நான் வந்திட்டேன் ...
ஹாய் ஹாய்...என்னை யாரும் மிஸ் பண்ணினீங்கிளா :-)
கோடை வகுப்புக்கள் வேலை என்று பிஸியாகிட்டன் இப்ப கிட்டகத்தட்ட ஒரு மாதம் விடுமுறை பார்ப்பம் அதுக்குள்ள என்ன எழுதலாமென்று.
ஒரு சின்னக்கதை சொல்றன் இன்டைக்கு.. நாளைக்கு ஏதும் உருப்படியா எழுதுவம்.
யாராவது யாரும் செத்தால் சந்தோசப்படுவீங்கிளா? நானும் நான் அப்பிடியில்லையென்றுதான் நினச்சனான் ஆனால் அது உண்மையில்லப் போல கிடக்கு!
5 வருசத்துக்கு முதல் மாமாவோட இருக்கேக்க பேப்பர் போடப் போறனான் சிலநேரம்.நேற்றும் அவேன்ர வீட்ட நின்டனான் அப்ப மாமான்ர பிள்ளையளோட பேப்பர் போடப்போவம் என்று வெளிக்கிட்டன்.அப்ப பக்கத்துவீடு சத்தமே இல்லாமல் இருந்திச்சு.நாள் முழுக்க வெளியில தவம் கிடக்கிற கிழவனைக்காணேல்ல.எனக்குப் பயங்கர ஆச்சரியம்.என்ன மாமா கிழவனைக்காணேல்ல என்றன்.மாமா சொன்னார் உனக்கு விசயம் தெரியாதே?? கிழவன் போனவருசமே மண்டையப்போட்டிட்டுது.
முந்தி நாங்கள் மாமா வீட்ட இருக்கேக்க வீட்டுக்கு முன்னால வெளியில இருந்து கதைக்கேலாது பாட்டுக்கேக்க ஏலாது சைக்கிள் ஓடேலாது.ஐயோ அந்தக்கிழவன்ர லொள்ளென்டால் தாங்கேலாது. சும்மா எந்த நேரம் அந்த ஏரியாவில இருக்கிற எல்லாச் சின்னப்பிள்ளைகளோடயும் கொழுவல். புறுபுறுத்துக்கொண்டெயிருக்கும் .ஒருநாள் நாங்கள் வேணுமென்று யன்னல் கரையில றேடியோ வச்சு றக்கோட் பண்ணிட்டம் கிழவன் சத்தம்போடுறதை ஒருநாள் ப்ளாக்மெயில் வேற பண்ணிப்பார்த்தம் இப்பிடி இனிம எந்த நேரமும் எங்களோட வம்பு பண்ணினால் பொலிஸ்க்குக் குடுப்பம் என்று.
பிறகு நாங்களும் வேற இடத்துக்குப்போட்டம்.கிழவன் போன வருசம் `ஹாட்அற்றாக் வந்து செத்துப்போட்டுதாம்.சத்தியமா எனக்கு மாமா சொல்லேக்க ஒரு கொஞ்சம் கூடக் கவலை வரேல்ல.இனிமலாவது இந்த ஏரியாப்பிள்ளையள் நிம்மதியா இருக்குங்கள் என்று சின்னச் சந்தோசம்தான்.
21 comments:
தங்கச்சி
உண்மையைச் சொல்லப் போனா நாங்கள் ஒருத்தரும் மிஸ் பண்ணேல்லை. ஹவ்லொக் அண்ணை வந்து அடிக்கடி நினைப்பூட்டினவர்
ஓரு கதைகாரி எண்டு நினைச்சன் கொலைகாரியோ:))))
உண்மையா சொல்லுங்கோ சினேகிதி அவற்ற ஹாட் அற்றாக்கிற்கு நீங்கதானே காரணம்.
நீங்கள் ஆர்?? எனக்கு உங்களைத் தெரியவே தெரீயாது! தெரியாத ஆக்களளோடயெல்லாம் கதைக்கக்கூடாதெண்டு அம்மம்மா சொன்னவா :-)
தெரியாத ஆக்களோடு கதைக்ககூடாதெண்டு அம்மம்மா சொன்னவா சரி. யாருக்கு தெரியாத ஆக்களோட அம்மம்மாவுக்கோ உமக்கோ:)))
சினேகிதியே! இதை கொஞ்சம் நாசுக்காய் "கல்யாண சாவு" என்று நாங்க சொல்லுவோம். காரியம் எல்லாம் முடிஞ்ச கடைசி
நாளு பேரன் பேத்தி, கொள்ளு, எள்ளு இருந்தால் புது உடுப்பும் கிடைக்கும்.
யாராவது காணாமல்போய் திரும்பி வந்தால் துக்கப்படுவீர்களா?
நான் படுவேன்.
இதுபற்றி ஒர் இடுகை எழுதிறன். கொஞ்சம் பொறுங்கோ.
சினேகிதி
எவருடைய மரணத்திலும் இன்பம் காணக்கூடாது. இது சொன்னதால் என்னவோ கிழவனுக்கு அடுத்ததாய் நானும் உங்கள் சந்தோச list இல் சேர்த்துவிடாதையுங்கோ!
100 வருடம் வாழ நினைக்கும் மனிதன் அழுதுகொண்டே பிறக்கின்றான். ஒரு சில மணித்துளிகளே வாழ்ந்து விட்டு வாடி விடும் மலர் சிரித்துகொண்டு மலர்கின்றது.
இது தான் இயற்கையின் கோலமோ?
வசந்தனண்ணா எப்ப கொண்டோடி மாதிரி எழுதத் தொடங்கினீங்கிள்? உங்களுக்குத் துக்கமம் தாறதுக்காவது காணாமல் போனாக்களைக் கூட்டிக்கொாண்டு வாறன் நான்!
பிரபாண்ணா :-))
//யாராவது காணாமல்போய் திரும்பி வந்தால் துக்கப்படுவீர்களா?
நான் படுவேன்.
இதுபற்றி ஒர் இடுகை எழுதிறன். கொஞ்சம் பொறுங்கோ//
வசந்தன் இடுகை இடும் போது நான் எழுதும் பின்னூட்டமும் இவ்வாறுதான் இருக்கும் !
யாராவது காணாமல்போய் திரும்பி வந்தால் துக்கப்படுவீர்களா?
நான் படுவேன்.
உண்மையைச் சொல்லப் போனா நாங்கள் ஒருத்தரும் மிஸ் பண்ணேல்லை.
என்னது நான் கொண்டோடி மாதிரியா?
இருக்காது. அவர்தான் என்னைப் போல எழுதிக்கொண்டிருக்கிறார் எண்டு நினைக்கிறன்.
ஏனெண்டா நான் அந்தநாள் முதலே இப்பிடித்தான் எழுதிறன். கொண்டோடி எனக்குப்பிறகு வந்தவர்.
சரி, அப்பிடியென்ன ஒற்றுமையைக் கண்டிட்டியள் ரெண்டு பேரின்ர எழுத்திலயும்?
நான் துக்கப்படுவதாகச் சொன்னது, காணாமற்போன எல்லாரையும் குறித்தில்லை, சிலர் காணாமற்போனதுதான் உண்மையிலேயே வருத்தத்தைத் தருகிறது.
\\உண்மையைச் சொல்லப் போனா நாங்கள் ஒருத்தரும் மிஸ் பண்ணேல்லை\\
நாங்கள் என்றால் நீங்களும் வேறயாரும்?
என்ன காணம் என நினைத்ததோடு சரி.நான் அவ்வளவு பிசி.
கனடா கந்தசாமி கோயில் தேரில், ஒரு குழந்தையைக் காணவில்லை என்று சனம் தேடியது...அது உங்களையா?
நான் முதன் முதலாக வலைப்பதிவிடும் போது எனது முதல் பதிவின் தலைப்பு "நானும் வந்துட்டேன்!"(கொஞ்ச காலம் பதிவுகளை அவதனித்து கொண்டு இருந்தேன்) காணாம போய்ட்டு வரும் போதும் அது போல தலைப்பு வைக்கலாமா? நானும் திரும்ப வந்துட்டேன் என்று தானே வைக்கனும்?
ஓமோம் - இதான் எங்களுக்கு இப்ப முக்கியம். இவா பெரிய ஆள் - இவாவ நாங்கள் "மிஸ்" பண்றதுக்கு. அவனவன் யாரை "மிஸிஸ்" பண்ணலாம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறாங்கள். இதுக்குள்ள இவா.... அச்சோ அச்சோ.
டிஜே இப்ப என்ன சொல்ல வாறீர்???
நான் இடுகை எழுதினால் சயந்தன் வருத்தப்டுவார் எண்டதால இப்போதைக்கு இடுகையேதும் எழுதுவதாயில்லை.
"முக்கியமான" ஒரு படைப்பாளியை வலையைப்பதிவுலகை விட்டுத் துரத்திய பாவம் சயந்தனைத்தான் சாரும்.
"விடை பெறுகிறேன்" எண்டு ஒர் இடுகை எழுதினால், வேற ஆக்களுக்குச் செய்தமாதிரி எனக்கும் வந்து அழுது கண்ணீர் வடிச்சுக் கலக்குவியளோ?
யார் விடைபெற்றது யார் கண்ணீர் விட்டது ??
Post a Comment