Custom Search

Monday, September 12, 2005

எல்லாரும் எப்பிடி இருக்கிறியள்?

உங்கள் எல்லாருக்கும் ஒரு hi சொல்லிப்போட்டுப் போவம் எண்டு வந்தன்.

என்னை யாரும் அதுக்குள்ள மறந்துபோயிடலையே….

நல்லாச் சாப்பிட்டு நலமா இருக்கிறீங்கள் தானே??

நான் தமிழ்மணத்தில நடந்த ஏதாவது முக்கியமான விசயங்களை மிஸ் பண்ணினா சொல்லிப்போடுங்க இல்லாட்டா நான் முதல்நாள் Uni ல போய் பேந்த பேந்த முழிச்சுக்கொண்டிருந்த மாதிரித்தான் தமிழ்மணத்துக்கு வந்தாலும் இருக்க வேணும்.

15 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் said...

ஏதோ, யாரோ , எப்பவோ செஞ்ச புண்ணியத்துலே எல்லாரும் நல்லா இருக்கோம்.

மறக்காம வந்ததுக்கும், நலம் விசாரிச்சதுக்கும் நன்றி.

Ramya Nageswaran said...

வாங்க, வாங்க சினேகிதி.. நாங்க எல்லோரும் நலம். உங்க படிப்பு எப்படி போய்கிட்டிருக்கு? அதை பத்தி ஒரு குட்டி பதிவு போடுங்க!

முகமூடி சிறுகதை போட்டி நடந்தினாரு. நேரமிருந்தா போய் பாருங்க!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

துளசி அம்மனாக வெளிக்கிட்டவ. அதையும் பாருங்கோ.

படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது? ப.கழகம் எப்பிடி? படிப்போட சேர்த்து மற்றதுகளையும் பார்ப்பீங்கள் என்டு நினைக்கிறன் ;O)

முகமூடி said...

வாங்க சிநேகிதி

// முதல்நாள் Uni ல போய் பேந்த பேந்த முழிச்சுக்கொண்டிருந்த மாதிரித்தான் //

அது மாதிரிதான் நாங்களும் முழிச்சுக்கொண்டு இருக்கிறோம். லேட்டஸ்ட் விஷயமா ஏதோ வாத்து கூட்டத்த பத்தி பேசிகிட்டு இருக்காங்க. மாசற்றவன்(ள்) புது அவதாரமா சடையாண்டி வேசம் எடுத்திருக்கிறார். தமிழ் எழுத்துருவில் பார்சியில் பேசிகிட்டு ஒரு கூட்டம் கிடக்கு... கவிதை எழுதி மாந்தர் இயலுக்கு அர்ப்பணம் செய்றாங்கோ...

எது நடக்கிறதோ, அது புரியாமலே நடக்கிறது...

இளங்கோ-டிசே said...

வகுப்புத் தொடங்கின முதல்நாளேயே ஒரு பதிவா :-)? சரி, frosh-week/Orientation எல்லாம் முடிந்து ஆடியோடி குடித்துக் களைத்திருப்பியள். அடிக்கடி வந்து சுகம் விசாரிக்காமல் நிற்காமல் எழுதவும் செய்யுங்கோ. உங்கடை நண்பர்கள் கறுப்பி வேலை மாறிய கையோடு பதிவுகள் எழுதுவதற்கும் முழுக்குப்போட்டிட்டா....கிஸோ நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் குளிப்பதால் தமிழ்மணத்துக்கு வர நேரங்காணாது ஓடிக்கொண்டிருக்கின்றார். சக்தி எங்கே சக்திவுமனாக பறந்துகொண்டிருக்கின்றாவோ தெரியாது.
மிச்சப் புதினங்களை நண்பர்கள் மேலே சொல்லிவிட்டார்கள்.

சினேகிதி said...

துளசி அக்கா அதெப்பிடி யாரும் செஞ்ச புண்ணியத்தில நீங்க பலனனுபவிக்கலாம்….

என் படிப்புதானேகுட்டிப் பதிவு ஒன்று போடுறன்.

ஷ்ரேயா அப்ப துளசி பக்தையா வெளிக்கிட்டது தாங்கள் போல…

முகமூடி வாத்துக் கூட்டத்தை பத்தி அப்பிடி என்ன கதைக்கிறினம்??

சினேகிதி said...

வகுப்புகள் தொடங்கினது எட்டாம் திகதி டி.சே.

ஓ அப்பிடியா விசயம்….அப்ப நயகரா நீர் வீழ்ச்சி கறுப்பாயிருக்கும் இல்லாட்டா கிஸோ வெள்ளையாயிருப்பார்…:)

சக்தி எவ்வளவு நாள்தான் தொடர்ந்து பறக்கப்போறா ஒருநாள் தரையிறங்கி வருவா.

இளங்கோ-டிசே said...

நாங்கள் எல்லாம் முதல் இரண்டு வகுப்புக்களுக்குப் போவதில்லை (வாரம் ஒன்றில் இடைநடுவில்தானே ஒவ்வொரு செமஸ்டரும் தொடங்கும்) ஆனபடியால் இன்றுதான் முதல்நாள் என்று நினைத்துவிட்டேன். அதற்காய் முதல் இரண்டு நாள் மட்டும்தான் வகுப்புக்கு கட் பண்ணுவீரா என்றெல்லாம் கேட்கக்கூடாது. லெக்சரில் எந்தக்கவலையுமில்லாது பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணின் தோளில் சரிந்துகொண்டு நித்திரை கொண்ட நாள்கள் இனி எப்போதுதான் வருமோ? இதற்காவது எதையாவது படிக்க யூனிக்கு விரைவில் போகவேண்டும் :-).

எல்லாளன் said...

So You say that
Neenga ellaam padichcha manisar!
sorry sorry, padik kira manisar.

சினேகிதி said...

Ellalan neenga enna solluringa...ondume villangala.

எல்லாளன் said...

நீங்க எல்லாம் படிச்ச மனிசர் இல்லை இல்லை. படிக்கிற மனிசர் எண்டு சொல்லிறியள் (யூனி) எண்டு சொன்னான்.

சினேகிதி said...

okay Ellalan...enga ungada pathivonraium kanavillai?

மதுமிதா said...

எங்கே போயிட்டீங்க சினேகிதி
நலம் தானே

எனக்கு பிடித்தமான உங்கள் படங்கள் பார்க்க இயலவில்லை

நான் தாமதமான ஆள்
அதனால என்ன நடக்குதுன்னு நீங்களே பாத்து ஒரு பதிவிடுங்க

சினேகிதி said...

Madhu,
padam podachu enga ungada kavithai?? Shreya neengalum eluthalaya kavithai??