Custom Search

Saturday, July 30, 2005

நானும் டாட்டா

இன்று வேலையில் கடைசிநாள்.இனிம இப்போதைக்கு தமிழ்மணத்தில் எழுத நேரம் கிடைக்காது. Uni தொடங்கி இரண்டு மூன்று மாதத்தில் திரும்ப வருவன் என்று நினைக்கிறன் அதான் உங்கள் எல்லாருக்கும் சொல்லிட்டுப் போவம் என்று நினைச்சன்.சொல்லிட்டன்.

எனக்கு தமிழ்மணத்தை அறிமுகம் செய்து வைத்த தமிழ்நாதத்துக்கு நன்றி.

வலைப்பதிவொன்றை தொடங்க உதவி செய்த நிலவுநண்பனுக்கு நன்றி.

என்னையும் எழுத வைச்ச வலைப்பதிவுளுக்கும் நன்றி.

நான் எழுதியவற்றை வந்து வாசிச்ச உங்களுக்கும் நன்றி.

Uni தொடங்க இந்தப்பக்கம் வர்றது கஷ்டம். Uni க்குப் போய் புது இடங்கள் ஆக்கள் எல்லாம் பழகினாப் பிறகு திரும்ப வாறன்.

21 comments:

பத்மா அர்விந்த் said...

கல்லூரி வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

கொஞ்சநாள் எண்டாலும் நிறைய தந்தீர்கள்.சென்று வாருங்கள்.
நாங்கள் மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இளங்கோ-டிசே said...

சென்று 'மீண்டு(ம்)' வருக. சினேகிதி வளாக வாழ்வு சிறக்க வாழ்த்து!!!

cholai said...

வாழ்த்துக்கள் சினேகிதி..உங்கள் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு! மீண்டும் சந்திப்போம் விரைவில்!

தெருத்தொண்டன் said...

பல்கலையும் கற்று வர வாழ்த்துக்கள்..

குழலி / Kuzhali said...

கல்லூரி வாழ்க்கை ஒரு அருமையான வாழ்க்கை, பாடத்திட்டத்திலுள்ள பாடங்கள் மட்டுமின்றி வாழ்க்கையயும் புரிய வைக்கும் சிந்தனைகள் மாறுமிடம்

வாழ்த்துக்கள் நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்...

வசந்தன்(Vasanthan) said...

வாழ்த்துக்கள்.
கெரியிலயே எப்பிடி யுனியிலயிருந்து வலைப்பதியிறதெண்டதை (அதுவும் பாடநேரத்திலயே) அறிஞ்சுகொண்டு வலைப்பதிவுகளத் தொடர வாழ்த்துக்கள்.

சினேகிதி said...

நன்றி தேன்துளி, கரிகாலன், டி.சே, சோலை, தெருத்தொண்டன், குழலி.

சோலை தண்ணீருக்காக ஒரு யுத்தம் நீங்கள் எழுதினதா?

சினேகிதி said...

நன்றி வசந்தன், கணேசன், அவதாரம் .

சக்தி ஆயத்தம் செய்ய மட்டுமில்ல ஒரு வருசமா புத்தகமே திறக்கலையா….படிச்சதெல்லாம் துருப்பிடிச்சிருக்கும் மூளையை ஒரு வழிக்குக் கொண்டுவரணுமே.

தருமி said...

வாழ்த்துக்கள்

கயல்விழி said...

சிநேகிதி மேல்படிப்பு சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.
அடிக்கடி தமிழ்மணம் வாருங்கள். எதிர்பார்த்திருக்கிறம். யூனி தொடங்க 1 மாதம் இருக்க இப்பவே ஆயத்தமா வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

வாழ்த்துக்கள்!!!! மீண்டும் கட்டாயம் வரணும் என்ன?

இப்ப நல்லாப் படியுங்கோ!!!

என்றும் அன்புடன்,
துளசி.

Ramya Nageswaran said...

சிநேகிதி...இப்பத்தானே உங்க நட்பு கிடைச்சுது.. அதுக்குள்ளே டாட்டா சொல்லிட்டிங்களே..திரும்பி வருவேன்னு சொல்லியிருக்கீங்க.. அது வரை au revoir...auf wieder sehen...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//கெரியிலயே எப்பிடி யுனியிலயிருந்து வலைப்பதியிறதெண்டதை (அதுவும் பாடநேரத்திலயே) அறிஞ்சுகொண்டு வலைப்பதிவுகளத் தொடர வாழ்த்துக்கள்.//

:o)


நல்லாப் படியுங்க சினேகிதி !!

Anonymous said...

கல்லூரி வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்.

cholai said...

இல்லை சினெகிதி..அடியேன் எழுதியது அல்ல! எங்கே படித்தீர்கள்?

சினேகிதி said...

நன்றி தருமி, கயல்விழி, துளசி அக்கா, ரம்யா, ஷ்ரேயா, தங்கமணி.

சினேகிதி said...

சோலை குமுதத்தில் படித்தேன்.

கிஸோக்கண்ணன் said...

சினேகிதி, வெளியில் சொல்லிடாதீங்க: பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் எழுத ரொம்பவும் நேரங் கிடைக்கும்; விடயமுங் கிடைக்கும்.

அன்றைய அலுவலை அன்றைக்கே முடியுங்கள்...கடைசி நிமிடத்திற்காகக் காத்திருக்காதீர்கள். இன்னும்ப் பத்து நாளில் வீட்டுவேலை செய்து கொடுக்க வேணும் எண்டால் அதை இன்றைக்கே முடியுங்கள். இதனைவிட மேலான அறிவுரையை எவரும் வழங்க முடியாது.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

சினேகிதி நீண்ட நாட்களுக்கு பின்..........
உங்கள் யுனி வாழக்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

சினேகிதி said...

நன்றி கிஸோ, குளக்காட்டான்.