Custom Search

Saturday, February 17, 2007

திருவாளர் திருமதி




திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள்.

அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக்க அதிக புள்ளிகள்.

மூன்றாவது றவுண்டில் தொகுப்பாளர் குடுக்கும் சிற்றுவேசனுக்கு 2 நிமிடத்துக்குள் தம்பதிகள் சண்டை பிடிச்சுச் சமாதானமும் ஆகவேணும்.2 நிமிசத்துக்குள்ள நடக்கிற காரியமா அது?

ஹி ஹி.

இருந்தாலும் தம்பதிகள் சண்டை பிடிக்கிறத பார்க்கிற எங்களுக்கே என்னடா இப்பிடியெல்லாம் சண்டை பிடிப்பினமா என்றிருக்கும்.தொகுப்பாளரைப் பார்த்தா பாவமா இருக்கும்.
இதிலொரு சுவாரிசயமான கதையொன்று சொல்கிறேன்.

போன வாரம் நடைபெற்ற திருவாளர் திருமதியில் ஒரு தம்பதியினர் சண்டை போட்டுக்கொள்ளும்போது மனைவி கணவனை நீ ,போ ,வா என்றெல்லாம் பேசி நிஜமாவே சண்டைபோட்டா.அந்தக் கணவரைப்பார்த்தாப் பாவமா இருக்கும்.அந்த மனைவியைப் பார்த்தா எங்களுக்கு எங்கட சித்தியொராள்ட ஞாபகம் வந்திட்டு.சித்தப்பா கொஞ்சம் அப்பாவி.பெற்றோல் போடுறதுக்குக்கூட சித்திட்டத்தான் காசு கேப்பார்.எல்லாரும் சேர்ந்துதான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.அந்தச்சுற்று முடிந்ததும் நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேட்டா அந்த மனைவிட்ட " என்னங்க உங்க வீட்டுக்காரரைப்போய் நீ வா என்றெல்லாம் பேசுறீங்கிளே அவங்க கோவிச்சுக்கமாட்டாங்களா? உங்களை அடிக்க மாட்டாங்களா?" அதுக்கு அந்த மனைவி "இல்லைங்க அவரு என் அத்தை பையன்.சண்டை வந்தா நான்தான் அவரை அடிப்பேன்" என்று.

எனக்கு தங்கைச்சிக்கு அம்மாக்கு ஒருதருக்கும் சிரிப்புத்தாங்க முடியல. எனக்கு அதுக்குமேல அந்தக்கேள்வியை கேக்காம இருக்க முடியல அதால "இந்த மனைவியைப் பார்த்தா எனக்கொராளின்ர ஞாபகம் வருது..யாரெண்டு சொல்லுங்க பார்ப்பம்" என்று சொல்லி நான் வாய் மூடேல்ல அம்மா தங்கச்சி அப்பா எல்லாருமே நான் நினச்ச சித்தியின்ர பெயரைச் சொல்லிட்டினம்.அன்றைக்கு முழுதும் ஒரே சிரிப்புத்தான்.இதில சிறப்பம்சம் என்னெண்டால் அடுத்த நாள் ஒரு வேலை விசயமா சித்தியும் சித்தப்பாவும் எங்கட வீட்ட வந்தவை.அப்ப எப்பிடியோ இந்த திருவாளர் திருமதி நிகழ்ச்சியைப் பற்றின கதை வந்திட்டு.சித்தி உடன "நேற்று அந்த நாவல் கலர் சாறி கட்டியிருந்தவா நல்லா டான்ஸ் ஆடினா நல்லா உண்மையாச் சண்டை பிடிக்கிற மாதிரியே சண்டை பிடிச்சா என்ன" நாங்களும் எல்லாரும் சிரிப்பையடக்கிக்கொண்டு தலையத்தலைய ஆட்டினம்.

அடுத்த ரவுண்டில் ஏழெட்டு வருசங்களுக்கு முதல் "ஜோடிப்பொருத்தம்" என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் செய்தார்களே ஞாபகம் இருக்கா? அந்த நிகழ்ச்சியில் வருவது போல கணவரைத் தனியாகவும் மனைவியைத் தனியாகவும் கேள்விகள் கேட்பார்கள்.இருவருடைய பதிலும் ஒத்துப்போனால் ஒவ்வொரு கேள்விக்கும் ரூபா 2000.இந்தச்சுற்றில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகள் மிகவும் சுவாரிசயமானவை.

உதாரணமாக
==>கல்லூரிக்காலத்தில் உங்களருகில் அமர்ந்திருப்பவர் ஆணா பெண்ணா?
==>குளிர்காலத்தில் உங்கள் வீட்டு மின்விசிறியின்வேகம் என்ன?
==>உங்களுக்கு வளைகாப்பு எப்போது நடந்தது.
==>ஒரு மாதத்துக்கு உங்கள் வீட்டில் சமையலுக்குப் பாவனையாகும் எண்ணெயின் அளவென்ன?

இந்நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அதைவிட்டா வேற என்ன இருக்கென்று கேக்கிறீங்கிளா?? உண்மையில திருமணம் செய்து பல வருடங்களான தம்பதிகளுக்கு இப்படி ஒரு பாடலுக்கு நடனமாடவோ அல்லது தங்களுடைய எண்ணங்கள் செயல்கள் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது என்பதையோ தெரிந்துகொள்ள விருப்பம் இருந்திருக்குமா?அப்பிடியே விருப்பம் இருந்தாலும் அதை முயற்சித்திருப்பார்களா?அல்லது ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறோம் என்றெல்லாம் யோசிச்சுப் பார்க்கிறார்களா? இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

அப்பா வேலையால வாற நேரமாச்சு பிள்ளையள் எல்லாரும் சத்தம் போடாம இருங்கோ.
அப்பா செய்திகள் பார்க்கவேணும் ரீவி பார்த்தது காணும் போய்ப் படியுங்கோ.
அம்மா இன்றைக்கு முட்டைக்குழம்பு வையுங்கோவன் பிளீஸ்.அப்பாக்கு முட்டைக்குழம்பு பிடிக்காது இன்றைக்கும் இறைச்சிக்கறிதான்.
இப்பிடி எப்வவுமே அப்பா அப்பா என்று உயிரை விடுற அம்மாக்கள் எல்லாம் இன்றைக்கு ரீவில வந்து அழகாகவோ இல்லை சும்மா ஏனோ தானோ என்றோ எப்பிடியோ தைரியமா சன்ரீவி செற்ல நடனம் ஆடினமா இல்லையா?? இருவரும் சேர்ந்து முயற்சித்தால்தான் பரிசு.ஒருவர் மட்டும் திறமையாகப் போட்டியில் கலந்துகொண்டால் அவர்களால் பணத்தையும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பையும் வெல்ல முடியாது.

இந்த அம்மாக்களுக்காகவே எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு.உங்களுக்கு?

10 comments:

வி. ஜெ. சந்திரன் said...

நான் பாக்காத நிகழ்ச்சிய பத்தி எல்லாம் எழுதி இருக்கிறியள்.....

நல்லா இருக்கு... உங்கட சித்தியோட போன் நம்மர்/ ஈமெயில் ஐடி இருந்தா தரமுடியுமோ??? :)))

E said...
This comment has been removed by the author.
Unknown said...

அன்பு சகோதரி,

நீங்கள் கேட்ட நபகோவின் நாவலின் இரண்டாம் பகுதி இதோ

http://holyox.blogspot.com/2006/09/150.html

அன்புடன்
செல்வன்

U.P.Tharsan said...

//"இல்லைங்க அவரு என் அத்தை பையன்.சண்டை வந்தா நான்தான் அவரை அடிப்பேன்"//

இது சூப்பர் பதில்.:-))

E said...

nalla koothu antha nikalchi...

மங்கை said...

இந்த நிகழ்ச்சிய பார்த்துட்டு என் பெண் கணவர் கிட்டே சில கேள்விகள் கேட்டா..அதாவது, மாதம் மாதம் மின்சார பில் நாம எவ்வளவு கட்டறோம், துனி இஸ்திரி போடுவதற்கு எவ்வளவு செலவு ஆகிறது, என்னுடைய பிறந்த நாள் (அவருக்கு இதில் குழப்பம் இல்லையென்றாலும் அவள் கேட்ட போது அவரின் பிறந்த நாளை உளரி விட்டார்) ..வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் சம்பளம், மகளின் பள்ளி பீஸ்..இது எதுவும் அவருக்கு சரியாக தெரியாமல், குத்து மதிப்பாக பதில் கூறி அசடு வழிந்து கொண்டிருந்தார் நேற்று..

சினேகிதி ஒரு சிறு குழப்பம்..வெள்ளை ஏற்கனவே லாக் இன் ஆனது பார்க்காமல் நான் பின்னூட்டம் இட்டுவிட்டேன்...ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் வந்த குழப்பம்..அதனால் மீண்டும் என் பேரில்... சாரி...:-)))....

சினேகிதி said...

\\நல்லா இருக்கு... உங்கட சித்தியோட போன் நம்மர்/ ஈமெயில் ஐடி இருந்தா தரமுடியுமோ??? :))) \\

சித்தப்பான்ர ஈமெயில் ஐடி இருக்கு! வேணுமா விஜே?
==================================

இணைப்புக்கு நன்றி செல்வன்.

சினேகிதி said...

அது சூப்பர் பதில்தான் தர்சன்:-)

வாங்க மங்கை :-) நான் ரொம்பவே குழம்பிப்போயிட்டன்.பின்னோட்த்தை பிரசுரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன் நல்லகாலம் நீங்களே வந்து சந்தேகத்தை தீர்த்து வைச்சிட்டிங்க. அப்போ நேற்று முழுக்க உங்க வீட்டுக்காரர் அசடு வழிஞ்சாரா?:-)ரொம்பப்பாவம்தான்.அம்மாவும் பொண்ணும் சேர்ந்தா இப்பிடித்தான்.


வாங்க வெள்ளை! ம் கூத்துத்தான் ஆனால் சுவாரிசயமான கூத்து.

Anonymous said...

ஆகா என்ன சினேகிதி, உந்த ரீ.வி. புரோக்கிறாம் எல்லாம் பாத்து கண்னை துடைச்சிட்டு இருக்கிறீங்க போல....

சினேகிதி said...

ஏன் அநாமதேய நண்பரே/ நண்பியே....நான் ரீவி பார்க்க்கூடாதா?

சா சா கண்ணைத்துடைக்கிறதெல்லாம் பார்க்கிறேல்ல.முன்னொரு காலத்தில "பஞ்சமி" மற்றும் "கிருஷ்ணதாசி" என்ற அந்த இரண்டு தொடர்நாடகங்கள்தான் நான் ரியூசன் கட் அடிச்சுக்கூடப் பார்த்திருக்கிறன்.இப்ப இல்லை.நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.