Custom Search

Tuesday, September 04, 2007

September PIT போட்டிக்கு !!!




Monday, September 03, 2007

பழைய Quebec நகரம்

பழைய கியுபெக் நகரத்துக்கு ferry லபோக வேணும்.வானோட ஏத்திக்கொண்டுபோய் பழைய நகரத்துக்குள்ள விடும் போட்.ஆனால் அந்த ferry க்குப்போற பாதையில நிறைய அழகான இயற்கைக் காட்சிகள்.அபாயமானதும் கூட :-). சில றோட் நேர தண்ணிக்குள் இறங்குற மாதிரியிருக்கும். கிட்டப்போகுமட்டும் பயமா இருக்கும்.அதுவும் நாங்கள் GPS ஐ நம்பி போனாங்கள் அது எங்கயோ எங்களைக் கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளிவிடப்போதோ என்று நினைச்சுக்கொண்டே போனம்.








இதான் பழைய கியுபெக் நகரம்.இறங்குங்கோ எல்லாரும்!

St.Lawrence நதியில் திமிங்கிலம்

St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா ஒரு திமிங்கிலங்கள் கிட்டத்தட்ட 50 தொன் எடையுள்ளதாம் அதோட 17m நீளமாம் அதால அதுகள் ஒருநாளைக்கு கி்ட்டத்தட்ட 30cm அளவு வளருமாம்.



ஆண் திமிங்கிலம் பெண் திமிங்கிலத்தைக்கவர டான்ஸ் ஆடுமாம்.பெண் திமிங்கிலங்கள் அவ்வளவு கெரியா mating க்கு ஓத்துக்கொள்ள மாட்டினமாம் நிறைய ஆண் திமிங்கிலங்கள்ட டான்ஸ் ஐ பார்த்திட்டு ஒராளுக்கு ஓகே பண்ணுவினமாம் ஆனால் இந்த ஆண் திமிங்கிலங்கள் பெண் திமிங்கிலங்களைக் கர்ப்பமாக்கிட்டு கர்ப்பகாலத்தில வேற பெண் திமிங்கிலங்களுக்கு முன்னால டான்ஸ் ஆடப்போயிடுவினமாம் அதால குட்டித் திமிங்கிலங்களுக்கு நீந்த இரைதேடப் பழக்குறதெல்லாம் அவேன்ர அம்மாவைதானாம்.


(வானுக்குள்ள இருந்து எடுத்த படம்)
போன வழி..எப்பிடியிருக்கு? றோலர்கோஸ்ரல்ல போன மாதிரித்தான்.2 பக்கமும் அதள பாதாளம் .கரணம் தப்பினால் மரணம்தான்.









Montmorency நீர்வீழ்ச்சி

Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ!






இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-))


இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?

Sunday, September 02, 2007

திருவடியார்களுக்குத் திருவணக்கம்!!!

தாயகப்பறவைகள் ஐப்பசி இதழ் சமுதாயக் கண்ணோட்டத்துக்கு எழுதியது.

"திருவடியார்களே, இன்றைய திருநாளில் நாமனைவரும் ஆண்டவன் சந்நிதானத்தில் கூடியிருக்கிறோம். ஒரு திருப்பணிக்காக அதிஸ்டலாபச்சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குப் பிரியமானவர்களின் பெயர்களில் அதிஸ்டலாபச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் அதிஸ்டசாலிகளாயின் ஒரு camry அவர்கள் வசமாகும் . திருப்பணிக்காக ஒவ்வொருவரும் 10 டொலர்களை அளித்து அதிஸ்டலாபச்சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள்"

அப்பா : அறிவிப்பாளர் சரியில்லை.

அம்மா : பின்ன நான் போய்ச் சொல்றன் ஒலிபெருக்கியை உங்களிட்டத் தரச்சொல்லி

அப்பா : ஓ பின்ன நானிவரை விட வடிவாக் கதைப்பன்

அம்மா : சுமி அர்ச்சனை ரிக்கற் வாங்கிக்கொண்டு வாங்கோ .அப்பா 10 டொலர் குடுத்துவிடுங்கோ.சகானா அக்காவோட கூடப்போய் ரிக்கற் எடுத்துக்கொண்டு வாங்கோ.

சகானா : அப்பா 15டொலர் தாங்கோ 5 டொலர் ஐஸ்கிறீம் வாங்க.

அப்பா : வந்த உடனயா முதல் ரிக்கற்றை வேண்டிக்கொண்டு வாங்கோ இரண்டு பேரும். வீட்டில ஒரு துரும்பை எடுத்து அங்கால போடச்சொன்னா காய்ச்சல் தடிமன் எல்லாம் வரும்.ஐஸ்கிறீம் ஐ கண்டால் அதெல்லாம் எங்க போகுதோ தெரியேல்ல.

சகானா: ம்.

நான் : ஒரு அர்ச்சனை ரிக்கற் தாங்கோ. (10 டொலர் ஐ குடுக்கிறன்)

ரிக்கற் விற்பவர் : இன்றைக்கு ரிக்கற் 11 டொலர்.

நான் : வழமையா 10 டொலர்தானே?

ரி.வி. திருவிழா நேரம் ரிக்கற் விலை கூட.

நான் : அப்ப ஏன் ரிக்கற்ல 10 டொலர் என்று போட்டிருக்கு.

(கோயிலுக்கு 1 டொலர் கூடக்குடுக்க யோசிக்குதுகள் என்ற தோரணையில் முகத்தை உர் என்று வைச்சிருக்கிறார்)

நானும் மனசுக்குள்ள கோயிலும் சந்தையாப் போச்சு.என்று நினைச்சுக்கொண்டு சகானா கொண்டுவந்த 1 டொலரைக்குடுத்திட்டு ரிக்கற்றை வாங்கிக்கொண்டு பெயரை எழுதுவம் என்று குனிய ரிக்கற் வித்தவருக்கு நான் கேள்வி கேட்டிட்டன் என்று கோவம் அதால என்னைத்தள்ளி நின்று எழுதச் சொன்னார் பெயரை.(ரிக்கற் வாங்க பின்னால ஒருதரும் லைன்ல இல்லை).நானும் கோயிலாச்சே என்று வாயை மூடிக்கொண்டு ரிக்கற்றை கொண்டே அம்மாட்ட குடுக்க அம்மான்ர பிரண்ட் கேட்டா:

அ.பி. : என்ன சுமி அர்ச்சனைத்தட்டு எங்க?

நான் : என்ன தட்டு? எனக்குத்தெரியா அவை ஒன்றும் தரேல்ல.

அம்மா : எல்லாத்திலயும் அவசரம். அவை தந்திருப்பினம் நீங்கள் கவனிக்காமல் வந்திருப்பீங்கள் போய் கேட்டு வாங்கிக்கொண்டு வாங்கோ

(கொர்ர்ர்ர்ர் திரும்பவும் அந்த உர் பார்ட்டின்ர போகணுமா நான் )

நான் : நீங்கள் அர்ச்சனை தட்டுத் தரேல்ல.

ர.வி : நீங்கள் கேக்கவேயில்லையே.

நான் 10 டொலர் ரிக்கற்றை 11 டொலருக்கு விற்கத்தெரியும். ஆனால் சின்னப்பிள்ளையள் 10 டொலர் ரிக்கற்றுக்கு அர்ச்சனைத்தட்டும் வருமென்று தெரியாமலிருக்கலாம் என்று குடுக்கவெல்லோ வேணும் என்று மனசுக்குள்ள திட்டிக்கொண்டே ஒரு அர்ச்சனைத் தட்டை எடுத்துக்கொண்டு போய் கோவத்தோட குடுத்தன் அம்மாட்ட.

நான் : இதுக்குத்தான் நான் கோயிலுக்கு வரமாட்டன் என்று சொல்றனான். இங்க வந்தால் எனக்கு கோயிலுக்கு வந்திருக்கிறம் என்ற நினைப்பே வாறேல்ல.

அம்மா : இப்ப ஏன் கத்துவான்? உங்களுக்கு கோயில் வேண்டாம் கடவுள் வேண்டாம் சொந்தக்காரர் வேண்டாம். ஒரு செல்போனும் லாப்ராப் ம் பிரண்ட்ஸ் மட்டும் காணும். வேற ஒன்றும் (ஒருதரும்) தேவையில்லை.நீங்கள் எல்லாம் நாங்கள் இல்லாத நேரத்தில என்ன செய்யப்போறீங்கிளோ தெரியேல்ல.

நான் : காணும் தொடங்காதயுங்கோ இப்ப. நான் சொல்றதில என்ன பிழை? யாரிட்டாவது கேட்டுப்பாருங்கோ இது கோயிலே?. அன்டைக்கு இப்பிடித்தான் உங்கட கல்யாண நாளுக்குக் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யேக்க அர்ச்சனை செய்து முடிக்க முதல் அந்த ஐயா எத்தின தரம் அங்கால டான்ஸ் பிறக்ரிஸ் பண்ணின ஆக்களைத் திரும்பி திரும்பி பார்த்தவர் என்றும் விளக்கை விழுத்தினவர் என்றும் பார்த்தனீங்கள்தானே. பிறகும் சுருதி தாளம் ஒன்றுமில்லாம அங்க நடக்குற கூத்தை நின்றுப் பார்க்கட்டாம் எங்களை நீங்களும் வெக்கம் இல்லாம நின்று பார்த்திட்டு வாறீங்கள். காசும் வேணும் ஆனால் ஒழுங்கா பக்தியோட அர்ச்சனையும் செய்ய மாட்டினம் அவை அதில இந்த கோயில் நிர்வாகி மாரின்ர லொள்ளு வேற. எல்லாம் உங்களை மாதிரி ஆக்களால வாறதுதான்.கடவுளின்ர நினைப்பு மனசில இருந்தாக்காணும்.உங்களைப்போல கோயிலுக்கு வந்ததான் கடவுளை நினைக்கோணும் என்றில்லை.

அம்மா : காணும் நிப்பாட்டு இது கோயில்.

நான் : நான் நிப்பாட்டுறன் நீங்கள் கஸ்டப்பட்டு ரிக்கற் எடுத்ததுக்கு அர்ச்சனையைச் செய்திட்டு வாங்கோ நாங்கள் இதில இருக்கிறம். அப்பா சகானா வாங்கோ.

அம்மா : அர்ச்சனை செய்தாச்சு வாங்கோ கோயிலுக்குள்ள போய் சுத்திக்கும்பிட்டிட்டு போவம் வீட்ட.

நான் : கோயிலுக்குள்ள சரியான சனம் வாங்கோ வீட்ட போவம்

அம்மா : கோயிலுக்குள்ள போகாமல் வீட்ட போறேல்ல நடவுங்கோ கோயிலுக்குள்ள.

கோயில் நிர்வாகியொருவர் : இப்ப சாப்பாடு குடுக்கமாட்டம். சாமி வெளியிலதான் நிக்குது.

(எனக்கு வந்த கோவத்துக்கு அம்மாவைத்திரும்பி பார்த்து முறைக்க எனக்கு முன்னால நின்றவர் )

ஒருவர் : வோஸ்றூம் போறாக்கள் நடந்து காலுளைஞ்சவை இப்பிடியானவையம் கோயிலுக்குள்ளதான் போகணும் தம்பி.

கோ.நி. : போங்கோ போங்கோ ( அவர் கை காட்டின விதம் என்னவாவது பண்ணித் துலையுங்கோ என்றது மாதிரி)

நான் : அம்மா இதுக்கு மேலயும் நீங்கள் கட்டாயம் கோயிலுக்குள்ள போகோணுமே? இவைக்குக் குடுக்கிற காசை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு மாசம் மாசம் 30 டொலர் இல்லாட்டா வருசத்துக்கு 250 டொலர் குடுத்தா யாரோ ஒரு பிள்ளை உங்கட புண்ணியத்தில நல்லாயிருக்கும்.

அம்மா : ம் சரி இப்ப டக்கென்டு சுத்திட்டுப்போவம்.

கோயிலுக்குள்ள அப்பான்ர ஊர் ஐயர் ஒராள் நின்டார்.

அப்பா : என்ன ரத்தினய்யா கோயில் இப்பிடியாகிட்டுது. எல்லாரையும் எடுத்தெறிஞ்சு கதைக்கினம் நிர்வாகத்தாக்கள்

ரத்தினய்யா : என்ன தம்பி செய்யிறது. எங்களுக்கும் மரியாதையில்லை. வேற வழியில்லாமல் கடவுள் மேல பாரத்தைப்போட்டிட்டு இங்கயே இருக்கிறன். இது முழுக்க முழுக்க பணத்தை எதிர்பார்த்து நடக்குற மாதிரியாகிட்டுது. றோட்டுக்கொரு கோயில். ஐயர் மாருக்குள்ளயும் போட்டி.நிர்வாகத்துக்குள்ளயும் போட்டி பொறாமை.எங்க போய் முடியுமோ.

அப்பா : சரி ஐயா நாங்கள் போப்போறம்.

ஐயா : சரி தம்பி சந்திப்பம்.

இதோ திரு சரவணபவானந்தன் 20 டொடலர்களையளித்த 2 அதிஸ்டலாலப்சீட்டுகளைப் பெற்றுக்கொள்கிறார் . திருவடியார்களே கோயில் திருப்பணிக்குதவுங்கள்!

Thursday, August 16, 2007

நான் மெல்பேர்னுக்கு வாறன்!

வணக்கம்,
Aug 23rd-Sep 3rd வரை மெல்பேர்னில் இருப்பேன்....யார் யாரைச் சந்திக்கலாம்?? சிட்னியில் வசிப்பவர்களுளும் மெல்பேர்னுக்கு வாறீங்கிளோ ?? எனக்்கு சிட்னிக்கு வரமுடியாது போலுள்ளது ஆனால் வர முயற்சி செய்கிறேன்.

அப்ப யார் யார் வாறீங்கள் என்னைச் சந்திக்க?

Tuesday, August 14, 2007

காணாமல் போன ஒரு கொப்பியிலிருந்து...

ஆவணி 9, 2001

கடந்த சனிக்கிழமை

அன்றைய வகுப்பு வழமையிலிருந்து சிறிதே மாறுபட்டதாக இருந்தது.ஆம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கழைக்கழகத்திலிருந்து வந்திருந்த விரிவுரையாளர் ஒருவர்தான் அன்று எங்களுக்கு வகுப்பெடுத்தார்.அவர் தன்னைப்பற்றிய அறிமுகம் எதுவுமின்றி எங்கள் வகுப்பைப் பற்றி விசாரரித்தார்.பின்னர் மெல்ல சங்க காலத்துக்குள் நுழைந்தார்.

இலக்கியம் என்றால் கடந்தகாலச் சமுதாயத்தைத் தெரிவுக்கும் ஒரு காலக்கண்ணாடி என்று கூறினார்.சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல், புறப்பாடல் பற்றி விளக்கினார்.அதாவது அகப்பாடலில் காதல் பேசப்படுகிறது அதை அனுபவித்துத்தான் உணரலாம் புறப்பாடலில் போர் மற்றும் வீரம் , கொடை என்பன பற்றி பேசப்படுகிறது இதை விளங்கப்படுத்தலாம் என்றார்.

அடுத்து சங்கப்பாடல்களில் தமிழ்ப்பண்பாடு எவ்வாறிருந்தது என்று கூறிவிட்டுத் திருமணமுறைகள் பற்றிப் பேசத்தொடங்கினார்.திருமணத்துக்கு முதலில் தலைவன் தலைவி என்றழைக்கப்பட்டவர்கள் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவி என்று அழைக்கப்படுகிறார்கள்.அக்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஏற்றுக்கொள்ளப்பபட்ட முறையாக இருந்தது.பின்னர் Monogamy ,Polygamy,Polygyny,Polyandry பற்றி நீண்டது அவருடைய உரை.

நீலகிரியில் "தோடர்" என்ற பழங்குடி மக்களிடம் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறை இருந்துள்ளது.அந்த ஊாரில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரே பெண்ணைச் பல சகோதரர்கள் சேர்ந்து மணம் செய்யும் முறையே அதிகமாம்.நீலகிரியில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையை எடுத்துச்சென்று எருமைப்பட்டியின் வாசலில் கிடத்திவிட்டு அப்பட்டியைச் சுற்றி நின்று தாரை தப்பட்டை போன்ற கிராமத்து வாத்தியங்களை முழங்கச்செய்வார்களாம்.உடனே எருமைகள் ஆவேசம் கொண்டு பட்டியைப் பிரித்துக்கொண்டு தறி கெட்டு ஓடுமாம்.அப்படி ஒடும் எருமைகளின் காலில் மிதிபட்டுச் இறக்காமலிருந்தால் அந்தப்பெண் குழந்தைகளைக் கொல்லாமல் பாதுகாப்பாக வளர்ப்பார்களாம்.இதனால் இவ்வாறு உயிர் தப்பிய பெண்கள் மிகவும் குறைவானதால் இத்திருமணமுறை அங்கே அவசியமாயிற்று.அதோடு சேர்த்து அக்காலத்திலிருந்து வந்ததும் தற்காலத்தில் சில இடங்களில் உள்ளதுமான உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிக் கூறினார்.இராஜஸ்தான் மாநிலத்திலத்தில்தான் இந்த உடன்கட்டை ஏறும் இவ்வழக்கம் வலுப்பெற்றிருந்தது. "கணவனை இழந்தால் காட்டுவது இல்" என்ற கூற்று நெடுஞ்செழிய மன்னன் இறந்ததும் கோப்பெருந்தேவி உடனிறக்கும் முன்னர் கூறியதாம் : அதாவது ஒரு கணவனை இழந்த பெண்ணுக்கு நான் அண்ணாவாக அப்பாவாக இருப்பேன் என்று ஆறுதல் சொல்லுவது போல நானுனக்குக் கணவனாக இருப்பேன் என்று சொல்லமுடியாதாம்.அதனால் தான் பெண்கள் உடன்கட்டை ஏறினார்களாம்.

அடுத்து உலகளாவிய விழுமியமான விருந்தோம்பல் எவ்வாறு சங்ககாலத்திலும் அதற்கு பின்னரும் இருந்ததென்று சொன்னார்.இளையான்குடிமாற நாயனார் தன் வறுமையிலும் வீட்டுக்கூரையை ஒடித்து விறகாகவும் குப்பைக்கீரையைக் கறியாக்கி முதல்நாள் விதைத்த நெல்மணிகளைப் பொறுக்கி குற்றி சோறு பொங்கி இறையடியாருக்கு எப்படி அமுது படைத்தார் என சுவைபடச்சொன்னார்.அடுத்து சிறுத்தொண்டர் சமைத்த பிள்ளைக்கறி பற்றியும் கூறினார்.ஒரு பெண் தன் கணவனோடு சேர்ந்துதான் விருந்தோம்பல் செய்யவேண்டுமாம்.மாதவி வீட்டிலிருந்து வீடு திரும்பிய கோவலனிடம் நீங்கள் இல்லாததால் நான் புரவலர்க்கு அமுது படைக்கும் தகுதியில்லாமல் எவ்வளவு துன்பப்பட்டேன் என்று கண்ணகி புலம்பினாராம்.

அடுத்த விழுமியம் வாய்மை.


-தொடரும்-

Sunday, August 12, 2007

நான் வந்திட்டேன் ...

ஹாய் ஹாய்...என்னை யாரும் மிஸ் பண்ணினீங்கிளா :-)
கோடை வகுப்புக்கள் வேலை என்று பிஸியாகிட்டன் இப்ப கிட்டகத்தட்ட ஒரு மாதம் விடுமுறை பார்ப்பம் அதுக்குள்ள என்ன எழுதலாமென்று.

ஒரு சின்னக்கதை சொல்றன் இன்டைக்கு.. நாளைக்கு ஏதும் உருப்படியா எழுதுவம்.

யாராவது யாரும் செத்தால் சந்தோசப்படுவீங்கிளா? நானும் நான் அப்பிடியில்லையென்றுதான் நினச்சனான் ஆனால் அது உண்மையில்லப் போல கிடக்கு!

5 வருசத்துக்கு முதல் மாமாவோட இருக்கேக்க பேப்பர் போடப் போறனான் சிலநேரம்.நேற்றும் அவேன்ர வீட்ட நின்டனான் அப்ப மாமான்ர பிள்ளையளோட பேப்பர் போடப்போவம் என்று வெளிக்கிட்டன்.அப்ப பக்கத்துவீடு சத்தமே இல்லாமல் இருந்திச்சு.நாள் முழுக்க வெளியில தவம் கிடக்கிற கிழவனைக்காணேல்ல.எனக்குப் பயங்கர ஆச்சரியம்.என்ன மாமா கிழவனைக்காணேல்ல என்றன்.மாமா சொன்னார் உனக்கு விசயம் தெரியாதே?? கிழவன் போனவருசமே மண்டையப்போட்டிட்டுது.

முந்தி நாங்கள் மாமா வீட்ட இருக்கேக்க வீட்டுக்கு முன்னால வெளியில இருந்து கதைக்கேலாது பாட்டுக்கேக்க ஏலாது சைக்கிள் ஓடேலாது.ஐயோ அந்தக்கிழவன்ர லொள்ளென்டால் தாங்கேலாது. சும்மா எந்த நேரம் அந்த ஏரியாவில இருக்கிற எல்லாச் சின்னப்பிள்ளைகளோடயும் கொழுவல். புறுபுறுத்துக்கொண்டெயிருக்கும் .ஒருநாள் நாங்கள் வேணுமென்று யன்னல் கரையில றேடியோ வச்சு றக்கோட் பண்ணிட்டம் கிழவன் சத்தம்போடுறதை ஒருநாள் ப்ளாக்மெயில் வேற பண்ணிப்பார்த்தம் இப்பிடி இனிம எந்த நேரமும் எங்களோட வம்பு பண்ணினால் பொலிஸ்க்குக் குடுப்பம் என்று.

பிறகு நாங்களும் வேற இடத்துக்குப்போட்டம்.கிழவன் போன வருசம் `ஹாட்அற்றாக் வந்து செத்துப்போட்டுதாம்.சத்தியமா எனக்கு மாமா சொல்லேக்க ஒரு கொஞ்சம் கூடக் கவலை வரேல்ல.இனிமலாவது இந்த ஏரியாப்பிள்ளையள் நிம்மதியா இருக்குங்கள் என்று சின்னச் சந்தோசம்தான்.

Wednesday, July 25, 2007

வெயில் உதித்த நாள்

வெயிலின்ர எழுத்தில ஏதோ ஒரு வித்தியாசம் எனக்குத் தெரியுது..வார்த்தைப்பிரயோகங்கள் நேர்த்தியாகக் கட்டப்பட்ட மாலை போல ஒரு ஒரு ஒரு என்ன சொல் அது..இடையிடையில கவிதை மழை கொட்டுது போல...பிடிச்சிருக்கு. யாரு புலம்புறதுங்க...என்னைத் திட்டாதயுங்கோ நான் பாவமெல்லோ :-)) சொல்றன் சொல்றன்!!!!!

இன்று வெயில் ஐயோ இல்லை எங்கட மழை ஷ்ரேயா பிறந்த நாள்!!!




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களக்கா :-)

Wednesday, July 18, 2007

நானும் வாறன் போட்டிக்கு....

பெருந்தலைகளைப் பகைச்சுக்க வேண்டாம் என்று என்னை மிரட்டி எனக்குள்ள நித்தா கொண்ட மிருகத்தை தட்டி எழுப்பிட்டார் ஒரு பெரும்புள்ளி அதால நானும் வாறன் புகைப்படப்போட்டிக்கு..இந்தாங்கோ படங்கள்.ஆமா யார் நடுவர்???



வெண்பனியின் வெண்மை அழகா? உன் புன்னகையின் வெண்மை அழகா?




இரட்டை நிலவு - ஒற்றைக் கனவு



அத்தி கானாப்பிரபா மாமா வின் பண்ணட்டும் என்னைப் படம் எடுக்காதயுங்கோ என்னைத் தூக்குங்கோ:-)