை முடித்ததும் நான் நினைத்தது, இந்த தகவல் இத்துடன் முடிந்துவிடக் கூடாதே என்பது.

அதனை உற்சாகப்படுத்தும் வண்ணம், தங்களின் இப்பதிவு அமைந்திருக்கிறது.

மங்கையும் தொடர்ந்து இது குறித்து எழுதி வருகிறார்.

மாதம் ஒரு பதிவராவது, இக்கருத்தை வலியுறுத்தும் ஒரு பதிவை இட வேண்டும் என்ற கோரிக்கையை சக வலைப் பதிவர்களுக்கு இங்கு வைக்கிறேன்.

என் தொடரை அறிமுகம் செய்த வைசாவுக்கு எனது நன்றி.

http://kasadara.blogspot.com
என்ற தளத்தில் இத்தொடரைப் படிக்கலாம்.
நன்றி.

சினேகிதி said...

\\போலியாக வாழ்வது எப்படி குழந்தைகள் மனத்தை புண்படுத்துன் என்பதையும் தொட்டு சென்றிருக்கிறீர்கள். நல்ல பதிவு.\\

நன்றி பத்மா அர்விந்த்.

\\வாழ்த்துக்கள்.
நல்ல எழுத்து நடை.இன்னும் சிறப்பாக எழுதுங்கள்.\\

நன்றி சோமி. இன்னும் சிறப்பாக எழுதத்தான் ஆசை.முயற்சிக்கிறேன்.

சினேகிதி said...
This comment has been removed by the author.
சினேகிதி said...

\\http://kasadara.blogspot.com
என்ற தளத்தில் இத்தொடரைப் படிக்கலாம்.
நன்றி.
\\

நன்றி SK .உங்கட வலைப்பதிவைப் போய்த் தேடவேணும் என்று நினைத்தேன்.நீங்களே வந்து இணைப்பைத் தந்து விட்டீர்கள்.என்ன நீங்கள் நிறைய எழுதிறீங்கள் வாசிக்க மாதக் கணக்கில எடுக்கும் எனக்கு.

Unknown said...

அருமையான பதிவு சினேகிதி..
நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன், ‘வயசுக்குத் தக்க கதை பேசு' என்கிற அதட்டலை. (இப்ப இங்கே கூடத்தான்) ஆனால் என்னைவிடச் சின்னப் பிள்ளைகள் என்னுடன் இப்படி ஏதாவது கதைக்க முற்படும்ப்போது என்னுடைய கருத்துக்களை இருத்தி வைத்துச் சொல்லியிருக்கிறேன்... (Sex, Sexual Orientation, Love, LGBTQ பற்றியெல்லாம் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறேன்).. ஆனால் இண்டைக்கும் எங்கட பெரிசுகள் sex என்ற வார்த்தை ஏதோ உலகத்தில் இல்லாத கெட்ட வார்த்தையாகப் பாக்குதுகள்... என்ன செய்ய.

(இப்பதான் அக்காட மகன் High School க்கு வந்திருக்கிறார். அக்கா கட்டாயம் படிக்கோணும் எண்டு சொல்லி உங்கட பதிவை forward பண்ணியிருக்கிறன்)