Custom Search

Sunday, September 13, 2009

விரதம், நோன்பு , பசி , சாப்பாடு

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ :)

இதெல்லாத்தையும் விட மக்டோனல்ட்ஸ் KFC , Taco , Wendy's , Arby's ,Harvey's , Mr Sub , Subway தவிர Pizza Pizza , Piza Nova , Piza Hut , Dominos இப்பிடி 1008 சாப்பாட்டுக்கடைகள் போற வழியெல்லாம் இருக்கேக்க ஒரு மனுசரால எப்பிடி விடிய 5 மணில இருந்து பின்னேரம் 7.40 வரைக்கும் சாப்பிடாம இருக்கலாம்??

வேலையால ஒரு பயிற்சிப் பட்டறைக்குப் போயிருந்தோம் ஒரு இடத்துக்கு. காலைல 9 மணில இருந்து பின்னேரம் 6 மணி வரைக்கும் 3 பட்டறைகள். அவர்கள் கொண்டு வந்து வைத்திருந்த சாப்பாட்டை நாங்கள் வெள்ளனவே சாப்பிட்டு முடிச்சிட்டம். பசியெடுத்த கொஞ்சாக்கள் மதிய இடைவேளைக்கு வெளில சாப்பிடுவம் என்று வெளிக்கிட்டம். எங்களுடன் ஒரு பெங்காலிப் பெடியனும் வந்திருந்தான். அவன் தான் நோன்பிருக்கிறன் சாப்பிட மாட்டன் என்டான். சாப்பிடாட்ட அப்ப ஏதும் வேண்டிக் குடியெண்டால் அதுவும் கூடாதெண்டான். எங்களுக்கு சங்கடமாப்போச்சு. நோன்பு இருக்கிற ஒராளை வைச்சுக் கொண்டு எப்பிடிச் சாப்பிடுறதெண்டு. அவன் சொன்னான் நாங்கள் சூரியன் உதிக்கிற நேரம் அதாவது காலைல 5 மணியில இருந்து சூரியன் மறையிற நேரம் மாலை 7.40 வரைக்கும் சாப்பிடக்கூடாதெண்டு. அதும் இப்ப இங்க கோடை காலம் அதால சூரியன் மறைய நேரமெடுக்கும் அதால அவர்களின் மதகுருக்கள் கணிப்பிட்ட நேரத்தின் படி 7.40 வரை சாப்பிட முடியாதாம். அவன்ர அம்மா விடுமுறைக்கு வந்து நிண்டவா அப்பா நல்லாச் சமைச்சுக்குடுத்திருப்பா போல. அவா போனதும் சும்மாவே பெடியன் சோர்ந்து போயிருந்தான். இதில நோன்பு வேற. அவன்ர துரதிஸ்டம் அந்த ஏரியால Bangladesh கடைகளும் இருந்தன. அவனுக்கு நல்ல பசி போல. இந்த Bangladesh கடையில சாப்பாடு நல்லா இருக்குமெண்டு வேற சொன்னான்.

நான் கேட்டன் இப்படி உங்களை வருத்தி கட்டாயம் நோன்பிருக்கோணும் என்டு கடவுள் சொன்னவரா? அதுவும் ஒரு மாசம் எப்பிடி முடியுமென்டு. ஒருதரும் கட்டாயப்படுத்திறேல்ல ஆனால் ஒருமுறை நோன்பிருக்கத் தொடங்கினால் தொடர்ந்து நோன்பிருக்கத்தான் மனசு சொல்லுமாம். இது மனக்கட்டுப்பாடு சம்மந்தப்பட்டது. நான் ஆரம்பித்தில என்னால என்னுடைய நாவை உடம்பை மனசை் கட்டுப்படுத்த முடியுமா என்று சோதிக்கத்தான் நோன்பிருக்கத் தொடங்கினான். இன்டைக்கு இந்த பட்டறையில கேட்ட விசயத்தையே கேட்டு வெறுத்திட்டு அதான் நானிப்பிடி இருக்கிறன். நான் வீட்ட போய் கொஞ்சமா தண்ணியடிச்சிட்டு சாப்பிட்டால் ஓகே என்டான். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி.

நான் சொன்ன் எங்கட மதப்படி விரதம் பிடிச்சால் தண்ணியடிக்கிறேல்ல என்டு. அவன் சொன்னான் ஓம் தெரியும் நீங்கள் மச்சமும் சாப்பிட மாட்டிங்கள் என்டு. பிறகு சொன்னான் நாங்கள் நோன்பு முடிய நல்லா மச்சம் சாப்பிடுவம். கொஞ்சம் தண்ணியடிப்பம்.

என்ர அம்மா என்னோட கோவிச்சுக்கொள்றது இந்த விசயத்திலதான். எனக்கு விரதம் சரிப்பட்டு வாறேல்ல. நான் நினைக்கிறன் ஒரு 10 வருசத்துக்கு முதல் சரஸ்வதிபூசை நேரம் கடைசி 3 நாளும் விரதம் பிடிச்சனான் என்று. கடவுள் பல சந்தர்ப்பத்தில காலை வாரி விட்டதால எனக்கு கடவுளுக்கும் பெருசா ஒத்து வாறேல்ல. முடியாக்கட்டத்தில கோயிலுக்குப்போனாலும் எரிச்சலோட திரும்பி வாறது என்னமோ போங்கோ கடவுளுக்குத்தான் தெரியும் உண்மை.கிட்டடியில Rogester க்கும் Pittsburgh வெங்கடேஸ்வரா கோயிலுக்கும் போனம். கோயிலுக்குள்ள போறதுக்கு ஒரு பெரிய கியு. அதில நிண்டு உள்ளுக்கு போனா சாமிக்கு முன்னால ஒரு நிமிசம் கூட நிக்கேலாது. பொலிஸ் மாதிரி நீட்டுக்கு ஆக்கள் நிண்டுகொண்டு காணும் சாமியைப் பார்த்தது போங்கோ அங்கால துரத்திக்கொண்டு நிக்கினம். ஒரு 5 நிமிசம் கோயிலுக்குள்ள போய் வெளில வாறதுக்கு 8 மணித்தியாலப் பிரயாணம். மியுசியத்தில கூட இத விட வடிவாப் பார்க்கலாம் சாமி சிலையை.

கிட்டடில இங்க ரொரன்டோவில ஐயப்பன் கோயியல்ல எண்ணெய்க்காப்பு சாத்தினவை. ஒராளுக்கு $5 கொடுக்கோணுமாம். அம்மா சொன்னா லட்சக்கணக்கில சனம் வந்ததெண்டு. காலம 8 மணிக்கு போய் கியுல நிண்டு பின்னேரம் 3மணிக்குத்தான் எண்ணெய்க்காப்புச் சாத்தினவையைாம். கனடா கந்தசாமி கோயில் , நயினை நாகபூசணி அம்மன் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், நல்லூர்க்கந்தன் , வரசித்தி விநாயகர், சிறீ துர்க்கா, சந்நிதி முருகன் ,சந்திரமெளலீஸ்வரர் ,ஐயப்பன் கோயில் இதத்தவிர இன்னும் ஒரு புதுக்கோயில் வரப்போவுது.

மில்லியன் கணக்கில காசைக்கொட்டி இப்பிடிச் சந்திக்கொரு கோயில் திறக்கிறத விட இருக்கிற கோயில்கள்ல பூசையோடு சேர்த்து வேற நல்ல காரியங்களையும் செய்தா நல்லம்.

பசிக்குது சாப்பிட்டு வாறன்.

15 comments:

துபாய் ராஜா said...

"விரதம், நோன்பு ,பக்தி, பசி , சாப்பாடு"எல்லாம் அவரவர் மனது சம்பந்தப்பட்டதே.ஆனால் அதற்காக அடுத்தவரையும், ஆண்டவனையும் பழிப்பது தவறு.

சுவையான எழுத்துநடை. வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//மில்லியன் கணக்கில காசைக்கொட்டி இப்பிடிச் சந்திக்கொரு கோயில் திறக்கிறத விட இருக்கிற கோயில்கள்ல பூசையோடு சேர்த்து வேற நல்ல காரியங்களையும் செய்தா நல்லம்//

கண்டிப்பா செய்யலாம்! பூஜைகள் மட்டுமின்றி சேவைகள் போன்று பல்வேறு காரியங்களில் ஈடுபடுதலின் மூலம் மக்களிடம் இன்னும் ஆர்வமும் மகிழ்ச்சியும் உண்டாக்கும்!

சந்தனமுல்லை said...

//பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..//

:))

அவ்வ்வ்வ்வ்..புண்ணாக்கையும் விடலியா!!

//இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ :)//

:)) அடபாவிகளா...இப்படி மாறிட்டீங்களா?!!

//கடவுள் பல சந்தர்ப்பத்தில காலை வாரி விட்டதால எனக்கு கடவுளுக்கும் பெருசா ஒத்து வாறேல்ல.//

:)

நல்லாருக்கு இந்த இடுகை...

ஹேமா said...

வணக்கம் சிநேகிதி.நிறைய நாளுக்குப் பிறகு சந்திக்கிறேன்.சுகம்தானே !

கடவுளே இவ்வளவு கோயிலிருக்கா !அப்பாடி.எனக்கும் உங்கள் கருத்தேதான் தோழி.கடவுள் இருக்காரோ இல்லையோ தெரியேல்ல.நம்பிக்கையைக் கெடுக்க வேண்டாம்.ஆனா அதையே பிடிச்சுக்கொண்டு சாமிக்கே லஞ்சம் குடுத்து வரங்கள் கேக்கிறதை அருவருப்போடு வெறுக்கிறேன்.

அதோட நான் எப்பவும் நினைக்கிறது இந்தக் கோயில்கள் சாமிகள் எல்லாம் ஒரு நாளைக்கு அநாதையாப் போகப்போயினம் பாருங்கோ.
எங்களையெல்லாம் ஓடுங்கோ எண்டு ஊருக்கு அனுப்பேக்க இந்தச் சாமிகளையும் கொண்டோ ஓடப்போகினம்.அதுக்குப்பிறகு எங்கயாச்சும் தொல்பொருட்காட்சி நிலையத்தில கொண்டு போய் வைக்கப்போறாங்கள் இந்த நாட்டுக்காரங்கள்.இந்தச் சாமியெல்லாம் சரியா இருந்தா ஏன் எங்களுக்கு இந்தக் கதி!அவையளே பயந்து ஓடி இங்க வந்திருக்கினம்.
அங்க உள்ள எங்கட சனங்களைக் காப்பாத்தா ஒரு மனுசர் கூட இல்ல.(இவ்வளவு கோவம் இருக்கு.)

கோபிநாத் said...

\\பசிக்குது சாப்பிட்டு வாறன்.\\

ரைட்டு ;))

Anonymous said...

சின்ன வயசில நல்ல எழுதியிக்கிறீங்கள். வாழ்த்துக்கள்.

எங்க சனம், எங்கட ஆக்களுக்கு இவ்வள்ளவு நடந்தும் தாங்கிக்கொண்டு கொஞ்சம் மன உறுதியோட ஒழுக்கமா வாழுகினமென்டால் எல்லாம் இந்த கடவுள் நம்பிக்கையாலதான் என்டுறத தெரிஞ்சு கொள்ள வேணும்,

அதனால் தான் அந்த நம்பிக்கையையு குலைப்பதற்கு எல்லாரும் விருப்புகினம்.

கோவிகளுக்குள் உள்ள கோடிக்கணக்கான தத்துவங்களை பெரும் பெரும் புதயல்களை தேடி கண்டு பிடியுங்கள், அவைகளை உணர்ந்து உய்யும் வழியை அறிய முயலுங்கள்.
தேடினால்தான் கிடைக்கும்.

ஒரு செயலை உதாசீனம் செய்யிறதுக்கு முதல்ல அதற்குரிய உண்மையான விளக்கத் தேடி ஏன், எதற்கு, எப்படி என்று ஆராச்சியில் இறங்குங்கள். அப்ப தான் உங்களுக்கு அவற்றின் அருமை தெரியும் புரியும்,

Anonymous said...

//கோவிகளுக்குள் உள்ள கோடிக்கணக்கான தத்துவங்களை//

கோவில்களுக்குள் என்று வரும்,

தியாவின் பேனா said...

நல்ல வரிகள் சுவையான எழுத்துநடை. வாழ்த்துக்கள்.

சினேகிதி said...

\\"விரதம், நோன்பு ,பக்தி, பசி , சாப்பாடு"எல்லாம் அவரவர் மனது சம்பந்தப்பட்டதே.ஆனால் அதற்காக அடுத்தவரையும், ஆண்டவனையும் பழிப்பது தவறு.

சுவையான எழுத்துநடை. வாழ்த்துக்கள்.\\

வாங்க துபாய் ராஜா. அவரவர் மனது சம்மந்தப்பட்டதுதான். நான் எழுதியது என்னுடைய எண்ணங்கள். நான் பழிக்கும் எண்ணத்தில் எதுவும் எழுதவில்லை.

சினேகிதி said...

\\கண்டிப்பா செய்யலாம்! பூஜைகள் மட்டுமின்றி சேவைகள் போன்று பல்வேறு காரியங்களில் ஈடுபடுதலின் மூலம் மக்களிடம் இன்னும் ஆர்வமும் மகிழ்ச்சியும் உண்டாக்கும்!\\

பெரிய இடமிருக்கு. காசிருக்கு. மனசுமிருந்தால் கோயில்களில் நிறையச் சேவை செய்யலாம் என்பது அடியேனின் கருத்து.

சினேகிதி said...

\\அவ்வ்வ்வ்வ்..புண்ணாக்கையும் விடலியா!!

//இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ :)//

:)) அடபாவிகளா...இப்படி மாறிட்டீங்களா?!! \\

இந்தப் பாட்டுத் தெரியாதா?? ஆமா நீங்க புண்ணாக்கு சாப்பிட்டதே இல்லை ?? பொய்தானே.

சினேகிதி said...

\\கடவுளே இவ்வளவு கோயிலிருக்கா !அப்பாடி.எனக்கும் உங்கள் கருத்தேதான் தோழி\\

இவ்வளவும் நான் இருக்கிற இடத்தில இருந்து 10-15 km ல இருக்கு. கனடால மொத்தம் எத்தினை கோயில் இருக்கு என்டு பார்த்தால் ஐயோ வேண்டாம் விடுங்கோ.

சினேகிதி said...

\\ஒரு செயலை உதாசீனம் செய்யிறதுக்கு முதல்ல அதற்குரிய உண்மையான விளக்கத் தேடி ஏன், எதற்கு, எப்படி என்று ஆராச்சியில் இறங்குங்கள். அப்ப தான் உங்களுக்கு அவற்றின் அருமை தெரியும் புரியும்,\\

நான் யாரையும் அல்லது எந்த நம்பிக்கைகளையும் உதாசீனம் செய்யவில்லை.

சனத்தை முட்டாள் என்டு நினைச்சுக்கொண்டு கோயில் சாமி பக்தி அருள் என்ற பெயரில ஏமாத்துறவர்கள் மனது வைத்தால் கோயில் என்ற பெயரில் உண்மையாகவே மக்களுக்கு மன உறுதியையும் வழங்கி மேற்பட்ட உதவிகளையும் செய்யலாம்.

Kanan said...

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அந்த நம்பிக்கைதான் பலபேரை தவறு செய்வதிலிருந்து தடுக்கிறது. என்னை பொறுத்தவரை அது மூட நம்பிக்கையாக இருக்கக் கூடாது. உளவியல்படி எமக்கு மேலே ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை எம்மை வகுக்கப்பட்ட வழியில் செல்லத் தூண்டும். இதை சாதரணமாக அலுவலகத்தில் ஒருவர் அவரது மேலாளர் உள்ள போது வேலை செய்யும் விதத்திற்கும் மேலாளர் இல்லாத போது வேலை செய்யும் விதத்திற்கும் உள்ள வித்தியாசத்தின் மூலம் விளக்கலாம். நான் கடவுள் நம்பிக்கையை வாழ்க்கையின் மேலாளராக பார்க்கிறேன்

Several tips said...

பசி அட இப்படியுமா!